(கட்டுரையாளர் : மூத்த சமூக ஆர்வலர் அலி பாட்சா அவர்கள்)
கடந்த காலங்களில் தமிழக அரசால் மாணவச் செல்வங்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகைகளை சில பள்ளிகளில் 'தில்லாலங்கடி' வேலை செய்து மாணவச் செல்வங்களுக்கு கிடைக்காததின் பயனாக எழுந்த பொது மக்களின் புகார் காரணமாக, இந்த கல்வி ஆண்டு முதல் மாணவச் செல்வங்களுக்கு நேரிடையாக வழங்க எண்ணி அனைத்து பள்ளிக் கூடங்களுக்கும் மாணவர்களை வங்கிகளில் புதிய கணக்கு தொடங்க வைத்து அதன் விவரங்களை சீ.டி.யில் பதிவு செய்து சம்பந்தபட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்ப சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
கடந்த காலங்களில் தமிழக அரசால் மாணவச் செல்வங்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகைகளை சில பள்ளிகளில் 'தில்லாலங்கடி' வேலை செய்து மாணவச் செல்வங்களுக்கு கிடைக்காததின் பயனாக எழுந்த பொது மக்களின் புகார் காரணமாக, இந்த கல்வி ஆண்டு முதல் மாணவச் செல்வங்களுக்கு நேரிடையாக வழங்க எண்ணி அனைத்து பள்ளிக் கூடங்களுக்கும் மாணவர்களை வங்கிகளில் புதிய கணக்கு தொடங்க வைத்து அதன் விவரங்களை சீ.டி.யில் பதிவு செய்து சம்பந்தபட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்ப சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதன் அடிப்படையில் கீழக்கரை நகரிலும் அனைத்து பள்ளிகளிலும் கல்வி உதவித் தொகைக்காக, மாணவர்கள் பெயரில் உடனடியாக கணக்குத் துவங்க வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நாட்டுடமையாக்கப்பட்ட எந்த ஒரு வங்கியிலும் கணக்கு துவங்கலாம் எனும் அரசின் வழி முறைகளை குழி தோண்டி புதைத்து விட்டு, அதில் ஒரு சில பள்ளிகள் குறிப்பாக நகரில் உள்ள ஒரு 'பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி' அதன் மாணவச் செல்வங்களை 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் மட்டும் திறக்க கட்டாயப் படுத்துகிறார்கள். (இவர்கள் என்ன எஸ்.பி.ஐ.க்கு பிராண்ட் அம்பாசடர்களா..?)
பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் 18 வயதுக்கு குறைவானவர்களாக இருப்பதால், வங்கியில் கணக்கு துவங்க, கார்டியனாக இருக்கும் பெற்றோர்களே அதிகமதிகம் அலைந்து திரிய வேண்டியுள்ளது. (இதனால் மாணவச் செல்வங்களும் அவர்களின் அன்பு பெற்றோர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள். இது அவசியம் தானா?
காரணம் இந்த ஜீரோ பேலன்ஸ் கணக்குகளை தொடங்குவதில் வங்கி ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் மாணவச் செல்வங்களை குறிப்பாக பெண் பிள்ளைகளை பல நாட்களாக பல தடவை பள்ளியில் விடுப்பு எடுக்க வைத்து அலைய விடுகிறார்கள். பெண் பிள்ளைகள் அனேகர் வயதுக்கு வந்தவர்களாக இருப்பதால் அவர்களுடன் பெற்றோர்களும் அல்லல் படுகிறார்கள். நமது கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களின் அதீத சுறுசுறுப்பு பணிகளை விளக்கி கூறத் தேவையில்லை. மெத்தப் படித்த வித்தகர்கள் வேலை செய்யும்..!? வெட்டிடம் தானே அது...
இதனால் வெகு தூரத்தில் இருந்து, இந்த வங்கிக்கு மாணவர்களும், பெற்றோர்களும் பலர் வருவதால் ஆட்டோவுக்கு நூற்று கணக்கில் செலவு செய்கிறார்கள். இது முறை தானா? பள்ளிகளில் இருக்கும் 'பெற்றோர் ஆசிரியர் கழக அமைப்புகள்' (பி.டி.ஏ அமைப்பு) என்ன செய்து கொண்டிருக்கிறது.? வேதனைப்படும் மாணவச் செல்வங்களின் அவர்களின் அன்பு பெற்றோர்களின் சிரமத்தை களைய முயல வேண்டாமா? கல்வியை வியாபாரமாகி விட்ட இந்த காலக்கட்டத்தில் நிர்வாகம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டாமா? இதில் என்ன அற்ப சந்தோஷம் கிடைத்து விடப் போகிறது?
நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மானிடர்களை நினைத்து விட்டால்......
FACE BOOK COMMENTS :
- Mohammed Idrees, Zyed Raseen, Love Twins and 13 others like this.
- South Street இந்த செய்தி உண்மை நான் நேற்று ஸ்டேட் பேங்கில் பார்த்த காட்சி என்னவென்றால் ஒரு பெண் பள்ளியில் படிக்கும் தான் குழந்தைக்கு அக்கவுன்ட் திறக்க விண்ணப்ப படிவம் கேட்டதற்கு ஒரு அதிகாரி நாங்கள் ஏற்கனவே 600 படிவம் கொடுத்து விட்டோம்.எங்களிடம் இனி படிவம் கிடையாது என்று கூறினார்.அந்த பெண்மணி நான் 25 நாளாக அலைகிறேன் எனக்கு இந்த வங்கியில் தான் கணக்கு இருக்கு என் பிள்ளைக்கு joint அக்கவுன்ட் நான் எங்கே திறப்பது? எனக்கு தெரியதுமா மேனேஜரிடம் பேசுங்கள் என்றார்.மேனேஜரிடம் போனால் இப்போ முடியாதுமா என்றார்.பொதுவாகவே இந்த உதவித்தொகை சிறுபான்மைனருக்கு மட்டும் கொடுப்பதால் சில அதிகாரிகள் எரிச்சல் அடைவதும் நடக்கிறது.
No comments:
Post a Comment