கீழக்கரை தெற்குத் தெரு இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் கடந்த (01.08.2013) அன்று தின மலர் நாளிதளின் அக்கம் பக்கம் பகுதி சார்பாக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கண்ணாடி ஓவியப் போட்டி உள்ளிட்ட திறனாய்வு போட்டிகள் நடை பெற்றது. இதில் இஸ்லாமியா பள்ளியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மிகுந்த உறசாகத்துடன் பங்கேற்றனர்.
இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுள் வழங்கும் விழா நிகழ்ச்சி நேற்று (04.08.2013) காலை 10 மணியளவில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது.
போட்டிகளில் ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் பெற்ற மாணவ, மாணவிகளின் விபரம் பின் வருமாறு :
பேச்சுப் போட்டி :
முதல் பரிசு : ஹைருன் ஹபீலா - 9th Std
2 ஆம் பரிசு : ஹம்சத் தௌஹா - 9th Std
3 ஆம் பரிசு : நௌஃபல் அரபாத் - 9th Std
கட்டுரைப் போட்டி :
முதல் பரிசு : லேகா ஸ்ரீ - 7th Std
2 ஆம் பரிசு : இர்ஃபானத்துல் ஹைதிய்யா - 6th Std
3 ஆம் பரிசு : அல் சுமையா - 7th Std
3 ஆம் பரிசு : ரஸ்வின் ரஹீஃபா - 7th Std
ஓவியப் போட்டி :
முதல் பரிசு : நாக சரத் - 5th Std
2 ஆம் பரிசு : கார் முகிதா - 2nd Std
3 ஆம் பரிசு : பூஜா ஸ்ரீ - 4 th Std
கண்ணாடி ஓவியப் போட்டி :
முதல் பரிசு : பிரியங்கா - 9th Std
2 ஆம் பரிசு : முஹம்மது சாய்மா - 7th Std
3 ஆம் பரிசு : ஹாஜா ரஃபீல் - 9th Std
3 ஆம் பரிசு : ஹைருன் ஹஃபீலா - 9th Std
இந்த நிகழ்ச்சியின் போது திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, தின மலர் நாளிதழ் சார்பாக (மொத்தமாக) ரூ 4000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமியா பள்ளியின் தாளாளர். M.M.K.முஹைதீன் இபுறாஹீம் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்ச்சிகளை பள்ளியின் முதல்வர் மேபல் ஜஸ்டீஸ் மற்றும் ஆசிரியர் ஜோசப் சார்த்தோ ஆகியோர்கள் நல்ல முறையில் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
- KeelaiPamaran Karuthu தினமலர் பத்திரிக்கை தற்போது புதிய யுக்தியாக சிறுபாண்மை பள்ளிகளில் நுழைய தொடங்கியுள்ளது.தயவு செய்து தினமலர் போன்ற சமுதாய விரோத பத்திரிக்கைகளை ஊக்கப்படுத்தாதீர்கள்.டாஸ்மாக்க்கடையில் தினமலர் விளம்பரம் செய்வதாகவும் அக்கடையை 2 மாதத்தில் அகற்றுவேன் என்று 4 மாதம் முன் சவால் விட்டிருந்தீர்கள்.அப்படி சொன்ன உங்களை போன்ற சமுதாய அக்கறை கொண்டவர்கள் தினமலரை புறக்கணிக்க வேண்டும்.டிரைவர் தற்கொலையை கொலை என்று முதைல் செய்தி போட்டு சகோதரரை கைது செய்ய வைத்தது தினமலர்தான் .செய்வீர்களா சகோதரரே????? அன்புடன்..
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' தின மலர் நாளிதழ் நம் சமுதாயத்திற்கு வஞ்சனை தரும் செய்திகளை அள்ளித் தருவதில் வல்லவன் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கீழை இளையவன் வலை பதிவில் செய்தி வெளியிட்டிருந்த போதும் தின மலரா? தின மலமா ? என நம் அன்பிற்கினிய சகோதர வாசகர்கள் ஒரு விவாதமே நடத்தி முடித்து விட்டார்கள்.
தின மலர் மட்டுமல்ல, தினகரன், தினத் தந்தி, தினமணி என அது போன்ற துவம்ச பத்திரிகைகள் தவறிழைக்கும் போது, நம் சமூகத்தை இழிவுபடுத்தும் போது, நம் கருத்துகளை எப்படி செருப்படியாய் வாரி வழங்கினோமோ... பொங்கி எழுந்தோமோ... அது போலவே அவர்கள் எப்போதாவது செய்யும் நற் காரியங்களையும் நாம் தட்டிக் கொடுக்கத் தான் வேண்டும் என்பது என் கருத்து.
அது திட்டமிட்ட உள் நோக்கம் கொண்டதாக இருந்தாலும் சரியே.. ஏனெனில் அவர்களை விட, அவர்களையும், நம்மையும் படைத்த, எல்லாம் வல்ல வல்லோன் அல்லாஹ் மிக நுணுக்கமாக, செம்மையாக திட்டமிடப் போதுமானவன். - Fouz Ameen வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கீழக்கரை கிங்க்ஸ் டிராவல்ஸ் ஏஜென்சி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்
No comments:
Post a Comment