கீழக்கரையில் ஓடும் சாக்கடை சங்கமங்களை மூன்று விதங்களாக வகைப் படுத்தலாம். (இது கீழக்கரையின் 'சாக்கடை' குறித்த பொது அறிவுக்காக, இந்த சிறப்புத் தகவல் கொடுக்கப்படுகிறது.)
- வற்றாத சாக்கடை ஜீவ நதிகள் - பிறப்பிடம் : வடக்குத் தெரு கொந்தக் கருணை அப்பா பகுதி (வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருப்பது)
- திடீர் சாக்கடை ஆறுகள் - பிறப்பிடம் : சேனானா.தெரு, O.J.M.தெரு, ஜின்னா தெரு, பெட்ரோல் நிலையம் அருகில் (மாதத்தில் ஒன்றிரண்டு முறை தெருக்களை நனைப்பது)
- வெள்ளிக் கிழமை சாக்கடை ஊற்றுகள் - பிறப்பிடம் : ஜும்மா பள்ளி அருகாமை, நடுத் தெரு (வாரத்தில் வெள்ளிக் கிழமை மட்டும் காட்சி தருவது)
இன்று அதிகாலையில் சேனானா தெரு (S.N தெரு), S.M.லேத் பகுதியிலிருந்து புறப்பட்ட திடீர் சாக்கடை ஆறு, புரதான மீன் மார்க்கெட் வரையில் வழிந்தோடி வாசனை பரப்பியுள்ளது. பொது மக்கள் மிக அதிகமாக புழங்கும் இந்த பகுதியில் இருந்து முஸ்லீம் பஜாருக்கு செல்பவர்களும், மீன் கடைக்கு செல்வோர்களும், வெள்ளிக் கிழமை தொழுகைக்கு செல்பவர்களும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் பகுதியில் தான் கீழக்கரை நகராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோர்களின் இல்லங்கள் இருப்பது குறிப்பிடத் தக்கது.
இந்த மூன்று சங்கமங்களுக்கும் முழு முதற்காரணமாக இருப்பது, பல்லாண்டு காலமாக கழிவு நீர் வாறுகால்கள் சுத்தபடுத்தப் படாமலும்,தரை மட்டத்திலிருந்து உயர்த்தி கட்டப் படாமல் இருப்பதும், வாறுகால்களுக்கு மூடிகள் போடாமல் இருப்பதும் தான் என்பது கண் கூடாக தெரிகிறது.
இந்த மூன்று சங்கமங்களுக்கும் முழு முதற்காரணமாக இருப்பது, பல்லாண்டு காலமாக கழிவு நீர் வாறுகால்கள் சுத்தபடுத்தப் படாமலும்,தரை மட்டத்திலிருந்து உயர்த்தி கட்டப் படாமல் இருப்பதும், வாறுகால்களுக்கு மூடிகள் போடாமல் இருப்பதும் தான் என்பது கண் கூடாக தெரிகிறது.
இது குறித்து பவுசுல் அமீன் அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் காலம் காலமாக தீர்க்க முடியாத பிரச்சனையாக, தெருக்களில் ஓடும் சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. இதற்காக கீழக்கரை நகர் மன்றத்தால் ஒரு சில இடங்களில் மட்டும், வாறுகால்களை சுத்தப்படுத்தி, உயர்த்தி கட்டியதோடு, மூடிகளும் போடப்பட்டு உள்ளது. ஆனால் நகரின் பல முக்கிய பகுதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வாருகால்களில் இருந்து வழிந்தோடும் சாக்கடை நீரால் கடும் சுகாதரக் கேடு நிலவி வருகிறது. உடனடியாக அரசு வழங்கும் நிதிகளை வீணடிக்காமல், முதலில் சுகாதாரத்தை பேணும் வகையில் வாறுகால்களை புனரமைப்பு செய்ய வேண்டும்." என்று தெரிவித்தார்.
Face Book Comments: