தேடல் தொடங்கியதே..

Saturday 22 June 2013

10 ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தவறாக இருக்கும் 'கர்ம வீரர் காமராஜரின்' பிறந்த ஊர் - சுட்டிக் காட்டி திருத்த கோரும் கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா. சுல்தான் !

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு சமூக அறிவியியல் பாடப் புத்தகத்தில், 100 ஆம் பக்கத்தில் "இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு" என்கிற தலைப்பிலான பாடம் இடம் பெற்றுள்ளது. அந்த பாடத்தின் தொடர்ச்சியில் 105 ஆம் பக்கத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கர்ம வீரர் காமராஜர் குறித்து வரும் தகவலில், காமராஜர் விருதுநகர் அருகில் உள்ள விருதுப்பட்டி கிராமத்தில் பிறந்ததாக, வரலாற்றுப் பிழையுடன் அச்சிடப்பட்டுள்ளது.


இதனை கீழக்கரையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஆனா. மூனா. சுல்தான் அவர்கள் செய்தி ஊடகங்களுக்கு சுட்டிக் காட்டியதோடு மட்டுமல்லாமல், இதனை அச்சிட்ட சம்பந்தப்பட்ட துறையினருக்கு, அதனை அடுத்த பதிப்பில் உரிய திருத்தம் செய்து வெளியிடவும், தற்போது மாணவர்களுக்கு வரலாற்றுப் பிழையுடன் கற்பித்து வரும் பள்ளிகளுக்கு திருத்தம் குறித்த சுற்றறிக்கை அனுப்பவும் கோரிக்கை விடுக்கிறார்.

இது குறித்து கீழக்கரை வரலாற்று ஆய்வாளர். ஆனா. மூனா. சுல்தான் அவர்கள் கூறும் போது " பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுப் பட்டியில்  ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார்.  பின்னாளில் தான் விருதுப்பட்டியாக இருந்த கிராமப் பகுதி, விருது நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

ஆனால் 10 ஆம் வகுப்பு பாடத்தில் 'விருது நகர் அருகே விருதுப்பட்டி' என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாணவர்களை குழப்புவதாக உள்ளது. 'விருதுப்பட்டி என்றழைக்கப்பட்ட விருது நகரில் பிறந்தார்' என்பது தான் சரியானது. தவறாக இடம் பெற்றுள்ளதை உடனடியாக பாட நூல் கழகம் மாற்ற வேண்டும்" என்று காமராஜரின் வரலாற்று நிகழ்வுகளை சுவைபட சொல்லிக் கொண்டே தெரிவித்தார். 

கல்வி என்பது, உயர் குடிப் பிறந்தோர்கள் மற்றும் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்ற நிலைமை மாற்றி,  ஏழை, எளியவர்களுக்கும் இலவசக் கல்வி,  எங்கும் கல்விக் கூடங்கள், எல்லோருக்கும் இலவசக் கல்வி, மதிய உணவு, சீருடைகள் என்றெல்லாம் திட்டங்கள் போட்டுச் செயல்படுத்திய முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜர் அவர்கள் பற்றிய வரலாற்றினை பாடப்புத்தகத்தில் தவறுதலாக குறிக்கப்பட்டு உள்ளதை தாமதிக்காமல் அரசு மாற்ற முன் வர வேண்டும்.

  • Keelai Ilayyavan தகவலை பகிர்ந்தமைக்கு, 'இன்று ஒரு தகவல்' நண்பர்கள் குழுவுக்கு நன்றி. இது போன்று பாட நூல்களிலும், வரலாற்று சுவடுகளிலும் உள்ள பிழைகளை, தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டும் ஆய்வாளர்கள் மிக மிகக் குறைவே. 

    கீழக்கரையை சேர்ந்த ஆனா. மூனா சுல்தான் அவர்கள், இதற்காக குரல் கொடுத்து முயற்சி மேற்க் கொண்டிருப்பது மகிழ்வளிக்கிறது. வாழ்த்துக்கள் ஆய்வாளரே... தொடரட்டும் உங்கள் பணிகள்.!

    • Asan Hakkim இது மாபெரும் குற்றமாகும். தவறினை கண்டுபிடித்த சுல்தான் மாமா அவகளுக்கு சவுதி தமிழர்கள் ஆகிய எங்களின் வாழ்த்துகள். அன்புள்ள அசன் ஹக்கீம்%%
      19 hours ago · Unlike · 2

Friday 21 June 2013

கீழக்கரையில் ஜவாஹிருல்லா MLA பொது மக்களுடன் சந்திப்பு - முக்கிய பிரச்சனைகள் தீர்க்கப்பட விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதி !

கீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனைகளாக இருக்கும்  தெருக்களில் வழிந்தோடும்  சாக்கடை கழிவு நீர், நாறும்  குப்பைகள், இரவில் எரியாத தெரு விளக்குகள், சீரமைக்கப்படாத குண்டும் குழியுமான சாலைகள், வீடுகளுக்கு வந்து சேராத காவிரி நீர், சாலைகளில்அள்ளப்படாத மணல் திட்டுகள், திறப்பு விழா கண்டும் திறக்கப்படாத மின் கட்டண வசூல் மையம், வெட்டப்படாத பட்டுப் போன மரங்கள்...

புற நகர் பகுதியில் பாழடைந்து கிடக்கும் பொது நூலகம், நிழற்குடை இல்லாமல் அவதிப்படும் பொதுமக்கள் என அடுக்கிக் கொண்டே போகும் பல்வேறு பிரச்சனைகளை, சட்ட மன்ற உறுப்பினர் முனைவர். பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்களிடம் பொது நல அமைப்பினர்களும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் மனுக்கள்  வாயிலாகவும், வாய் மொழியாகவும்  தெரிவித்தனர்.

கீழக்கரை நகரில் நிலவி வரும் சுகாதரக் கேடுகளை களையவும், குப்பைகள் இல்லாத முன் மாதிரி நகராட்சியாக கீழக்கரையை மாற்றவும், சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் நேரடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பொதுமக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று (21.06.2013) வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரை நகருக்குள் நடை பயணமாக சென்று பொதுமக்களின் குறைகளை நேரில் விசாரித்தார். அவருடன் த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகள், கீழக்கரை நகராட்சி கமிசனர், சுகாதார ஆய்வாளர், மதிப்பீட்டாளர், துப்புரவு மேற்பார்வையாளர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்களும், பல்வேறு சமூக நல அமைப்பினர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் திரளாக சென்றனர்.




சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் ஆய்வு செய்வதை அறிந்த இல்லத்தரசிகள் பலர், தங்கள் பகுதியை கடந்து சென்ற MLA அவர்களிடம் தங்கள் வார்டு பகுதியில் உள்ள பிரச்சனைகளை முறையிட்டு நிவர்த்தி செய்யக் கோரினர். கீழக்கரை முஸ்லீம் பஜார் பகுதியில் இருந்து லெப்பை தெரு, ஜின்னா தெரு, ஓடக்கரை பள்ளி வழியாக மேலத்தெரு, சொக்கநாதர் கோயில் தெரு, சின்னக்கடைதெரு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

முடிவில் நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் பொது மக்களிடம் கேட்டறியப்பட்ட அனைத்து புகார்களையும், கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற, நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார். அடுத்த மாதம் ஜூன் 15 ஆம் தேதிக்குள் அனைத்து கோரிக்கைகளும் விரைந்து செயல்படுத்தப்படுவதாக நகராட்சி ஆணையரால் உறுதி மொழி தரப்பட்டது.

கீழக்கரையில் புரதான 'பழைய குத்பா பள்ளி வாசலை' பழைமையுடன் புனரமைப்பு செய்ய ஜமாத்தார்கள் கலந்தாய்வு - BSA அஸ்ரப் புஹாரி அவர்கள் பங்கேற்பு !

இந்திய தேசத்தில் மிகப் பழமையான பள்ளி வாசலாகவும், கீழக்கரை நகரின் புரதான பள்ளிவாசல்களில் ஒன்றாகவும் பழைய குத்பா பள்ளி மஸ்ஜித் திகழ்கிறது. 'பாதன் பள்ளி' என்றும் 'பாத்தன் பள்ளி' என்றும் 750 ஆண்டுகளுக்கு முன், கீழக்கரை வந்த கடல் வழி வரலாற்று ஆய்வாளர் இப்னு பதுதா அவர்களின் வரலாற்றுக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது இந்த புராதானப் பள்ளிவாசலின் பழைமை மாறாமல், மீண்டும் புனரமைப்பு செய்யவும், விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளவும், பழைய குத்பா ஜமாஅத் நிர்வாகிகள் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக ஜமாத்தார்கள், நகரின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட, கலந்தாய்வு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (17.06.2013) லுஹர் தொழுகைக்கு பின்பு நடை பெற்றது.


இந்த கலந்தாய்வில் கீழக்கரை ஓடக்கரை பள்ளியினை பழமை மாறாமல் புரனமைப்பு செய்ததை போன்று பாதன் பள்ளியையும் புரனமைப்பு செய்யும் வழி முறைகள் பற்றி கலந்தாய்வு செய்ய ஓடக்கரை பள்ளி புரனமைப்பு குழுவின் முக்கிய அங்கதினர்களாக BSA அப்துல் ரஹ்மான் அவர்களின் மகனார்.அஷ்ரப் அப்துல் ரஹ்மான் புஹாரி, மற்றும் தைக்கா வாப்பா அவர்களின் பேரர். நிஜாமுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர். ஜனாப்.ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமை தாங்கினார். துணை தலைவர் கிதுர் முஹம்மது, முன்னாள் ஜமாஅத் தலைவர் முஹம்மது சதக் தம்பி, முன்னாள் துணை தலைவர் சீனி முஹம்மது, முன்னாள் செயலாளர்கள் ஜின்னா சாகிபு, அஹமது சுல்தான், சபீர் அலி, ஏ கே எஸ் ஹமீது சுல்தான், ஹிதாயத்துல்லாஹ், வரலாற்று ஆய்வாளர். அபு சாலிஹ், மூர் டிராவல்ஸ் அசனுதீன், இஞ்சினியர் கபீர் மற்றும் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு, தங்கள் ஆக்கப்பூர்வ கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.





இந்த கூட்டத்தில் பள்ளியின் புரனமைபின் முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டது, மேலும் பள்ளியை முன் அல்லது பின்புறம் அல்லது முன் பின்புறம் கல் பள்ளியாக விஸ்திகரிப்பு செய்வது பற்றியும் பேசப்பட்டது. 

பழைய குத்பா பள்ளி குறித்த வரலாற்றுச் சுவடுகள் :

கீழக்கரை பழைய குத்பா பள்ளி, பாரசீகர்கள் குடியமர்ந்த காலத்தில் (10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கலப்பிரயர்கள் ஆட்சி காலத்தில்) இப்பள்ளி கட்டப்பட்டதாக வரலாற்றுச் சுவடுகள் தெளிவுறுத்துகிறது.

கீழக்கரைக்கு கடல் வழியாக ஆய்வுக்கு வந்த வரலாற்று ஆய்வாளர். இபுனு பதூதா, இந்த பள்ளி குறித்து பதிவு செய்து இருக்கிறார். 

கி.பி.12 ஆம் நூற்றாண்டு வாக்கில், பவுத்திர மாணிக்கப் பட்டிணமாக அறியப்பட்ட கீழக்கரை நகரில், இப்பள்ளிவாசல் ஷஹீது போருக்குப் பின், பாண்டிய, சோழ அரசுகளின் ஒத்துழைப்புடன், அராபிய வணிகர்கள், பாரசீக - யமானிய வம்சா வழிகளால்  புனரமைக்கப்பட்டது. 

மேலும் கி.பி.1500 முதல் 1600 காலக் கட்டத்தில், வள்ளல் சீதக்காதி அவர்களின் தாய் வழிப் பாட்டனார் 'வவ்வாலி மரைக்காயர்' என்று அழைக்கப்பட்ட நெய்னா முஹம்மது மறைக்காயர் அவர்களால் விஸ்தரிப்பு செய்யப்பட்டது. இதுவே கீழக்கரையின் முதல் குத்பா பள்ளிவாசல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த கலந்தாய்வில் பேசிய B.S.A அவர்களின் மகனார் அஷ்ரப் புகாரி அவர்கள் "உலக அளவில் பழமை வாய்ந்த பள்ளிகளின் ஒன்றாக திகழும் இந்த பள்ளி பழமைக்கும் நமது பாரம்பரியத்திற்கும் முன் உதாரணமாக  திகழ்கிறது. கீழக்கரை வரலாற்றின் முதல் இடமாக திகழும் இந்த பள்ளியை பழமை மாறாமல் பாதுகாப்பது நமது அனைவரது கடமையாகும். அனைவரும் ஒன்றுபட்டு இந்த பள்ளியை புரனமைதல் செய்வதற்கும், பள்ளியை விஸ்திகரிப்பு செய்வதற்கும் பாடுபடுவதோடு மட்டும் இல்லாமல் அனைத்திலும் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். 



நிஜாமுதீன் அவர்கள் பேசும் போது "இப்பள்ளியை விஸ்திகரிப்பு செய்யும் போது கல் பள்ளியகவே விஸ்திகரிப்பு செய்ய வேண்டும். ஏனெனில் காங்க்ரீட் கட்டிடத்தின் காலவரம்பு 40 ஆண்டுகளுக்கு மட்டுமே. ஆனால் கல் பள்ளிக்கோபான் நெடுங்காலம்  காலம் உறுதியாக நின்று நூற்றாண்டுகள் பேசும் காலவரம்பு உண்டு" என்பதை தெளிவுபடுத்தினர். 

இது குறித்து கீழக்கரை வரலாற்று ஆய்வாளர்.அபு சாலிஹ் கூறும் போது "கீழக்கரையின் பழைய குத்ப பள்ளி ஜமாஅத் என்பது கீழக்கரை மக்களின் பெரும்பான்மையான மக்களை உள்ளடக்கிய மிக பெரிய பாரம்பரியமிக்க ஜமாஅத் ஆக இருக்கிறது. 13 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை கொண்டுள்ளது. இதற்கு முன்னர் இப்பள்ளியை புரனமைதல் சம்பந்தமாகவும் விஸ்தீகரிப்பு சம்பந்தமாகவும் பல முறை கூட்டம் கூட்டப்பட்ட போதிலும் அதற்கான பணிகள் துவங்க படவில்லை.





அதே வேளையில்  இன்று நடை பெற்ற கூட்டம் ஜமாஅத் மக்களை சிந்திக்க வைக்கவும்,  கருத்துகள் பரிமாறுவதற்கும், நல்லவை, கேட்டவை தெரிந்து கொண்டு நல்லதின் பால் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செல்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

மேலும் இக்கூட்டத்தில் பள்ளி விஸ்தரிப்பு செய்வதால் ஜனாஸா அடக்கும் மையவாடி சின்னதகிவிடுமோ ? என்று பலர் கவலை படுவதாகவும், இது ஜும்மா  பள்ளி என்பதால் பள்ளியின் வேலை ஆரம்பம் ஆகிவிட்டால், தொழுவதற்கு தடை இன்றி மாற்று இடம் தேவை என்றும் பலர் கவலைபடுவதாக கருத்து பரிமாறப்பட்டு இருக்கிறது. அதனை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்வது என்றால் பள்ளி மையவாடியை சுற்றி உள்ள இடங்களை பள்ளிகாக இனமாகவோ அல்லது விர்கிரயமாகவோ தந்தால் இப்பிரச்சனையை உடனடியாக சரி செய்யப்பட்டு பள்ளி விஸ்தீகரிப்பு சம்பந்தமாக மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.



மேலும் கூறுகையில் நிஜாமுதீன் காக்கா என்னிடம் பல முறை எப்பகுதியை வரலாற்று சிறப்பு மிக்க கலை நயமிக்க பகுதியாகவே மாற்றபட வேண்டும். என வலியுறுத்தி வருகிறார்கள்.

வெளிநாடுகளில் பாரம்பரியமிக்க இடங்கள் உள்ள பகுதிகள் தொன்மை மாறாமல் பராமரிக்கப்பட்டு வருவது போன்று நமது ஊரிலும் பழைய குத்பா பள்ளி பகுதியை அமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு அமைப்பது என்றால் கல்கத்தாவில் ரோடுகள் உள்ளது போன்று கற்கள் பதிக்க பெற்ற ரோடுகளும். லண்டனில் உள்ளது போன்று பழமைவாய்ந்த விக்டோரியன் தெரு விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். இது போன்றவைகள் மேற்கொள்ள பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும்.

மேலும் வள்ளல் சீதக்காதியின் தந்தை வீடும், அன்னாரின் ஓய்வு மாளிகையாக பயன்படுத்தப்பட்ட கஸ்டம்ஸ் ஆபீசை சீதக்காதியின் மணி மண்டபம் ஆக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மீன் கடையை மார்க்கெட் வளாகமாக மாற்றி தர வேண்டும் என்றும் B.S.A அஷ்ரப் புகாரி அவர்களிடம் இடம் வலியுறுத்தி இருக்கிறோம்.  இறைவன் நாடினால் ஜமாத்தார்கள் முன்னிலையில் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்" என்று எதிர்பார்ப்புகள் தளும்பிய மகிழ்வோடு விளக்கமாக தெரிவித்தார்.

Thursday 20 June 2013

கீழக்கரை நகரில் ஜவாஹிருல்லா MLA நாளை (21.06.2013) முகாமிட்டு ஆய்வு - பொது மக்கள் குறைகளை நேரில் தெரிவிக்கலாம் என TMMK தகவல் !

இராமநாதபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர் முனைவர். பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா அவர்கள் கீழக்கரை நகருக்கு அடிக்கடி வந்து பொதுமக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 


இந்நிலையில் நாளை வெள்ளிக் கிழமை மாலை 4.30 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் கீழக்கரையில் முகாமிட்டு, பொதுமக்களின் குறைகளை நேரில் விசாரித்து ஆவன செய்வார்கள் என கீழக்கரை நகர் த.மு.மு.க சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களில் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களுள் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர்.


இது குறித்து மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி. கீழை இர்பான் அவர்கள் கூறும் போது "கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் இருந்து நடை பயணமாக செல்ல திட்டமிட்டு இருக்கும் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் சுகாதாரம் மற்றும் இன்ன பிற குறைகள் குறித்து பொது மக்கள் சுட்டிக் காட்டும் இடங்களுக்கு சென்று நேரடி ஆய்வு செய்வதுடன், விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்துவார்கள். பொது மக்கள் தங்கள் புகார் மனுக்களை கொடுப்பது குறித்த மேலதிக தகவல்களுக்கு நகர் தலைவர் சிராஜுதீன் அவர்களை 94431 70984 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கேட்கலாம்" என்று தெரிவித்தார்.

FACE BOOK COMMENTS :

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரை நகருக்குள் ஓராண்டுக்கு பிறகு ஆய்வு மேற்கொள்ள வரும் சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றி. அதே வேளை ஆய்வுக்கு வரும் நேரம் தகுந்ததாக் இல்லை. கதிரவன் மங்கிய அந்தி சாய்ந்த நேரத்தில் கீழக்கரையின் அவல நிலைகளை எங்கு போய் பார்ப்பது ?

    அதுவும் நாளை ஆய்வு செய்
    ய இருக்கும் MLA என்று இன்றே அறிவிப்பு செய்து தண்டோரா போட்டு விட்டீர்கள். அப்புறம் என்ன இன்று இரவோடு இரவாக, இது வரை இல்லாத புதுமையாக கமிசனர் முன்னிலையில் அதிரடி வேலைகள் செய்யப்படும். அதி காலையிலேயே தெருவெல்லாம் நீர் தெளித்து, கோலம் போட்டு, பிளீச்சின்ங் பவுடர் தூவி, அது பத்தாது என்று TMMK, MMK தொண்டர்கள் ஊர் முழுதும் கட்சி கொடி கட்டி அமர்க்களப்படுத்துவார்கள்.

    கீழக்கரை கமிஷனரும், கவுன்சிலர்களும் ஊரின் தூய்மை பகுதிகளுக்கு MLA வை அழைத்து சென்று தாஜா செய்வார்கள். கூட்டம் களைந்து இனி அடுத்த வருஷம் MLA மீண்டும் வருவார். பிறகு எப்படி ஊரின் உண்மை நிலை தெரியும். கொஞ்சம் சிந்தித்து செயலாற்றுங்கள். நான் யாரையும் குறை சொல்ல இதை கூறவில்லை. நமது ஊரின் எதார்த்தத்தை சொல்கிறேன்.
    3 hours ago · Unlike · 2

Tuesday 18 June 2013

கீழக்கரையை சேர்ந்த பெண்மணிக்கு AB + இரத்தம் தேவை - உடனடியாக உதவ வேண்டுகோள் !

கீழக்கரை யுசுப் சுலைஹா மருத்துவ மனையில் நாளை (19.06.2013) பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள ஒரு அறுவை சிகிச்சைக்காக கீழக்கரையை சோ்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இரண்டு யுனிட்டுகள் AB+ வகை இரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது. 


தாயையும் சேயையும் காக்க இந்த இரத்தம் தேவைப்படுவதால், உதவும் உள்ளமுள்ள நண்பர்கள் மற்றும்  இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக 90475 07665 என்ற அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு, கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் இந்த வகை இரத்தம் அரிதாகவே கிடைப்பதால், இந்த தகவல் கிடைக்கப் பெறும் அன்பு நண்பர்கள் அனைவரும், ஏனைய நம் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

தகவல் : 'முகவை தமிழன்' நண்பர். ரைசுதீன் 

 "இரத்த தானம் செய்வோம்..  மனித உயிர் காப்போம்.

கீழக்கரையில் குற்றாலம் பகுதி 'மங்குஸ்தான் பழங்கள்' விற்பனை படு ஜோர் - போட்டி போட்டு வாங்கும் பொதுமக்கள் !

குற்றாலத்தில் வருடம் தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் துவங்கியதும், கீழக்கரை நகரவாசிகள் மறக்காமல், குறைந்தது நான்கு நாள்கள் குற்றாலம்  சென்று அருவிகளில் நீராடி வருவது வழக்கம். அவ்வாறு சென்று திரும்பும் நம் சொந்தங்கள் ஊர் திரும்பும் போது, மங்குஸ்தான் பழமும், திருநெல்வேலி   இருட்டுக்கடை அல்வாவும், நேந்திரம் பழ சிப்ஸும்   வாங்காமல் வருவதில்லை. அவர்கள் கூடை நிறைய வாங்கி வரும் மங்குஸ்தான் பழங்களை, குடும்பத்தார்களுக்கும், சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும் குறைவின்றி கொடுத்து மகிழ்வதில் அலாதி சந்தோசம் கொள்வர். ஆனால் தற்போது குற்றாலம் சென்று திரும்பும் கீழக்கரை வாசிகளின் சுமைகளை குறைக்கும் வண்ணம், மங்குஸ்தான் பழங்களை குற்றாலம் விலைக்கே, கீழக்கரையில் ஆண்டு தோறும் விற்பனை செய்து வருகின்றனர்.


தற்போது கீழக்கரை முஸ்லீம் பஜாரில் ஈசி ஜெராக்ஸ் எதிர்புறம் மங்குஸ்தான் லிச்சி மற்றும் மாம்பழங்களின் விற்பனை களை கட்டி இருக்கிறது. குற்றாலம் மலைப் பகுதிகளில் விளையும் இந்த பழங்களை, தற்போது குற்றாலம் சீசன் துவங்கியுள்ள நிலையில், விற்பனை செய்து வருகின்றனர். மங்குஸ்தான், லிச்சி பழங்கள் விலை தலா ஒரு கிலோ ரூ.200 க்கும், மாம்பழம் விலை மூன்று கிலோ ரூ.200 க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதனை போட்டி போட்டு வாங்குவதற்கு பொது மக்கள் குவிந்த வருகின்றனர். கடந்த ஆண்டும் மங்குஸ்தான் பழம் ஒரு கிலோ ரூ. 200க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இது குறித்து திருநெல்வேலி பாளையம் பகுதியை சேர்ந்த அப்துல் மசூது அவர்கள் கூறும் போது "குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் மிக சரியான காலத்தில் துவங்கியுள்ளது. மங்குஸ்தான் பழங்களின் விளைச்சலும் நல்லபடியாக வந்துள்ளது.  இன்று தான் கீழக்கரை பகுதிக்கு வந்துள்ளோம். இந்த முறையும் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்." என்று மகிழ்ச்சி தாங்கிய எதிர்பார்ப்புடன் தெரிவித்தார். 


இது குறித்து நாம் சென்ற ஆண்டு வெளியிட்டிருந்த செய்தி :

கீழக்கரையில் குளிர்ச்சி தரும் மங்குஸ்தான், லிச்சி பழங்களின் அனல் பறக்கும் விற்பனை - கடும் விலையால் பொதுமக்கள் வருத்தம் !

கீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பங்கள் - உயிரிழப்புகள் ஏற்படும் முன் சீர் செய்யப்பட 'மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம்' கோரிக்கை கடிதம் !

கடற்கரை நகரமாகத் திகழும் நம் கீழக்கரை நகரில் 50000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. மிகுந்த நெருக்கத்திலான வீடுகளும், மிகக் குறுகிய சாலைகளும் நிறைந்து காணப்படும் நமது ஊரில் சமீப காலமாக பெரும்பாலான மின் கம்பங்களிலிருந்து, உயர் மின் அழுத்த கம்பிகள் அறுந்து விழுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் கடந்த காலங்களில் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளது. மேலும் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்களால் ஆபத்துகள் நிகழ்வது எதிர்நோக்கப்பட்டுள்ளது.


முற்றிலும் அரிக்கப்பட்டு விழுந்து விடும் நிலையில் உள்ள மின்கம்பம்.

கீழக்கரை சின்னக்கடை தெருவிலிருந்து இஸ்லாமியா பள்ளிகளுக்கு செல்லும் வழியில், எரோபிலான் ஹாமீது காக்கா வீடு அருகே சிமிண்டினால் ஆன மின் கம்பம் ஒன்று உள்ளது. அதில் பொருத்தப்பட்டு இருக்கும் மெயின் பெட்டி மற்றும் பீஸ் கேரியர் திறந்த நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பகுதி, பள்ளிக் குழந்தைகள் அதிகளவில் நடமாடும் சாலையாக இருப்பதால் ஆபத்துகள் ஏற்படும் முன் நாம் விழித்துக் கொள்வது அவசியம். இது தவிர கீழக்கரை பழைய குத்பா பள்ளி முன் புறம், பருத்திக்காரத் தெரு, வள்ளல் சீதக்காதி சாலை சதக்கதுன் ஜாரிய நடுநிலைப் பள்ளி முன் புறம், மொட்டப் பிள்ளை தெரு போன்ற இடங்களில் இருக்கும் மின் கம்பங்கள் அபாய நிலையில், உயிர் பறிக்க ஊசலாடி வருகிறது.





இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு முறையான புகார் மனுக்கள் அளித்தும் பயன் ஏதும் இல்லை. எனவே பழுதடைந்த மின் கம்பங்கள் மற்றும் உயர் அழுத்த மின் கம்பிகளை உடனடியாக மாற்றி, நம் நகரின் பொதுமக்கள், மாணவ, மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைக்க அனைத்து பொது நல அமைப்புகளும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் வருத்தத்துடன் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் சார்பாக சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகளுக்கு, தகுந்த சான்றாவனங்களுடன் கோரிக்கை  கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழக துணைத் தலைவர். திரு. M.மாணிக்கம் அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் இருக்கும் பெரும்பாலான மின் கம்பங்கள் 40 வருடங்களை தாண்டியதாக உள்ளது. கடலின் உப்புக் காற்றால் சிதிலமடைந்து, முறித்து விழும் நிலையில் காணப்படும் இந்த மின் கம்பங்கள் எப்போது முறித்து விழுமோ? என்று அச்சப்படும் வகையில், ஊசலாடும் எலும்புக் கூடாக காட்சியளிக்கிறது.

இதனால் பொது மக்கள் பீதியுடன் நடமாடும் அவல நிலையில் உள்ளனர். பல தெருக்களில் மின்சார வயர்கள் சிக்கலான வகையில் பின்னிப் பிணைந்து உரசி கொண்டிருப்பதால், அடிக்கடி தீப்பொறிகளுடன், மக்கள் நடமாடும் வீதிகளில் விழுகிறது. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி தொடர் முற்சிகளை மேற்க் கொண்டு வருகிறோம்." என்று மக்கள் நலத்தை கருத்தில் கொண்டு தெரிவித்தார்.

Monday 17 June 2013

கீழக்கரையில் வேகமாக பரவி வரும் 'மெட்ராஸ் ஐ' கண் வலி - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்த விபரங்கள் !

கீழக்கரையில் தற்போது, "மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் மருந்துக்கடைகளில் ஆன்டிபயாடிக் சொட்டு மருந்து விற்பனை ஜோராக நடந்து வருகிறது. அடினோ வைரஸ் கிருமியினால் பரவும், "மெட்ராஸ் ஐ' எனப்படும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எரிச்சல், கண்ணீர் வடிதல், கண் சிவப்பாக மாறுதல் போன்ற உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். பலர் இந்நோயால் கறுப்பு கண்ணாடி அணிந்து வலம் வருகின்றனர்.  இந்த நோய், காற்றின் மூலம் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளதால், எங்கே நோய் தாக்குமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


இது குறித்து கீழக்கரையை சேர்ந்த வேளானூர் அரசு மருத்துவர்.செய்யது ராசிக்தீன் அவர்கள் கூறும் போது "மெட்ராஸ் ஐ'யால் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை பார்த்தால், நமக்கும் பரவி விடும் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய கர்சிப், துண்டு போன்றவற்றை பயன்படுத்தினால் மட்டுமே மற்றவர்களுக்கு, 'மெட்ராஸ் ஐ'பரவும்.இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சொட்டு மருந்துகளை டாக்டர்களின் ஆலோசனைப்படி மட்டுமே உபயோகிக்க வேண்டும். மருந்துக்கடைகளில் விற்கும் ஏதேனும் சொட்டு மருந்துகளை வாங்கி உபயோகித்தால், கருவிழி பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. 

இந்த பாதிப்பு தொற்றினால்,சிலருக்கு, தொண்டை வறட்சி, சளி பிடிக்கலாம். பள்ளிக் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருந்தால் அவர்கள் பள்ளிக்கு அனுப்பாமல், அந்தந்த பள்ளி நிர்வாகம் விடுமுறை தருவது நல்லது. இதனால் மற்ற குழந்தைகளுக்கும் பரவுவது தடுக்கப்படும். தினந்தோறும் சுத்தமான நீரில் கண்களை கழுவி வந்தால், "மெட்ராஸ் ஐ' நோயில் இருந்து கண்களை பாதுகாக்கலாம். "மெட்ராஸ் ஐ'யால் பாதிக்கப்பட்டவர்கள் கூலிங்கிளாசை பயன்படுத்தினால், கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். இதன் மூலம் கண்நோய் பாதிப்பில் இருந்து விரைவாக குணமடையலாம்" இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட கீழக்கரை தம்பி நெயனாப் பிள்ளை தெருவை சேர்ந்த ஜமாலுதீன் அவர்கள் கூறும் போது " முன்பெல்லாம் மெட்ராஸ் ஐ என்று சொல்லும் கண் நோய் வந்தால், முறையான சிகிச்சை எடுக்கும் பட்சத்தில், ஒரு வாரத்திற்குள் சரியாகி விடும். ஆனால் தற்போது 10 நாள்களுக்கு மேல் ஆகிறது. கண் வழியும் எரிச்சலும் அதிகமாக இருக்கிறது. இரண்டு நாளுக்கு மேல் கண்கள் சிவப்பாக இருந்து தொடர்ந்து கண்ணீர் வந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது." என்று கறுப்புக் கண்ணாடி அணித்தவாறு தெரிவித்தார். 

உங்கள் பொது அறிவுக்கு :

’மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்து போகும் அழையா விருந்தாளி. ’கஞ்சங்டிவிடிஸ்’ எனப்படும் ஒருவித கண் நோய்தான் ’மெட்ராஸ் ஐ’ ‘பிங்க் ஐ’ என செல்லமாக அழைக்கப்படுகிறது.

1918-ம் ஆண்டு இந்த கண்நோய் கண்டுபிடிக்கப்பட்டது. அடினோ என்ற வைரஸ் கிருமியால் இந்நோய் உண்டாகிறது.

இது ஒருவகை வைரஸ் கிருமியால் பரவுகிறது. கண்களை பாதிக்கும் வைரஸ் கிருமியை சென்னையில் முதன் முதலில் கண்டுபிடித்ததால் மெட்ராஸ்-ஐ எனப் பெயர் வந்தது.

’’கருவிழியை சுற்றியுள்ள வெள்ளை படலத்தின் மீது கண்ணுக்கு தெரியாமல் வைரஸ் கிருமி ஒட்டிக் கொண்டு இருக்கும். கண்கள் அதிகம் சிவந்து காணப்படும். அதிகமாக அழுக்கு வரும். கண் எரிச்சல் உண்டாகும். வலி இருக்கும். கண்கள் கூசும். மற்றவர்களை இது எளிதில் தொற்றிக் கொள்ளும். 

சொட்டு மருந்துகளை போடும்போது கைகளை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். 



இந்நோய் வந்தால் கண்ணில் எதிர்ப்பு சக்தி குறையும். முறையான சிகிச்சை பெற்று வந்தால் ஒருவாரத்தில் குணமாகி விடும்.

கண் நோய் (தமிழ்நாட்டில் மெட்ராஸ் ஐ) ஆங்கிலத்தில், “கன்ஜங்டிவிட்டிஸ்’ என்றழைக்கப்படுகிறது. இது, காட்டுத் தீயைப் போல வேகமாகப் பரவும் தன்மை கொண்டதால், மக்கள் கவலை கொள்கின்றனர். 

கண் சிவப்பாவது மட்டுமல்லாமல், அரிப்பு, வீக்கமும் ஏற்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு வந்தால், மற்ற அனைவருக்கும், பள்ளியில் ஒரு மாணவருக்கு வந்தால், அனைவருக்கும் தொற்றும் தன்மை கொண்டது இது.

“கூலிங் கிளாஸ்’ அணிவது, நம் கையை கண் அருகில் கொண்டு செல்லாமல் இருக்க மட்டுமே தவிர, இந்த கண்ணாடி தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் எனக் கூற முடியாது.

தொற்று ஏற்பட்டால் செய்ய வேண்டியவை :

* கண்களை உங்கள் கைகளால் தொடாதீர்கள்; அரிக்கிறதே என நினைத்து, சொறியாதீர்கள்.

* அடிக்கடி கையைச் சுத்தம் செய்து கொண்டே இருங்கள்.

* தினமும் கைக்குட் டை, டவலை சுத்தம் செய்ய வேண்டும். உங்களுக்கென தனி கைக்குட்டை, டவல் வைத்துக் கொள்ளுங்கள்.

* தலையணை உறைகளை தினமும் மாற்றுங்கள்.

* கண் மை, லைனர் ஆகியவற்றை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

* கண்ணை சுத்தம் செய்ய, இதமான துணி அல்லது பஞ்சை தண்ணீரில் நனைத்து, கண்ணை மூடி, இமையில் லேசாக அழுத்த வேண்டும். பின், கண்ணை சுற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கண்ணுக்கு பயன்படுத்திய துணியை, அடுத்த கண்ணுக்கு பயன்படுத்தக் கூடாது.

* பேபி ஷாம்பூ ஒரு சொட்டு, தண்ணீர் 10 சொட்டு சேர்த்து கலந்து, அதன் மூலம் கண்ணுக்கு வெளியே உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும்.

* தொற்று முற்றிலும் நீங்கும் வரை, “கான்டாக்ட் லென்ஸ்’ அணியக் கூடாது.குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால், பள்ளியில் மற்ற குழந்தைகளுக்கும் வேகமாகப் பரவி விடுகிறது. எனவே, இந்த நேரத்தில் விடுமுறை எடுத்து, தொற்று முற்றிலும் குணமானதும், பள்ளிக்கு செல்லலாம்.

நீச்சல் குளத்தில் உள்ள குளோரின், உடலுக்கு தேய்க்கும் சோப்பு, துணிக்குப் போடும் சோப்பு ஆகியவற்றாலும் கண்ணில் ஒவ்வாமை ஏற்படலாம். இதற்கு, குளிர்ந்த நீரால் கண்ணைக் கழுவினாலே போதும். கண்ணில் தூசி விழுதல், வேறு துகள்கள் விழுதல், இமை முடி கண்ணுக்குள் சென்று விடுதல் ஆகியவற்றால், கண்ணில் உறுத்தல் ஏற்படும். இது போன்ற உபாதைகளை நீங்களாகவே கையாளாமல், கண் மருத்துவ ரிடம் காண்பிப்பது நல்லது.

மெட்ராஸ் ஐ வகைகள்:

வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ என பல வகைகள் இருக்கிறது.

அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :

பெருகி வரும் மாசினால் வெகு சுலபமாக நம்மை வந்தடைவது அலர்ஜி. இதனால் கண்ணில் அரிப்பு ஏற்படும். கண் உறுத்தும். சில சமயம் வீக்கத்துடன் நீர் வழியவும் செய்யும்.

வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :

இந்த வகை சளிப் பிடித்தல் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சினைகளால் ஏற்படுவது. இது பொதுவாக ஒரு கண்ணில் தோன்றி அடுத்த கண்ணுக்கும் பரவும். இது அரிப்புடன் நீர் வழியும். 

பேக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ :

இதில் சீழ் போன்ற ஒரு திரவம் வடியும். இந்த வகை மெட்ராஸ் ஐயில் காலையில் எழும்போது கண்களைத் திறக்க முடியாமல் இமைகள் ஒட்டிக் கொள்ளும். கண்ணில் ஏதோ விழுந்ததுப் போன்ற ஒரு உறுத்தல் இருக்கும்.

ரசாயனம் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ : 

இந்த வகையில் கண் உறுத்தலும் வலியும் அதிகமிருக்கும். அரிப்போ நீர்/சீழ் வடிதல் இருக்காது.

மெட்ராஸ் ஐ - சிகிச்சை: 

மெட்ராஸ் ஐ பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இதற்கென பெரிய சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால் கண் மருத்துவரை சந்தித்தால் அவர் நோயின் தீவிரத்தைப் பொறுத்து செயற்கை கண்ணீர் (Artificial tears) ஏதேனும் பரிந்துரைப்பார்கள். இது கண்ணுக்கு சற்று இதமளிக்கும்.

மெட்ராஸ் ஐ பரவக்கூடியது என்பதால் இந்நோய் வந்தவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க கறுப்பு கண்ணாடி அணிவது நல்லது. அடிக்கடி குளிர்ந்த நீரில் கண்களை கழுவலாம். 

கண்ணைத் துடைக்க சுத்தமான மெல்லிய துணி அல்லது டிஷ்யூ பேப்பர் உபயோகப்படுத்தலாம். டிவி/கம்ப்யூட்டர் பார்த்தோ, அல்லது புத்தகம் படித்தோ கண்களை சிரமப்படுத்தாமல் கண்களை கூச செய்யாத வெளிச்சம் குறைவான இடத்தில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும்.

மெட்ராஸ் ஐ வராமல் தடுக்க: 

மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவக் கூடியது என்பதால் இதுப்போல நோய் பரவும் காலங்களில் மக்கள் அதிகம் புழங்கும் இடத்திற்கு செல்வதைத் தடுக்கலாம். 

மெட்ராஸ் ஐ கண்ணுக்கு கண் நேராகப் பார்த்து பரவுவது இல்லை. நம்மை அறியாமல் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன் கண்களை துடைத்துக் கொண்ட கையால் தொட்ட ஏதேனும் ஒன்றை நாம் தொட்டுவிட்டு அதே கைகளால் நம் கண்களைத் தொடும்போது பரவுகிறது. 

அதனால் நம் கைகளை அடிக்கடி கழுவுதல் நல்லது. மேலும் மெட்ராஸ் ஐ வராவிட்டாலும் நம் கை நேரடியாக கண்ணைத் தொடுவற்கு வழிவிடாமல் கண்ணாடி அணிந்துக் கொள்ளலாம். கையால் கண்ணைத் துடைப்பதை விட டிஷ்யூ பேப்பர் உபயோகிப்பது நல்லது.

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு - பழைய குத்பா பள்ளி ஜமாத்

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் .ஜனாப். மதார் சாஹிபு அவர்களின் மகனும், சஹாப்தீன், பசீர் அஹமது, ஆசிப் கான், அமானுல்லாஹ் கான் (அன்சாரி குயின் கல்யாண பிரியாணி உரிமையாளர்), சேகு அப்துல் காதர், ஜமீல் அஹமது, அசன் முஹைதீன், அஹமது அப்துல் காதர் (ஆழி) ஆகியோர்களின் தந்தையாரும், சீனி சதக்கத்துல்லாஹ் அவர்களின் பெரிய தந்தையுமாகிய ஜனாப். சுல்தான் அப்துல் காதர் (வட்டக் கன்னி) அவர்கள் நேற்று (16.06.2013) அன்று மதியம்  3.30 மணியளவில் சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  இன்று (17.06.2013) திங்கள் கிழமை அஷர் தொழுகைக்குப் பின்னர் பழைய குத்பா பள்ளி மையவாடியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது  ஜனாப். சுல்தான் அப்துல் காதர் (வட்டக் கன்னி) அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : 

ஆசிப் கான்    :   98410 68689

Sunday 16 June 2013

கீழக்கரையில் 'குடி' மகன்களின் கொட்டாரமாக மாறி வரும் 'புதிய பேருந்து நிலைய வளாகம்' - புறக்காவல் நிலையம் அமைக்க 'கீழக்கரை நகர் நல இயக்கம்' சார்பாக காவல் துறை D.I.G அவர்களுக்கு கோரிக்கை!

கீழக்கரையில் அமையப் பெற்று இருக்கும் புதிய பேருந்து நிலையமானது, நகரின் எல்லைப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பின் புறத்தில் தான் மீன் மார்கெட், காய்கறி மார்கெட், நியாய விலை மண்ணெண்ணெய் கடை இருக்கிறது. அது மட்டுமல்லாமல், தற்போது துவங்கப்பட்டு  இருக்கும் மின்சார கட்டான வசூல் மையமும் உள்ளது. 

இடம் : புதிய பேருந்து நிலையம், கீழக்கரை 


இதனால் இந்த பகுதி மிகுந்த மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியாக அமையப் பெற்றுள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் 500 கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆனால் அந்தி சாய்ந்த மாலை வேளைகளில் இந்த பகுதிக்கு பொது மக்கள் செல்ல மிகுந்த அச்சப்பட்டு வருகின்றனர். 

இந்த 'தேவதாஸ்' களின் காவலுக்கு 'நாய்கள்' எங்கிருந்து தான் வருமோ..?


இந்த பகுதியில் காலம் நேரம் இல்லாமல் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுக்களை வாங்கும் குடிமகன்கள், பேருந்து நிலைய வளாகத்தில் ஹாயாக, குடி நண்பர்களுடன் அமர்ந்து போதைகளை நிரப்பிக் கொள்கின்றனர். பின்னர் இந்த பகுதில் தொடர்ந்து நடக்கும் ரகளைகளால், இரவு 7 மணிக்கு மேல், ரண களமாக மாறி விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதிக்குள் பெண்கள் செல்வது அபாயகரமானதாக உருவெடுக்கிறது. பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்குள் செல்லவோ,பேருந்திற்காக காத்திருக்கவோ அச்சப்படுகின்றனர். 

இந்நிலையில் கீழக்கரை புதிய பேருந்து நிலையத்தினுள் புறக்காவல் நிலையம் அமைக்க கோரி, காவல் துறை துணை தலைவர் (D.I.G), மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் (S.P)  மற்றும்  காவல் துறை துணை கண்காணிப்பாளர் (D.S.P) ஆகியோர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.


இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். ஜனாப். பசீர் அஹமது அவர்கள் கூறும் போது "குடிகாரர்களின் கொட்டாரமாக மாறி வரும் புதிய பேருந்து நிலைய வளாகத்திற்குள் புறக்காவல் நிலையம் அமைப்பது ஒன்றே நல்ல தீர்வாக அமையும் என்கிற கருத்திற்கு வலு சேர்க்கும் விதமாக சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி இருக்கிறோம். 

ஏற்கனவே கீழக்கரை நகராட்சி சார்பாகவும்,இதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, புதிய பேருந்து நிலைய கட்டிடத்திற்குள் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளாதாக தெரிகிறது. காவல் துறை உயர் அதிகாரிகள், எங்கள் மனு மீது உரிய விசாரணை செய்து, விரைவில் ஆவன செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்" என்று நகர் நலனில் அக்கறையுடன் தெரிவித்தார்.

FACE BOOK COMMENTS :


  • Asan Hakkim ஹா ஹா ஹா--இது ரெம்ப தப்பு
  • Asan Hakkim ஹா ஹா ஹா போலிஸ் பாதுகாப்பு என்ன? ராணுவ பாதுகாப்பு போட்டாலும் இந்த இடம் இப்படித்தான் இருக்கும். இது குடிகாரகளின் பாரம் பரியம் அவ்வளவு சீக்கிரம மாத்திக்கொள்ளபோவதும் இல்லை மாத்தவும் முடியாது. இப்படிக்கு முன்னால் குடிமகன் அன்புள்ள அசன் ஹக்கீம்%%