கீழக்கரை அஹமது தெருவில், சிறப்பாக செயல்பட்டு வரும் மதரஸதுல் அல்-மனார் சிறுவர்கள் அரபி மதரசாவின் ஆண்டு விழா, அஹமது தெரு ASWAN பொது நல சங்கத்தின் சார்பாக, நேற்று (07.07.2013) ஞாயிற்றுக் கிழமை மாலை 7 மணியளவில், பெண்கள் தொழுகைப் பள்ளியில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அஹமது தெரு ASWAN பொது நல சங்கத்தினர் செய்திருந்தனர்.
கீழக்கரை புதுப் பள்ளிவாசல் கத்தீப் மன்சூர் ஆலிம், அப்ஜலுல் உலமா அரபித் துறை தலைவர் மவ்லவி S.அப்துல் நாசர் ஜமாலி ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினர். அதனை தொடர்ந்து மதரசாவில் பயின்ற 100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமியர்களுக்கு இடையே நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்கம் குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டி, கிராஅத் போட்டி, குர்ஆன் சூராக்கள் ஒப்புவித்தல் போட்டி போன்றவைகளில் முதன்மை பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment