தேடல் தொடங்கியதே..

Saturday 24 August 2013

சென்னை புதுக்கல்லூரியின் 60 வது ஆண்டு 'வைர விழா' அறிவிப்பு - முன்னாள் மாணவர்கள் பங்களிக்க வேண்டுகோள் !

சென்னை புதுக்கல்லூரி ( The New College ) 1951 ல் நிறுவப்பட்டது. இதன் வைர விழா ( DIAMOND JUBILEE ) இந்த வருடம் 2013 -ல், எதிர் வரும் செப்டம்பர் மாத இறுதியில் நடக்க உள்ளதால் புதுக்கல்லூரியில் பயின்ற அனைத்து முன்னாள் மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைர விழாவை சிறப்பிக்கும்படி கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இங்கு கீழக்கரையை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாவணவர்கள், படித்து பட்டங்கள் பெற்று, உயர் பதவிகளில் உலகெங்கும் வியாபித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



சென்னைப் புதுக் கல்லூரியின் சிறப்பம்சங்கள் குறித்து இன்று ஒரு தகவல் வலை தளத்தில்  வெளியிடப்பட்டிருக்கும் பதிவினை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும் .


சென்னை புதுக்கல்லூரியை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, இந்த வைர விழாவில் பல நலத் திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகவே முன்னாள் மாணவர்கள், நண்பர்கள் அனைவரும், தாங்களது நன்கொடையை தாராளமாக வாரி வழங்கிடும்படி, முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை சார்பாகவும், புதுக் கல்லூரி நிர்வாகம் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


வங்கி விபரம் :

NEW COLLEGE DIAMOND JUBILEE
INDIAN OVER SEAS BANK A/C. 033402000059068
IFSC CODE: IOBA 0000334. PETERS ROAD BRANCH,

குறிப்பு :

முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கும் இந்நிகழ்ச்சியின் தேதி மற்றும் இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படிக்கு,
முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை


                                                    தகவல் மற்றும் தொடர்புக்கு :

Mr. A. Fiaz Ahamed, Associate Professor of Mathematics, The New College, Chennai – 14
Mobile: 94441 92928

Mr. Kamal Nasir, V Associate Professor of Mathematics, The New College, Chennai – 14
Mobile: 99400 87771

                                                        தகவல் : அதிரை செய்திகள்  

FACE BOOK COMMENTS : 
  
கீழக்கரை அந்நியன், Fouz Ameen, Tam Ahamed and 27 others like this.

Friday 23 August 2013

கீழக்கரையின் பழமைகள் பேசும் தெருக்களின் வரிசை - 'கோக்கா அஹ்மது தெரு' சரித்திர பக்கம் (பகுதி -1)

கீழக்கரை நகரத்தின் நூற்றாண்டுகளைக் கடந்த பழம் பாரம்பரியத்தை பறை சாற்றும் முகமாக இபுனு பதூதா, மார்க்கோ போலோ, யுவன் சுவாங் போன்ற வெளிநாட்டு பயணிகள், கீழக்கரை பகுதியை குறித்து தங்கள் வரலாற்றுக் குறிப்பில் கூறியிருகிறார்கள். கீழக்கரையின் தனித்துவமிக்க பாரம்பரியத்தில் வந்த வழித்தோன்றலில் வந்த நம் முன்னோர்கள் கடலும் கடல் சார்ந்த வணிகர்களாகவும், திரை கடல் ஓடியும், திரவியம் தேடியும் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்கள்.


அந்த அற்புதக் கிளைகளில் தோன்றிய  தெருக்களில் ஒன்றான 'கோக்கா அஹ்மது தெரு' இன்றும் பழமை சான்றுகளை தன்னகத்தே கொண்டு நிலை பெற்றிருகிறது. நம் முன்னோர்கள் பல நூற்றண்டுகளுக்கு முன் பாய் மரக்கப்பலில் வணிகர்களாக பர்மா, ரங்கூன், மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா போன்ற பல நாடுகளுக்கு வணிகர்களாகவும், தண்டையார் கப்பலோட்டி ஆகவும் சென்று வந்திருகிறார்கள். அந்த பாய் மரக் கப்பல்களை அலை கடலில் செலுத்தியவர்களுள் முதன்மையானவர்களாக கோக்கா அஹமது தெரு வாசிகள் இருந்திருக்கின்றனர். 



கீழக்கரை நகரில் வாழ்ந்த முன்னோர்கள் அனைவரும் அன்பின் உருவகமாகவும், பங்காளிகளாகவும் வாழ்ந்து வந்துள்ளனர். குறிப்பாக பிரபுக்கள் தெருவார்களும், கோக்கா அகமது தெருவாசிகளும் அனைத்து காரியங்களிலும் ஒன்றிணைந்தே செயல்பட்டு வந்துள்ளனர். உதாரணமாக அஹமது தெரு வாசிகள் பச்சை கப்பல் என்றும் பிரபுக்கள் தெருவுக்கு வெள்ளை கப்பல் என்றும் கடலில் தங்கள் கப்பலை செலுத்தி வந்துள்ளனர். 



கோக்கா அஹமது தெருவின் பெயர் காரணம் குறித்து சரித்திரங்களை புரட்டும் போது நம் முன்னோர்கள் வியாபாரி கடல் கடந்து பாய் மரக்கப்பலில் சென்று அடிக்கடி ரஷ்யா நாட்டில் உள்ள கோக்கா மார்கெட்டிற்கு சென்று வருவது வழக்கம். அந்த மார்கெட்டின் பெயரை வைத்து கோக்கா அஹ்மது தெரு என தங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வைத்தார்கள் என கூறப்படுகிறது. 


இந்த பகுதியில் சரித்திர நிகழ்வுகளில் ஆர்வம் கொண்ட நெய்னா முஹம்மது அவர்கள் முஹைதீன் தைக்கா வரலாறு குறித்து நம்மிடையே பேசும் போது "கோக்கா அஹமது தெருவில் முஹைதீன் ஆண்டவர் கொடி மரம் என்கிற பெயரில் பிரமாண்ட உருவில், கிழக்கு தெருவிற்கு தெரியும் அளவிற்கு உயரமாக, தேக்கு மரத்தாலான கம்பம் ஒன்று அமைந்திருந்தது. அந்த மரத்தை வைத்து தான் இன்றைய அஹமது தெரு முஹைதீன் தைக்கா 1932 ஆம் ஆண்டில்  கட்டப்பட்டது. அந்த மரத்தின் பலகையில் தான் கதவுகளும் ஜன்னல்களும் கட்டப்பட்டது என்று அறியபடுகிறது." என்கிற வரலாற்றுத் தகவலை தெரிவித்தார். 
 சரித்திர சேகரிப்பில் உதவி : 'A.S.டிரேடர்ஸ்' கஃபார் கான்

                                           பொறுத்திருங்கள்... பழமைகள் பேசுவோம்..!

கீழக்கரையில் தொடர்ந்து 4 வது நாளாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) பண பரிவர்த்தனைகள் பாதிப்பு - வாடிக்கையாளர்கள் கடும் அவதி !

பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.,) முக்கிய இடம் வகிக்கிறது. இந்த வங்கி நாடு முழுவதும் மூவாயிரம் கிளைகளை கொண்டுள்ளது. இதன் தலைமை அலுவலகம் சென்னை அண்ணா சாலையில் உள்ளது. தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த வங்கியில் கடந்த மூன்று நாள்களாக வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 



மைய வங்கி கோர் பேங்கிங் கணினி இணைப்பில் (சர்வர்) ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பணப்பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், பணம் செலுத்துதல் போன்ற அன்றாட வங்கிச் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கோளாறால் நாடு முழுவதும் ஐ.ஓ.பி.,யின் வங்கி நடவடிக்கைகள் முடங்கின. இந்நிலையில் கீழக்கரை ஐ.ஓ.பி., கிளையிலும் அனைத்து பண பரிமாற்றங்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் பத்திப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று (23.08.2013) 4-வது நாளாக இந்தச் சிக்கல் நீடித்து வருகிறது. வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்கள் பணபரிமாற்றம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறார்கள். இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட பெரும் வங்கி ஒன்றில் இத்தகைய கோளாறுகள் ஏற்படுவது இந்தியாவின் தொழிற்நுட்பியல் வலிமையை கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆக்குவதாக வங்கி வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து ஐ.ஓ.பி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர், புதுக் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பவுசுல் அமீன் அவர்கள் கூறும் போது " கீழக்கரையில் ஏற்கனவே ஐ.ஓ.பி., கிளை போஸ்ட் ஆபீஸ் அருகில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். 

தற்போது இது மலேரியா மையம் எதிரே உள்ள தனியார் கட்டிடத்தின் முதல் மாடியில் இயங்கி வருகிறது. இந்த வங்கியின் ஊழியர்களும் எப்போதும் மந்த கதியிலேயே பணியாற்றுவது வழக்கம். இந்நிலையில், பண பரிவர்த்தனைகளும் பாதிக்கப் பட்டுள்ளதால், கடந்த நான்கு நாள்களாக அலைக் கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம். 

இன்றாவது இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா.? என்று தெரியவில்லை. விரைவில் இந்த பிரச்சனயை சீர் செய்ய வங்கி உயர் அதிகாரிகள் முன் வர வேண்டும்" என்று தெரிவித்தார். 

Wednesday 21 August 2013

கீழக்கரை அருகே உடைக்கப்பட்ட காவிரி குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டதாக அதிகாரிகள் 'பொய் தகவல்' - மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் கடும் கண்டனம் !

இராமநாதபுரம் மாவட்டத்தில் 616 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி குடிநீர் திட்டத்தின் கீழ் கீழக்கரைக்கு  ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால் கீழக்கரை வண்ணாந்துறை வளைவு (அகஸ்தியர் கோயில்), பாலையாறு பகுதி, திருப்புல்லாணி சாலை உள்ளிட்ட பல இடங்களில் குழாய்களில் கசிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சமூக விரோதிகளால் குழாய்கள் உடைக்கப்பட்டு காவிரிக் குடி நீர் வீணாகி வருகிறது. 




இந்த வீணாகும் குடிநீரை அந்தப் பகுதி பொதுமக்கள் குளிப்பதற்கும், துணி துவைக்கவும், வாகனங்கள் சுத்தம் செய்யவும் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த தண்ணீரை கிராம மக்கள் குளிக்கவும், ஆடு, மாடுகளை குளிப்பாட்டவும் பயன்படுத்துகின்றனர். இதனால் கீழக்கரைக்கு வந்து சேர வேண்டிய குடிநீர் தடை பட்டு உள்ளது. ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடும் கீழக்கரையில்  லாரியில் கொண்டு வரப்படும் தண்ணீரையும், மாட்டு வண்டி தண்ணீரையும் ஒரு குடம் 5 ரூபாய்க்கும், சில இடங்களில் 10 ரூபாய்க்கும் வாங்கும் அவல நிலை தொடர் கதையாகி வருகிறது.



இந்நிலையில் கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தினர் சம்பந்தபட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கடந்த 08.07.2103 அன்று இந்த பிரச்னையை கொண்டு சென்றனர். அதற்கு கீழக்கரை - இராமநாதபுரம் 'டாஸ்மாக்' சாலையில் உடைக்கப்பட்ட காவிரிக் குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டதாக, கடந்த 18.07.2013 அன்று தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர், கோரிக்கை விடுத்திருந்த மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தினருக்கு பதிலறிக்கை கடிதம் அனுப்பியிருந்தனர். ஆனால் இன்று வரை இந்த பிரச்சனை சீர் செய்யப்படாததால், 'பொய் தகவல்' தந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 



இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.

கீழக்கரையில் உடைக்கப்பட்ட காவிரிக் குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டதாக, 'குடிநீர் வடிகால் வாரியம்' தகவல் - 'மக்கள் நலப் பாதுகாப்புக் கழக' த்தினரின் மனுவின் பேரில் நடவடிக்கை ! 

                                   http://keelaiilayyavan.blogspot.in/2013/07/blog-post_28.html

கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் காவிரி குடி நீர் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் - சமூக ஆர்வலர்கள் கவலை ! 

                                 http://keelaiilayyavan.blogspot.in/2012/08/blog-post_5.html

இது குறித்து மக்கள் நல பாதுகாப்புக் கழக செயலாளர் M.U.V.முகைதீன் இபுராகிம் அவர்கள் கூறுகையில், கீழக்கரை நகரில் கடந்த பல மாதங்களாக காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் மிக மிக குறைந்த அளவு மட்டுமே செய்யபட்டு வருகிறது. 
 
கீழக்கரை இராமநாதபுரம் சாலையில், பல இடங்களில் சமூக விரோதிகளால், வேண்டுமென்றே  குடி நீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.  

இது குறித்து பலமுறை குடிநீர் வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களும் பதிலுக்கு பொய் தகவல்களை மட்டுமே தருகின்றனர்.

அவர்கள் களப்பணிகள் செய்ய விரும்பவில்லை. சொகுசாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே பதில் கடிதம் மட்டுமே  தருகின்றனர்.  நாங்கள் நேரடி ஆய்வு செய்ததில் வீணாகும் குடிநீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம், பொய் தகவல் தந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறத்தி மனு அளிக்க உள்ளோம்." என்று மிகுந்த வருத்தத்தை மறைத்துக் கொண்டு புன்னகைத்தவாறு பேசி முடித்தார்.

FACE BOOK COMMENTS :
  • சின்னக்கடை நண்பர்கள் Thanks for ur follow up keelai ilayavan machaaan. what next? செத்தாண்டா சேகரு.. !!
  • Sadiq MJ தம்பி.... இது சம்பந்தமாக உங்களுடைய முந்தைய பதிவில் "பழுதான குடிநீர்க்குழாய்களை சரிசெய்து விட்டோம்னு" குடிநீர் வாரியம் உங்க இயக்கத்துக்க்குத் தந்த லெட்டெர்-ஐ Facebook-ல update பண்ணியிருந்தீர்கள் அத்துடன் நீர் வழிதோடும் பழைய போட்டோவை attach பண்ணியிருந்தீர்கள். புது போட்டோவை attach பண்ணியிருக்கலாமே தம்பி என்று கேட்டபோது, நானும் (சாலிஹ்) யோசித்தேன் காக்கா, எனினும் நேரம் கிடைக்கலே ஒரு வேளை குடிநீர் வாரியம் புருடா விட்டிருந்தா அவங்களுக்கு நாங்க சங்கு ஊதுவது நிச்சயம் என்றீர்கள். வாங்கிட்டீங்களா சங்கு.... சங்கு.... சங்கு? ஊதிட்டீன்களா? Enthusiastically we are awaiting to see / hear the updates......
  • Sadiq MJ Shame.... Shame puppy Shame (picture)
  • Sadiq MJ தம்பி be serious.... instead by clicking LIKE button....
  • Keelai Ilayyavan அன்பு காக்கா... சங்கு ஊதும் சடங்குகள் (சட்ட ரீதியான வழி முறைகள்) மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம் சார்பாக துவங்கப்பட்டு விட்டது. விரைவில் அதற்கான பதிவையும், தாங்கள் கண் குளிரக் காணலாம்
  • Keelai Ilayyavan தாங்கள் கருத்துப் பதிவிடும் உண்மைகளுக்கு 'மறுப்பேதும் இல்லை' என்பதற்குத் தான் LIKE
  • Sadiq MJ Let us see .... முயற்சிக்கு வல்ல நாயன் அருள் புரிவானாக.... இதுவும் ஒருவகை சதக்கத்துன் ஜாரியா....
  • Sadiq MJ FB-ல அட்டு punch (பஞ்ச்சரான) டையலாக்களைப் படிச்சிட்டு சின்ன ஒரு LIKE-அ click பண்ணுவோமே.... என்ன நஷ்டம் என நினைப்போர் அதிகம்......
  • Keelai Ilayyavan இன்ஷா அல்லாஹ்.. நம்மால் இயன்றதை செய்து கொண்டே இருப்போம். நம் கீழக்கரை மக்களுக்கு ஒரு நல்ல விடியலை நோக்கி.. நல்ல விடிவு காலத்தை நோக்கி.. தொடர்ந்து உங்கள் கருத்துகளை பதிந்து, ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்குங்கள்.
  • Sadiq MJ இன்ஷா அல்லாஹ்..
  • Sadiq MJ சமீப காலமாக நமது கீழக்கரை நகராட்சி நிர்வாக செயல்பாடுகள் / சீர்கேடுகள் பற்றி நமதூர் செய்திகளை அவ்வப்போது அறியத்தரும் Keelakkarai Times மற்றும் Keelai Ilayyavan வலை தளங்களில் காணவில்லையே? வாய்பூட்டு போட்டுட்டாங்களோ?
  • Keelai Ilayyavan As per ur kind advice 'be serious.... instead by clicking LIKE button....' காக்கா.. இது மட்டும் UNLIKE..
  • Sadiq MJ Means my assumption (வாய்பூட்டு) is absolutely correct!!! அப்படித்தானே?
  • Keelai Ilayyavan உண்மை தான் காக்கா.. ஆரம்பம் முதல் வாய் பூட்டு போட்டு கொண்டே தான்.. பொது நல பணிகளில் களம் கண்டிருக்கிறோம். ஆனால் எங்களின் எழுது கோல் தாங்கும் விரல்களுக்கு யாரும் பூட்டுப் போட்டிட முடியாது என்பதை தங்கள் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். தொடர்ந்து வாருங்கள்.... நகராட்சி பற்றியும் பேசுவோம்.. நரகாட்சி பற்றியும் விமர்சிப்போம்...
  • Keelai Ilayyavan சிறகு முளைத்த விரல்களாய் எழுது கோல் தாங்கி