இது குறித்து கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர் செய்யது ரசீன் அகமது அவர்கள் கூறும் போது " நண்பர்களுடனும், ஆசிரியர்களுடனும் சேர்ந்து கல்வி சுற்றுலா செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 12 நாள்கள் நீளும் எங்கள் சுற்றுலாவில் கொல்கத்தா, டார்ஜிலிங், கேங்க்டக் (இமய மலையின் அடிவாரப் பகுதிகள் மற்றும் சிகரங்கள்) என்று புதிய, புதிய இடங்களை முதன் முறையாக சுற்றிப் பார்க்க இருக்கிறோம். இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த தாளாளர் அவர்களுக்கும், எங்களுக்கு அனுமதி அளித்து வழியனுப்பும் பெற்றோர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
நம் இளைய தலைமுறை மாணவர்கள், இது போன்ற கல்விச் சுற்றுலாக்கள் மூலம், பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வித்தியாசமான் மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழிடங்கள், உடைகள், நடைமுறை பழக்க வழக்கங்கள், மொழிகள் என்று அறிந்து கொள்வதற்கும், ஏட்டளவில் மட்டுமில்லாமல், ஆத்மார்த்தமாய், மனதில் உள் வாங்கிக் கொள்வதற்கும், பேருதவி புரிகிறது. ஆகவே நம் கீழக்கரை நகரின் ஏனைய பள்ளிகளும், கல்லூரிகளும் ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் மாணவர்களை கல்விச் சுற்றுலாக்களுக்கு அழைத்து செல்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
2 comments:
Face Book Comments:
- Mohamed Irfan, Sajid Ahamed, ஹஸன் அலி and 11 others like this.
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இறைவனின் துணை கொண்டு, மகிழ்வுடன் சென்று, புதுப் புது நல்ல செய்திகளை அறிந்தவர்களாக, அறிவார்ந்தவர்களாக திரும்ப வாருங்கள்...
- Abdul Rahman உலகில் எத்தனை நாடுகள் சுற்றி வந்தாலும், ஒருவரின் மனதில் என்றும் பசுமையாக பதிந்து நிலைத்து இருப்பது, பள்ளிக்கூட (நாட்களில்) நண்பர்களுடன் சென்று வரும் சுற்றுலா மட்டுமே!!
இவர்களின் இந்த பயணம் இனியதாகவும், பாதுகாப்பானதுமாக அமைய இறைவன் அருள் புரிவானாக!!! - ஹஸன் அலி Guys whatever you do "safety first"...do not get off your train anywhere alone. Before leave your camp ensure leave information. Do not wear expensive & gold old ornaments might put you in risk. keep your cell phones always charged. Gear up and enjoy guys..I really feel your happiness..........Enjoy
நல்ல முயற்சி. நீண்ட பயணம். நூறுக்கு ஒன்று குறைவான நபர்கள். மலைப்பு தருகிறது. ஏக நாயன் அவனின் சகல பாதுபாப்பையும் அவர்களின் மீது நல்குவானாக. ஆமீன். ஆமீன். யாரப்பில் ஆலமீன்.
சுட்டி காட்டுவதற்கு மிகவும் வருந்துகிறோம்..பயணம் திட்டமிட்டதில் சிறு குறை ஏற்பட்டு விட்டதாக கருதுகிறோம்.. அதுவும் நம்மை போன்று டிராபிக்கல் ஏரியாவில் வாழும் சிறுவர்களுக்கு டார்ஷிலிங், கேங்டாங்க் செல்ல ஏற்ற நேரமில்லை.. நவம்பர் ,டிசம்பர் மாதங்களில் அங்கு குளிர் மைனஸ் டிகிரியில் இருக்கும். அதுவும் இமயமலையின் அடிவாரம்.. பிரதேசம் முழு வெள்ளியை உருக்கி ஊற்றிய்து போல பனி படர்ந்திருக்கும். சிறுவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும்..அதிகாலையில் அவசரத்திற்கு நீர் கிடைக்காது. பனிக் கட்டிகள் தான் இருக்கும்.. பன் முறை அந்த பகுதியில் பயனித்தவன் என்ற முறையில் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறோம்..
நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்க இரு கரம் ஏந்தி படைத்து காகும் ரப்பில் ஆலமீனிடம் துவாச் செய்வோமாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆகமீன்..