நம் கீழக்கரை நகரின் மிகப் பிரதான பிரச்சனையாக இருக்கும் குப்பை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில், தில்லையேந்தல் பகுதியில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில், குப்பை கிடங்கை சுற்றி சுற்று சுவர் எழுப்பும் பணி ரூ.21,00000 மதிப்பீட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் சில வாரங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள், தில்லையேந்தல் பஞ்சாயத்து தலைவருடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில் நேற்று முன் தினம் 24.06.2012 அன்று, மீண்டும் சில மர்ம ஆசாமிகள் கட்டி முடிக்கப்பட்டிருந்த, சுற்றுச்சுவரின் பெரும் பகுதிகளை உடைத்து தரை மட்டம் ஆக்கியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் டேன்க் உள்ளிட்ட கட்டுமான பொருள்களை நாசப்படுத்தி, 10 க்கும் மேற்ப்பட்ட சிமிண்டு மூட்டைகளையும் கிழித்து அதனுள் நீரை ஊற்றி அட்டூழியம் செய்துள்ளனர். இதனை நேரில் சென்று பார்வையிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து இன்னும் சம்பந்தப்பட்ட கட்டுமான ஒப்பந்ததாரர் சார்பில், காவல் துறையில் புகார் அளிக்கப்படாத காரணத்தால், வழக்குப்பதிவில் சற்று மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற நாச வேலைகள் மீண்டும் தொடராமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சித் தலைவர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்களை தொடர்பு கொண்டு இங்குள்ள நிலைமைகளை தெரிவித்தார். சில பொது நல அமைப்பினர்களும் காவல் துறையிடம் இது குறித்து முறையிட்டனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர், கீழக்கரை காவல்துறை ஆய்வாளாரிடம் உடனடியாக புகார் தெரிவித்து, நாசவேலையில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரனை நடத்திவருகிறது.
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இதுபோன்ற பல்வேறு அசம்பாவித காரணங்களால், குப்பை கிடங்கின் சுற்றுச் சுவர் கட்டும் பணி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மீண்டும் இங்கு பணிகளை தொடர அச்சப்படும் வகையில் மர்ம கும்பலின் செயல்பாடுகள் உள்ளது. இதனால் கீழக்கரை நகர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
v Should take nessary action 4 this, all kilakarai people join 4 this issue
ReplyDeletetambi not leave this matter, u should take action on them this our problem
ReplyDelete