தேடல் தொடங்கியதே..

Tuesday, 15 October 2013

இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.!

தியாகத் திருநாளை, மகிழ்வுடன் வரவேற்கும் இந்த நன்னாளிலே, வெளிநாடு வாழ் கீழக்கரை நண்பர்களுக்கும், இணையதள வாசகர்களுக்கும், உள்ளூர் உறவினர்களுக்கும், கடல் கடந்து வாழும் சொந்தங்களுக்கும், அன்பின் தோழர்கள் அனைவருக்கும் கீழை இளையவன் வலை தளம்  சார்பில் 'ஈதுல் அல்ஹா' இனிய ஹஜ் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் அனைவருக்கும் பூரணமான ஹஜ்ஜாக இறைவன் ஆக்கவும், ஏனையவர்களுக்கு வரும் வருடங்களில் ஹஜ் கடமையை செய்யும் பெரும் பாக்கியத்தை தரவும் இந்த நன்னாளில் இறைவனிடம் கையேந்துவோம்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தின் மகிழ்ச்சி தருணங்களை கவிஞர். நசீர் சுல்தான் அவர்கள் தன் கவிதை வரிகளால் ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் கனிவுடன் தருகிறார். 

கவிஞர். நசீர் சுல்தான்
EID DAY

From dawn to dusk 
Heart full of bliss

The day starts, 
Leaves showering with dew 
When walking, 
The winds allure the stance

Even the summer grow to be spring 
Sun blink on trees with glow  
Gladness boogie on every face

Fragrance spill out the streets
The day joints the acquaintance 
It could eradicate the disparity among relatives 
Taste buds are guest 

Enjoy the feast with lot of dish 
The day for eat Nothing to left gulp 

Worn dress glittering with shines
Our eyes full of ice 
Feeling of nice 
Evening is glittering 
With joy of crowd

The terrain turns into bride  
By adore of light 
Soul on delight 
Day full of  befit.

விடியல் முதல் இருள் வரை 
இதயம் முழுதும் இன்பம்...

நாள் தொடங்கும்போது 
இலைகள் பனிதுளியால் 
இதயம் நனைக்கிறது...

கடக்கும் போது 
காற்று நிலையை பரவசப்படுத்துகிறது...
கோடையும் குளிராகும் 
சூரியனின் கண்சிமிட்டல் மரங்களின் மேல்...

முகமெங்கும் சந்தோசம் வியாபித்திருக்கிறது 
நறுமணம் தெருவை நிறைக்கிறது
நாள் உறவை கூட்டுகிறது 
சுற்றத்தில் பேதம் களைகிறது...

நாவின் மொட்டுகளே விருந்தாளி 
அன்று அத்தனை உணவும் விருந்து 
உண்ணாமல் அருந்தாமல் ஏதுமில்லை...

ஆடைகள் மிளிர்கிறது 
கண்கள் முழுதும் குளிர்ச்சி 
நினைவெங்கும் மகிழ்ச்சி..

மாலை ஒளிர்கிறது
மக்களின் மகிழ்ச்சியில் 
இடம்தோறும் ஒளிர்கிறது
விளக்கினால்..

புது மணப்பெண் போல்  
மனமெங்கும் உல்லாசம் 
இவ்வினிய 
நாட்களுக்கு ஏதுவாய்...

No comments:

Post a Comment