தேடல் தொடங்கியதே..

Friday 2 November 2012

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறும் 'குரூப் 2 மறு தேர்வு' - கீழக்கரை தேர்வர்களுக்கு வாழ்த்து !

மிழகத்தில், காலியாகவுள்ள நகராட்சி கமிஷனர், உதவி பிரிவு அலுவலர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 3, 631 பணியிடங்களுக்கு, குரூப் 2 தேர்வு, கடந்த ஆக., 12ல் நடந்தது. இதில், 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் கீழக்கரை நகரை சார்ந்த பலர் பங்கேற்று சிறப்பாக தேர்வெழுதினர். அத்தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் மிக எளிமையாக இருந்ததாக தேர்வு எழுதிய கீழக்கரையை சேர்ந்த பலர் தெரிவித்து இருந்தனர். 


அதே வேளையில் இத்தேர்விற்கான வினாத்தாள் ஈரோட்டில் ஒரு தேர்வு மையத்தில் வெளியானது. இதனால் அல்லும் பகலும், அயராது படித்து முறையாக தேர்வெழுதிய பலர் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாயினர். வினாத்தாள் வெளியானதால், இத்தேர்வினை, டி.என்.பி.எஸ்.சி, தலைவர். திரு நடராஜ் I.P.S அவர்கள் உடனடியாக இரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இந்த மறு தேர்விற்காக டி.என்.பி.எஸ்.சி புதிதாக வினாத்தாள் தயாரித்துள்ளது. 


இந்நிலையில் இந்த வினாத்தாளின் படி, மீண்டும், தேர்வு நாளை  (நவம்பர் .4 ) தமிழகமெங்கும் ஒரே நாளில் நடை பெறுகிறது. மேலும்  இதற்கான ஏற்பாடுகளை, விரைந்து செய்யுமாறு, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கீழக்கரையை சேர்ந்த தேர்வர் கிருஷ்ணமூர்த்தி என்கிற கிச்சா அவர்கள் கூறும் போது "கடந்த முறை வினாத்தாள் 'அவுட்' ஆனதால், மீண்டும் அதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 6.40 லட்சம் பேருக்கு மட்டும், நாளை தமிழகமெங்கும் தேர்வு நடக்கிறது.

கீழக்கரையை பகுதியை சேர்ந்த தேர்வர்கள் அனைவரும் இராமநாதபுரத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் தேர்வெழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. இதில், புதிதாக விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுத முடியாது. கடந்த ஆகஸ்டு  12ல் நடந்த தேர்விற்கு இணையதளத்தில் "டவுன்லோடு' செய்த, ஹால்டிக்கெட்டை பயன்படுத்தி, அதே தேர்வு மையங்களில், மீண்டும் தேர்வினை எழுதலாம். அல்லது  டி.என்.பி.எஸ்.சி இணைய தளத்தில் மறுபடியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்". என்றார்.

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்க 

இந்த குரூப் 2  மறு தேர்வினை, மனம் தளராது மீண்டும் எழுத இருக்கும் தேர்வர்கள் அனைவருக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.