கீழக்கரை நகரின் சுத்தம், சுகாதாரம் மேம்படவும், கீழக்கரையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தோடும், அனைத்து சமூக நல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயல் படுவதற்காகவும், கீழக்கரை இளைய சமுதாயத்தினர் மத்தியில் கல்வி, அரசுத் தேர்வுகள், வேலை வாய்ப்பு, விழிப்புணர்வு போன்ற பதிவுகளை இணைய தளங்கள் வழியாகவும்,
சமூக வலை தளங்கள் வாயிலாகவும் உலகெங்கும் வாழும் கீழக்கரை மக்களுக்கு, தொடர்ந்து கொண்டு செல்லும் சேவையை பாராட்டி, கீழை இளையவன் வலை தள நிறுவனர். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைனுக்கு சிறந்த சாதனையாளர் விருதினை, 'கீழக்கரை நகர் நல இயக்கம்' சார்பாக மாண்பு மிகு அமைச்சர் திரு. S .சுந்தரராஜ் வழங்கி கவுரவித்தார்.
இது குறித்து கீழை இளையவன் வலை தள இணைய ஆலோசகர் அபு பைசல் அவர்கள் கூறும் போது "எல்லாப் புகழும் இறைவனுக்கே...
நாம் பிறந்த இந்த கீழக்கரை நகரத்தை எப்பாடு பட்டாவது சுத்தமான ஊராக, அனைத்து சிறப்புகளும் ஒருங்கே பெற்ற முன் மாதிரி நகரமாக மாற்றுவதே எங்கள் தலையாய நோக்கம்.
அடுத்ததாக கல்வி, அரசு வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை, சமூக வலை தளம் மூலமாகவும், இணைய தளம் வழியாகவும் இளைய தலை முறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும், இறைவன் அருளால் கொண்டு சென்று கொண்டிருக்கிறோம்.
எங்களை இனம் கண்டு விருதுக்கு பரிந்துரைத்த கீழக்கரை நகர் நல இயக்கத்திற்கு
நன்றி. இது போன்ற விருதுகள் எங்களுக்கு ஒரு சிறந்த அங்கீகாரமாகவும்,
எங்களை இன்னும் சிறப்பாக சேவையாற்ற தூண்டும் ஊக்க மருந்தாக
அமைந்திருக்கிறது." என்று மிகுந்த உற்சாகத்துடன் தெரிவித்தார்.
இது குறித்து கீழை இளையவன் வலை தள இணை ஆசிரியர் அஹமது அஸ்பாக் அவர்கள் கூறும் போது "கீழை இளையவன் வலைப் பதிவில் வெளியிடப்படும் கீழக்கரை நகர் நலன் தாங்கிய பதிவுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தினரால், பார்வையிடப்பட்டு தீர்வுகள் கிடைக்கிறது.
அது மட்டுமல்லாமல் பெரும்பாலான பிரச்சனைகளை செய்திகள் வெளியிடுவதோடு நில்லாமல், கீழக்கரை நகரில் இருக்கும் பொது நல அமைப்புகளின் மூலமாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தரப்படுகிறது. புகார் மனுக்கள் அனுப்பப்படுகிறது. இதனால் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்கிறது.
கீழை இளையவனுக்கு கிடைத்த இந்த சாதனையாளர் விருதினை, எங்களுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக கருதுகிறோம்" என்று ஆரவாரத்துடன் தெரிவித்தார்.
FACE BOOK COMMENTS :
அது மட்டுமல்லாமல் பெரும்பாலான பிரச்சனைகளை செய்திகள் வெளியிடுவதோடு நில்லாமல், கீழக்கரை நகரில் இருக்கும் பொது நல அமைப்புகளின் மூலமாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தரப்படுகிறது. புகார் மனுக்கள் அனுப்பப்படுகிறது. இதனால் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்கிறது.
கீழை இளையவனுக்கு கிடைத்த இந்த சாதனையாளர் விருதினை, எங்களுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக கருதுகிறோம்" என்று ஆரவாரத்துடன் தெரிவித்தார்.
FACE BOOK COMMENTS :
எல்லாப் புகழும் இறைவனுக்கே...
- Mohammed Idrees, Zyed Raseen, Love Twins and 71 others like this.
- Lks Meeran Mohideen மாஷா அல்லாஹ்....இன்னும் பல்வேறு விருதுகள் எங்கள் இளவல் பெறவேண்டும்....வாழ்த்துக்கள்..
- Ams Thameemudeen மாஷா அல்லாஹ்....இன்னும் பல்வேறு விருதுகள் எங்கள் இளவல் பெறவேண்டும்....வாழ்த்துக்கள்..
- கீழை ரோஜா வாழ்த்துக்கள் அன்பு தம்பி கீழை இளையவனே.. நீவீர் பல்லாண்டு வாழ்ந்து இணையம் வழியே கீழக்கரையை செழிப்பாக்கி, பன்னூறு விருதுகளை பெற வாழ்த்துகிறேன்
- Hameed Emeen Masha allah. Congratulation. May allah gives you much strength and abilities to take this kind of initiatives in your future project also...Doooooooo well..u guys r rocking.....
- Suresh Kannan En nanba keelai Illayava, keep up ur good work. I am really proud of you machan. I need to talk to you. Give ur number
- Aakif Bilal masha allah congratulation thambi this is not enough for u insha allaha u will get more because of your social activity allah will bless you
- 10:04pm Mohamed Nageem Marika
'கீழை இளையவன்' என்று அழைக்கப்படும் நன்பர் ஷாலிஹ் ஹுசைன் அவர்களுக்கு...
கீழக்கரை நகர் நல இயக்கத்தின் மூலம் சிறந்த சாதனையாளர் விருது வழங்கியதில் மசற்ற மகிழ்சி அடைகிறேன், பொதுப் நல பணி என்பது யாராலும் செய்ய முடியாது. அதற்கென்று ஒரு மனது வேண்டும், பலனை எதிர்பார்க்கா எண்ணம் வேண்டும் மற்றும் எல்லோருடன் அன்பாய் பழகும் குணம் வேண்டும்.
இதை என் நண்பர் ஷாலிஹ் ஹுசைனிடம் பார்க்கலாம், கீழை இளையவன் மூலம் கீழக்கரையில் அனைத்து நல்லது கெட்டது நிகழ்வுகளையும் கடல் கடந்த எங்களால் அறிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் மென்மேலும் வளர, நோய் நொடியில்லாமல் பல நூறாண்டு காலம் வாழ வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.
என்றும் நட்புடன் முஹம்மது நஜீம், துபை
- Keelakarai Ali Batcha எல்லாப் புகழும் ஏக நாயன் இறைவன் ஒருவனுக்கே.
நேற்று (18/08/13 ஞாயிறு) நகரில் ஏராளமான திருமணம் வைபவங்களால் ஊரே களை கட்டி இருந்தது.
ஆனால் அது என்னை பொருத்த வரைக்கும் கீழை இளையவனுக்கு வாழ்த்துகள் கூறும் முகமாக பட்டது. அல்ஹம்துலில்லா.
தம்பி கீனா வானா, நீவீர் மேன்மேலும் வாழ்க, வளர உந்தன் குழுமத்தின் தன்னலமற்ற தொடர் சேவையால் கீழை மாநகர் பயன் அடைந்து சீரும் சிறப்பும் பெற ஏக நாயனை இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன். ஆமீன்.ஆமீன். யாரப்பில் ஆலமீன்.
தக்க சமயத்தில் உன்னை வாழ்த்தி பெருமை அடையச் செய்த கீழக்கரை நகர் நல இயக்க குழுமத்திற்கும் உளம் கனிந்த பாராட்டுகள் உரித்தாகுக.
2 minutes ago · Like - இஸ்மாயில் மரிக்கா நண்பன் சாலிஹு ஹுசைன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் . இன்னும் உங்களுடைய பணியே தொடரவேண்டும்
- சின்னக்கடை நண்பர்கள் Alhamthulillaah.. Congratz keelai ilayavan machaan. we are extremely happy to receive this good news. good work. hard work never fails. right person gets right award at rite time. keep do ur great performance in journalism. Once again Congratz our salih hussain machan.
- JaffarNaina இந்தசெய்தியபேஸ்புக்பார்த்தபோதுஉண்மையிலேயேமனதில்சந்தோஷாம்அடங்கவில்லைஇறைவனமிகப்பெரியவன்அல்லாஉன்னைமென்மேலும்சிறப்பிக்கஇருகரம்ஏந்திதூவாசெய்கிறேன்ஆமீன்
- Hameed Yasin அன்பு சகோதரர் சாலிஹ் ஹுசைன் , மேலும் பல சாதனைகள் படைத்து இன்னும் அதிக விருதுகள் வாங்கி ஏற்றம் பெற ( கீழக்கரைடைம்ஸ் இணையதளம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' அல்ஹம்துலில்லாஹ். தம்பி கீழை இளையவனுக்கு தகுந்த நேரத்தில் கிடைத்த உகப்பான விருது.
கீழை இளையவன் வலை தளம் //நாம் பிறந்த இந்த கீழக்கரை நகரத்தை எப்பாடு பட்டாவது சுத்தமான ஊராக, அனைத்து சிறப்புகளும் ஒருங்கே பெற்ற முன் மாதிரி நகரமாக மாற்றுவதே எங்கள் தலையாய நோக்கம். // என்று சூளுரைத்து வீறு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இன்னும் பல வெற்றிகளை குவித்து கீழக்கரை நகரத்திற்கும் பெருமை சேர்க்க வேணும் என அல்லாஹ்விடம் துவா செய்கிறேன். தாங்களின் உன்னத நோக்கம் நிறைவேற எல்லாம் வல்ல வல்லோன் என்றென்றும் துணை நிற்பானாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன் - Kader Mohideen வாழ்த்துக்கள்... Nanbarae! You are born to achieve many things in this Globe and you will do that, Aameen!!August 19 at 11:41pm · Unlike · 1
- Fouz Ameen மாஷா அல்லாஹ்...என் அன்பு நண்பனுக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்...நண்பா நீவீர் இன்னும் பல உயர் விருதுகள் பெற்று மென்மேலும் வளர எல்லாம் வல்ல அல்லாஹ் உதவி செய்வானாக...ஆமீன்.....என்றும் துஆ-உடன் உன் நண்பன் அமீன்...
- Abdul Azees மாஷா அல்லாஹ் , மிகுந்த சந்தோஷம், உங்களுக்கு மென் மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் பல வெற்றிகளையும், சாதனைகளையும் புரிய அருள் தர வேண்டும் என்று துவா செய்கிறேன் ...
வாழ்த்துக்கள் அன்பரே !!! - Fauji Salih Masha allah. congratulations.......... my hearty wishes and prayer for u to get more and more success in your life
- தம்பி....
எட்டா தூரம் நின்று
எப்படி காண்பேன் இன்று
ஆதலால்
பிடியுங்கள் பா மாலை
அணியுங்கள் தமிழ் மாலை
வெற்று செய்தியால்
எட்டு பக்கம் நிரப்பாது
கெட்டு நிற்கும் சுகாதாரம்
தட்டு கேட்ட சாலை பள்ளம் - குடி
தண்ணீர் இல்லா ஊரின் அவலம்
எட்டு திக்கும் காணும் வண்ணம்
எடுத்து தந்தாய்
நெஞ்சில் பட்டதை
பட்டென சொல்லும் நேர்மை கொண்டாய்
நேராய் நிற்கும் பேனா கூர்மை கண்டாய்
உள்ளதை ஊருக்கு சொன்னதால்
உள்ளபடி விருதை வென்றாய்
பற்று போட்ட உள்ள புண்ணில்
பதமான குளுமை தந்தாய் நோய்
தொற்று இல்லா சமூகம் காண
சொற்களினால் மருந்து தந்தாய்
இற்று போன விழிப்புணர்வை மின்
இதழ்களாலே உயிர்க்க செய்தாய்
நேற்று நடந்ததை ஊரில்
நாளை நடப்பதை நாளும்
இன்று தினசரியில் அறிய தந்தாய்
அறியாமல் வேலை வாய்ப்பு
பிரிந்து கிடப்பதை
அவ்வப்போது அறிய தந்தாய்
கற்று கொள்ள மாணாக்கர் கல்வி
பெற்று கொள்ள களங்கள் சொன்னாய்
கடல் கடந்த எங்களுக்கு கலர்
புகைப்படத்தால் உறவு தந்தாய்
ஆதலால் உனக்கு விருதை தந்தார்
இன்னமும் சொல்ல வேண்டும்
இனி குறை தீர வேண்டும்
பொன்னான எழுத்துக்கள்
பூமி முழுதும் போக வேண்டும்
காத்திருக்கு ஓர் அணி
தொடர வேண்டும் உம் பணி ...... - Love Twins dedicative work. gd news to all keelai ilayavan viewers. Thanks to keelai nala sankam தங்களின் இனிய பணி தொடர வாழ்த்துகள்...17 hours ago · Unlike · 1
- இறந்தும் இறவா ஈதலறம் பேணிய சீதக்காதி
சிறந்து வாழ்ந்த கீழக்கரையில்
சிறப்பாக வலை தளத்தில் வலம் வந்து
சேதிகளை வளைத்து வழங்கும்
கீழை இளையவன் சாதனை தொடர்ந்திட
மனம் உவந்து வாழ்த்துகிறோம்
உள்ளதை உள்ளபடி உரைக்கும் உணர்வாளன்
உவப்பான எங்கள் தம்பி
உலகோர் அறிந்திட உண்மைச் சேதிகளை
உடனுக்குடன் உலவ விடும்
கீழை இளையவனின் சிறந்தஉயர்ந்த நற்பணி
பாழைக் கடந்து பதம் பெறும்
கீழக்கரை நகர் நல இயக்கம் வழங்கும்
கீர்த்தி மிகு சாதனையாளர் விருது
சிறப்பான தொண்டுக்கு அளிக்கும் பரிசு
சிறு வயதில் பெற்றதே சிறப்பு
வாழ்த்துகளுடன்
ஆனா மூனா சுல்தான் மற்றும் எம். சீனி முகம்மது தம்பி
வரலாற்று ஆய்வுக் குழு கீழக்கரை
- என் கடன் பனி செய்து கிடப்பதே! கீழை இளையவனே ..
நினைத்ததை முடிக்கும் நனைத்தான் முடித்தான் பட்டினத்தில் பிறந்த மைந்தனே ..
மாசற்ற உன் சேவைகளினால் மந்த மாறுதல் வீசும் கீளையிலே ..
செத்தும் கோடை கொடுத்த வள்ளலாரின் பிரப்பிடமம் பாதன் நகரின் மைந்தர்களுக்கு
நித்தம் நீ கொடுக்கும் செய்திகளின் பால் நிறைவேற கோரிக்கைகள் பல நிறைவேற்ற செய்திடுவாய்.. நீ..
நித்தம் நீ கொடுக்கும் செய்திகளின் பால் .. ஊரை மறவாமல் இருக்க செய்திடுவாய் நீ..
நித்தம் நீ கொடுக்கும் செய்திகளின் பால்.. ஊராரை ஒன்றாக பினைதுடுவை... நீ..
ஆயிரம் மழைத்துளிகள் கடலிலே விழுந்தாலும்.. அதில் நீ ஒரு துளி..
முத்தாய் மலர்ந்தவரே வழிய உன் சேவை வலர்க உன் புகழ் செய்திகள்..
ஆஹா அருமை .. கீழை இளையவனுக்கு இந்த விருத்த சற்று தாமதமாக கிடைத்துள்ளதாக கருதும் என் மனமோ.. மேலும் மேலும் சிறப்பாக செயல் ஆற்றி விருதுகள் பல பெற வாழ்த்துகிறது .. வளர்க உங்கள் சேவை.. - வாழ்த்துக்கள் தம்பி இளையவனே.
சீர் மிகு கீழக்கரையில் பிறந்திட்ட சிங்கமே.
அநியாயங்களை அம்பலப்படுத்தும் கதாநாயகனே.
கடல் கடந்து வாழும் மண்ணின் மைந்தர்களுக்கு
நியாயத்தின் உரை கல்லாய் சேதி சொல்லும்
பொதுநலம் பொதிந்தவனே
நீ புறப்படும் திசையெங்கும் வெற்றிகள் தொடரட்டும்
விருதுகள் பல பெற்று நம் மண்ணுக்கு பெருமை சேர்
உன்னை வாழ்த்தி மகிழும் கீழக்கரை இந்தியன் தாத்தா - Congratz Saalih Husaain...Yentha oru suya laabamum indri , podhu sevai attrum ungalai pukala vaarthaikal illai...Ungal Keelai ilayavan menmelum valara , Allah ungaluku thunai purivaan...Ameen..
எல்லாப் புகழும் ஏக நாயன் இறைவன் ஒருவனுக்கே.
ReplyDeleteநேற்று (18/08/13 ஞாயிறு) நகரில் ஏராளமான திருமணம் வைபவங்களால் ஊரே களை கட்டி இருந்தது.
ஆனால் அது என்னை பொருத்த வரைக்கும் கீழை இளையவனுக்கு வாழ்த்துகள் கூறும் முகமாக பட்டது. அல்ஹம்துலில்லா.
தம்பி கீனா வானா, நீவீர் மேன்மேலும் வாழ்க, வளர உந்தன் குழுமத்தின் தன்னலமற்ற தொடர் சேவையால் கீழை மாநகர் பயன் அடைந்து சீரும் சிறப்பும் பெற ஏக நாயனை இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன். ஆமீன்.ஆமீன். யாரப்பில் ஆலமீன்.
தக்க சமயத்தில் உன்னை வாழ்த்தி பெருமை அடையச் செய்த கீழக்கரை நகர் நல இயக்க குழுமத்திற்கும் உளம் கனிந்த பாராட்டுகள் உரித்தாகுக