கீழக்கரை சின்னக்கடைத் தெருவில் செயல்பட்டு வரும் மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கம் மற்றும் மதுரை விக்ரம் மருத்துவமனை இணைந்து நடத்தும் மகப்பேறின்மை சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் நாளை (18.08.2013) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்க கட்டிடத்தில் நடை பெற உள்ளது.
இந்த முகாமில் கலந்து கொண்டு, மேல் சிகிச்சை தேவைப் படுபவர்களுக்கு, மதுரை அண்ணா நகரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாமில் பங்கு கொண்டு ஆலோசனைகள் பெற முன் பதிவு அவசியம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த இலவச முகாமை சிகிச்சை அவசியப்படுபவர்கள், தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இந்த மருத்துவமனைக்கு மேல் சிகிச்ச்கைக்காக் மதுரை செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுமானால் மருத்துவர் சொல்லும் உத்தேச பணத்தை விட இரு மடங்குக்கு கூடுதலாக மடியில் கட்டிக் கொண்டு செல்லுவது சாலச் சிறந்தது. எனக்கு ஏறபட்ட கசப்பான அனுபவத்தினால் இவ்வாறு பொது மக்களை விழிப்பு ஏற்படுத்துகிறேன்.
ReplyDelete