கீழக்கரை நகராட்சி சார்பாக கடந்த 24.07.2013 அன்று தினப் பத்திரிக்கை ஒன்றில் நகராட்சியின் இரண்டாண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏறத்தாழ 5 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு, பெரும்பாலான வேலைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது.
நிறைவடைந்ததாக கூறப்படும் பணிகள் குறித்தும், இன்னும் தரமில்லாமல் தொடரும் பணிகள் குறித்தும், கீழக்கரை வாழ் பொது மக்களும், உலகெங்கும் வாழும் கீழக்கரை சமூக ஆர்வலர்களும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்னும் கீழக்கரை நகரின் பல பகுதிகளில் சாலை மேம்பாடு, குடி நீர் வசதி, வாருகால் சீரமைப்பு, தெரு விளக்கு பொருத்துதல் போன்ற திட்டங்கள் முறையாக செயல்படுத்தாமல் இருக்கும் போது இது போன்ற சாதனை மலர், வேதனை தருவதாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் சேகு சதக் இபுறாஹீம் அவர்கள் கூறும் போது "இந்த விளம்பரம் செய்தித் தாள்களை மட்டும் தான் அலங்கரிக்கிறது. அது நமது ஊரை அலங்கரிக்கவில்லை.
கடந்த இரண்டாண்டுகளில், நகராட்சி ஒப்பந்ததாரர்களால் நடை முறைப்படுத்தப்பட்ட தரமற்ற பணிகளால், ஊரெங்கும் பல்லாங்குழி சாலைகளும், வழிந்தோடும் சாக்கடைகளும், தெரு விளக்குள் இல்லாமல் இருள் சூழ்ந்த தெருக்களும் மட்டும் தான் இருக்கிறது.
கடந்த இரண்டாண்டுகளில், நகராட்சி ஒப்பந்ததாரர்களால் நடை முறைப்படுத்தப்பட்ட தரமற்ற பணிகளால், ஊரெங்கும் பல்லாங்குழி சாலைகளும், வழிந்தோடும் சாக்கடைகளும், தெரு விளக்குள் இல்லாமல் இருள் சூழ்ந்த தெருக்களும் மட்டும் தான் இருக்கிறது.
இது போன்று சாதனை மலர் வெளியிடுவது, வெறும் கண் துடைப்பேயன்றி வேறில்லை." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
இது குறித்து துபாயிலிருந்து சமூக ஆர்வலர். நஜீம் மறைக்கா அவர்கள் கூறும் போது "நகராட்சி சார்பாக, செய்தி தாள் ஒன்றில் வெளியிடப்பட்டு இருக்கும் இரண்டாண்டு சாதனை மலர் தகவல் அறிவிப்பில் ஜொலிக்கும் பெயர்களில் உள்ள நகராட்சி உறுப்பினர்கள் என்ன சொல்ல போகிறார்கள்...?
எதற்கெடுத்தாலும் கோஷம் போட்டவர்கள், தங்கள் பெயர்களை, சாதனை மலரில் கலர், கலராக போடுவதற்கு எப்படி அனுமதித்தார்கள்.
அப்ப அதெல்லாம் விளம்பரம் மற்றும் காசு.. பணம்... துட்டு... மணி... மணி தானா...???" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
FACE BOOK COMMENTS :
Like · · Unfollow Post · Share · Edit
அப்ப அதெல்லாம் விளம்பரம் மற்றும் காசு.. பணம்... துட்டு... மணி... மணி தானா...???" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
FACE BOOK COMMENTS :
Like · · Unfollow Post · Share · Edit
ஊரே நகராட்சி நிர்வாகத்தை காறி துப்பிக் கொண்டு இருக்கிறது.இந்த லட்சணத்தில்... மானம் கெட்ட ஜன்மங்கள். கீழக்கரையிலும் கடல் இருக்கிறது.
ReplyDelete