கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெரு அருகே உள்ள தச்சர் தெருவில், 150 வருட பழமையான இந்த அம்பலார் வீட்டில், தேக்கு மரத்தில், அழகிய பூ வடிவங்களில் செதுக்கப்பட்டு இருக்கும் கலை நயமிக்க, வீட்டின் அடிக் கூரை, உப்பரிகை, மேல் மாடம், மாடி படிக்கட்டுகள், கூடம் போன்றவை பார்ப்போரை அதிசயிக்க வைக்கிறது.
இந்த வீட்டின் பெரும்பாலான தச்சு வேலைகளை, அந்த காலத்தில் வாழ்ந்த 'உலகு ஆசாரி' அவர்கள் திறம்பட செய்திருக்கிறார். அவர் செதுக்கி இருக்கும் மர வேலைப்பாடுகளை, சற்று உற்று நோக்கினால் மிக நுணுக்கமுடனும், தொழில் மீது கொண்ட அக்கறையுடனும் சிறப்பாக பணியாற்றியிருப்பது தெளிவாக விளங்கும்.
இன்றும் இந்த வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும், இங்கு வசிக்கும் அலி பாட்சா மாமா அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன், பழமை சிறிதும் மாறாது பராமரித்து வருகிறார். இந்த வீட்டை, தற்போது உள்ள கால சூழலுக்கு ஏற்ப, மாற்றம் செய்து கட்டுவதற்கு எத்தனையோ முறை, குடும்ப அங்கத்தினர்கள் வற்புறுத்தியும் கூட மாமா அவர்கள் ஒத்துக் கொள்ள மறுத்து விட்டார்.
கீழக்கரையில் அம்பலார் வீடுகள் குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவைக் காண
கீழ்
காணும்
லிங்கை
சொடுக்கி பார்வையிடலாம்.
பொறுத்திருங்கள்.... பழமைகள் பேசுவோம் தொடரும்
>>>>>>
No comments:
Post a Comment