தேடல் தொடங்கியதே..

Wednesday, 16 October 2013

கீழக்கரை நடுத் தெரு ஜும்மாப் பள்ளியில் நடை பெற்ற பெருநாள் தொழுகை (புகைப் படங்கள்)

கீழக்கரை  நடுத் தெரு ஜும்மாப் பள்ளியில் இன்று (16.10.2013) காலை 8.30 மணியளவில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.தொழுகைக்குப் பின்னர், நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இந்த தியாகத் திருநாளில் கீழை இளையவன் வலை தளம் சார்பாக‌ அனைத்து அன்புள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.



 இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள் 

கீழக்கரை ஓடைக்கரைப் பள்ளியில் நடை பெற்ற பெருநாள் தொழுகை (புகைப் படங்கள்)

தியாக‌ திருநாளை முன்னிட்டு இன்று (16.10.2013) கீழ‌க்க‌ரை  ந‌க‌ரில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் ந‌டைபெற்ற‌ பெருநாள் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர். கீழக்கரை ஓடக்கரை பள்ளியில் காலை 9.30 மணியளவில் பெருநாள் தொழுகை நடை பெற்றது. தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். 








இந்த தியாகத் திருநாளில் கீழை இளையவன் வலை தளம் சார்பாக‌ அனைத்து அன்புள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடைபெறும் இடங்கள் அறிவிப்பு !

கீழக்கரையில் பல்வேறு சமுதாய அமைப்புகளின் சார்பாக, நகரின் பல இடங்களில் நாளை (16.10.2013) காலை திடல் தொழுகைகள் நடை பெற இருக்கிறது. இது தவிர கீழக்கரையில் கடற்கரைப் பள்ளி ஜமாஅத், கிழக்குத் தெரு ஜமாஅத், வடக்குத் தெரு ஜமாஅத், தெற்குத் தெரு ஜமாஅத் சார்பாகவும், அந்தந்த தெருக்களில் நபி வழி திடல் தொழுகை நடை பெறுகிறது. பெரும்பாலும் அனைத்து திடல்களிலும் காலை 7.30  மணிக்கு தொழுகை துவங்க இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் திடல்களுக்கு 7.30 மணிக்கு முன்னதாக செல்வது நலம்.



இந்நிலையில் கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடைபெறும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கீழக்கரையில் களை கட்டிய 'பெருநாள் இரவு' வியாபாரங்கள் !

கீழக்கரையில் வருடம் தோறும் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாளை, குடுமபத்தினருடன் கொண்டாடி மகிழ்வதற்காக, கடல் கடந்து வாழும் நம் சொந்தங்கள், கீழக்கரைக்கு விடுமுறையில் வருவது வழக்கம். அது போல் இந்த வருடமும் ஏராளமான கீழக்கரை நண்பர்கள் ஊருக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒருங்கே சந்தித்து கொள்ளும் மகிழ்ச்சியான இரவாக, பெருநாளை எதிர் நோக்கி இருக்கும் இன்றைய இரவு அமைந்திருக்கிறது. 


இந்த இரவில் தான் பெரும்பாலான நண்பர்கள் பெருநாள் உடுப்புகளை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் முஸ்லீம் பஜார் பகுதியில் உள்ள ஆண்களுக்கான ஆடையகங்கள், வாடிக்கையாளர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அதன் தொடர்ச்சியாக தையல் கடைகளும் கடும் பிசியாய் இருக்கிறது. 



கீழக்கரையில் அதிகமானோர் ஹஜ்ஜுப் பெருநாள் கடமையான குர்பான் கொடுக்க இருப்பதால், இறைச்சிக் கடைகளில் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.காய்கறி கடைகளும் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. 




முஸ்லீம் பஜார் பகுதியில் இரவு 7 மணியளவில் குழும ஆரம்பித்த, பல்வேறு தெருக்களை சேர்ந்த நண்பர்கள் பட்டாளம், ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லியவர்களாக, கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.