தேடல் தொடங்கியதே..

Sunday, 7 April 2013

கீழக்கரை நகர் நல இயக்கத்திற்கு தொடர்ந்து குவியும் விருதுகளும், பாராட்டுகளும் - சமூக சேவைக்கு கிடைக்கும் அங்கீகாரம் !

கீழக்கரையில் கடந்த ஆண்டு ஆரம்பத்தில், மக்கள் சேவைக்காக, சமூக நல விரும்பிகளால் 'கீழக்கரை நகர் நல இயக்கம்' என்ற பெயரில் தொண்டு அமைப்பு துவங்கப்பட்டு, வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் கீழ‌க்க‌ரை ரோட்ட‌ரி ச‌ங்க‌ம் சார்பில், கீழ‌க்க‌ரையில் ப‌ல்வேறு துறைக‌ளில் சிற‌ப்பாக‌ செயல்ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ஊக்க‌ப்ப‌டுத்தும் வ‌கையில், சமூக ஆர்வலர்களை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. 


இந்த விழாவில் கீழக்கரை நகர் நல இயக்கம் சிறந்த சமூக சேவைக்கான விருதினை பெற்றது. ரோட்டரி மாவ‌ட்ட‌ க‌வ‌ர்ன‌ர் ஷாஜ‌ஹான் விருதுக‌ளை வ‌ழ‌ங்கினார். நகர் நல இயக்கத்தின் நிறுவனர். K.T.M.S. ஹமீது அப்துல் காதர் அவர்கள் விருதினை பெற்றுக் கொண்டார். இதில் ச‌த‌க் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் அலாவுதீன் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். ரோட்ட‌ரி ச‌ங்க‌ கீழ‌க்க‌ரை தலைவ‌ர் ஆசாத் நிகழ்ச்சி சிறப்புற அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். 



மேலும் இந்த விழாவில் இயக்கத்தின் செயலாளர் ஜனாப். பசீர் அகமது, பொருளாளர் ஜனாப்.ஹாஜா அனீஸ் ஆகியோர்கள் கவுரவிக்கப்பட்டனர். இயக்கத்தின் உறுப்பினரும் அ.தி.மு.க நகர் செயலாளருமான திர.இராஜேந்திரன், நிர்வாகிகள் திர.பாரதி, திரு.விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதே போல் கடந்த மாதம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக, புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கான மறு வாழ்விற்கும், மேல் சிகிச்சைக்கும் நிதி திரட்டுவதற்காக இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 


அந்த நிகழ்விற்காக, கீழக்கரை பகுதியில் நிதி திரட்டி பேருதவிகள் புரிந்தமைக்காக, மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர். திரு சேது ராமன், கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் ஜனாப்.ஹாஜா அனீஸ் அவர்களுக்கு விருதும், பாராட்டுப் பத்திரமும் வழங்கி கவுரவித்தனர்

கீழக்கரை நகரில் சமூக சேவைகளில் சிறப்பான தொண்டாற்றி வரும் 'கீழக்கரை நகர் நல இயக்கம்' மென் மேலும் மக்கள் பணிகளில் சேவைகள் பல புரிய, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, 6 April 2013

கீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு A1B' positive இரத்தம் தேவை - உடனடியாக உதவ வேண்டுகோள் !


கீழக்கரை O.J.M தெருவைச் சேர்ந்த, ஹாஜர் சுல்தான் பீவி என்கிற பெண்மணி, கருப்பை அறுவை சிகிச்சைக்காக,  இராமநாதபுரம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். இவருக்கு  A1B' positive இரத்த வகை, (மூன்று  யூனிட்கள்) அவசரமாக தேவைப்படுகிறது. இந்த வகை இரத்தம் அரிதாகவே கிடைப்பதால், இந்த தகவல் கிடைக்கப் பெறும் அன்பு நண்பர்கள் அனைவரும், ஏனைய நம் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். 
மேலும் இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் பெயரை கீழ் காணும் அலைப்பேசி எண்ணில் உடனடியாக தெரிவிக்குமாறும், கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு :           பவுசுல் அமீன்    : 9791549222

 "இரத்த தானம் செய்வோம்..  மனித உயிர் காப்போம்.

Friday, 5 April 2013

கீழக்கரையில் 'தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்' - மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர் விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியீடு !

கீழக்கரை அரசு மருத்துவமையில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கழகத்தின் தலைவர். A.M.S. தமீமுதீன் அவர்கள் கூறும் போது "இது வரை நம் கீழக்கரை நகரவாசிகள்  அரசின் மருத்துவ காப்பீட்டு பயன்களை பெற இராமநாதபுரம் அரசு மருத்துவமனையை நாடியே செல்ல வேண்டி இருந்தது. இப்போது கடந்த பிப்ரவரி மாதம் முதல் நம் கீழக்கரை அரசு மருத்துவ மனையிலேயே நல்ல முறையில் செயல் பட்டு வருகிறது.

CT ஸ்கேன், MRI ஸ்கேன் கூட, இங்கிருந்து பரிந்துரைக்கப்பட்டு இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் எடுக்கப்படுகிறது. இதற்கான முழு செலவையும் அரசே ஏற்கிறது. ஆகவே மருத்துவம் தேவைப்படும் அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

Saturday, 30 March 2013

துபாயில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சிறப்பான வரவேற்பு - 'மதுரை-துபாய்' விமான சேவையை துரிதப்படுத்த கோரிக்கை !

துபாயில் பரோடா வங்கியின் நூறாவது 'வெளிநாட்டு கிளை' திறப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு, அமீரகத்தின் பல்வேறு தமிழர் அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள், துபாய் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


மேலும் இக்குழுவினர் தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான 'மதுரை – துபாய்' நேரடி விமான சேவையை துரிதப்படுத்த கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் இந்த கோரிக்கை, நீண்ட காலமாக நிறைவேற்ற படாமல் இருப்பது குறித்தும் எடுத்து கூறினர். இந்த கோரிக்கையை செவியுற்ற மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி தேவையானவற்றை செய்வதற்கு தாம் முயற்சிகள் மேற்கொள்வதாக கூறினார்.

இது குறித்து குழுவின் சார்பாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு நன்றி கூறிய நெல்லை S.S.மீரான், இந்தத் தடத்தில் ஏர் இந்திய சேவை மேலும் தாமதமாகும் பட்சத்தில், ஜெட் ஏர்வேஸ் போன்ற தனியார் விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
 இந்த சந்திப்பில், நெல்லை S.S.மீரான், அமீரக தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழக இணைச்செயலாளர் கீழைராஸா, காயிதே மில்லத் பேரவை பொருளாளர் ஹமீது ரஹ்மான், விழாக் குழு செயலாளர் பரக்கத் அலி, ஈமான் அமைப்பின் விழா செயலர் ஹமீது யாசீன், மற்றும் அம்பை ஸ்பர்ஜன் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
நன்றி : (தகவல்) ஹமீது ரஹ்மான்