கீழக்கரை நகரில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள், மாலையில் நோன்பை நிறைவு செய்யும் போது, சாப்பிடுவதற்கு முதன்மை உணவாக, சுவை மிகுந்த நோன்புக் கஞ்சியும், வடையும் இல்லாமல் இருப்பதில்லை. இதற்கென கீழக்கரையின் அனைத்து ஜமாஅத் பள்ளிவாசல்களிலும், பெரும்பாலான பொது நல சங்கங்களிலும் நோன்புக் கஞ்சி சிறப்பாக தயாரிக்கப்படுகிறது.
இடம் : மேலத் தெரு புதுப் பள்ளி |
இடம் : மேலத் தெரு புதுப் பள்ளி |
இந்த ருசிமிக்க கீழக்கரை நோன்புக் கஞ்சியை, வீட்டிலுள்ள நோன்பாளிகளுக்கு வாங்கி செல்வதற்காக, தூக்குச் சட்டிகளுடனும், பாத்திரங்களுடனும் சிறுவர், சிறுமியர்கள், பெரியவர்கள், முதியவர்கள் பெண்கள் என ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இடம் : பழைய குத்பா பள்ளி |
இடம் : நடுத் தெரு ஜும்மா பள்ளி |
நோன்புகஞ்சி அருந்தி நோன்பு திறக்கும் போது அது அனைத்து சக்தியையும் தந்து விடுகின்றது. வெளிநாடு வாழ் கீழக்கரை மக்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் கூட, அங்கும் நோன்புக் கஞ்சியை தேடிய பயணம் தொடரவே செய்கிறது. வெளி உணவகங்களில் நோன்பு கஞ்சி கிடைக்காவிட்டாலும் தாங்களாகவே தங்கள் வீட்டில் தயாரித்தாவது அதனைக் கொண்டு நோன்பு திறக்கின்றனர்.
கீழக்கரை 'நோன்புக் கஞ்சி' மணம் - இன்னும் வரும்.....
கஞ்சியின் சூடு மறையும் முன் சுடச்சுட பகிர்வு..மாஷா அல்லாஹ்.முயற்சிக்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்...!
ReplyDelete