கீழக்கரை நகரில் நோன்புப் பெருநாள் அறிவிப்பினைத் தொடர்ந்து, அனைத்து இறைச்சிக் கடைகளிலும், இரவு 8 மணி முதல் களை கட்டத் துவங்கிய விற்பனை, விடிய விடிய தொடர்ந்து நடை பெற்றது. கீழக்கரை இல்லங்களில் சமைக்கப்படும் பெருநாளின் ஸ்பெசல் உணவுகள் பெரும்பாலும் மட்டன் வகையை சார்ந்ததாகவே இருக்கும். இதனால் முதல் நாள் இரவே கிடாக் கறி இறைச்சியை பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டுவர். இதனால் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலை மோதியது.
இடம் : 'ஹபீபு காக்கா' கறிக் கடை, முஸ்லீம் பஜார்
கீழக்கரையில் தற்போது கிடாக் கறி விலை ரூ.400 க்கு விற்கப்படுகிறது. நண்பர்கள் சிலர் கூட்டாக ஒரு முழு ஆட்டினை வாங்கி, அறுத்து பங்கிட்டுக் கொண்டனர். ஏர்வாடியில் விலை குறைவாக இருப்பதாக கூறி, அங்கும் சென்று சிலர் வாங்கி வந்தனர். ஆனால் அங்கு வெள்ளாடுகள் தான் அதிகம் அறுக்கப்படுவதாக தெரிகிறது. கீழக்கரை பகுதி மக்கள் வெள்ளாட்டு கறியை அதிகம் விரும்பி உண்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள்
ReplyDeleteபுகை படங்கள்
எங்கள்
பிரிவு புண்களுக்கு
ஒத்தடங்கள்
உடல் பல
கடல் கடந்தாலும்
உள்ளம்
ஊரிலே நிற்கிறது
எப்பொழுதோ
என்னில் எழுந்த
கனவுகள்
ஊரின் தொன்மைகளை
உலகுக்கு எடுத்து இயம்பல்
தின நிகழ்வுகளை
படம் பிடித்தல் என்பதை
நனவாக்கிய
உங்கள் உன்னத பணி தொடரட்டும்
உவகை பொங்கும்
இத் திருநாளில்
உங்களுடன்
உங்கள் குடும்பங்களுக்கும்
சிறக்கட்டும்
உங்கள்
ReplyDeleteபுகை படங்கள்
எங்கள்
பிரிவு புண்களுக்கு
ஒத்தடங்கள்
உடல் பல
கடல் கடந்தாலும்
உள்ளம்
ஊரிலே நிற்கிறது
எப்பொழுதோ
என்னில் எழுந்த
கனவுகள்
ஊரின் தொன்மைகளை
உலகுக்கு எடுத்து இயம்பல்
தின நிகழ்வுகளை
படம் பிடித்தல் என்பதை
நனவாக்கிய
உங்கள் உன்னத பணி தொடரட்டும்
உவகை பொங்கும்
இத் திருநாளில்
உங்களுடன்
உங்கள் குடும்பங்களுக்கும்
சிறக்கட்டும்