சென்னை 'புதுக்கல்லூரி' இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (NCIM) மேலாண்மை பயிலகத்தில், (கடந்த 2004 ஆம் ஆண்டில்) M.B.A., முதுகலை பட்டம் பெற்று, துபாயில் பணி புரியும் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த ரமலான் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி, கடந்த (18.07.2013) வியாழக் கிழமையன்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை பார்ப்யூக் டிலைட்ஸ் & ஹாஜி அலி ஜூஸ் சென்டரில் சிறப்பாக நடை பெற்றது.
இந்த அருமையான நிகழ்வில், முஹம்மது அர்ஷத், ஷா நவ்ஃபல், இஸ்மாயில் ஹசன், சாகுல் ஹமீது, இம்ரான் முஹம்மது, ஜாபர் சாதிக், முஹம்மது ஜஸில், அஹமது முனவ்வர், அஹமது சாலிஹ், முஹம்மது அத்தீஃப், சித்திக் அஹமது, முஹைதீன் கருணை, இம்தியாஸ் அஹமது, ஜமீல் முஹம்மது உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த வருடமும், இதே முன்னாள் மாணவ நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இஃப்தார் விருந்து நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த இஃப்தார் விருந்து நிகழ்ச்சியை முஹம்மது அர்ஷத் அவர்கள் நல்ல முறையில் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
No comments:
Post a Comment