தேடல் தொடங்கியதே..

Saturday 6 April 2013

கீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு A1B' positive இரத்தம் தேவை - உடனடியாக உதவ வேண்டுகோள் !


கீழக்கரை O.J.M தெருவைச் சேர்ந்த, ஹாஜர் சுல்தான் பீவி என்கிற பெண்மணி, கருப்பை அறுவை சிகிச்சைக்காக,  இராமநாதபுரம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். இவருக்கு  A1B' positive இரத்த வகை, (மூன்று  யூனிட்கள்) அவசரமாக தேவைப்படுகிறது. இந்த வகை இரத்தம் அரிதாகவே கிடைப்பதால், இந்த தகவல் கிடைக்கப் பெறும் அன்பு நண்பர்கள் அனைவரும், ஏனைய நம் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். 
மேலும் இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் பெயரை கீழ் காணும் அலைப்பேசி எண்ணில் உடனடியாக தெரிவிக்குமாறும், கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு :           பவுசுல் அமீன்    : 9791549222

 "இரத்த தானம் செய்வோம்..  மனித உயிர் காப்போம்.

Friday 5 April 2013

கீழக்கரையில் 'தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்' - மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர் விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியீடு !

கீழக்கரை அரசு மருத்துவமையில் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கழகத்தின் தலைவர். A.M.S. தமீமுதீன் அவர்கள் கூறும் போது "இது வரை நம் கீழக்கரை நகரவாசிகள்  அரசின் மருத்துவ காப்பீட்டு பயன்களை பெற இராமநாதபுரம் அரசு மருத்துவமனையை நாடியே செல்ல வேண்டி இருந்தது. இப்போது கடந்த பிப்ரவரி மாதம் முதல் நம் கீழக்கரை அரசு மருத்துவ மனையிலேயே நல்ல முறையில் செயல் பட்டு வருகிறது.

CT ஸ்கேன், MRI ஸ்கேன் கூட, இங்கிருந்து பரிந்துரைக்கப்பட்டு இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைகளில் எடுக்கப்படுகிறது. இதற்கான முழு செலவையும் அரசே ஏற்கிறது. ஆகவே மருத்துவம் தேவைப்படும் அனைவரும் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.