தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி, SDPI
கட்சி சார்பாக அக்டோபர் 2
முதல் 17 வரை மனித சங்கிலி போராட்டம், முற்றுகை போராட்டம், தெருமுனைக்
கூட்டம், வீதி நாடகம், வாகனப் பிரச்சாரம், நோட்டிஸ் மற்றும் போஸ்டர்
பிரச்சாரம் என பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
அதன்
ஒரு பகுதியாக கடந்த (அக்டோபர் 2) தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி
சார்பில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி மனித சங்கிலி போராட்டம்
நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து
கொண்டனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அக்டோபர்
17 ல் தலைமை செயலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுகலகங்கள் முன் முற்றுகை
போராட்டம் நடை பெரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இராமநாதபுரத்தில் அக்டோபர் 2 அன்று மனித சங்கிலி போராட்டம் அரசு பணி மனை முன்பு மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பூரண மது விளக்கை அமுல்படுத்தக் கோரும் இந்த போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment