கீழக்கரை நகரின், இதயப் பகுதியான நடுத் தெருவில் இருக்கும் ஜும்மா பள்ளிவாசலில் தினம் தோறும் நோன்பாளிகளுக்கு இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இதில் தினமும் நூற்றுக்கணக்கனோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த இப்தார் விருந்தில் சுவை மிகு நோன்புக் கஞ்சி, சமோசா, வடை, பழ ஜூஸ் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக ஜமாஅத்தார்களும், தெருவாசிகளும் பொருளாதார உதவிகள் அளித்து வருகின்றனர்.
கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி இஃப்தார் விருந்து நிகழ்ச்சிகளை, நடுத் தெருவைச் சேர்ந்த 18 வது வார்டு கவுன்சிலர் முஹைதீன் இபுறாஹீம் மற்றும் ஜலாலுதீன், ஆகில் உள்ளிட்ட HAM 7 STUDIO நண்பர்கள் குழுவினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோர்கள் ஒருங்கிணைப்பு, உபசரிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். கீழக்கரையில் இருக்கும் பெரும்பாலான பள்ளிவாசல்களில், இதே போன்று இஃப்தார் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த 'கீழக்கரை ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.
நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த 'கீழக்கரை ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.
கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)
கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)
கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)
கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)
http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html
கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)
<<<<< கீழக்கரை ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....
FACE BOOK COMMENTS :
Like · · Unfollow Post · Share · Edit
No comments:
Post a Comment