தமிழகத்தில் காரைக்கால். சென்னை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பிறை தென்பட்டதையடுத்து தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில் இன்று மாலை 6:30 மணிக்கெல்லாம் பிறை, மக்களுக்கு பிற வருடங்களை போல் அல்லாமல் எளிமையாக தென்பட்டது, பிறையை கண்டதில் இருந்தே மக்கள் தக்பீரை முழங்கியவாறு உள்ளனர்.
இதனையொட்டி தமிழக அரசு தலைமை காஜி அவர்களின் நோன்புப் பெருநாள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி கிழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 08 வியாழக்கிழமை) பெருநாள் இரவு என்றும், நாளை (ஆகஸ்ட் 09 வெள்ளிக்கிழமை) நோன்புப் பெருநாள் என்ற அறிவிப்பை 'கீழக்கரை டவுன் காஜி' காதர் பக்ஷ்ஹுஸைன் ஸித்தீகி ஆலிம் வெளியிட்டுள்ளார். இதையடுத்து கீழக்கரை உள்ள அனைத்து பள்ளிகளிலும் தக்பீரை ஒலிப் பெருக்கி மூலமும், நகரா எனும் முரசு கொட்டியும் அறிவிப்பு செய்தனர்.
இந்த நல்ல தருணத்தில் கீழை இளையவன் வலை தளம் சார்பாக, இதயம் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நல்ல தருணத்தில் கீழை இளையவன் வலை தளம் சார்பாக, இதயம் கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment