கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற இருப்பதால், கீழக்கரை நகர், ஏர்வாடி, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, உத்தரகோசமங்கை, களரி, எக்ககுடி, தேரிருவேலி மற்றும் அதனைச் சார்ந்த, சுற்று வட்டார பகுதிகளில் நாளை வியாழக் கிழமை (11.07.2013) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று இராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவே ரமளானின் முதல் நோன்பை எதிர் நோக்கி இருக்கும், நம் பகுதி பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம். தாங்கள் வாசிக்கும் இந்த தகவலை, நம் நண்பர்களுக்கும், சொந்தங்களுக்கும் தெரிவிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment