கீழக்கரை நகரில் நூற்றாண்டுகளையும் தாண்டி, கம்பீரமாக காட்சி தரும் புரதானச் சின்னங்களில் வடக்குத் தெரு தைக்காவும் ஒன்றாகும். வடக்குத் தெருவின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த தைக்கா 160 வருட பழமையானது. கீழக்கரை நகரில் இஸ்லாமிய மார்க்க கல்வியை கற்றுக் கொடுக்கும் நல்ல நோக்கத்துடன் துவங்கப்பட்ட பழமையான தைக்காக்களுள், தற்போது பழமையுடன் நிலைத்திருப்பதில் இது முதன்மையானதாகும். வடக்குத் தெரு பகுதி நண்பர்கள் மட்டுமின்றி, கீழக்கரையில் பிறந்த அனைத்து தெரு நண்பர்களும் இணையும் முக்கிய சந்திப்பாகவும், வடக்குத் தெரு தைக்கா விளங்குகிறது.
கீழக்கரை நகரில், இந்த வடக்குத் தெரு பகுதியில் நடை பெறும் அனைத்து திருமணங்களின் போதும், கல்யாண மாப்பிள்ளைக்கு இங்கு வைத்து தான் 'பால் இறக்குதல்' என்கிற முறைமை செய்வது வழக்கம். மேலும் இந்த தைக்கா வளாகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மிகப் பிரமாண்டமான உருவில் நின்ற புளிய மரத்தையும் யாரும் மறக்க முடியாது. 10 பேர் சேர்ந்து கட்டிப் பிடித்தால் தான் அதன் விட்டத்தை எட்ட முடியும். அந்த அளவிற்கு அதன் பருமன் இருந்ததை வடக்குத் தெரு நண்பர்கள் இன்னும் ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றனர்.
இந்த புரதான வடக்குத் தெரு தைக்கா குறித்து வடக்குத் தெரு ஜமாத்தின் செயலாளரும், ஜமாத்தின் மூத்த அங்கத்தினருமான M.M.S.முஹைதீன் இபுறாஹீம் அவர்கள் கூறும் போது
"இந்த தைக்கா மிகவும் பழமை வாய்ந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை, சிறுவர், சிறுமியர்களுக்கு பகுதி நேர மதரஸாவாக செயல்பட்ட இந்த தைக்காவில், அது வரை ஆயிரம், பல்லாயிரம் இஸ்லாமிய குழந்தைகள் அரபி மொழியில் குர் ஆனை ஓத கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள்.
இந்த தைக்கா வளாகத்தில் தான் அந்த காலங்களில் வடக்குத் தெரு ஜமாத்தின் பொதுக் குழு, நிர்வாகக் குழு கூட்டங்கள் நடை பெறும்." என்று பழமைகளை அசை போட்டவாறு தெரிவித்தார்.
"இந்த தைக்கா மிகவும் பழமை வாய்ந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை, சிறுவர், சிறுமியர்களுக்கு பகுதி நேர மதரஸாவாக செயல்பட்ட இந்த தைக்காவில், அது வரை ஆயிரம், பல்லாயிரம் இஸ்லாமிய குழந்தைகள் அரபி மொழியில் குர் ஆனை ஓத கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள்.
இந்த தைக்கா வளாகத்தில் தான் அந்த காலங்களில் வடக்குத் தெரு ஜமாத்தின் பொதுக் குழு, நிர்வாகக் குழு கூட்டங்கள் நடை பெறும்." என்று பழமைகளை அசை போட்டவாறு தெரிவித்தார்.
கீழை இளையவன் வலை தளத்தில், கீழக்கரையின் பழமை மிளிரும் பகுதிகளை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறோம். நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவுகளை காண, பின் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.
கீழக்கரையில் பழமையை தாங்கி, கம்பீரமாக காட்சி தரும் கட்டிடங்கள் - வரலாற்றுச் சுவடுகள் (பகுதி 1)
பெருமைக்குறிய புராதான சின்னம்.
ReplyDeleteஇளம் வயதில் எந்தன் வடக்குத் தெரு இனிய நண்பர்களுடன் நேரம் போவது அறியாது அளவலாவிய சிறப்பான இடம்.
இத் தருணத்தில் வடக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகத்தினருக்கு கனிவான வேண்டுகோள்:
சிரமம் பாராது, இந்த பழமையான பாரம்பரிய மிக்க சின்னத்தை இன்னும் பல காலம் பாதுகாக்கும் விதமாக சற்று மராமத்து பார்க்க அன்புடன் வேண்டுகிறேன். உடைந்த ஓடுகளை கலைந்து வேறு ஓடுகளை மாற்றியும், வண்ணம் பூசியும்,சிதிலம் அடந்த மதில்களை பராமரித்தும் அதுவும் மழை காலம் வருவதற்கு முன் முனைந்து செயல் பட மீண்டும் கோரிக்கை வைக்கிறேன்.
இளமை போனாலும் திரும்பாது அது போல பழமை போனாலும் திருமப கிடைக்காது.
இது விஷயத்தில் வல்ல ரஹ்மான் உங்களுக்கு துணை நிற்க உள்மார இறைஞ்சுகின்றேன்
தம்பி கீனா இனா வின் கனிவான பார்வைக்கு: அதே வடக்குத் தெருவில் பி.கே.எஸ் வீடு, வடக்குத் தெரு அம்பலார் வீடு போன்றவைகளும் பழமை தாங்கி கம்பீரமாக காட்சி தரும் கட்டிடங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து புகழ் பாடுங்களேன்.
ReplyDelete