தேடல் தொடங்கியதே..

Saturday 7 September 2013

கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி !

கீழக்கரை  ஹமீதியா தொடக்கப் பள்ளியில் 05.09.2013 அன்று ஆசிரியர் தின விழா சிறப்பாக நடை பெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு ஹமீதியா பெண்கள் மேனிலைப் பள்ளி தாளாளர் ஜனாப். M.S. எஹியா அவர்கள் தலைமை ஏற்று இருந்தார். சிறப்பு விருந்தினராக ஹமீதியா பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி ஞான கலாவதி அவர்கள் கலந்து கொண்டார். பள்ளியின் ஆசிரியை திருமதி S. செய்யது ராவியத்துல் அதபியா வரவேற்புரை நிகழ்த்தினார்.




ஆசிரியர் திரு G. ராஜ் பரணீதரன் சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தலைமை ஆசிரியை வாழ்த்துரை வழங்கினார். துரோணாச்சாரியார் விருது பெற்ற பள்ளியின்  தலைமை ஆசிரியை ஜனாபா. ஹமீது நிஷா அவர்களுக்கு, பள்ளியின் ஆசிரியர்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகளை  தெரிவித்தனர்.



இந்த நிகழ்ச்சியின் போது மாணவர்கள் பேச்சுப் போட்டி, கவிதை, மாறுவேட போட்டிகள் என்று தங்கள் பான் முக திறமைகளை வெளிப்படுத்தியதோடு, ஆசிரிய பெருந்தகைகளை பெருமைப் படுத்தினர். போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. தலைவர் அவர்களால் இம்மாத STAR OF THE MONTH சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.  பள்ளியின் ஆசிரியை திருமதி N.A. அஸ்வத் ஹலிமா நன்றியுரை கூறினார். இந்த நிகழ்ச்சியில் சங்க மேலாளர் மற்றும் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Thursday 5 September 2013

கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது - வாழ்த்து சொல்லலாம் வாங்க !

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துதல், பள்ளின் வளர்ச்சியில் பங்கு, சமூக பொறுப்பு, கல்வி போதிப்பதில் அர்ப்பணிப்பு உள்ளிட்ட பணிக்காக ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சார்பாக, நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 


அந்த அறிவிப்பின் படி, கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமையப் பெற்றுள்ள சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜனாபா. A .ராபியா பேகம் M.A., M.ED., அவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது. இந்த செய்தியினை அறிந்த கீழக்கரைவாசிகள், பள்ளி நிர்வாகத்தினர், இந்நாள், முன்னாள் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியப் பெருந்தகைகள், விருது பெற்ற தலைமை ஆசிரியை அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 



இது குறித்து வாழ்த்து செய்தி வெளியிட்டிருக்கும் சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஹாஜியானி. ஜனாபா. K.M.V.ஆபிதா பேகம் (கீழக்கரை நகராட்சி சேர்மன் வேட்பாளர் ) அவர்கள் நம்மிடையே பேசும் போது

"எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே உரித்தாகட்டும். இந்த வருடத்திற்கான நல்லாசிரியர் விருது ஜனாபா. A .ராபியா பேகம் அவர்களுக்கு கிடைக்கப் பெற்றதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

உண்மையாகவே, விருது பெற தகுந்த ஒரு முனைப்பான ஆசிரியைக்குத் தான் இந்த விருது கிடைத்திருக்கிறது. மாணவ மணிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் அருமையான பாங்கு, சிறப்பான நிர்வாகத் திறமை, சக ஆசிரியப் பெருந்தகைகளை ஊக்குவிக்கும் விதம், இரக்க சிந்தனையுடன் கூடிய உதவி மனப்பான்மை, 

அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் விதம் என்று அனைத்திலும் மிகச் சிறப்பாக, பல்லாண்டு காலமாக கல்வி சேவையாற்றிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு, இறைவன் அருளால், இன்னும் பல விருதுகள் கிடைக்க, இறைவனை வேண்டுகிறேன்" என்று மனதார தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

கீழக்கரை நகரில், பல ஆசிரியப் பெருந்தகைகள், இந்த விருதுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இவர்களுக்கு மட்டும் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விருதினை ஆசிரியர் தின விழாவான இன்று (5–ந்தேதி)  சென்னையில் பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் வழங்குகிறார். 

இவ்விழாவில் 370 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும்,  தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

FACE BOOK COMMENTS :
  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' மாஷா அல்லாஹ்... வாழ்த்துகள் சகோதரியே. இந்த பெருமை கீழக்கரையில் பல்லாயிரம் மாணாக்கர்களை பயிற்ருவித்த பழம் பெரும் பள்ளியான சதக்கத்துன் ஜாரியா பள்ளிக்கு மட்டுமல்ல. நம் ஊருக்கும் இது பெருமை தான். எல்லாம் வல்ல வல்லோன் அல்லாஹ் நல் அருள் பாலிப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பில்
  • Ham Nageem முதற்கனமாக எனது மனமார்ந்த வாழ்துக்களை கீழை இளையவன் மூலமாக பகிர்ந்து கொள்கிறேன், இதுபோன்று எனதூர் அனைத்துப்பள்ளி நல்லாசிரியர் விருது பெறவேண்டும் மனமாற வாழ்துகிறேன்
  • Fouz Ameen நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியைக்கு, மனமார்ந்த வாழ்த்துக்கள்
  • Mohamed Ibrahim கும்பிடு மதுரை ஊ.ஒ.தொடக்கப்பள்ளியின்சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவண் அப்பள்ளி தலைமையாசியர்

Wednesday 4 September 2013

கீழக்கரை நகராட்சி பொது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்காக, ஆதார் அடையாள அட்டைக்கு தகவல் சேகரிக்கும் பணி, தற்போது கீழக்கரை நகராட்சியில் அனைத்து வேலை நாள்களிலும் நடை பெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து, தங்கள் தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் விடுபட்டவர்கள் விபரங்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிப்பவர்கள், பதிவு செய்யலாம். அதற்கான இலவச விண்ணப்பங்களை பெற்று, தகவல்களை பூர்த்தி செய்து  அளிக்க வேண்டும். 



இதற்கென தனித்தாளில் ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது. இதனை பத்திரமாக வைத்திருந்து, எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடை பெற இருக்கும் ஆதார் அட்டைக்கான கை ரேகைகள் மற்றும் விழித்திரை பதிவு செய்வதற்கான முகாமில் வழங்க வேண்டும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிய வருபவர்கள், மறக்காமல் தங்கள் புகை படங்களை கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கீழக்கரையில் அழகிய தேக்கு மர வேலைப் பாடுகளுடன் அற்புதமாய் காட்சி தரும் 'அம்பலார் வீடுகள்' ! (பகுதி - 3)

கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெரு அருகே உள்ள தச்சர் தெருவில், நூற்றாண்டை கடந்தும் கம்பீரமான தோற்றத்தில் காட்சி தரும் இந்த அம்பலார் வீட்டின் இரண்டு மேல் மாடிகளிலும் தேக்கு மரத்தில், அங்குலம் அங்குலமாக செதுக்கப்பட்டிருக்கும் பூ வேலைப்பாடுகள் காணப்படுகிறது. மிகுந்த காற்றோட்டமாக இருக்கும் வகையில் சன்னல்கள் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தளத்தின் மேற் கூரை கொழுக்கி ஓடுகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பதால், கோடை காலத்திலும் குளுமையாக இருக்கிறது. 







அம்பலார் வீடுகள் குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவுகளை காண கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 

பகுதி 1

பகுதி 2



                   பொறுத்திருங்கள்.... பழமைகள் பேசுவோம்    தொடரும் >>>>>>

FACE BOOK COMMENTS :
  • Nazir Sultan I astonished the harmonization of two minds thinking the subject and exploit of same in their life to propagate the ancestry and uniqueness of our own terrain, yes I the one and you thambi. I dreamt a decade before come to true by you, continuously y doing the marvelous work. Keep it up
  • Keelai Ilayyavan Thanks for ur wishes & encouragement kaka

இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவ காப்பீட்டு 'புதிய அடையாள அட்டை' வழங்கும் பணி தினமும் நடை பெறுகிறது - விண்ணப்பித்து உடனடியாக பெறலாம் !

தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். ஒரு சில மருத்துவத்திற்கு ரூ.1.5 லட்சம் வரையிலும் சிகிச்சை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 1,016 நோய் சிகிச்சைகளும், 23 வகையான நோய் பரிசோதனைகளும், அதனோடு தொடர்புடைய 113 தொடர் சோதனைகளும் செய்யப்படுகின்றன. 



இதற்காக மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் பலர் அடையாள அட்டை எடுக்காமல், கடைசி நேரத்தில் பெரும் அல்லல்பட்டு வருகின்றனர். இதனை களையும் நோக்கோடு, இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கும் பணி தினமும் நடைபெற்று வருகிறது.



கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, இங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு அங்கு அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டு பின்னர் அங்கிருந்து பெறப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதில் ஏற்படும் காலதாமத்தை தவிர்க்க முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தில் அச்சிடும் பணி துவக்கப்பட்டுள்ளதால் புகைப்படம் எடுத்து சில மணி நேரத்திற்குள்ளாகவே அடையாள அட்டை அச்சிட்டு வழங்கப்படுகிறது.


இது குறித்து மாவட்ட கியாஸ்க் அதிகாரி திரு.நாக குமார் அவர்கள் கூறும் போது  "இராமநாதபுரம் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் உள்ள தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலக அறை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு அடையாள அட்டை அச்சிடுவதற்காக புதிதாக நவீன இயந்திரம் அமைக்கப்பட்டு புதிய அடையாள அட்டை அச்சிட்டு வழங்கும் பணிதுரிதமாக நடை பெற்று வருகிறது. அடையாள அட்டை இல்லாதவர்கள், இங்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து உடனடியாக பெற்று செல்லலாம். 

விண்ணப்பிக்க வரும் போது மறக்காமல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அதிகாரியிடம் பெற்ற வருமான சான்றிதழை கொண்டு வர வேண்டும்." என்று தெரிவித்தார்.

                                 தகவல் தொடர்புக்கு : திரு.நாக குமார் - 7373004860

Tuesday 3 September 2013

தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர விண்ணப்பிப்பது எப்படி ? - அரசு வேலை வாய்ப்பு வழிகாட்டி !

தமிழகத்தில் போலீசாருக்கு உதவியாக, 'தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை' உருவாக்கப்படும். இதன் மூலம், 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்படுவர்' என, கடந்தாண்டு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

தமிழகம் முழுவதும், முதற்கட்டமாக 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். இப்படையில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று (02.09.2013) முதல் துவங்கியது. 

மாநகர்களில், மாநகர கமிஷனர் அலுவலகங்களிலும், மாவட்டங்களில், எஸ்.பி., அலுவலகங்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இராமநாதபுரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காலை முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இங்கு வந்த இளைஞர்கள் பலர், ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அக்., 1ம் தேதிக்குள், வாங்கிய இடத்திலேயே வழங்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கு 360 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இணைய தளத்திலிருந்து இதற்கான விண்ணப்பங்களை, பதிவிறக்கம் செய்து கொள்ள, பின் வரும் லிங்கை சொடுக்கவும்.


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் அவரவர் தகுதிக்கேற்ப இந்த படையில் இணைத்துக் கொள்ளப் படுகிறார்கள். இவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பூதியமாக வழங்கப்படும். இதற்கான உடல் தகுதி தேர்வு உள்ளிட்டவை அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

எழுத்து தேர்வு நவம்பர் 10-ந் தேதி நடைபெற உள்ளது. கீழக்கரை பகுதியில் ஆர்வமுடிய இளைஞர்கள், தாமதிக்காமல்  உடனடியாக விண்ணப்பிக்கும் படி கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Monday 2 September 2013

துபாயில் இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி முகாம் - சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் சட்ட ஆலாசனை வழங்குகிறார் !

துபாயில் இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி முகாம் 06.09.2013 வெள்ளிக்கிழ‌மை மாலை 4 ம‌ணி முத‌ல் 6 ம‌ணி  வ‌ரை  ந‌டைபெற‌ இருக்கிற‌து. இந்த நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் அவர்கள் ப‌ங்கேற்று ஆலோச‌னை வழங்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருப‌வ‌ர் வழக்கறிஞர் வி. நந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.



அமீர‌க‌ வாழ் த‌மிழ் ம‌க்க‌ள், இவ்வாய்ப்பினைப் ப‌ய‌ன்ப‌டுத்தி,  இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உதவி பெற்றுக் கொள்ள ‌கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். த‌மிழ‌க‌த்தில் த‌ங்க‌ளுக்குத் தேவையான‌ ச‌ட்ட‌ உத‌விக‌ள் குறித்து ஆலோச‌னை பெற‌லாம். இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தொலைபேசி வாயிலாகவும் இலவச ஆலோசனை பெறலாம்.


அமீரகத்தில் மேலதிக விபரங்கள் பெற : 050 1321722 / 050 51 96 433

மின்னஞ்சல் : Advocatenandu10@yahoo.com


சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர்க்கான வழிகாட்டி மையம்

வழக்கறிஞர் வி. நந்தகுமார் அவர்களது முயற்சியின் காரணமாக சென்னையில் வெளிநாடு வாழ் இந்தியர்க்கான வழிகாட்டி மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி மையத்தில் இலவசமாக சட்ட ஆலோசனை, மருத்துவ ஆலோசனை, மேற்படிப்பு வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த வழிகாட்டுதல், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர உதவிடுதல், குடும்ப நல ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளைப் பெறலாம்.

தொடர்பு எண் :  0091 – 9566 973 462     மின்னஞ்சல் : helpnri2011@yahoo.com
தகவல் : முதுவை ஹிதாயத் அவர்கள்

பரமக்குடியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை - இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்பு !

இராமநாதபுறம் மாவட்டம், பரமக்குடி வட்டார ஜமாத்துல் உலமா சபையின் சார்பில் அல்லாஹ்வின் அருள் மழை வேண்டி சிறப்பு தொழுகை நேற்று ஞாயிற்றுக் கிழமை ( 01.09.2013 ) காலை 8.30 மணியளவில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு வட்டார ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் ஜனாப்.முஹம்மது யாஸின் பாகவி தலைமையேற்றார். துணைத் தலைவர் அக்பர் பாட்ஷா மன்பஈ மற்றும் செய்தி தொடர்பாளர் அப்துல் வஹாப் மிஸ்பாகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜனாப்.ஷாகுல் ஹமீது நூரி அனைவரையும் வரவேற்றார்.


மழை வெண்டி சிறப்பு தொழுகையினை கீழப் பள்ளிவாசல் பேஷ் இமாம் ஹாஜி.ஏ.எஸ்.ஜலாலுதீன் மன்பஈ நடத்தினார். இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ஹாஜி.வலியுல்லா நூரி மழை வேண்டி சிறப்பு துஆ செய்தார். பரமக்குடியில் உள்ள அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்களும் தொழுகையில் கலந்து கொண்டு மழை வேண்டி துஆ செய்தனர்.
தகவல் : முதுவை ஹிதாயத் அவர்கள் 

FACE BOOK COMMENTS :
  • Keelakarai Ali Batcha கீழக்கரையில் இது போல தொழுகை நடத்த ஜமாஅத்துகளுக்கும், உலமா பெரும் மக்களுக்கு நாட்டமில்லையா அல்லது நம்பிக்கை இல்லையா?
  • Sadiq MJ @Kilakkarai Ali Batcha >>> கீழக்கரையில் இது போல தொழுகை நடத்த ஜமாஅத்துகளுக்கும், உலமா பெரும் மக்களுக்கும் நாட்டமில்லையா அல்லது நம்பிக்கை இல்லையா? என்று கேட்பதை விட,

    இது பற்றிய ஞானம் இல்லையா என்று கேட்பது கொஞ்சம் நல்லாயிருக்கும் என்று கருதுகிறேன்.

    நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தன வாழ்நாளில் தனது அருமைக் குழந்தைகளுக்கோ அல்லது பாசமிகு பேரக் குழந்தைகளுக்கோ கொண்டாடிக் காட்டாத அல்லது தன்னோட இறுதிப் பேருரையிலே எனது மவுத்துக்குப் பிறகு எனக்கு வருடா வருடம் குறிப்பிட்ட இந்த மாதத்திலே இத்தனையாவது பிறையிலே பிறந்த எனக்கு பிறந்த நாள் விழாக் கொண்டாடுங்கள் என்று சொல்லிச்செல்லாத பித்அத்-ஆன செயலை நம்ம ஊரில் அனைத்து ஜமாத்தும் ஒருங்கிணைந்து தொடர் நிகழ்ச்சி நடத்துறதுல காட்டுகிற ஆர்வத்தை இதுபோன்ற சுன்னத்தான செயல்களில் என்னைக்குத்தான் காட்டுவாங்களோ?

    >>>முன்னதாக ஒரு பதிவில் நீங்க கூட சொல்லியிருந்தீங்க நம்ம ஊர நம்பிவந்த உலமாக்களுக்கு பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுப்பது இந்த ஹத்தம் பாத்திஹா என்று செல்வது இதுக்கே நேரம் சரியாக இருக்கு என்று, இந்த சூழ்நிலையிலே அவங்க படித்து வந்த மார்க்க ஞானத்த மேலும் Delelop பண்ண படித்த ஞானத்த பிறருக்கு எத்திவைக்க எங்கே நேரம் இருக்கப்போவுது!!!!!!!!!!!!
  • Keelakarai Ali Batcha @ Sadiq MJ அன்பு சகோதரரே உங்களின் ஆதங்கத்தை பூரணமாக என்னைப் போன்றவர்களால் உணர முடிகிறது. அதே நேரத்தில் எய்தவனை விட்டு அம்பை நோகும் விதமாக இருக்கிறது. ஜமாஅத் கமிட்டியின் கட்டளையை மீற எந்த ஆலீமுக்கும் திராணி கிடையாது.அவர்களோ வெளியூர் வாசிகள். பிரச்சனை வந்தால் வேறு (இ) மடம் தேடி சென்று விடுவார்கள். ஆனால் ஜமாஅத் கமிட்டியார்.......... ஆனால் இன்று ஊரில் ஒரு சிலவைகளை தவிர அனைத்தும் செயல் இழந்து செயல் படுகின்றன. 
    இறை அச்சம் இன்றி தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்டவர்கள் போல் நாட்டாமை செய்கிறார்கள். ஊர் மக்கள் மழை இன்றி, கிணற்று நீர் வற்றி படும் துயரம் அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது? நல்லோருக்கும் கெட்டோருக்கும், புல் பூண்டுகளுகளுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும் ஒரே நேரத்தில் பயன் அளிக்கக் கூடிய மழை என்னும் ரஹ்மத்தை வேண்டி அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி ஏக நாயனிடம் மன்றாட அவர்களுக்கு நேரமும் இலலை, இதற்காகச் செயல் பட திராணியும் இல்லை . வல்லவனே ,ஏகனே உன்னிடமே கையேந்தி நிற்கிறோம். கருணை புரிவாயாக. ஆமீன்.
  • Keelai Iniyavan Mansoor ஏகனே உன்னிடமே கையேந்தி நிற்கிறோம். கருணை புரிவாயாக. ஆமீன்.
  • Abdul Zubair ஏன் நம்ம ஊரில் உள்ள ஜமாதுகள்..இது பற்றி கவலை பட வில்லை..அல்லாஹ்தான் இவர்களுக்கு நல்ல புத்திய கொடுககனும்....
  • Nizar Nizar ஜமாஅத்காரர்களுக்கு எவன்வீட்டிலே கல்யாணம் நடக்கும்,அல்லது மௌலிது நடக்கும் நல்லாகறியும்,சோறும் சாப்பிட்டுவிட்டு கல்யாணவீட்டிலே கைக்கூலிவாங்கும் பணத்தில் கமிஷனை வான்க்கிட்டுபோகத்தான் காத்துக்கிடப்பானுங்க,இதுக்குதான் நேரமிருக்குமே தவிர அல்லாஹுவின் நல்ல நெறிகளையும்,நபிவழி நடைமுறைகளையும் பின்பற்றி நடப்பதற்கு நேரம் இருக்காது வெட்கம் கெட்ட ஜமாஅத் தலைவனுங்களுக்கும் காரியதரிசிகளுக்கும்.
  • Keelakarai Ali Batcha >Nizar Nizarஅன்பு சகோதரரே மீண்டும் பதிவு செய்கிறேன். எய்தவனை விட்டு அம்பை நோகும் விதமாககே உங்கள் கருத்தும் இருக்கிறது. ஒரே ஒரு நிமிடம் யோசியுங்கள்.இப்படி பட்டவர்களை நியமித்தது யார்? இது அவர்கள் குற்றமா? நம்மவர்கள் குற்றமா? மழையை பொழிவிக்காமல் நம்மை சோதிக்கும் ஏகனினின் கோபத்திற்கு ஆளானவர்களின் பட்டியலில் நாமும் குற்றவாளியாக உள்ளேமே!!சிந்திப்போம் செயல்படுவேம்'
    இனி வரும் காலங்களில், இன்ஷா அல்லா.....ஒரு அன்பான வேண்டுகோள். என்ன தான் இருந்தாலும் அல்லாவின் பள்ளியை நிர்வகிக்க நம்மின் அறிவில்லாத் தன்மையால் நியமிக்கப்பட்டவர்கள். வார்த்தைகளில் அடக்கம் தேவை.சகோதரரே. என் வர்த்தையில் குறை கண்டால் அல்லாவின் பெய்ரால் பொருத்தருளவும்.
  • Nizar Nizar அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அலி பாட்சா அவர்களே,நான் யாரையும் புண்படும்படி சொல்லிருந்தால் மன்னிக்கவும். மேலும் தாங்கள் சொல்லியதுபோல் அறிவிழிகளை பள்ளிகளில் நிர்வாகிகளாக நியமித்தது நம்மக்களின் தவறுதான் இருப்பினும் அவர்கள் என்னசெய்யவேண்டும் பொதுமக்கள் தவறான பாதையில் சென்றால் அவர்களுக்கு நல்ல அமல்களையும், மார்க்கங்களையும் எடுத்து சொல்லி நல்வழிபடுத்த வேண்டுமே தவிர அவர்களும் சேர்ந்து பாவசெயல்களை செய்யகூடாது அல்லவா?
    ஆனால் ஊரில் உள்ள பள்ளிகளில் இருக்கும் தலைவர்களுக்கு எத்தனை பேருக்கு மார்க்கம் என்றால் என்ன? எப்படி?அதை கடைபிடிப்பது என்று தெரியும்? சொல்லுங்கள் ஜனாப் அலி பாட்சா.அரபு நாடுகளில் ஏன் மழை வேண்டி தொழுகை நடத்துகின்றனர்? அவர்களிடம் இல்லாத பணமா?அவர்கள் நினைத்தால் மேகத்தை உருவாக்கி செயற்கை மழை பெய்விக்க முடியும்.
    ஆனால் அந்த நாட்டின் மன்னர் முதல் அன்றாடம் உழைக்கும் தொழிலாளியும் சேர்ந்து மழை வேண்டி அல்லாஹுவிடம் தொழுது துவா செய்கிறார்களே ஏன்? அந்த எண்ணம் நமது ஜமாத்தார்களிடம் ஏன் இல்லாமல் போய்விட்டது அவர்கள் சரியான பாதையில் சென்றால் நம் மக்களும் சரியானபாதையில் செல்வார்கள்.
    பொதுமக்களிடம் அவர்கள் நாம் பாவகாரியங்கள் செய்யக்கூடாது இறைவனின் பாதையில் நாம் எல்லோரும் தொழுது பாவகாரியங்களுக்கு அல்லாஹுவிடம் மன்னிப்புகேட்ப்போம் அனைவரும் ஒன்று கூடி வாருங்கள் என்று அழைத்தால் மக்கள் வரமாட்டார்களா? அவர்களுக்கு அதற்க்கெல்லாம் நேரமில்லை சகோதரரே.பணம் கொடுத்து கூப்பிட்டால் உடனே தலைவர்கள் முதல் ஆலிமுசா வரை உடனே வருவார்கள்.எல்லாம் பணம்,பணம்,தான்.இதற்க்கு காரணம் நாம்தான்.மக்களாகிய நாமும் முதலில் திருந்தவேண்டும். வஸ்ஸலாம்.
  • Keelakarai Ali Batcha > Nizar Nizar வ அலைக்கும் வஸ்ஸலாம். அன்பு சகோதரரே மீண்டும் கூறுகிறேன் தங்களின் ஆதங்கத்தில் முழு மனதுடன் பங்கு கொள்கிறேன்.இதை அனவரும் சிந்திக்கும் வண்ணம் எனது முக நூல் அன்பர்களுக்கும், கீழ்க்கரை டவுன் காஜிக்கும் எத்த வைக்கிறேன்.இனி வரும் காலங்களில் நல்லது மட்டும் நடக்க ஏக நாயனை பிரார்த்திப்போமாக ஆமீன்.
  • Keelakarai Ali Batcha > Nizar Nizar வ அலைக்கும் வஸ்ஸலாம். ஊர் மக்களாகிய நாம் மாக்களாக இருந்து நிலை கெட்ட ஜமாஅத் நிர்வாகிகளை மட்டுமா தேர்ந்தெடுத்தோம்? நகராட்சிக்கு மக்கள் பிரதிநிதிகளாக தெரு வாசிகளை தேர்ந்தெடுத்ததிலும் முட்டாள் தனம் செய்தோமே? கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இந்த இரண்டு ஆண்டுகாலத்திற்கு மத்திய , மாநில மற்றும் வரி வசூலிப்பிலிருந்தும் சுமார் எட்டு கோடி ரூபாய் மக்கள நல வாழ்வினை மேம்படுத்துவதற்காக நிதி ஆதாரம் கிடைதுள்ளதே.
    ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது? குறைந்த பட்சம் வாறுகால்களை அனத்தையும் மூடி சுகாதாரம் பேணப்பட்டதா?இல்லையே.சாலகள் சீரமைக்கப்பட்டதா இல்லையே? குடிநீர் வினியோகம் ஒழுக்கு படுத்தப்பட்டதா? இல்லையே. எதை விடுவது? எதை எழுதுவது?
  • Nizar Nizar சலாம் சகோதரரே,நம்மில் பலருக்கு நான்தான் என்ற தலைக்கணம் நிறைய இருக்கிறது முதலில் அவர்கள் திருந்தவேண்டும் அதுமட்டுமில்லாமல் நம் ஊரில் உள்ள அனைவரும் தான் என்னையும் சேர்த்து தான் திருதி கொள்ள வேண்டும்.இன்று நகராட்சியில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சி என்ன என்றால் பொதுமக்களுக்கு சேவை செய்ய ஒரு,ஒரு வேலைக்கும் ஒவ்வொரு விதமான தொகையை நிர்ணயித்து இருக்கிறார்கள் இதை தட்டி கேட்க யாருமே இல்லயா?
    நேற்றைய சாதரணமாக இருந்த இன்றைய நகராட்சி தலைவர் இரண்டு வருடத்தில் எத்தனை கோடி சம்பாதித்து விட்டார் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஊருக்கெல்லாம் வெளிச்சம் போடா கொடுத்த பணத்திலே தன் வீட்டிற்கு இன்வேர்டார் வாங்கிகொண்டார் அந்தப்பணத்தில்,ரோடு போடுறோம்,ரோடுபோடுரோமுன்னு சொல்லியே அவங்க வீட்டுக்கு மரபிலும்,மோசிக்கும் போட்டுக்கொண்டார்கள் என்ன செய்ய நாம் தான் இளிச்சவாயன்களா இருக்கிறோம். இதற்க்கெல்லாம் ஒரு விடிவுகாலம் வராதா?

  • Nizar Nizar மார்பில்,மொசைக்
  • Hussain Jahangeer பள்ளிவாசலின் நிர்வாகத்திற்கு பொறுப்பாளியாக இருப்பதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று தற்போதைய ஒவ்வொரு பள்ளியின் நிர்வாகிகளும் தத்தமது மனச்சாட்சியை கேட்டுப்பார்க்க வேண்டும்?நம் உயிரினும் மேலான அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ள பண்புகளில் ஏதேனும் ஒன்றாவது நம்மிடம் உள்ளதா?என்பதை கொஞ்சம் யோசித்தால் போதும்,நிறைய பள்ளிகளின் நிர்வாகம் கலைக்கப்பட்டுவிடும்.கியாமத் நாளின் அடையாளத்திற்குரிய தகுதிகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான பள்ளிகளின் பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுகிறார்கள்!
  • Nizar Nizar ஜஹாங்கிர் அவர்களே,கியாமத் நாள் இருக்கிறது என்ற நினைப்போ,பயமோ இல்லாமல்தான் இன்றைய பல பள்ளிவாசல்களில் உள்ள நிர்வாகிகள் மற்றும் ஆலிம்களும் இருக்கிறார்கள். சொந்தவூரில் பிறந்து வளர்ந்த நாம் எல்லோரும் நம் குடும்பத்தினர்களின் நலன்கருதி ஊர்விட்டு,நாடுவிட்டு நாடுவந்து கஷ்ட்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறோம்.
    ஆனால் வெளிஊர்களில் இருந்து நேற்று வந்த ஆலிமுசாக்கள் எல்லோரும் இன்று எவ்வளவு வசதிகளுடன் ஊரில் வாழுகிறார்கள் காரணம் அல்லாஹுவுக்காக நாம் ஓதும் குரான்ஷரீப் நமக்காக செய்யும் துவாவுக்கும் விலை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள் இதற்க்கெல்லாம் அல்லாஹுவிடம் மறுமை அவர்கள் நாளில் பதில் சொல்லியே ஆகவேண்டும்.