தேடல் தொடங்கியதே..

Tuesday, 23 July 2013

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)

கீழக்கரை நகரின், இதயப் பகுதியான நடுத் தெருவில் இருக்கும் ஜும்மா பள்ளிவாசலில் தினம் தோறும் நோன்பாளிகளுக்கு இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இதில் தினமும் நூற்றுக்கணக்கனோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர். இந்த இப்தார் விருந்தில் சுவை மிகு நோன்புக் கஞ்சி, சமோசா, வடை, பழ ஜூஸ் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக ஜமாஅத்தார்களும், தெருவாசிகளும் பொருளாதார உதவிகள் அளித்து வருகின்றனர். 



கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி இஃப்தார் விருந்து நிகழ்ச்சிகளை, நடுத் தெருவைச் சேர்ந்த 18 வது வார்டு கவுன்சிலர் முஹைதீன் இபுறாஹீம் மற்றும் ஜலாலுதீன், ஆகில் உள்ளிட்ட HAM 7 STUDIO நண்பர்கள் குழுவினர், சமூக ஆர்வலர்கள் ஆகியோர்கள் ஒருங்கிணைப்பு, உபசரிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். கீழக்கரையில் இருக்கும் பெரும்பாலான பள்ளிவாசல்களில், இதே போன்று இஃப்தார் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பாக நடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த 'கீழக்கரை ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)


கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)


கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)


<<<<<  கீழக்கரை ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்.... 


FACE BOOK COMMENTS :

Like ·  · Unfollow Post · Share · Edit

Monday, 22 July 2013

கீழக்கரையில் அழகிய தேக்கு மர வேலைப் பாடுகளுடன் அற்புதமாய் காட்சி தரும் 'அம்பலார் வீடுகள்' ! (பகுதி - 2)

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெரு அருகே உள்ள தச்சர் தெருவில், 150 வருட பழமையான இந்த அம்பலார் வீட்டில், தேக்கு மரத்தில், அழகிய பூ வடிவங்களில் செதுக்கப்பட்டு இருக்கும் கலை நயமிக்க, வீட்டின் அடிக் கூரை, உப்பரிகை, மேல் மாடம், மாடி படிக்கட்டுகள், கூடம் போன்றவை பார்ப்போரை அதிசயிக்க வைக்கிறது. 



இந்த வீட்டின் பெரும்பாலான தச்சு வேலைகளை, அந்த காலத்தில் வாழ்ந்த 'உலகு ஆசாரி' அவர்கள் திறம்பட செய்திருக்கிறார். அவர் செதுக்கி இருக்கும் மர வேலைப்பாடுகளை, சற்று உற்று நோக்கினால் மிக நுணுக்கமுடனும், தொழில் மீது கொண்ட அக்கறையுடனும் சிறப்பாக பணியாற்றியிருப்பது தெளிவாக விளங்கும். 



 
இன்றும் இந்த வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும், இங்கு வசிக்கும் அலி பாட்சா மாமா அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன், பழமை சிறிதும் மாறாது பராமரித்து வருகிறார். இந்த வீட்டை, தற்போது உள்ள கால சூழலுக்கு ஏற்ப, மாற்றம் செய்து கட்டுவதற்கு எத்தனையோ முறை, குடும்ப அங்கத்தினர்கள் வற்புறுத்தியும் கூட மாமா அவர்கள் ஒத்துக் கொள்ள மறுத்து விட்டார். 

கீழக்கரையில் அம்பலார் வீடுகள் குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவைக் காண கீழ் காணும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.
 
 பொறுத்திருங்கள்.... பழமைகள் பேசுவோம்    தொடரும் >>>>>>