தேடல் தொடங்கியதே..

Friday, 25 October 2013

கீழக்கரை அத்தியிலை தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் 'அல் மதரஸத்துல் பிர்தௌஸ்' சிறுவர்கள் மதரஸா !

கீழக்கரை அத்தியிலை தெருவில்  'அல் மதரஸத்துல் ஃபிர்தௌஸ்' எனும் அழகிய பெயரில், கடந்த ஹிஜ்ரி 1429 ஆண்டு, அத்தியிலை தெரு நண்பர்கள் ஜியாவுல் ஹனீப், அப்துல் ரசீக் (கல்யாண தம்பி), சேகு ஜலாலுதீன் உள்ளிட்ட நண்பர்களால் துவங்கப்பட்டு இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சிறுவர்கள் மதரசாவில் 5 வயது முதல் 16 வயது வரையிலான 60 க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இஸ்லாமிய அடிப்படை கல்வியை கற்று வருகிறார்கள். 


வெள்ளிக்கிழமை தவிர மாலை 6.30 மணி முதல் 8.45 வரை மதரஸா நடை பெறுகிறது. ஆரம்பத்தில் சம்சுதீன் சதக்கீ, அப்துல் நாசர் ஜமாலி  உள்ளிட்ட  மூன்று உஸ்தாதுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளி, தற்போது அஷ்ரப் அலி மிஸ்பாஹி, அப்துல் மஜீது உலவி, முஹம்மது பிலால் ரியாஜி   உள்ளிட்ட 5 உஸ்தாதுகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது அத்தியிலை தெருவில் பெண்களுக்கு தனியாக  'அல் மதரஸத்துல் ஃபிர்தௌஸியா' எனும் பெயரில் துவங்கப்பட்டுள்ளது. இந்த மதரஸாவில் 5 வயதுள்ள சிறுவர்களுக்கு 'பிதாயா ஊலா' எனும் ஆரம்ப வகுப்பில் அரபி மொழி எழுத்துக்களை கற்பித்தல், சிறிய துஆக்கள், ஹதீஸ் பற்றிய பாடங்கள் நடை பெறுகிறது. அடுத்ததாக 7 வயது சிறுவர்களுக்கு 'ஸனத்துன் வாஹிதா' எனும் முதலாம் வகுப்பில் குர் ஆன் ஓதுதல், சிறிய சூராக்கள் மனனம், இஸ்லாமிய அடிப்படை சட்டங்கள், துஆக்கள், ஹதீஸ்கள், நபிமார்களின் வரலாறு உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக இரண்டாம் ஆண்டில் 'ஸனத்துன் ஸானியா' எனும் வகுப்பில் விரிவான இஸ்லாமிய சட்டங்களும், குர் ஆன்  மனனமும் கற்பிக்கப்படுகிறது.நிறைவாக மூன்றாம்  ஆண்டில் 'ஸனத்துன் ஸாலிஸா' எனும் வகுப்பில் பயான் பயிற்சியும், அர் ரஹ்மான், வாகிஆ, யாசீன் சூராக்கள் மனனம் மற்றும் 30 ஆம் பாகம் முழுமையும் (அம்ம ஜஸ்வு மட்டும்) உள்ளிட்டவை கற்பிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 'அல்குர் ஆன் கூறும்...' என்று ஆரம்பிக்கும் ஏதேனும் ஒரு தலைப்பில் THESIS செய்ய வைத்து இறுதியில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.  இஷா தொழுகை பாங்கு 
இது குறித்து மதரசாவின் முதல்வர் பாசில் அகரம் அவர்கள் கூறும் போது "இந்த பள்ளி துவங்கும் சமயத்தில், கீழக்கரையில் சிறுவர்களுக்கு முறையான மகதப் மதரஸா இல்லை.

மார்க்க கல்வியின் அடிப்படை கல்வி பயிலரங்கமான இந்த மகதப் மதரஸாவில் பயிலும் சிறுவர்களுக்கு மார்க்க கல்வி போதிப்பதோடு, சரியான முறையில் ஐவேளை தொழுகையையும் கடைபிடிக்கிறார்களா..? என்பது கண்காணிக்கப்படுகிறது.

அதற்காக ஒவ்வொரு சிறுவருக்கும் தனித் தனியாக பைல் போடப்பட்டு, நிர்வாக பொறுப்பாளர்களால் (சகோதரர்கள் குர்ஷித் ஆலம்கான், சதாம் ஹுசைன், சலீம் சர்ஹான் மற்றும் மதார் ஆகியோர்களால்) ஒழுங்கப்படுத்தப்பட்டு வருகிறது.


 மதரஸாவில் இஷா தொழுகை நடை பெறுகிறது 
இங்கு ஓதி முடிப்பவர்களால், கீழக்கரையின் பல்வேறு பள்ளிகளில் ரமலான் மாதங்களின் கடைசி மூன்று நோன்புகளின் இரவு தொழுகைகளை நடத்தப்பட்டு வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. மேலும் இங்கு பயிலும் மாணவர்களால், அரபிக் கல்லூரிகளில் மிக எளிதாக படங்களை பயில முடியும்." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 


மதரஸாவின் முன்னாள் மாணவர்கள் 

'அல் மதரசத்துல் ஃபிர்தௌஸ்' சிறுவர் மதரசாவில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து இஸ்லாமிய மார்க்க கல்வியை வழங்கிட தொடர்பு கொள்ள வேண்டிய அலைப் பேசி எண் : 7845482824 (மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும்)

குறிப்பு : இந்த மதரசாவின் தற்போதைய நிர்வாகிகளான பாசில் அகரம் (B.Arch இறுதியாண்டு), சலீம் சர்ஹான் (DME.,) மற்றும் மதார் (B.A.,Eng) ஆகியோர் முஹம்மது சதக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. மாஷாஅல்லாஹ்... இந்த அழகிய அத்தியிலை தெரு இளைஞர்கலை நினைத்தால் மிகப்பெருமையாக இருக்கிறது... அல்லாஹ் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார்க்கும் நன்மைகளை வாரிவழங்க துவா செய்கிறேன்.... ஊரை, தெருவை, அல்லாஹ்வின் மார்க்கத்தை பெருமை படுத்திய உங்களையும், உங்கள் பெற்றோர்களையும் அல்லாஹ் பெருமைபடுத்துவானகா...we all very proud of u ஜியாவுல் ஹனீப், அப்துல் ரசீக் (கல்யாண தம்பி), சேகு ஜலாலுதீன் பாசில் அகரம் (B.Arch இறுதியாண்டு), சலீம் சர்ஹான் (DME.,) மற்றும் மதார் (B.A.,Eng)

    ReplyDelete