இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இந்த வருடம், பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இந்நிலையில் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காவிரி நீர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் இப்போது தான் தண்ணீர் வரத் துவங்கியுள்ளது. ஆனால் கீழக்கரை - இராமநாதபுரம் 'டாஸ்மாக்' நெடுஞ்சாலையில் வண்ணாந்துறை வளைவு அருகே, காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வந்தது.
அது மட்டுமன்றி R.S.மடை, திருப்புல்லாணி சாலை ஓரங்களிலும் சில சமூக விரோத கும்பல், குடிநீர் குழாயை உடைத்து வீணடிப்பு செய்து வருகின்றனர். இதனால் வீணாகி வந்த குடிநீரை, அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் குளிக்கவும், ஆடு, மாடுகளுக்கும், இந்த நீரை பயன்படுத்துகின்றனர்.
இந்த பிரச்னையை உடனடியாக நிவர்த்தி செய்து குடிநீர் முறையாக, வீடுகளுக்கு வந்து சேர காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட அலுவலர்கள், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் பராமரிப்பு பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தினர், எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மற்றும் உள்ளூர் பொது நல அமைப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் கீழக்கரை - இராமநாதபுரம் டாஸ்மாக் சாலையில் உடைக்கப்பட்ட காவிரிக் குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டதாக, தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர், கோரிக்கை விடுத்திருந்த மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தினருக்கு பதிலறிக்கை கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
FACE BOOK COMMENTS :
Like · · Unfollow Post · Share · Edit
அது மட்டுமன்றி R.S.மடை, திருப்புல்லாணி சாலை ஓரங்களிலும் சில சமூக விரோத கும்பல், குடிநீர் குழாயை உடைத்து வீணடிப்பு செய்து வருகின்றனர். இதனால் வீணாகி வந்த குடிநீரை, அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் குளிக்கவும், ஆடு, மாடுகளுக்கும், இந்த நீரை பயன்படுத்துகின்றனர்.
நன்றி : (படங்கள்) ஆனா முஜீப் அவர்கள் வழியாக கீழக்கரை டைம்ஸ்
இந்நிலையில் கீழக்கரை - இராமநாதபுரம் டாஸ்மாக் சாலையில் உடைக்கப்பட்ட காவிரிக் குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டதாக, தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர், கோரிக்கை விடுத்திருந்த மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தினருக்கு பதிலறிக்கை கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.
FACE BOOK COMMENTS :
Like · · Unfollow Post · Share · Edit
கடந்த நான்கு நாட்களாக அழுத்தம் குறைவாக குடிநீர் வருவது உண்மையே. ஆனால் நகராட்சியால் நகராட்சிக்கு சொந்தமான சேதுக்கரை ஆழ் கிண்ற்றிலிருந்து வருவதாக ஒரு பேச்சு நகரில் நிலவுகிறது.
ReplyDeleteகாவேரி கூட்டு குடிநீரா அல்லது சேதுக்கரை நீரா ? மக்களுக்கு உண்மை தெரிந்தாக் வேண்டும். காரணம எதுவாக இருந்தாலும் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்ட்ள்ள்து.
குடிநீர் வருவது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும் இலவசமாக கிடைக்கவில்லை. ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் வரியாக ரூபாய் ஆறு நூறு வரியாக செலுத்தப் படுகிறது. நகராட்சி விதிப் படி ஒவ்வொரு குடிமனுக்கும் தினம் 90 லிட்டர் நீர் வழஙக வேண்டும்.
18/07/13 தேதியில் நிர்வாக பொறியாளர் - த.கு.வ.ஆ, இராமநாதபுரம் அவர்களால் கையொப்பம் இட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டதாக காணப்படுகிறது.ஆனால் நகருக்கு நீர் வரவில்லை. வந்ததோ 24.07.13 அன்று தான். இடைப்பட்ட நாளில் நடந்தது என்ன என்று யாமறியோம் பராபரமே
ReplyDelete