தேடல் தொடங்கியதே..

Friday 18 May 2012

இராமநாதபுரத்தில் 'ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ்' விழிப்புணர்வு இரயில் - ஆர்வமுடன் பார்வையிடும் பொதுமக்கள் !

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் சார்பில், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், 'ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ்'  என்று பெயரிடப்பட்ட விழிப்புணர்வு இரயில் தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த புகை வண்டி இன்று (18.05.2012) காலை 10 மணியளவில் இராமநாதபுரம் ரயில்நிலையத்திற்கு வந்தடைந்தது.

இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் 'ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ்'




இதனை காண நம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளாக பொதுமக்கள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள், பயணிகள் என வந்த வண்ணம் உள்ளனர். கீழக்கரையிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். கீழக்கரையிலிருந்து பொதுமக்கள் இங்கு வந்து பார்வையிட ஏதுவாக,  இலவசமாக  பேருந்து ஏற்பாடும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு புகை வண்டியை கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சி த‌லைவ‌ர், துணை த‌லைவ‌ர், க‌வுன்சில‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ரும் பார்வையிட்டு வருகின்றனர்.



இரயில் நிலையத்தில் இரத்த சேமிப்பு ஊர்தி
'இந்தியாவில் எய்ட்ஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது சென்னையில் தான்' என்ற அதிர்ச்சி தகவலுடன் கூடிய விளக்கப் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி தற்போது அதிகளவில் பாதிப்புள்ள மாநிலங்கள் உள்ளிட்ட விபரங்களும் இடம் பெற்றிருந்தன. ரயில் பெட்டியில் ஆங்காங்கே போன் இணைப்புகள் வைக்கப்பட்டு, ரிசீவரை கையில் எடுத்தவுடன் ஒரு குரல், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பேசும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. கண்காட்சியை காணவந்தவர்கள் அனைவரும், போன் மூலம் எய்ட்ஸ் குறித்த செய்தியை ஆவலுடன் கேட்டறிந்தனர்.


'ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ்'  உட்புற தோற்றம்
 
எய்ட்ஸ் குறித்த கேள்வி பதில்கள் அடங்கிய தொடுதிரை (TOUCH SCREEN) ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பார்வையாளர்களே விடையளித்து சரியா, தவறா என தெரிந்து கொள்கின்றனர்.  ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகைகள் குறித்த வாசகங்கள் ஆங்காங்கே இடம்பெற்றிருந்தன. ரயில் நிலையத்திற்கு வெளியே ரத்ததானம் செய்வதற்கான பிரத்யேக பஸ் நிறுத்தப்பட்டு ரத்த தானம் பெறப்பட்டது. பலரும் ஆர்வமுடன் ரத்ததானம் செய்தனர்.

ஆர்வமுடன் பார்வையிடும் மாணவர்கள்


இது குறித்து நிர்வாக ஒருங்கிணைப்பாளர் மகேஷ் அவர்கள் கூறுகையில் "எய்ட்ஸ், எச்.ஐ.வி பால் வினை நோய்கள், காச நோய், மலேரியா மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் பயிற்சிகள் நடத்தப்படுகிறது. பொது சுகாதாரம், குழந்தை ஆரோக்கியம் குறிதது கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வகையில் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் பிரசார பயணம் மேற்கொள்கிறது." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Monday 14 May 2012

கீழக்கரையில் ஜனாஸா அறிவிப்பு !

கீழக்கரை சாலை தெருவைச் சேர்ந்த S.A செய்யது முஹம்மது அவர்களின் மகளும், மேலத்தெரு ஜமாத்தை சேர்ந்த செய்யது அபுதாஹிர் அவர்களின் மனைவியும், M.முஹம்மது நஜீம் மரைக்கா மற்றும் M.செய்யது முஹம்மது ஜாஹிர் அவர்களின் பெரிய தாயாருமாகிய 'முத்தாத்தா' என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட முத்தாமினா உம்மாள் அவர்கள்  இன்று (14.05.2012) அதிகாலை சுமார் ஐந்து மனியளவில் வாபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).  


அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று மதியம் 2 மணியளவில் ஓடைக்கரைப் பள்ளி மைய வாடியில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : M. முஹம்மது நஜீம் மரைக்கா - 0097155 3004789 (துபாய்)