தேடல் தொடங்கியதே..

Monday, 22 July 2013

கீழக்கரையில் அழகிய தேக்கு மர வேலைப் பாடுகளுடன் அற்புதமாய் காட்சி தரும் 'அம்பலார் வீடுகள்' ! (பகுதி - 2)

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெரு அருகே உள்ள தச்சர் தெருவில், 150 வருட பழமையான இந்த அம்பலார் வீட்டில், தேக்கு மரத்தில், அழகிய பூ வடிவங்களில் செதுக்கப்பட்டு இருக்கும் கலை நயமிக்க, வீட்டின் அடிக் கூரைஉப்பரிகை, மேல் மாடம், மாடி படிக்கட்டுகள், கூடம் போன்றவை பார்ப்போரை அதிசயிக்க வைக்கிறது



இந்த வீட்டின் பெரும்பாலான தச்சு வேலைகளை, அந்த காலத்தில் வாழ்ந்த 'உலகு ஆசாரி' அவர்கள் திறம்பட செய்திருக்கிறார். அவர் செதுக்கி இருக்கும் மர வேலைப்பாடுகளை, சற்று உற்று நோக்கினால் மிக நுணுக்கமுடனும், தொழில் மீது கொண்ட அக்கறையுடனும் சிறப்பாக பணியாற்றியிருப்பது தெளிவாக விளங்கும்



 
இன்றும் இந்த வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும், இங்கு வசிக்கும் அலி பாட்சா மாமா அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன், பழமை சிறிதும் மாறாது பராமரித்து வருகிறார். இந்த வீட்டை, தற்போது உள்ள கால சூழலுக்கு ஏற்ப, மாற்றம் செய்து கட்டுவதற்கு எத்தனையோ முறை, குடும்ப அங்கத்தினர்கள் வற்புறுத்தியும் கூட மாமா அவர்கள் ஒத்துக் கொள்ள மறுத்து விட்டார்

கீழக்கரையில் அம்பலார் வீடுகள் குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவைக் காண கீழ் காணும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.
 
 பொறுத்திருங்கள்.... பழமைகள் பேசுவோம்    தொடரும் >>>>>>

Sunday, 21 July 2013

துபாயில் சென்னை புதுக்கல்லூரி' (NCIM) மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த 'ரமலான் இஃப்தார் விருந்து' நிகழ்ச்சி !

சென்னை 'புதுக்கல்லூரி' இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் (NCIM) மேலாண்மை பயிலகத்தில், (கடந்த 2004 ஆம் ஆண்டில்) M.B.A., முதுகலை பட்டம் பெற்று, துபாயில் பணி புரியும் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த ரமலான் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி, கடந்த (18.07.2013) வியாழக் கிழமையன்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை பார்ப்யூக் டிலைட்ஸ் & ஹாஜி அலி ஜூஸ் சென்டரில் சிறப்பாக நடை பெற்றது. 



இந்த அருமையான நிகழ்வில், முஹம்மது அர்ஷத், ஷா நவ்ஃபல், இஸ்மாயில் ஹசன், சாகுல் ஹமீது, இம்ரான் முஹம்மது, ஜாபர் சாதிக், முஹம்மது ஜஸில், அஹமது முனவ்வர், அஹமது சாலிஹ், முஹம்மது அத்தீஃப், சித்திக் அஹமது, முஹைதீன் கருணை, இம்தியாஸ் அஹமது, ஜமீல் முஹம்மது உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொண்டனர். 



கடந்த வருடமும், இதே முன்னாள் மாணவ நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இஃப்தார் விருந்து நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.  இந்த இஃப்தார் விருந்து நிகழ்ச்சியை முஹம்மது அர்ஷத் அவர்கள் நல்ல முறையில் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். 

தமிழகம் முழுவதும் ரமலானில் உலமாக்களை கண்ணியப்படுத்தும் 'கும்பகோணம் ஒயிட் ஹவுஸ்' குடும்பத்தாரின் சிறப்பான நற்சேவை !


தமிழகம் முழுவதும் வாழும், உலமாப் பெருந்தகைகளை கண்ணியப்படுத்தும் நல்ல நோக்கத்தோடும், ஈகைத் திருநாளை ஆலீம்கள் மகிழ்வோடு கொண்டாட வழிவகை செய்யும் பொருட்டும், வருடம் தோறும் ரமலான் மாதத்தில், 'கும்பகோணம் ஒயிட் ஹவுஸ்' குடும்பத்தினர், உலமாக்களின் குடும்ப அங்கத்தினர் அனைவர்களுக்கும் புத்தாடைகள், சிறப்பான நிதியுதவிகள் என நிறைவோடு வழங்கி வருகின்றனர். 




கீழக்கரையில் அதற்கான நிகழ்வு பழைய குத்பா பள்ளி வளாகத்தில் நேற்று (20.07.2013) சனிக் கிழமை காலை 10 மணியளவில், எவ்வித ஆடம்பர அறிவிப்புக்களுமின்றி, மிக எளிமையாக நடை பெற்றது. அதில் 100க்கும் மேற்பட்ட உலமா பெருமக்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம் 'ஒயிட் ஹவுஸ்' குடும்பத்தில் காலம் சென்ற மர்ஹூம். மௌலவி M.அப்துல் ஹை (பாகவி) அவர்களின் உறுதியான விருப்பபடி, அன்னாரின் வாரிசுதாரர்கள், வருடம் தோறும் உலமாக்களை கண்ணியப்படுத்தி வருகிறார்கள்.

எல்லாம் வல்ல இறையோன் அல்லாஹ், அன்னாரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும், இம்மையிலும், மறுமையிலும் சிறப்பான நற் கூலியை வழங்க, கீழை இளையவன் வலை தளம் சார்பாக இறைஞ்சுகிறோம்.

FACE BOOK COMMENTS :

Like ·  · Unfollow Post · Share · Edit
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை'அல்ஹம்துலில்லாஹ்.. எவ்வளவு தான் கோடி, கோடியாக பணம் நிறைந்து வழிந்தாலும், அதனை பிறருக்கு தர்மம் செய்ய வேண்டும் என்கிற மனம் வேண்டும். அதிலும் நம் சமுதாயத்தில், தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக தீனுக்கு அர்பணித்துள்ள ஆலீம் பெருமக்களுக்கு, இது போன்று தாராளமாகஜகாத்தை அள்ளித் தரும் கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் குடும்பத்தாருக்கு, அழகிய நற் கூலியை எல்லாம் வல்ல வல்லோன் அல்லாஹ் ஒருவனே வழங்க போதுமானவன்.

    இதனை முன்னுதாரணமாக கொண்டு, அனைத்து ஊர்களிலும் உள்ள செல்வந்தர்கள் கொடை வள்ளல்கள்... ஆலீம்களின் வாழ்வு பிரகாசிக்க முயற்சிக்க வேண்டும்.
  • Syed Abusalique Seeni Asana this is 4th year distribution in this masjid.. for all kadaladi undriyum ulamakal matrum muathingal. silenta nadakum.. yarukum veliya theriyathapadi seiranga.. ticket (invitation) for this distribution athulaiyum varthaigal miga miga kanniyamagaum alagagavum, indraya ulagirku thothaga naveena muraiyil barcode uthaviyudan erukkum. sirappana saevai.. pirar pinbatravaendiya vali murai