தேடல் தொடங்கியதே..

Wednesday 11 September 2013

கீழக்கரை கல்வித் தந்தை பி.எஸ்.ஏ. அவர்களின் வாழ்க்கை வரலாறு - 'அன்பின் முகவரி அப்துர் ரஹ்மான்' நூல் வெளிவந்து விட்டது !

கீழக்கரைவாசிகள் பொருளாதாரத்தைத் தேடி... வளைகுடாக்களில் கால் பதிக்க, ஆரம்ப கால கட்டங்களில், ஆணி வேராய்... அர்பணிப்போடு  அழுத்தமாய் நின்று..  அடித்தளமிட்ட அரும்பெரும் மனிதர் 'பி.எஸ்.அப்துல் ரஹ்மான் காக்கா' என்றால் அது மிகையாகாது. பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்களை பற்றி தமிழ்நாட்டில் தொழில் துறைகளில் சம்மந்த பட்டவர்கள் தெரியாதவர்களே இருக்க முடியாது துபாயில் ETA நிறுவனத்தை உருவாக்கி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு உழைப்பை தந்தவர்.


அது மட்டுமல்லாது, சென்னை வண்டலூர் கிரசன்ட் கல்லூரி, கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுரி மற்றும்  பள்ளிகூடங்கள் நிறுவி கல்வி பணியிலும் முத்திரை பதித்து கீழக்கரை நகரின் கல்வித் தந்தையாக திகழ்பவர். பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 
தற்போது அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட பி.எஸ்.ஏ. அவர்களின் வாழ்க்கை வரலாறு  பேசும்  "அன்பின் முகவரி அப்துர் ரஹ்மான்" எனும் நூல் வெளி வந்திருக்கும் தகவலை, நூல் ஆசிரியரும், எழுத்தாளருமான திருச்சி. செய்யது அவர்கள் வெளியிட்டுள்ளார்.


கடின உழைப்பாலும் களங்கமற்ற நேர்மையாலும், நிகரற்ற அன்பாலும் நேரிய ஆளுமையாலும், மேற்கத்திய நாடுகளும், கீழக்கரையை வியப்புடன் நோக்க செய்த அற்புத சாதனையாளரான பி.எஸ்.ஏ. அவர்களின் அற்புத வாழ்க்கை வரலாறு நாம் படிப்பதற்கு மட்டுமல்ல.. நாளைய தலை முறையினருக்கு பாடமாகும் இருக்கிறது.

வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லும் பயனுள்ள இந்த நூலில் வரும் ஒவ்வொரு சம்பவத்திலும் ஒரு பயனுள்ள நீதி உண்டு. ஆகவே இந் நூலை நீங்கள் மட்டும் படிக்காமல், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். 600 பக்கங்கள் கொண்ட இந்நூல் ரூபாய் 600 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

"அன்பின் முகவரி அப்துர் ரஹ்மான்" நூல் கிடைக்குமிடம்

தாசீம் பீவி அப்துல் காதர் மகளீர் கல்லூரி, கீழக்கரை - 623517, 
இராமநாதபுரம் மாவட்டம்
தொலைபேசி எண் : 04567 - 241934 / 241933


FACE BOOK COMMENTS :
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' மிகச் சிறந்த பண்பாளர்.. கடின உழைப்பால் உயர்ந்த பாட்டாளி.. கீழக்கரை மக்களை வளைகுடா நாடுகளுக்கு வழி காட்டி அழைத்து சென்ற தொழில் சிற்பி ... எல்லாம் வல்ல நாயன் வல்லோன் அல்லாஹ்.. பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், சரீர சுகத்தையும் தந்தருள்வானாக.. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
  • Nizar Nizar பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய ஒரே கோடீஸ்வரர். அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் நல் அருள்புரிவானாக ஆமீன்...
      
  • Abdul Hameed பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய ஒரே கோடீஸ்வரர். அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் நல் அருள்புரிவானாக ஆமீன்.. இதன் விலை ஏழைகளுக்கு சற்று அதிகம். தமிழகப்பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுத்து படித்து பயனடை செய்யலாம். புத்தகத்தை வாங்குவது முக்கியமல்ல படித்து அவரின் பண்புகள் அடைய முயற்சி செய்ய வேண்டும்.

    கல்வி கூடங்களில் மாணாக்கர்கள் தங்களின் மார்க்க / சமய அடையாளங்களுடன் வர தடை ஏதும் இல்லை - முதன்மை கல்வி அலுவலர் தகவல் !

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்விக்கூடங்களில் இஸ்லாமிய மாணவர்கள் தாடி வைக்கவும், தொப்பி அணிவதற்கும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியவும் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர், நேரடியாகவும், மறை முகமாகவும் தடுத்து வந்தனர். அதே போல கல்விக் கூடங்களுக்கு வரும் இந்து சமய மாணவர்கள் திருநீறு பூசிக் கொள்ளவும், கிருத்துவ சமய மாணவர்கள் சிலுவை அணியவும், பல கல்வி நிறுவனங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. 


    இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த சகோதரர் அன்சார் தீன் அவர்கள் தகவல் அறியும் உரிமைகள் சட்டம் மூலம், கல்வி கூடங்களுக்கு சமய அடையாளங்களுடன் மாணவர்கள் வருவது சம்பந்தமாக, முதன்மை கல்வி அலுவலரிடம் கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு பதில் தந்துள்ள முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கல்வி கூடங்களில் மாணாக்கர்கள் சீருடையுடன்  தங்களின் மார்க்க / சமய அடையாளங்களுடன் வர தடை ஏதும் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.  




    இது போன்ற தகவல்களை, தகவல் அறியும் உரிமைகள் சட்டத்தின் மூலம் அரசு துறையினரிடமிருந்து பெறுவது எப்படி.? அதற்கான வழி முறைகள் என்ன.? என்ன மாதிரியான கேள்விகளை கேட்கலாம்.? யாரிடம் கேட்பது.? என்ற தகவல்களை அறிய கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடவும்.

    தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 , பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?  

    கீழக்கரையில் நாளை (12.09.2013) மாதாந்திர மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு !

    கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (12.09.2013) வியாழக் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை, ஏர்வாடி, முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி, தேரிருவேலி, உத்திரகோசமங்கை, களரி, கொம்பூதி   மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், காலை 9 மணி முதல் 5 மணி வரை 'மின் விநியோகம் இருக்காது' என்று மின் வாரிய உதவி செயற் பொறியாளர் திரு .கங்காதரன் தெரிவித்துள்ளார். 


    ஆகவே நாளைய தினம் ஏற்பட இருக்கும் நீண்ட நேர மின் வெட்டினை  சமாளிக்க, பொது மக்கள் அனைவரும் தகுந்த முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்து கொள்ளுமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

    இராமேஸ்வரம் - கோவை இடையே வாராந்திர 'எக்ஸ்பிரஸ் ரயில்' அறிமுகம் - பயணிகள் மகிழ்ச்சி !

    தெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்துக்கு என அறிவிக்கப்பட்ட 5 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதில் முக்கியமாக கோவையிலிருந்து திருச்சி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இடம் பெற்றிருந்தது.



    அதன் படி கோவை - ராமேஸ்வரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப் டுகிறது. இச்சேவை வரும், 17.09.2013 அன்று கோவையில் துவங்குகிறது. கோவையிலிருந்து 17ம் தேதி இரவு, 7:45 மணிக்கு புறப்படும், இந்த எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16618), திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக மறுநாள் காலை, 06.45 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைகிறது.

    இதேபோன்று, 18ம் தேதி இரவு, 07.00 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்படும் ரயில் (வண்டி எண்: 16617), அதே வழித்தடத்தில் மறுநாள் காலை 6:40 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்த ரயில் சேவை, வாரந்தோறும் கோவையிலிருந்து செவ்வாய் கிழமையும், ராமேஸ்வரத்திலிருந்து புதன் கிழமையும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களுக்கான முன்பதிவுகள் துவங்கி விட்டன. இதனால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    FACE BOOK COMMENTS :
    • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' மிக நீண்ட காலத்திற்கு பின்னர் கோவைக்கு ரயில் சேவை துவங்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர்கள் தொழில் நிமித்தமாக கோவைக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். பேருந்துகளில் பயணிக்கும் போது ஏற்படும் பல அசவுகரியன்களால் அவதியடைந்த எம் மக்களுக்கு இது நற் செய்தி தான்.

    துபாயிலிருந்து இந்தியாவுக்கு ரூபாய் கொண்டு வர தடை - யு.ஏ.இ., ரிசர்வ் வங்கி அறிவிப்பு !

    இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வோர், 10 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்ல, இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ஒருவர், நேபாளம் மற்றும் பூடான் நீங்கலாக, பிற நாடுகளுக்கு செல்லும் போது, 10 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்லலாம். அதுபோல், குறுகிய கால பயணமாக வெளிநாடு செல்வோர், நேபாளம் மற்றும் பூடான் நீங்கலாக, எந்த நாட்டில் இருந்து, இந்தியாவிற்கு திரும்பினாலும், அவர், 10 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பலர், இந்தியா வரும் போது, கணிசமான இந்திய ரூபாய் தாள்களை கையில் எடுத்து வருகின்றனர். இதனால், விமான நிலைய சோதனையின் போது, பல்வேறு பிரச்னைகள் எழுகிறது என்பதனை காரணம் காட்டி, ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து, இந்தியா செல்பவர்கள், இனி ரூபாயை எடுத்து செல்ல வேண்டாம் என, அந்நாட்டின் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக, வங்கிகளுக்கும், நாணய மாற்றம் செய்யும் நிறுவனங்களுக்கும் யு.ஏ.இ., ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. ரூபாய்க்கு பதிலாக, 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அல்லது 5,000 திர்காம் வரை எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு செல்பவர்கள், ரூபாயை எடுத்து சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, யு.ஏ.இ., ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தூதரகங்களுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

    நன்றி : மணிச்சுடர் 

    Tuesday 10 September 2013

    இஸ்லாமியா துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் 'திரு.ஜோசப் சார்த்தோ' காலமானார் !

    இஸ்லாமியா துவக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியின் தற்போதைய ஒருங்கிணைப்பாளருமான திரு.ஜோசப் சார்த்தோ அவர்கள் இன்று மதியம் 1.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


    அன்னாரின் நல்லடக்கம் சொந்த ஊரான, குளைச்சல் கடியாப்பட்டினம் கிராமத்தில் (நாகர் கோவிலில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில்) நாளை (11.09.2013) காலை நடை பெறுகிறது. ஆசிரியர் திரு.ஜோசப் சார்த்தோ அவர்களின் மறுமை வாழ்வுக்கும், அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கு, எல்லாம் வல்ல இறைவன் நற் பொறுமையை தரவும் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


    மேலும் விபரங்களுக்கு :

     திரு மலைச்சாமி (A.O) அவர்கள் - 94421 05703

    FACE BOOK COMMENTS :
    • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இந்தத் தருணத்தில் ஆசிரியர் திரு.ஜோசப் சார்த்தோ அவர்களின் பிரிவினால் வாடும் அவரது குடும்பத்தினர், இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினர், நண்பர்கள் ஆகியோருடன் கீழக்கரை புதிய ஒற்றுமையும் துயரத்தில் இணைகிறது. கண்ணீருடனும் ஆற்றொணாத் துயரத்துடனும் ஆசிரியர் திரு.ஜோசப் சார்த்தோ அவர்களை வழியனுப்பி வைக்கிறோம்.
        
    • Keelakarai Ali Batcha ஆன்மா சாந்தி அடைய்ட்டுமாக
        
    • Segudawood Sathik ஆசிரியர் சார்த்தோ அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்
    • Syed Abusalique Seeni Asana Cant Forget his voice.. when ever i visit complex his softness, caring and broad mind were unforgettable.. Sartho sir a great figure i really comes to knows this while me visiting gym, and when he stayed in hamna complex.. really missing a good one.. may the soul rest in peace.. (sartho sir in my marraige)

    Monday 9 September 2013

    கீழக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக் கடையை, உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் தொடர் முயற்சி !

    கீழக்கரையிலிருந்து,  இராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் (மின்சார வாரியம் அருகே) டாஸ்மாக் மது பானக் கடை (கடை எண் : 6983) கடந்த ஆண்டு ஆரம்பத்தில்  திடீரெனெ திறக்கப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்திருக்கும் அந்த பகுதியில், ஆம்னி, ஆட்டோ போன்ற வாகனங்களில்  பயணிக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பெரும் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    காலை நேரங்களில் மின்சார வாரிய அலுவலகத்திற்கு வரும் பொது மக்களும் 'குடி மகன்களால் என்ன நடக்குமோ..?' என கடும் பீதியில் உறைந்துள்ளனர். இந்த கடையில் போதையேற்றும் குடிமகன்களால், பல நேரங்கள் போக்குவரத்திற்கு இடையூறும், விபத்துக்களும் நடந்து வருகிறது.

    இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவுகளை காண கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.

    கீழக்கரையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் 'டாஸ்மாக்' மது பானக்கடை - விரைவில் அகற்றப்பட பொதுமக்கள் கோரிக்கை!


    கீழக்கரை நெடுஞ்சாலை ‘டாஸ்மாக்’ கடை வாசலில் விபத்து – ‘குடிமகன்’ போதையில் சாலையை கடந்ததால் விபரீதம் !


    கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை, விரைந்து அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு - கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் முயற்சி !




    இந்நிலையில் கீழக்கரை மக்களை நலப் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக, கடந்த 13.05.2013 அன்று, மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், இந்த டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக அகற்றக் கோரி மனு கொடுக்கப்பட்டது.
    அதன் பின்னர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த டாஸ்மாக் மது பானக் கடையை அகற்றுவது சம்பந்தமாக, இராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு கடை எண் : 6983 மாற்றுவது சம்பந்தமாக பெறப்பட்ட புகாருக்கு தக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு விட்டதாக பதில் தரப்பட்டுள்ளது.



    அதே வேளையில் உயர்நீதி மன்ற உத்தரவுப்படி, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றைய தேதி வரை, டாஸ்மாக் மது பானக் கடை எண் : 6983 ஐ, இழுத்து மூடுவது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

    இந்நிலையில் மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் சார்பாக, கீழக்கரை- இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில், கடந்த 26.08.2013 அன்று, மீண்டும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மேலும் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.


    FACE BOOK COMMENTS :
    • தங்கராசு நாகேந்திரன் ஆம் இதை முதலில் அகற்ற வேண்டும் நெடுஞ்சாலையில் இருப்பதால் மட்டும் அல்ல ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் மோர்க்குளம் பாளையம்பல் போகும் வழியில் இருப்பதால் அவர்கள் மனதை கெடுக்கும் இடத்தில் உள்ளது
    • Keelakarai Ali Batcha ஆகஸ்ட் 14,2013 வ்ரை இறுதி கெடு விதித்த உயர்நீதி மன்றத்தின் ஆணை என்னவாயிற்று? நடந்தது என்ன?
    • Keelai Ilayyavan https://www.facebook.com/photo.php...
      Photo
      தேசிய நெடுஞ்சாலைகளில் தொடரும் 'டாஸ்மாக்' - போதையில் தள்ளாடும் ஊடகங்கள் ! இடம் கீ...
    • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரை மக்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும், இந்த டாஸ்மாக்கை அகற்ற அயராது போராடி வரும் தம்பி கீழை இளையவனின் முயற்சிக்கு வல்ல நாயன் துணை நிற்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
    • Nizar Nizar தம்பி கீழை இளையவனின் முயற்ச்சிக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உண்டு.ஆட்சி,அதிகாரம் அவங்கபக்கம் இருந்தாலும் ஆண்டவன் நம்மபக்கம் இருக்கான்.துணிந்துநில் தொடர்ந்துசெல் தோல்விகிடையாது தம்பி...
    • Hussain Jahangeer தினமலத்தின் விளம்பரத்தில் இப்படியொரு டாஸ்மாக் கடையா?

    Sunday 8 September 2013

    தமிழக 'முதல்வரின் தனிப் பிரிவு இணைய தளம்' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் - இனி புகார்களை இருந்த இடத்தில் இருந்தே அனுப்பலாம் !

    முதல்வரின் தனிப் பிரிவிற்கு, பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க உதவியாக புதிய வலை தளத்தினை, மாண்பு மிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2102 ஆம் ஆண்டு துவக்கி வைத்து உள்ளார். இந்த இணையத்தின் வழியே மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இனி தாமதமின்றி, உடனுக்குடன் புகார்களை, முதல்வரின் தனி கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



                                    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    முதல்வரின் தனிப் பிரிவிற்கு நாள் தோறும் பொது மக்களிடமிருந்து நேரடியாகவும், தபால் வழி, மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மனுக்கள் பெறப்படுகின்றன. இம்மனுக்கள் தனிக் குறியீடுகள் மூலம் வகைப் படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கையால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

    முதல்வரின் தனிப்பிரிவின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் நோக்கில் முதல்வரின் தனிப்பிரிவிற்கு, http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

                                          முதல்வரின் தனிப் பிரிவு இணைய தள முகவரி :
     http://cmcell.tn.gov.in/

     புகார்களை அளிக்க :

    புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றிஅறிந்து கொள்ள:




    இணைய தள வசதி இல்லாதவர்கள், தபால் மூலமும் புகார்களை அனுப்பலாம்.

    Chief Minister's Special Cell ,
    Secretariat, Chennai - 600 009.
    Phone Number : 044 - 2567 1764
    Fax Number : 044 - 2567 6929
    E-Mail : cmcell@tn.gov.in

                                                                                 ஒப்புகைச் சீட்டு:

    இவ்வலைதளத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு, உடனே மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும். புதிய வலைதளம் மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம் மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அலுவலகத்திலுள்ள முதல்வர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் இந்த வலைதளத்தில் குறிப்பிடப்படும். இதன்மூலம் மனுதாரர் அந்த அலுவலரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.

    மேலும், இப்பிரிவில் பெறப்படும் மனுக்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் மனுதாரர்களுக்கு ஒப்புகை செய்தி அனுப்பும் முறையையும் முதல்வர் துவக்கி வைத்தார். அதேபோல், தபால் வழியாக அனுப்பும் மனுக்களில் மனுதாரர் கைபேசி எண்ணை குறிப்பிட்டிருந்தால், முதல்வரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண், தொடர்புடைய அலுவலகம் மற்றும் அலுவலர் ஆகிய விவரங்கள் முதல்வர் தனிப்பிரிவிலிருந்து குறுந்தகவல் மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


    எதை எதையோ சேர் பண்றீங்க... முதலில் இத பண்ணுங்க
    அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ...


    இனி புகார்கள் பறக்கட்டும்.. நாடு செழிக்கட்டும்.. நல்லாட்சி மலரட்டும்.. !


    FACE BOOK COMMENTS :
    • Sadiq MJ தம்பி உங்கள் பதிவில் ....

      "இனி புகார்கள் பறக்கட்டும்.. நாடு செழிக்கட்டும்.. நல்லாட்சி மலரட்டும்.. ! என்கிற வாசகம்" கண்டேன்......

      அவசியமான..... தக்க ஆதாரங்களுடன் நம்மால் நிரூபிக்க முடியும் என்கிற குற்றச்சாட்டுகளை மாண்புமிகு முதல்வருடைய கவனத்திற்கு கொண்டு செல்வதில் நமதூர் செய்திகளை அள்ளிவரும் பொதுமக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கக் கூடிய Keelakarai Times மற்றும் Keelai Ilayavan போன்ற வலை தளங்கள் மூலமாகக் கூட அனுப்பிக் கொடுக்கலாம்.

      நம்ம ஊர் நகராட்சியின் http://keelakaraitimes.blogspot.ae/.../blog-post_9949.html உட்கட்சி குழப்பத்தை முதலாவது பதிவாக எடுத்து வையுங்களேன்..... இதன் மூலம் என்ன தீர்வு காணுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம்..... அதோட தம்பி.....

      முன்னதாக நீங்க விட்ட கீழக்கரை நகர எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடை சம்பந்தமாக விட்ட சவாலை ஊரப்போடுவதற்க்காகத் தான் உங்களுக்கு விருதுலாம் கொடுத்தாங்க.... என்று பரவலாப் பேசப்படுது..... இதுவிசயமாகவும் கொஞ்சம் விளக்கம் அளித்தால்..... நன்றாக இருக்கும்......
    • Keelai Ilayyavan அன்பு சகோதரர் சாதிக் அவர்களுக்கு..

      கீழை இளையவன் வலைப் பதிவில் வெளியிடப்படும், கீழக்கரை நகர் நலன் தாங்கிய பதிவுகள் அனைத்தும் வெறுமெனே பதிவுகளோடும் , பகிர்வுகளோடும் நின்று விடுவதில்லை. மாறாக கீழக்கரையில் இயங்கி வரும் பல்வேறு பொதுநல அமைப்புகளின் மூலமாக, சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தரப்படுகிறது. புகார் மனுக்கள் அனுப்பப்படுகிறது. இதனால் பெரும்பாலான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வும் சிலவற்றிற்கு தற்காலிக தீர்வுகளும் கிடைத்து வருகிறது. அதோடு நில்லாமல் , தமிழக முதல்வரின் கவனத்திற்கும், புகார் மனுக்கள் பறந்து கொண்டு தானிருக்கிறது என்பதனை தங்கள் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

      ///..முன்னதாக நீங்க விட்ட கீழக்கரை நகர எல்லையில் இருக்கும் டாஸ்மாக் கடை சம்பந்தமாக விட்ட சவாலை ஊரப்போடுவதற்க்காகத் தான் உங்களுக்கு விருதுலாம் கொடுத்தாங்க.... என்று பரவலாப் பேசப்படுது..... இதுவிசயமாகவும் கொஞ்சம் விளக்கம் அளித்தால்..... நன்றாக இருக்கும்..///

      முதற்கண்.. விருதுகள் பெறுவதற்காக பொதுநலப் பணிகள் ஆற்றிட துணிய வில்லை. அதே நேரம், எங்களை ஊக்கப்படுத்தும் விதமாக வழங்கப்பட்ட விருதின் நோக்கத்தை கொச்சை படுத்தும் விதமாக அமைந்திருக்கும் உங்கள் கருத்தினை வன்மையாக கண்டிக்கிறேன். வெறுமெனே ஊகத்தின் அடிப்படையில், சிலர் பரவலாக சொல்கிறார்கள் என்பதற்காக, இங்கு என்ன நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை முழுமையாக விளங்காமல் இனி கருத்துப் பதிய வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

      கீழக்கரை - இராமநாதபுரம் டாஸ்மாக் நெடுஞ்சாலையில் சட்ட விரோதமாக இயங்கி வரும் மதுபானக் கடையை அகற்ற, கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் சார்பாக, தொடர்ந்து முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான பதிவினை வாசிக்க :

      கீழக்கரை நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக் கடையை, உடனடியாக அகற்ற மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் தொடர் முயற்சி ! http://keelaiilayyavan.blogspot.in/2013/09/blog-post_9.html
    • Sadiq MJ DEAR BROTHER, appreciate your time to time follow up with the concern department, hope your reply related to the TASMAK may read by the person who raise the Question in directly......
    • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரையில் செய்தி சேகரிப்பதை மட்டுமே தன் பிழைப்பாக, தொழிலாக கொண்டு திரியும் தினப் பத்திரிகைகளின் விளம்பர ஏஜெண்டுகள்.. அனைவரும் இது வரை இந்த டாஸ்மாக் கடை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிட விரும்ப வில்லை. இது பற்றி செய்தி வெளியிடாத 'துப்பு கெட்ட' ஊடகங்கள் குறித்து தம்பி சாதிக் என்ன சொல்லப் போகிறார்? இந்த டாஸ்மாக் பற்றி செய்தி வெளியிடாமல் இருக்க கீழக்கரை அ. தி .மு. க நகர செயலாளர். ராஜெந்திரநிடமிருந்து எத்தனை ஆயிரங்களை, இந்த பெரும் குடி மகன்கள் கறந்தார்கள் என்பது வல்ல இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

      கீழக்கரை மக்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும், இந்த டாஸ்மாக்கை அகற்ற அயராது போராடி வரும் தம்பி கீழை இளையவனின் முயற்சிக்கு வல்ல நாயன் துணை நிற்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்.
    • Sadiq MJ நம் ஊர் செய்திகளாகட்டும் / அரசு ஆணைகளாகட்டும் அந்த புதிய ஆணைகளுக்கு ஏற்ப யாரை எப்படித் தொடர்பு கொள்வது போன்ற முக்கியச் செய்திகளை தனது வலை தளத்தின் மூலம் எளிய நடையில் நமக்கு அறியத்தரும் தம்பி சாலிஹின் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிவேன், அவரது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். In fact,

      தம்பி சாலிஹ்-ற்கு விருது கிடைத்த செய்தியை வலைதளத்தில் கண்டு வாழ்த்துக்கூறிய முதலாமவனும் (If I'm not mistake) நானே என்று சொல்லிக்கொள்கிறேன்!

      நம்ம ஊர் பாமரர் (கள் ) தம்பியின் செயல்பாடுகள் குறித்து, தம்பி மூலமாகவே அறிந்து கொள்ளட்டும் என்பதற்காக எழுதப்பட்டதுதான் நேற்றைய என்னோட கருத்து (Hope Bro. Salih understand, what I stated ....)

      தம்பியின் (இளையவனின்) இன்றைய இன்றைய பதிவும் இணைப்புத் தகவலும் மேற்கூறிய நம்ம ஊர் பாமரர் (கள்) வாசித்து அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
    • Sadiq MJ கீழக்கரை 'புதிய ஒற்றுமை' >>> கீழக்கரையில் செய்தி சேகரிப்பதை மட்டுமே தன் பிழைப்பாக, தொழிலாக கொண்டு திரியும் தினப் பத்திரிகைகளின் விளம்பர ஏஜெண்டுகள்.. அனைவரும் இது வரை இந்த டாஸ்மாக் கடை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியிட விரும்ப வில்லை. இது பற்றி செய்தி வெளியிடாத 'துப்பு கெட்ட' ஊடகங்கள் குறித்து தம்பி சாதிக் சொல்வதற்கு என்ன இருக்கிறது நீங்களே சொல்லிட்டீங்க இந்த டாஸ்மாக் பற்றி செய்தி வெளியிடாமல் இருக்க கீழக்கரை அ. தி .மு. க நகர செயலாளர். ராஜெந்திரநிடமிருந்து எத்தனை ஆயிரங்களை, இந்த பெரும் குடி மகன்கள் கறந்தார்கள் என்பது வல்ல இறைவனுக்கு மட்டுமே வெளிச்சம் என்று முயற்சி பண்ணுவோம் புல்லுருவிகளின் முகங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர..... ஆமாம் இந்த Profile கீழக்கரை 'புதிய ஒற்றுமை' என்பது பொது வலைதளமா? இல்லே தனி நபருடையதா கா க் கா ?
        
    • Keelai Ilayyavan Dear kaka, Thanks for ur comment & support
    • Hussain Jahangeer தினமலத்தின் விளம்பரத்தில் இப்படியொரு டாஸ்மாக் கடையா?