கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் ஒவ்வொரு வருடமும் ரமளானின் கடைசி பத்து தினங்களின் ஒற்றைப் படை இரவுகளில் நோன்பு நோற்கும் சஹர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் அதற்கான நிகழ்ச்சி நேற்று ரமலான் பிறை 29 (08.08.2013) வியாழக் கிழமை பின்னிரவு 3.30 மணி முதல் 4.30 மணி வரை சிறப்பாக நடை பெற்றது.
இதில் ஏராளமான நோன்பாளிகள், உணவருந்தி நோன்பு நோற்றனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நடுத் தெருவைச் சேர்ந்த 18 வது வார்டு கவுன்சிலர்.முஹைதீன் இபுறாஹீம் மற்றும் HAM 7 STUDIO ஜலாலுதீன், ஆகில் உள்ளிட்ட நண்பர்கள் குழுவினர் நல்ல முறையில் செய்திருந்தனர்.
இத்துடன் கீழக்கரை ரமலான் ஸ்பெசல் 2013 பதிவுகள் இனிதே நிறைவுறுகிறது. இறைவன் நாடினால், அடுத்த வருடம் ரமலானில், இன்னும் சிறப்பான ஸ்பெசல் பதிவுகளை தரக் காத்திருக்கிறோம்.
கீழக்கரை ரமலான் ஸ்பெசல் 2013 - முற்றும்.
No comments:
Post a Comment