நம் கீழக்கரையின் இளவல்களும், வளைகுடாக்களில் இளமையை தொலைத்தும் கூட, இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் வயதில் மூத்தவர்களும், சொந்த மண்ணின் சொந்தங்களை அத்தனையும் பிரிந்து, சோகங்களை சுமந்தவர்களாக, பிழைப்புக்காக கடல் கடந்து, தன் வாழ்நாளின் காலங்களை எல்லாம் குடும்பங்களுக்காய் கரைத்துக் கொன்றிருக்கிறார்கள்.
துபாயில் நடை பெற்ற துவக்க விழா நிகழ்ச்சி
அவ்வாறு வெளி நாடுகளில் வசிக்கும் நம் கீழக்கரை நண்பர்களும், அன்பர்களும், நம் சொந்தங்களும், நமது சொந்த மண்ணின் செய்திகளை, தெரிந்து கொள்ள ஏதுவாக, எவ்வித பிரதிபலனும் பாராமல், இது வரை கீழக்கரை டைம்ஸ் வலை பதிவகம் செய்து வந்த பணி மகத்தானது.
பிறந்த மண்ணை பிரிந்து, இன்று உலகின் பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும் நண்பர்கள் அனைவரும், பல வேலை பளுக்களின் மன உளைச்சல்களுக்கு மத்தியிலும், உடனுக்குடன் நமதூர் செய்திகளை அறிவதால், மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார்கள் என்றால் அது மிகையாகாது.
இறைவனுடைய மாபெரும் கருணையால், இது வரை கீழக்கரை டைம்ஸ் பிளாக் http://keelakaraitimes.blogspot.in அமோக வரவேற்பை பெற்று, குறுகிய காலத்தில் அனைவரின் பேராதரவுடன், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹிட்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செய்திகளின் வீரியம் கொஞ்சமும் குறையாமல், 'கீழக்கரை டைம்ஸ்.காம்' www.keelakaraitimes.com என்று முழுமையான வலைதளமாக பரிணாமித்துள்ளது. இதற்கான அறிமுக விழா நேற்று முன் தினம் துபாயில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நல்ல தருணத்திலே, கீழக்கரை டைம்ஸ்.காமின் ஆணி வேராக திகழும், கீழக்கரை டைம்ஸ்சின் நிர்வாகிகள் ஜனாப். அஹமது குத்புதீன் ராஜா அவர்களுக்கும், ஜனாப். ஹமீது யாசீன் அவர்களுக்கும், கீழை இளையவன் வலை தளம் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு, மென் மேலும் தங்கள் பணிகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிறந்த மண்ணை பிரிந்து, இன்று உலகின் பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும் நண்பர்கள் அனைவரும், பல வேலை பளுக்களின் மன உளைச்சல்களுக்கு மத்தியிலும், உடனுக்குடன் நமதூர் செய்திகளை அறிவதால், மட்டற்ற மகிழ்ச்சியடைகிறார்கள் என்றால் அது மிகையாகாது.