கீழக்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியை சேர்ந்த 'சீதேவி ஆலிமூசா' என்கிற முகமது இப்ராகிம் (வயது 39) என்பவர் 'இறை அருள் மருத்துவம்' என்ற பெயரில் பேய், பிசாசுகளை விசேஷ பூஜைகள் செய்து விரைந்து விரட்டுவதாகவும், செய்வினை இருந்தால் அதனை எடுப்பதாகவும் கூறி, ஆண்கள் இல்லாத வீடுகளுக்குச் சென்று இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தினர்கள் கீழக்கரை காவல் நிலையத்தில் ஆதரங்களுடன் புகார் செய்தனர். அதன் பேரில் விரைந்து நடவடிக்கை எடுத்த இன்ஸ்பெக்டர் திரு .கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு. செல்லமணி, திரு. கோபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலி பொள்ளாச்சி மந்திரமூசாவை கைது செய்தனர்.
இந்நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்த கீழக்கரை காவல் துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தினர்கள் நகர் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். அதனை பாதசாரிகள் நின்று படித்து விட்டு, தாங்களும் காவல் துறைக்கும், TNTJ வினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக, தெரிவிவிக்கின்றனர். இது வெறுமெனே... நன்றி தெரிவிக்கும் சுவரொட்டியாக மட்டுமல்லாமல் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் அமைந்திருப்பதாக இருக்கிறது.
Comments :
கீழக்கரை 'புதிய ஒற்றுமை' : தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்து நண்பர்களுக்கு நன்றிகள் கோடி.
எத்தனையோ மரியாதைக்குரிய ஆலிம்கள் இருக்கும் இந்த கீழக்கரைக்கு உடுத்த கோவணம் கூட இல்லாமல், ஆளிமூசா வேலைக்கு வரும் , இவன் போன்ற சித்து வேலை ஆசாமிகள், சில வருடங்களிலேயே கோடீஸ்வரன் ஆகி விடுகிறார்கள். மேலத் தெரு பணக்காரர்களை எல்லாம் மிச்சும் அளவிற்கு காரும், சொந்த ஊரில் பங்கலாகளும், இவர்களுக்கு வேலை செய்ய பணிவிடை பட்டாளங்களும் என்று ஜமாய்க்கிறார்கள் . ஆனால் பல்லாண்டு காலமாக, முறைப்படி ஆலிம் வேலை பார்க்கும் நல்லவர்களால், உடுத்த வேட்டி வாங்க கூட காசு இல்லை.
இவன் போன்ற பலர், பல ரூபங்களில் நம் ஊரில் திரிவது, பார்க்க அவமானமாக இருக்கிறது. தவறான வழிகளில் சம்பாதித்த பணங்கள் எல்லாம் விரைவில் அவனுகளுக்கே எமனாய் மாறும். எது எப்படியோ நாம் இப்போதாவது விழிப்புணர்வு பெற வேண்டும்.

Abdul Rahman : இதுபோன்ற "தொப்பி போட்ட நித்யானந்தா"வை இத்தனை காலம் விட்டது நமது முதல் தவறு... அவன் இத்தனை தவறுகள் செய்யும் அளவிற்கு நாம் அவனுக்கு இடம் வகுத்து கொடுத்தது அதைவிட முக்கிய தவறு.
இது வெறுமெனே... நன்றி தெரிவிக்கும் சுவரொட்டியாக மட்டுமல்லாமல் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் அமைந்திருப்பதாக இருக்கிறது.
ReplyDeleteadi kodida pada vaendiyavai
எல்லா புகழும் அல்லாஹுவுக்கே
ReplyDeleteஇனிமேலாவது மக்கள் இது போன்ற ஆசாமிகளிடம் ஏமாறாமல் மார்கத்த்தின் அடிபடையில் வாழ்வார்களா.
அந்த அயோக்கிய ராஸ்களிடம் கேடு கெட்ட ஜன்மங்கள் கொடுத்த காசு இருக்கிறது..ஆகவே சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கலாம். தீவிர நடவடிக்கை எடுத்தவர்கள் ந்ன்மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுகிறோம்..
ReplyDelete