இராமநாதபுரம் மாவட்டத்தில் 616 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி குடிநீர் திட்டத்தின் கீழ் கீழக்கரைக்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் கீழக்கரை வண்ணாந்துறை வளைவு (அகஸ்தியர் கோயில்), பாலையாறு பகுதி, திருப்புல்லாணி சாலை உள்ளிட்ட பல இடங்களில் குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சமூக விரோதிகளால் குழாய்கள் உடைக்கப்பட்டு காவிரிக் குடி நீர் வீணாகி வருகிறது.
இந்த வீணாகும் குடிநீரை அந்தப் பகுதி பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைக்கவும், வாகனங்கள் சுத்தம் செய்யவும் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த தண்ணீரை கிராம மக்கள் குளிக்கவும், ஆடு, மாடுகளை குளிப்பாட்டவும் பயன்படுத்துகின்றனர். இதனால் கீழக்கரைக்கு வந்து சேர வேண்டிய குடிநீர் தடை பட்டு உள்ளது. ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் கீழக்கரையில் லாரியில் கொண்டு வரப்படும் தண்ணீரையும், மாட்டு வண்டி தண்ணீரையும் ஒரு குடம் 5 ரூபாய்க்கும், சில இடங்களில் 10 ரூபாய்க்கும் வாங்கும் அவல நிலை தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தினர் சம்பந்தபட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கடந்த 08.07.2103 அன்று இந்த பிரச்னையை கொண்டு சென்றனர். அதற்கு கீழக்கரை - இராமநாதபுரம் 'டாஸ்மாக்' சாலையில் உடைக்கப்பட்ட காவிரிக் குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டதாக, கடந்த 18.07.2013 அன்று தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர், கோரிக்கை விடுத்திருந்த மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தினருக்கு பதிலறிக்கை கடிதம் அனுப்பியிருந்தனர். ஆனால் இன்று வரை இந்த பிரச்சனை சீர் செய்யப்படாததால், 'பொய் தகவல்' தந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.
கீழக்கரையில் உடைக்கப்பட்ட காவிரிக் குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டதாக, 'குடிநீர் வடிகால் வாரியம்' தகவல் - 'மக்கள் நலப் பாதுகாப்புக் கழக' த்தினரின் மனுவின் பேரில் நடவடிக்கை !
இது குறித்து மக்கள் நல பாதுகாப்புக் கழக செயலாளர் M.U.V.முகைதீன் இபுராகிம் அவர்கள் கூறுகையில், கீழக்கரை நகரில் கடந்த பல மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் மிக மிக குறைந்த அளவு மட்டுமே செய்யபட்டு வருகிறது.
கீழக்கரை இராமநாதபுரம் சாலையில், பல இடங்களில் சமூக விரோதிகளால், வேண்டுமென்றே குடி நீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
இது குறித்து பலமுறை குடிநீர் வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களும் பதிலுக்கு பொய் தகவல்களை மட்டுமே தருகின்றனர்.
அவர்கள் களப்பணிகள் செய்ய விரும்பவில்லை. சொகுசாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே பதில் கடிதம் மட்டுமே தருகின்றனர். நாங்கள் நேரடி ஆய்வு செய்ததில் வீணாகும் குடிநீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம், பொய் தகவல் தந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறத்தி மனு அளிக்க உள்ளோம்." என்று மிகுந்த வருத்தத்தை மறைத்துக் கொண்டு புன்னகைத்தவாறு பேசி முடித்தார்.
FACE BOOK COMMENTS :
FACE BOOK COMMENTS :
- சின்னக்கடை நண்பர்கள் Thanks for ur follow up keelai ilayavan machaaan. what next? செத்தாண்டா சேகரு.. !!
- Sadiq MJ தம்பி.... இது சம்பந்தமாக உங்களுடைய முந்தைய பதிவில் "பழுதான குடிநீர்க்குழாய்களை சரிசெய்து விட்டோம்னு" குடிநீர் வாரியம் உங்க இயக்கத்துக்க்குத் தந்த லெட்டெர்-ஐ Facebook-ல update பண்ணியிருந்தீர்கள் அத்துடன் நீர் வழிதோடும் பழைய போட்டோவை attach பண்ணியிருந்தீர்கள். புது போட்டோவை attach பண்ணியிருக்கலாமே தம்பி என்று கேட்டபோது, நானும் (சாலிஹ்) யோசித்தேன் காக்கா, எனினும் நேரம் கிடைக்கலே ஒரு வேளை குடிநீர் வாரியம் புருடா விட்டிருந்தா அவங்களுக்கு நாங்க சங்கு ஊதுவது நிச்சயம் என்றீர்கள். வாங்கிட்டீங்களா சங்கு.... சங்கு.... சங்கு? ஊதிட்டீன்களா? Enthusiastically we are awaiting to see / hear the updates......
- Keelai Ilayyavan அன்பு காக்கா... சங்கு ஊதும் சடங்குகள் (சட்ட ரீதியான வழி முறைகள்) மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் சார்பாக துவங்கப்பட்டு விட்டது. விரைவில் அதற்கான பதிவையும், தாங்கள் கண் குளிரக் காணலாம்
- Sadiq MJ Let us see .... முயற்சிக்கு வல்ல நாயன் அருள் புரிவானாக.... இதுவும் ஒருவகை சதக்கத்துன் ஜாரியா....
- Sadiq MJ FB-ல அட்டு punch (பஞ்ச்சரான) டையலாக்களைப் படிச்சிட்டு சின்ன ஒரு LIKE-அ click பண்ணுவோமே.... என்ன நஷ்டம் என நினைப்போர் அதிகம்......
- Keelai Ilayyavan இன்ஷா அல்லாஹ்.. நம்மால் இயன்றதை செய்து கொண்டே இருப்போம். நம் கீழக்கரை மக்களுக்கு ஒரு நல்ல விடியலை நோக்கி.. நல்ல விடிவு காலத்தை நோக்கி.. தொடர்ந்து உங்கள் கருத்துகளை பதிந்து, ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்குங்கள்.
- Sadiq MJ சமீப காலமாக நமது கீழக்கரை நகராட்சி நிர்வாக செயல்பாடுகள் / சீர்கேடுகள் பற்றி நமதூர் செய்திகளை அவ்வப்போது அறியத்தரும் Keelakkarai Times மற்றும் Keelai Ilayyavan வலை தளங்களில் காணவில்லையே? வாய்பூட்டு போட்டுட்டாங்களோ?
- Keelai Ilayyavan As per ur kind advice 'be serious.... instead by clicking LIKE button....' காக்கா.. இது மட்டும் UNLIKE..
- Keelai Ilayyavan உண்மை தான் காக்கா.. ஆரம்பம் முதல் வாய் பூட்டு போட்டு கொண்டே தான்.. பொது நல பணிகளில் களம் கண்டிருக்கிறோம். ஆனால் எங்களின் எழுது கோல் தாங்கும் விரல்களுக்கு யாரும் பூட்டுப் போட்டிட முடியாது என்பதை தங்கள் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தொடர்ந்து வாருங்கள்.... நகராட்சி பற்றியும் பேசுவோம்.. நரகாட்சி பற்றியும் விமர்சிப்போம்...
Shame.... Shame puppy Shame (picture)
ReplyDeleteதம்பி.... இது சம்பந்தமாக உங்களுடைய முந்தைய பதிவில் "பழுதான குடிநீர்க்குழாய்களை சரிசெய்து விட்டோம்னு" குடிநீர் வாரியம் உங்க இயக்கத்துக்க்குத் தந்த லெட்டெர்-ஐ Facebook-ல update பண்ணியிருந்தீர்கள் அத்துடன் நீர் வழிதோடும் பழைய போட்டோவை attach பண்ணியிருந்தீர்கள். புது போட்டோவை attach பண்ணியிருக்கலாமே என்று கேட்டபோது, நானும் (சாலிஹ்) யோசித்தேன் காக்கா , எனினும் நேரம் கிடைக்கலே காக்கா ஒரு வேளை குடிநீர் வாரியம் புருடா விட்டிருந்தா அவங்களுக்கு நாங்க சங்கு ஊதுவது நிச்சயம் என்றீர்கள். வாங்கிட்டீங்களா சங்கு.... சங்கு.... சங்கு? ஊதிட்டீன்களா? Enthusiastically awaiting to see / hear the updates......
ReplyDeleteபொதுவாக அனைத்து அரசு சார்ந்த துறைகளும் கீழக்கரை மக்கள் வடிகட்டின முட்டாள்கள் எனறு முடிவே செய்து விட்டார்கள் போலும் ?
ReplyDeleteஇந்த பதிவு மற்றொரு சாட்சி
சோதனை மேல் சோதனை போதுமடா ரப்பே சோதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது கீழக்கரை பூமி என அனு தினமும் புலம்ப வைக்கும்
நகராட்சி நிர்வாகம்,மின் துறை,
வங்கித் துறை (மாணவச் செல்வங்கள் புது கணக்கு தொடங்க மக்கள் படும் அவலங்களை அறிய கீழை இளையவன் வளைத் தளத்தை காண்க)
மற்றும் வருவாய் துறை (கீழக்கரையை தனி தாலுகா என கடந்த கால ஆட்சியில் அறிவிக்கப்பட்டது கிடப்பில் இருப்பது இதனால் ரேஷன் கார்டு சமபந்தப்பட்ட காரியங்களுக்கு கீழக்கரை வாழ் பொது மக்கள் இராமநாதபுரம் சென்று படும் அல்லல்கள்,
மாணவச் செல்வங்கள் தாலுகா அலுவலகம் சென்று கண் விழிகள் பிதுங்கும் அவலங்கள் அப்பப்பா...)
இந்த தகவல் போதுமா இன்னும் வேணுமா?