தேடல் தொடங்கியதே..

Friday 15 November 2013

கீழக்கரையில் இன்றும் சிறப்புற நடை பெற்று வரும் சங்கு முத்து வணிகம் - வரலாற்று பார்வை !

கீழக்கரை கடற்பகுதி முத்துக் குளித்தலில் உலகளாவிய புகழ் பெற்று இருந்தது. கீழக்கரையில் ஆதி காலம் முதற் கொண்டு சிறப்பாக நடந்து வந்த முத்து, சங்கு குளித்தல் பற்றி கி.பி. 80 ஆம் வருடத்தில் வாழ்ந்த பெரிப் புளூஸ்,  கி.பி.130 ஆம் வருடத்தில் வாழ்ந்த தாலமி போன்ற வரலாற்று அறிஞர்களும்,  கி.பி.6 ஆம் நூற்றாண்டில்; வாழ்ந்த எகிப்து நாட்டு பயணி காஸ்மாஸ் இனிகோ பிளஸ்டாஸ் உள்ளிட்டோரும் தங்கள் ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர்.



தமிழ்நாட்டில் முதல் முதலாகக் காலனிய ஆட்சியை நிறுவியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள். 16ஆவது நூற்றாண்டில் இராமேஸ்வரம் தொடங்கி, கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப் பகுதியில் காலூன்றி அப்பகுதியில் ஆட்சி செலுத்தியவர்கள். கி.பி.1658இல் டச்சுக்காரர்கள் நிகழ்த்திய படை யெடுப்பிற்குப் பின்னரே இவர்களின் ஆதிக்கம் மறைந்தது.

அச்சமயம் கீழக்கரை கடல் பகுதிகளில் முத்துக் குளிக்கும் போது கடற் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி முத்துக்களைக் கொள்ளையடிப்பது நிகழ்ந்து வந்தது. இதனால் காயல், கீழக்கரை போன்ற ஊர்களின் தலைவர்கள் போர்ச்சுக்கீசியப் படைத் தளபதியின் உதவியை நாடினர். முத்துக் குளிப்பின் போது போர்ச்சுக்கீசியப்படை, பாதுகாப்பளித்தது. இப்படையினர்க்கு ஊதியமும் உணவுப் பொருட்களும் ஊர் மக்களால் வழங்கப்பட்டன.

அந்த காலக் கட்டத்தில், கீழக்கரை இஸ்லாமியர்களின் தலைவர் 'நெயினார்' என்றழைக்கப்பட்டார். 1523 இல் கீழக்கரை நெயினார், கடற்கொள்ளைக் கூட்டத்திடமிருந்து, பாதுகாப்புக் கொடுக்க, போர்ச்சுக்கல் படைத்தளபதியை வேண்டினார். அப்பாதுகாப்பிற்காகப் பணம் வழங்கிய வரலாறுகளும் காணப்படுகிறது. இன்றும் பழைய குத்பா பள்ளிவாசாலில் 'கப்பல் நெய்னா மறைக்கா' என்பார் குறித்த கல்வெட்டி னய் காண முடியும்.

கீழக்கரை மரைக்காயர்கள், ஸ்ரீலங்காவுக்கு அரிசியும் ஆடைகளும் கொண்டு சென்று பண்டமாற்று வாணிபம் செய்து வந்தனர். வாணிபப் போட்டியின் காரணமாக, ஏற்கெனவே வாணிபத்தில் நிலைபெற்றிருந்த மரைக்காயர்களுக்கும் போர்ச்சுக்கீசியருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இலங்கையுடனான வாணிபத்திலும், கீழக்கரையில் முத்து வாணிபத்திலும் ஈடுபட விரும்பிய போர்ச்சுக்கீசியர்கள் இதற்கு உதவும் வகையில் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பான இடம் ஒன்றைத் தேடினர். இவ்வகையில் கீழக்கரைக்குச் சில கிலோ மீட்டர் வடக்கில் இருந்த வேதாளை என்ற ஊர் பொருத்தமான இடமாக அவர்களுக்குப்பட்டது.

வேதாளையில் கோட்டையன்றைக் கட்டிக் கொள்ள, அப்பகுதியை ஆண்ட பரமக்குடி தும்பிச்சி நாயக்கரிடம் அனுமதி வேண்டினர். செங்கற்களைப் பயன்படுத்தாமல் மண்ணால் கட்டப்பட்டு, ஓலைக் கூரையுடன் கூடியதாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பரமக்குடி சிற்றரசன் அனுமதி வழங்கினான். தமிழகத்தின் கடற்கரையில் போர்ச்சுக்கீசியர் கட்டிய முதல் கோட்டையாக வேதாளைக் கோட்டை அமைந்தது. கோட்டையினுள், பண்டக சாலைகளும், போர்ச்சுக்கீசிய வணிகர்களும் அதிகாரிகளும் வசிக்க வீடுகளும் கட்டப்பட்டன.

வேதாளையில் இருந்தவாறே, கீழக்கரை இஸ்லாமிய மரைக்காயர்களைக் கட்டுப்படுத்தலாயினர். இதனால் இருதரப்புக்கும் இடையே முரண்பாடு உருவானது. காலப்போக்கில் மரைக்காயர்கள் தம் வளத்தை இழக்கலாயினர். இதைத் தவிர்க்கும் வழிமுறையாகப் போர்ச்சுக்கீசியரின் எதிரியாக இருந்த கள்ளிக்கோட்டை சாமரின் மன்னனின் துணையை நாடினர். அவர் அனுப்பிய படை இருமுறை (கி.பி 1537, கி.பி 1538 ஆண்டுகளில்) போர்ச்சுக்கீசியர்களுடன் மோதித் தோல்வியடைந்தது.

கீழக்கரைப் பகுதியில் போர்ச்சுக்கல் ஆதிக்கம் நிலை பெற்ற பின், இப்பகுதியின் உரிமையாளராய் விளங்கிய விஜயநகரப் பேரரசின் வருவாய் தடைப்பட்டது. இதைப் பொறுக்க முடியாத விஜயநகரப் பேரரசு, தன்படையை 1549-இல் அனுப்பியது. அதனுடன் போரிட முடியாது போர்ச்சுக்கீசியப் படை தோற்று ஓடிப் போனது. 1553-இல் கீழக்கரை முஸ்லீம்கள் வேதாளைக் கோட்டையைத் தாக்கி, முத்துக்குளித்தலில் தம் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தினர்.



இடம் : அஞ்சு வாசல் கிட்டங்கி, பழைய குத்பா பள்ளி தெரு

கீழக்கரை நகரின் ஆதி தொழிலாம் கடல் சார்ந்த தொழில்களில், சங்கு முத்து வணிகம் இன்றும் கூட பழைய குத்பா பள்ளி தெருவில் இருக்கும் அஞ்சு வாசல் கிட்டங்கியிலும் முஸ்லீம் பஜாரில் ஜமாலியா சங்கு கொள் முதல் விற்பனையகத்திலும், புதுக் கிழக்குத் தெருவில் சில இடங்களிலும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. இங்கு சங்குகளை சுத்தம் செய்து, அளவு வாரியாக  தரம் பிரித்து கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும், அங்கிருந்து உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.




இடம் : ஜமாலியா சங்கு கம்பெனி, முஸ்லீம் பஜார்

4 comments:

  1. கீழக்கரை அலி பாட்சா15 November 2013 at 20:10

    இன்றைய காலக் கட்டத்தில் கடல் சார் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் கூட அறியாத ஆச்சரியம் மூட்டும் தகவல் .

    பால் சங்கு என்று சொல்லக் கூடிய குளி சங்குகள் (பிரதானமாக இதில் பட்டி, ஜாதி என இரு தரம் உண்டு) அழகு பொருட்கள் தயாரிக்க சில சதவீத சங்குகளைத் தவிர ஏனைய அனைத்தும் கொல்கத்தாவுக்கே ஏற்றுமதியாகின்றன.அங்கிருந்து அகர்தலா, வஙக தேசம் செல்லுகின்றன.

    எப்படி தமிழகத்தில் திருமண்ம் முடிந்த இந்து பெண்களுக்கு தாலி முக்கியமோ அந்த அளவுக்கு திருமணம் முடிந்த பெங்காலி பெண்களுக்கு ஏழை பணக்காரர் என பேதமில்லாமல் சங்கு வளையல் அணிவது அதி முக்கியம். இது எளிதில் உடையக் கூடியது. மேலும் பூஜா சமையத்தில் பழையவைகளை களைந்து புதியது அணிவார்கள்.

    வட நாட்டில் பெரும் செல்வந்தர்களை மரணித்த பின் சந்தனக் கட்டைகளை வைத்து எரிவூட்டுவதுவது போல பணக்கார பொங்காலிகள் சங்குகள் போட்டு எரியூட்டுவது மதச் சம்பிரதாயம்.

    சங்குகளிலிருந்து பிரதானமாக வளையல்கள் வெட்டி எடுத்தப் பிறகு ஏற்படும் சிதறல்களிலிருந்து ஆபரணமாக பயன் படுத்த நெக்லஸ் மற்றும் மோதிரம் போன்றவைகள் தயாரிக்கப்படும்.இந்த தொழில் பெங்காலிகளுக்கு மட்டுமே கை வந்த கலை.

    இது மதம் சார்ந்த தொழிலாக இருப்பதால் பல நூற்றாண்டுகளாக இன்றளவும் கீழக்கரை. ராமேஸ்வரம், தூத்துகுடியில் சிறப்பாக நடந்து வருகிறது.எந்த வியாபாரத்திலும் ஏற்றம் இறக்கம் , தொழில் போட்டி இருப்பது போல இதிலும் உண்டு.

    இதில் காட்டு சாமான்கள் என் சொல்லக் கூடிய ஐவிழி சங்கு,பாத்திர சங்கு, சோவி, ச்ங்கு முத்து போன்றவைகளால் அலங்காரப் பொருட்கள், ஊது பத்தி ஸ்டேண்ட், வி.ஐ.பி களுக்கு கழுத்து மாலை, முகக் கண்ணடிக்கு சுற்றி பிரேம் அமைப்பது, பிலாஸ்டிக் பூக்கள் வைக்க ஸ்டேண்ட் போன்றவைகள் செய்யப்பட்டு வெளி நாட்டிற்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த தொழில் பிரதானமாக கீழக்கரை, கன்னியாகுமரி, சென்னை கோவளம்,வேளாங்கன்னி போன்ற் இடங்களில் நடந்து வருகிறது. தொழில் பாதுகாப்பு அற்ற இந்த தொழிலில் குறிப்பிட்ட சதவீதத்தினற்கு தமிழகத்தில் வேலை வாயப்பினை அளித்து வருகிறது.

    ReplyDelete
  2. தங்கள் வலையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்...மேலும் விபரங்கள் அறிய http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_19.html

    -அன்புடன்-
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

    ReplyDelete
  3. Greate post. Keep writing such kind of info on your site.
    Im really impressed by your site.
    Hello there, You've done an incredible job.

    I'll certainly digg it and personally recommend to my friends.
    I'm confident they will be benefited from this website.

    Here is my web page; ganhar dinheiro

    ReplyDelete
  4. ----------------------------------------------------

    வாதீடு: 087
    "கப்பல் ஓட்டிய மரக்காயர் யாவரோ?"

    பொருல்:
    "தம்புல்ல என்ப, தம்முடய்ய பில்லய்யே."
    "வாப்பா என்ப, வாருங்கோ அப்பாவே."
    "உம்மா என்ப, உயிர் கொடுத்த அம்மாவே."

    கப்பல் மனி:
    னியூசிலாந்து தேசத்தின் தலய்மய்யிடமான வெலிங்டன் அருங்காட்சியகத்தில், கப்பலுக்குரிய, தமிலு எலுத்துடன் கூடிய, ஒடய்ந்த வென்கல மனி ஒன்ரு பேனிக் காக்கப்பட்டு வருது. அந்த ஒடய்ந்த வென்கல மனியின் விலிம்பில், "முகய்யதீன் வக்குசுடய்ய கப்பல் உடய்ய மனி" என்ரு எலுதப்பட்டு உல்லதாகச் சொல்லப்படுது. அந்த ஒடய்ந்த வென்கல மனியய், 1836ஆம் ஆன்டில் வில்லியம் கோல்ன்சோ (William Colenso) என்னும் இங்கிலாந்து தேசத்தின் மதப் போதகர், னியூசிலாந்து தேசத்தின் வெங்கேரி (Whangarei) என்னும் இடத்தின் அருகில் வசித்த ஆதிமக்கலிடம் இருந்து, கன்டெடுத்ததாகச் சொல்லப்படுது. இதன்மூலம் பல னூட்ரான்டுக்கு முன்பே, இலம்பிரய்போட்ரியார் ஒருவர், கடல் வனிகத்தில் ஈடுபட்டு இருந்ததும், அவர் னியூசிலாந்து தேசத்துக்கே சென்ரு சேர்ந்த விபரமும் தெரியவருது.

    ----------------------------------------------------

    ReplyDelete