தேடல் தொடங்கியதே..

Sunday 8 September 2013

தமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் !

முதல்வரின் தனிப் பிரிவிற்கு, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க உதவியாக புதிய வலை தளத்தினை, மாண்பு மிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2102 ஆம் ஆண்டு துவக்கி வைத்து உள்ளார். இந்த இணையத்தின் வழியே மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இனி தாமதமின்றி, உடனுக்குடன் புகார்களை, முதல்வரின் தனி கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



                                தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வரின் தனிப் பிரிவிற்கு நாள் தோறும் பொது மக்களிடமிருந்து நேரடியாகவும், தபால் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மனுக்கள் பெறப்படுகின்றன. இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப் படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கையால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

முதல்வரின் தனிப்பிரிவின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதல்வரின் தனிப்பிரிவிற்கு, http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

                                      முதல்வரின் தனிப் பிரிவு இணைய தள முகவரி :
 http://cmcell.tn.gov.in/

 புகார்களை அளிக்க :

புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றிஅறிந்து கொள்ள:




இணைய தள வசதி இல்லாதவர்கள், தபால் மூலமும் புகார்களை அனுப்பலாம்.

Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

                                                                             ஒப்புகைச் சீட்டு:

இவ்வலைதளத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு, உடனே மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும். புதிய வலைதளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள முதல்வர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைதளத்தில் குறிப்பிடப்படும். இதன்மூலம் மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.

மேலும், இப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையையும் முதல்வர் துவக்கி வைத்தார். அதேபோல், தபால் வழியாக அனுப்பும் மனுக்களில் மனுதாரர் கைபேசி எண்ணை குறிப்பிட்டிருந்தால், முதல்வரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண், தொடர்புடைய அலுவலகம் மற்றும் அலுவலர் ஆகிய விவரங்கள் முதல்வர் தனிப்பிரிவிலிருந்து குறுந்தகவல் மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


எதை எதையோ சேர் பண்றீங்க... முதலில் இத பண்ணுங்க
அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ...


இனி புகார்கள் பறக்கட்டும்.. நாடு செழிக்கட்டும்.. நல்லாட்சி மலரட்டும்.. !


FACE BOOK COMMENTS :
  • Sadiq MJ தம்பி உங்கள் பதிவில் ....

    "இனி புகார்கள் பறக்கட்டும்.. நாடு செழிக்கட்டும்.. நல்லாட்சி மலரட்டும்.. ! என்கிற வாசகம்" கண்டேன்......

    அவசியமான..... தக்க ஆதாரங்களுடன் நம்மால் நிரூபிக்க முடியும் என்கிற குற்றச்சாட்டுகளை மாண்புமிகு முதல்வருடைய கவனத்திற்கு கொண்டு செல்வதில் நமதூர் செய்திகளை அள்ளிவரும் பொதுமக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கக் கூடிய Keelakarai Times மற்றும் Keelai Ilayavan போன்ற வலை தளங்கள் மூலமாகக் கூட அனுப்பிக் கொடுக்கலாம்.

    நம்ம ஊர் நகராட்சியின் http://keelakaraitimes.blogspot.ae/.../blog-post_9949.html உட்கட்சி குழப்பத்தை முதலாவது பதிவாக எடுத்து வையுங்களேன்..... இதன் மூலம் என்ன தீர்வு காணுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்..... அதோட தம்பி.....

    முன்னதாக நீங்க விட்ட கீழக்கரை நகர எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடை சம்பந்தமாக விட்ட சவாலை ஊரப்போடுவதற்க்காகத் தான் உங்களுக்கு விருதுலாம் கொடுத்தாங்க.... என்று பரவலாப் பேசப்படுது..... இதுவிசயமாகவும் கொஞ்சம் விளக்கம் அளித்தால்..... நன்றாக இருக்கும்......
  • Keelai Ilayyavan அன்பு சகோதரர் சாதிக் அவர்களுக்கு..

    கீழை இளையவன் வலைப் பதிவில் வெளியிடப்படும், கீழக்கரை நகர் நலன் தாங்கிய பதிவுகள் அனைத்தும் வெறுமெனே பதிவுகளோடும் , பகிர்வுகளோடும் நின்று விடுவதில்லை. மாறாக கீழக்கரையில் இயங்கி வரும் பல்வேறு பொதுநல அமைப்புகளின் மூலமாக, சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தரப்படுகிறது. புகார் மனுக்கள் அனுப்பப்படுகிறது. இதனால் பெரும்பாலான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வும் சிலவற்றிற்கு தற்காலிக தீர்வுகளும் கிடைத்து வருகிறது. அதோடு நில்லாமல் , தமிழக முதல்வரின் கவனத்திற்கும், புகார் மனுக்கள் பறந்து கொண்டு தானிருக்கிறது என்பதனை தங்கள் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

    ///..முன்னதாக நீங்க விட்ட கீழக்கரை நகர எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடை சம்பந்தமாக விட்ட சவாலை ஊரப்போடுவதற்க்காகத் தான் உங்களுக்கு விருதுலாம் கொடுத்தாங்க.... என்று பரவலாப் பேசப்படுது..... இதுவிசயமாகவும் கொஞ்சம் விளக்கம் அளித்தால்..... நன்றாக இருக்கும்..///

    முதற்கண்.. விருதுகள் பெறுவதற்காக பொதுநலப் பணிகள் ஆற்றிட துணிய வில்லை. அதே நேரம், எங்களை ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்பட்ட விருதின் நோக்கத்தை கொச்சை படுத்தும் விதமாக அமைந்திருக்கும் உங்கள் கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன். வெறுமெனே ஊகத்தின் அடிப்படையில், சிலர் பரவலாக சொல்கிறார்கள் என்பதற்காக, இங்கு என்ன நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை முழுமையாக விளங்காமல் இனி கருத்துப் பதிய வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

    கீழக்கரை - இராமநாதபுரம் டாஸ்மாக் நெடுஞ்சாலையில் சட்ட விரோதமாக இயங்கி வரும் மதுபானக் கடையை அகற்ற, கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் சார்பாக, தொடர்ந்து முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான பதிவினை வாசிக்க :

    கீழக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக் கடையை, உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் தொடர் முயற்சி ! http://keelaiilayyavan.blogspot.in/2013/09/blog-post_9.html
  • Sadiq MJ DEAR BROTHER, appreciate your time to time follow up with the concern department, hope your reply related to the TASMAK may read by the person who raise the Question in directly......
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரையில் செய்தி சேகரிப்பதை மட்டுமே தன் பிழைப்பாக, தொழிலாக கொண்டு திரியும் தினப் பத்திரிகைகளின் விளம்பர ஏஜெண்டுகள்.. அனைவரும் இது வரை இந்த டாஸ்மாக் கடை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிட விரும்ப வில்லை. இது பற்றி செய்தி வெளியிடாத 'துப்பு கெட்ட' ஊடகங்கள் குறித்து தம்பி சாதிக் என்ன சொல்லப் போகிறார்? இந்த டாஸ்மாக் பற்றி செய்தி வெளியிடாமல் இருக்க கீழக்கரை அ. தி .மு. க நகர செயலாளர். ராஜெந்திரநிடமிருந்து எத்தனை ஆயிரங்களை, இந்த பெரும் குடி மகன்கள் கறந்தார்கள் என்பது வல்ல இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

    கீழக்கரை மக்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும், இந்த டாஸ்மாக்கை அகற்ற அயராது போராடி வரும் தம்பி கீழை இளையவனின் முயற்சிக்கு வல்ல நாயன் துணை நிற்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
  • Sadiq MJ நம் ஊர் செய்திகளாகட்டும் / அரசு ஆணைகளாகட்டும் அந்த புதிய ஆணைகளுக்கு ஏற்ப யாரை எப்படித் தொடர்பு கொள்வது போன்ற முக்கியச் செய்திகளை தனது வலை தளத்தின் மூலம் எளிய நடையில் நமக்கு அறியத்தரும் தம்பி சாலிஹின் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிவேன், அவரது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். In fact,

    தம்பி சாலிஹ்-ற்கு விருது கிடைத்த செய்தியை வலைதளத்தில் கண்டு வாழ்த்துக்கூறிய முதலாமவனும் (If I'm not mistake) நானே என்று சொல்லிக்கொள்கிறேன்!

    நம்ம ஊர் பாமரர் (கள் ) தம்பியின் செயல்பாடுகள் குறித்து, தம்பி மூலமாகவே அறிந்து கொள்ளட்டும் என்பதற்காக எழுதப்பட்டதுதான் நேற்றைய என்னோட கருத்து (Hope Bro. Salih understand, what I stated ....)

    தம்பியின் (இளையவனின்) இன்றைய இன்றைய பதிவும் இணைப்புத் தகவலும் மேற்கூறிய நம்ம ஊர் பாமரர் (கள்) வாசித்து அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
  • Sadiq MJ கீழக்கரை 'புதிய ஒற்றுமை' >>> கீழக்கரையில் செய்தி சேகரிப்பதை மட்டுமே தன் பிழைப்பாக, தொழிலாக கொண்டு திரியும் தினப் பத்திரிகைகளின் விளம்பர ஏஜெண்டுகள்.. அனைவரும் இது வரை இந்த டாஸ்மாக் கடை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிட விரும்ப வில்லை. இது பற்றி செய்தி வெளியிடாத 'துப்பு கெட்ட' ஊடகங்கள் குறித்து தம்பி சாதிக் சொல்வதற்கு என்ன இருக்கிறது நீங்களே சொல்லிட்டீங்க இந்த டாஸ்மாக் பற்றி செய்தி வெளியிடாமல் இருக்க கீழக்கரை அ. தி .மு. க நகர செயலாளர். ராஜெந்திரநிடமிருந்து எத்தனை ஆயிரங்களை, இந்த பெரும் குடி மகன்கள் கறந்தார்கள் என்பது வல்ல இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம் என்று முயற்சி பண்ணுவோம் புல்லுருவிகளின் முகங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர..... ஆமாம் இந்த Profile கீழக்கரை 'புதிய ஒற்றுமை' என்பது பொது வலைதளமா? இல்லே தனி நபருடையதா கா க் கா ?
      
  • Keelai Ilayyavan Dear kaka, Thanks for ur comment & support
  • Hussain Jahangeer தினமலத்தின் விளம்பரத்தில் இப்படியொரு டாஸ்மாக் கடையா?

1 comment:

  1. விண்ணப்பித்த அறுபது நாள்களுக்குள் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்’ என கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் துல்லியமாக இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்படவில்லை என்றாலும், சில மாதங்கள் கழித்தாவது, விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் புதிய அட்டைகள் கிடைத்துவந்தன. இதனால் புதுமணத் தம்பதிகள் – குறிப்பாக ஏழைகள் – நிம்மதியடைந்தனர். இப்போதும் அதே நிலையாவது நீடிக்கும் என எதிர்பார்த்திருந்தோருக்கு புதிய ஆட்சியில் புதிய குடும்ப அட்டை வழங்கும் விஷயத்தில் மட்டும் மிகுந்த ஏமாற்றமே கிடைத்துவருகிறது. குடும்ப அட்டைகள் வைத்திருப்போருக்கு ரேஷன் பொருள்கள், விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் தொடங்கி பல்வேறு சலுகைகள் இந்த ஆட்சியில் அள்ளி வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஒன்றைக்கூடப் பெறமுடியாத உச்சபட்ச சோகத்தில் உள்ளனர், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள். அதிமுக அரசு பதவியேற்றதிலிருந்து சில மாதங்கள் வரை புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் புதிய அட்டைகள் வழங்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. குடும்ப அட்டைகளில் பெயர்கள் நீக்கம் செய்தல், சேர்த்தல் போன்ற பணிகள் தொடர்ந்து தடையின்றி நடைபெற்று வருகின்றன. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள “அம்மா திட்டத்தின்’ மூலமும் அந்தப் பணி செவ்வனே செயல்படுத்தப்படுகிறது. ஆனால் புதிய அட்டைகள் வழங்குவது தொடர்பாக அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. இதனால், 2012 ஜனவரி மாதம் தொடங்கி இந்த ஒன்றரை ஆண்டுகளாக விண்ணப்பித்துக் காத்திருப்போரும், விண்ணப்பிப்போரும் மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அலைந்து திரிவதுதான் மிச்சம். புதிய அட்டை கோரி விண்ணப்பித்து, சில மாதங்கள் கழிந்த பின்பும் வழங்கப்படாததால் பொறுமையிழந்த, மதுரையைச் சேர்ந்த இளைஞர், வழக்குத் தொடர்ந்து நீதிமன்றம் மூலம் குடும்ப அட்டை பெற்றுள்ளார். வட்ட வழங்கல் அலுவலகத்தில் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் ஒருவர் எந்தவித பதிலும் வீட்டுக்கு வரவில்லையே என 60 நாள்களையும் தாண்டிக் காத்திருந்து, சென்று விசாரித்தால் ஆவணங்களைச் சரிபார்த்து மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டதாகக் கூறுகின்றனர், அங்குள்ள அலுவலர்கள். மாவட்ட வழங்கல் அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தாலோ, “வரும்…வரும்’ என்ற பதிலே எப்போதும் கிடைக்கிறது. இல்லையெனில் “மொத்தமாக அச்சிடக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், பணி முடிந்ததும் வீட்டுக்கு பதில் வரும்’ என்றும் வழக்கமான பதிலே கிடைக்கிறது. நிகழாண்டு ஜனவரியிலோ, “குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்க உள் தாள்கள் ஒட்டும் பணி நடைபெறுவதால் புதிய அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகக்’ கூறப்பட்டது. உள் தாள்கள் ஒட்டும் பணி முடிந்தும் ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்டன. இப்போதும் அந்த விண்ணப்பங்களின் நிலை “கிணற்றில் இட்ட கல்தான்!’ தமிழகம் முழுவதும் “ஆதார்’ அட்டை திட்டத்துக்கு புகைப்படம் எடுக்கும் பணி பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் பெயர் சேர்க்க வேண்டுமானால், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ரசீதுடன் குடும்ப அட்டையும் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. குடும்ப அட்டை இல்லாமல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ரசீது மட்டும் இருந்தால் அவர்கள் “ஆதார்’ அட்டை திட்டத்தில் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்திருப்போர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதை மறு(றை)ப்பதற்கில்லை. சொந்த வீட்டில் குடியிருப்போருக்கு முகவரி மாற்றம் இல்லாததால் விண்ணப்பித்துவிட்டு எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். ஆனால் வாடகை வீடுகளில் வசிக்கும் ஏழைகள் புதிய அட்டை கோரி விண்ணப்பித்துவிட்டு, வட்டம் விட்டு வட்டமோ, மாவட்டம் விட்டு மாவட்டமோ மாறிச் சென்றிருந்தால் அவர்களின் நிலை? அவர்களின் பெயர் நீக்கச் சான்றிதழ்களின் கதி? விண்ணப்பித்த பெரும்பாலான (அப்போதைய) புதுமணத் தம்பதிகள் இப்போது இரண்டு ஆண்டுகளைக் கடந்து பெற்றோர்களாக மாறியிருக்கலாம். புதிய குடும்ப அட்டைகள் கிடைத்தால்தான் தங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினர்களையும் அதில் பதிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். தமிழகத்தில் 1,95,90,377 ரேஷன் அட்டைகள் உள்ளன. இவற்றில் 1,93,90,357 அட்டைகள் 2013-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 1.6.2011 முதல் 28.2.2013 வரை 1,51,137 போலி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன . வாழ்க்கையை புதுமணத் தம்பதிகள் எத்தனை உற்சாகமாகத் தொடங்கினாலும் குடும்ப அட்டைகளில் தங்கள் பெயர்கள் பதிவாவதன் மூலமே “குடும்பத் தலைவன்-தலைவி’ என்ற வாழ்வின் மற்றொரு பரிமாண நிலையை அடைகின்றனர். வங்கிக் கணக்கு, சான்றிதழ்கள், உதவித்தொகைகள், நலத்திட்டங்கள் என அனைத்துக்கும் குடும்ப அட்டைகள் அத்தியாவசியம் என்பதால் புதிய குடும்ப அட்டைகள் வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை

    ReplyDelete