கீழக்கரை நகரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பொது சேவையில் சிறப்பாக செயல் பட்டு வரும் இஸ்லாமி பைத்துல் மால் அமைப்பின் மூலம், ஏழை எளிய மக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குதல், சிறு தொழில் கடன் வழங்குதல், ஆதரவற்ற விதவைகள் மற்றும் முதியோர்களுக்கு மாதாந்திர உதவிகள், உயர் கல்விக் கடன், இலவச மருத்துவ உதவிகள், ஆதரவற்ற ஏழைகளுக்கு வீடி கட்டித் தருதல் உள்ளிட்ட சேவைகளை திறம்பட செயல் படுத்தப்பட்டு வருகிறது.
கீழக்கரையில் சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளர்களால், கடந்த 1986 ஆம் ஆண்டு பைத்துல் மால் உருவாக்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு பைத்துல் மாலின் நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 1990 ஆம் வருடம் பண்பாளர். B.S.A.அப்துல் ரஹ்மான் அவர்களால், பிரபுக்கள் தெரு பகுதியில் திறப்பு விழா கண்டு, இன்றளவும் தொய்வின்றி சேவையாற்றி வருகிறது. இதனை கவுரவிக்கும் வகையில் கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமி பைத்துல் மால் குறித்து நாம் சென்ற மாதம் வெளியிட்டிருந்த பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.
இந்த விருதினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு. S .சுந்தரராஜ் அவர்களிடம் இருந்து, கீழக்கரை இஸ்லாமி பைத்துல் மால் அமைப்பின் செயலாளர் ஜனாப். முகைதீன் தம்பி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்த சிறப்பான விருதினை பெற்று சேவையின் சிகரமாய் ஒளிரும் கீழக்கரை இஸ்லாமி பைத்துல் மால் அமைப்பு, மென் மேலும் சிறப்புற மக்கள் சேவையாற்றும் முகமாக, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கீழை இளையவன் என்று அழைக்கப்படும் நன்பர் ஷாலிஹ் ஹுசைன் அவர்களுக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் மூலம் சிறந்த சாதனையாளர் விருது வழங்கியதில் மசற்ற மகிழ்சி அடைகிறேன், பொதுப் நல பணி என்பது யாராலும் செய்ய முடியாது அதற்கென்று ஒரு மனது வேண்டும், பலனை எதிர்பார்க்க என்னம் வேண்டும் மற்றும் எல்லோருடன் அன்பாய் பழகும் குணம் வேண்டும் இதை நன்பர் ஷாலிஹ் ஹுசைனிடம் பார்க்கலாம், கீழை இளையவன் மூலம் கீழக்கரையில் அனைத்து நல்லது கெட்டது நிகழ்வுகளையும் கடல் கடந்த எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்கள் மென்மேலும் வளர, நோய் நொடியில்லாமல் பல நூறாண்டு காலம் வாழ வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். என்றும் நட்புடன் முஹம்மது நஜீம், துபை
ReplyDelete