கீழக்கரையில் அமையப் பெற்று இருக்கும் புதிய பேருந்து நிலையமானது, நகரின் எல்லைப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பின் புறத்தில் தான் மீன் மார்கெட், காய்கறி மார்கெட், நியாய விலை மண்ணெண்ணெய் கடை இருக்கிறது. அது மட்டுமல்லாமல், தற்போது துவங்கப்பட்டு இருக்கும் மின்சார கட்டான வசூல் மையமும் உள்ளது.
இடம் : புதிய பேருந்து நிலையம், கீழக்கரை |
இதனால் இந்த பகுதி மிகுந்த மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக அமையப் பெற்றுள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் 500 கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆனால் அந்தி சாய்ந்த மாலை வேளைகளில் இந்த பகுதிக்கு பொது மக்கள் செல்ல மிகுந்த அச்சப்பட்டு வருகின்றனர்.
இந்த 'தேவதாஸ்' களின் காவலுக்கு 'நாய்கள்' எங்கிருந்து தான் வருமோ..? |
இந்த பகுதியில் காலம் நேரம் இல்லாமல் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுக்களை வாங்கும் குடிமகன்கள், பேருந்து நிலைய வளாகத்தில் ஹாயாக, குடி நண்பர்களுடன் அமர்ந்து போதைகளை நிரப்பிக் கொள்கின்றனர். பின்னர் இந்த பகுதில் தொடர்ந்து நடக்கும் ரகளைகளால், இரவு 7 மணிக்கு மேல், ரண களமாக மாறி விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதிக்குள் பெண்கள் செல்வது அபாயகரமானதாக உருவெடுக்கிறது. பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்குள் செல்லவோ,பேருந்திற்காக காத்திருக்கவோ அச்சப்படுகின்றனர்.
இந்நிலையில் கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தினுள் புறக்காவல் நிலையம் அமைக்க கோரி, காவல் துறை துணை தலைவர் (D.I.G), மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் (S.P) மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் (D.S.P) ஆகியோர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். ஜனாப். பசீர் அஹமது அவர்கள் கூறும் போது "குடிகாரர்களின் கொட்டாரமாக மாறி வரும் புதிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் புறக்காவல் நிலையம் அமைப்பது ஒன்றே நல்ல தீர்வாக அமையும் என்கிற கருத்திற்கு வலு சேர்க்கும் விதமாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி இருக்கிறோம்.
ஏற்கனவே கீழக்கரை நகராட்சி சார்பாகவும்,இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, புதிய பேருந்து நிலைய கட்டிடத்திற்குள் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளாதாக தெரிகிறது. காவல் துறை உயர் அதிகாரிகள், எங்கள் மனு மீது உரிய விசாரணை செய்து, விரைவில் ஆவன செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்று நகர் நலனில் அக்கறையுடன் தெரிவித்தார்.
FACE BOOK COMMENTS :
FACE BOOK COMMENTS :
- Asan Hakkim ஹா ஹா ஹா போலிஸ் பாதுகாப்பு என்ன? ராணுவ பாதுகாப்பு போட்டாலும் இந்த இடம் இப்படித்தான் இருக்கும். இது குடிகாரகளின் பாரம் பரியம் அவ்வளவு சீக்கிரம மாத்திக்கொள்ளபோவதும் இல்லை மாத்தவும் முடியாது. இப்படிக்கு முன்னால் குடிமகன் அன்புள்ள அசன் ஹக்கீம்%%
No comments:
Post a Comment