கீழக்கரை நகரத்தின் நூற்றாண்டுகளைக் கடந்த பழம் பாரம்பரியத்தை பறை சாற்றும் முகமாக இபுனு பதூதா, மார்க்கோ போலோ, யுவன் சுவாங் போன்ற வெளிநாட்டு பயணிகள், கீழக்கரை பகுதியை குறித்து தங்கள் வரலாற்றுக் குறிப்பில் கூறியிருகிறார்கள். கீழக்கரையின் தனித்துவமிக்க பாரம்பரியத்தில் வந்த வழித்தோன்றலில் வந்த நம் முன்னோர்கள் கடலும் கடல் சார்ந்த வணிகர்களாகவும், திரை கடல் ஓடியும், திரவியம் தேடியும் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்கள்.
அந்த அற்புதக் கிளைகளில் தோன்றிய தெருக்களில் ஒன்றான 'கோக்கா அஹ்மது தெரு' இன்றும் பழமை சான்றுகளை தன்னகத்தே கொண்டு நிலை பெற்றிருகிறது. நம் முன்னோர்கள் பல நூற்றண்டுகளுக்கு முன் பாய் மரக்கப்பலில் வணிகர்களாக பர்மா, ரங்கூன், மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா போன்ற பல நாடுகளுக்கு வணிகர்களாகவும், தண்டையார் கப்பலோட்டி ஆகவும் சென்று வந்திருகிறார்கள். அந்த பாய் மரக் கப்பல்களை அலை கடலில் செலுத்தியவர்களுள் முதன்மையானவர்களாக கோக்கா அஹமது தெரு வாசிகள் இருந்திருக்கின்றனர்.
கீழக்கரை நகரில் வாழ்ந்த முன்னோர்கள் அனைவரும் அன்பின் உருவகமாகவும், பங்காளிகளாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். குறிப்பாக பிரபுக்கள் தெருவார்களும், கோக்கா அகமது தெருவாசிகளும் அனைத்து காரியங்களிலும் ஒன்றிணைந்தே செயல்பட்டு வந்துள்ளனர். உதாரணமாக அஹமது தெரு வாசிகள் பச்சை கப்பல் என்றும் பிரபுக்கள் தெருவுக்கு வெள்ளை கப்பல் என்றும் கடலில் தங்கள் கப்பலை செலுத்தி வந்துள்ளனர்.
கோக்கா அஹமது தெருவின் பெயர் காரணம் குறித்து சரித்திரங்களை புரட்டும் போது நம் முன்னோர்கள் வியாபாரி கடல் கடந்து பாய் மரக்கப்பலில் சென்று அடிக்கடி ரஷ்யா நாட்டில் உள்ள கோக்கா மார்கெட்டிற்கு சென்று வருவது வழக்கம். அந்த மார்கெட்டின் பெயரை வைத்து கோக்கா அஹ்மது தெரு என தங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வைத்தார்கள் என கூறப்படுகிறது.
இந்த பகுதியில் சரித்திர நிகழ்வுகளில் ஆர்வம் கொண்ட நெய்னா முஹம்மது அவர்கள் முஹைதீன் தைக்கா வரலாறு குறித்து நம்மிடையே பேசும் போது "கோக்கா அஹமது தெருவில் முஹைதீன் ஆண்டவர் கொடி மரம் என்கிற பெயரில் பிரமாண்ட உருவில், கிழக்கு தெருவிற்கு தெரியும் அளவிற்கு உயரமாக, தேக்கு மரத்தாலான கம்பம் ஒன்று அமைந்திருந்தது. அந்த மரத்தை வைத்து தான் இன்றைய அஹமது தெரு முஹைதீன் தைக்கா 1932 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அந்த மரத்தின் பலகையில் தான் கதவுகளும் ஜன்னல்களும் கட்டப்பட்டது என்று அறியபடுகிறது." என்கிற வரலாற்றுத் தகவலை தெரிவித்தார்.
சரித்திர சேகரிப்பில் உதவி : 'A.S.டிரேடர்ஸ்' கஃபார் கான்
பொறுத்திருங்கள்... பழமைகள் பேசுவோம்..!
Very informative! Good post.v appreciate your work.
ReplyDeleteVery informative,Good job.v Heartly appreciate your work.
ReplyDelete