கீழக்கரையில்
டெங்கு காய்ச்சல் தடுப்பு
நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நகரில் பரவும் டெங்கு
காய்ச்சலை தடுக்க, போர்கால அடிப்படையில் நடவடிக்கை
மேற்கொள்ள நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும் முனைப்புடன் செயல்பட
வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில்
கீழக்கரை 500 பிளாட் பகுதியில் நேற்று நேரடி ஆய்வில் செய்த சென்னை தலைமை
பூச்சியியல் வல்லுநர் கதிரேசன் அவர்கள் உத்தரவின் பேரில் கீழக்கரையில்
பரவியுள்ள டெங்கு கொசுக்களை ஒழிக்கும் வகையில் புகை மருந்து அடிக்கும் பணி
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கீழக்கரையில் சின்னக்கடை தெரு, நெய்னா முகம்மது தண்டையல் தெரு, அகமது தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று (03.10.2010) நகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரதுறையினர் வீடு, வீடாக சென்று புகை மருந்து அடித்து வருகின்றனர். கிணறுகளில் அபேட் மருந்தும் ஊற்றி வருகின்றனர். இதனால் பொது மக்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment