தேடல் தொடங்கியதே..

Wednesday 24 April 2013

தமிழகமெங்கும் பாஸ்போர்ட் விசாரணைக்கு 'பெண்கள் காவல் நிலையம் செல்லத் தேவை இல்லை' - ஜவாஹிருல்லாஹ் M.L.A கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவு !


கீழக்கரை நகர், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாக இருப்பதால், பெண்கள் வெளி இடங்களுக்கு செல்வது மிகக் குறைவானதே. ஆனால் பாஸ்போர்ட் எடுப்பதற்காக விண்ணப்பிக்கும், அனைத்து இஸ்லாமிய பெண்களும், குழந்தைகளும், விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் அவர்கள் பெரும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தனர். இந்த காவல் துறையினரின் நடை முறையை மாற்றி அமைக்க, யாராவது குரல் கொடுக்க மாட்டார்களா ? என்ற ஆதங்கம்... கீழக்கரை மக்களிடையே வெகு காலமாக இருந்து வந்தது. 

இந் நிலையில் தமிழ்நாடு சட்ட பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை மானியக் கோரிக்கையின் கூட்டம் நேற்று (23.04.2013) நடை பெற்றது. அந்த நிகழ்வில்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி, மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினருமான பேராசிரியர். எம். எச் ஜவாஹிருல்லா அவர்கள் பேசினார்.



 பேராசிரியர் அவர்களின் உரையும் மாண்புமிகு முதலமைச்சரின் பதிலும்

காவல் துறையில் முஸ்லீம்களை கூடுதலாக சேர்ப்பது சம்பந்தமாக :

பேராசிரியர் அவர்கள் : சிறுபான்மையின மக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ள  இந்த அரசாங்கத்திடம்  மிக முக்கியமான கோரிக்கையை நான் வைக்க விரும்புகிறேன். தமிழகத்தில் 2001 ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படி முஸ்லிம்களுடைய மக்கள் தொகை 5.6 சதவிகிதம் என்று சொல்லப்படுகிறது ஆனால் தமிழக காவல் துறையில் முஸ்லிம்கள் 1 சதவிததிற்கும் குறைவாகத் தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை சரிக் கட்டுவதற்கு முஸ்லிம்களுடைய பங்களிப்பு காவல் துறையில் அதிகப்படுத்துவதற்கு இந்த அரசு சிறப்பான முறையிலே நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

காவல் துறையினரால் பதியப்பட்ட சிறு வழக்குகளில் சிக்கி இருக்கும் முஸ்லீம் மக்கள், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் இடையூறுகளை களைவது சம்பந்தமாக :

பேராசிரியர் அவர்கள் : தமிழகத்திலே, முஸ்லிம் இளைஞர்கள் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விசாரணைகளை காவல் துறையினுடைய சிறப்புப் பிரிவு மேற்கொள்கின்றது. அதிலே பல இடங்களிலே, பல்வேறு வகையான இடையூறுகள் ஏற்படுகின்றது. உதாரணமாக, சொல்ல வேண்டுமென்றால் 107 சி.ஆர்.பி.சி. போன்ற வழக்குகள், அது குற்ற வழக்கே இல்லை ஆனால் காவல் ஆய்வாளர் ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக செய்யக் கூடிய நடவடிக்கையாகும். 

அப்படி 107 சி.ஆர்.பி.சி. இருந்தாலும் கூட அந்த பாஸ்போர்ட் விசாரணை நீடிக்கப்பட்டு பாஸ்போர்ட் கிடைக்காத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதை போல் ஒரு குற்றம் செய்தததாக கருதப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்கு நடைபெற்று,விடுதலையானப் பிறகும் கூட அப்படிப்பட்டவர்கள் பாஸ்பார்ட்க்கு விண்ணப்பம் செய்யும் போது கூட,அவர்களுக்கு அந்த விசாரணையிலே தடைகள் ஏற்பட்டு இருக்கக்கூடிய சூழலைப் பார்கின்றோம்.


காவல் நிலையத்திற்கு பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களை அழைப்பது சமபந்தமாக :

இந்தப் பாஸ்பார்ட் விசாரணைக்காக சிறப்பு பிரிவு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீடுகளுக்குச் சென்று விசாரணைகளை மேற் கொள்ள வேண்டும். ஆனால், சில மாவட்டங்களிலே, இராமநாதபுரம் மாவட்டம் உட்பட, பெண்கள் உள்பட எல்லோரையும் காவல் நிலையங்களுக்கு வரவழைத்து விசாரணை செய்யக்கூடிய ஒரு நிலை இருக்கின்றது. இதையும் சீர்படுத்துவதற்கு இந்த அரசு முன் வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

(மாண்புமிகு முதல்வர் அவர்கள் தனது பதிலுரையில் இதற்கு பின் வருமாறு பதிலளித்தார்கள்.)

மாண்புமிகு முதல்வர் : மாண்பு மிகு பேரவைத் தலைவர் அவர்களே,முனைவர் ஜவாஹிருல்லா பேசுகின்ற போது பாஸ்போர்ட் விசாரணைக்கு பெண்கள் கூட காவல் நிலையத்திற்கு வர வழைக்கப்படுகின்றனர் என்று கூறினார்.  சி.ஆர்.பி.சி. சட்டத்தின் படி பெண்கள், குழந்தைகளை சாட்சியாக விசாரணை செய்யக் கூடாது.காவல் நிலையத்திற்கு அழைக்கக் கூடாது. அவர்களை அவர்களது இருப்பிடத்திற்குச் சென்று தான் விசாரிக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் விசாரணைக்கு அவர்களை அழைக்கத் தேவையில்லை அவ்வாறு நடை பெற்றிருந்தால் அது விசாரிக்கப்பட்டு, இது போன்று இனிமேல் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் அவர்கள் பதிலளித்தார்.



இது குறித்து துபாயிலிருந்து நம்மிடையே பேசிய, கீழை இளையவன் வாசகர்,கீழக்கரை நடுத் தெருவைச் சேர்ந்த நஜீம் மரைக்கா அவர்கள் கூறும் போது "பல்லாண்டு காலமாக இருந்து வந்த காவல் துறையின் நடை முறையை, மாற்றி அமைக்க சட்ட சபையில் குரல் கொடுத்த பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், கீழக்கரை பொது மக்கள் சார்பாக, நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நாள் வரை பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும்  நமதூர் பெண்கள் மிகுந்த சிரமத்துடன், காவல் நிலையம் வரை சென்று வந்தனர். இனி அது போல் செல்லத் தேவையில்லை." என்று மகிழ்ச்சி ததும்ப, உற்சாகக் குரலில் பேசினார். 

கீழை இளையவன் வலை தளம் சார்பாகவும் சட்ட மன்ற உறுப்பினர். பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இராமநாதபுரத்தில் நடை பெற இருக்கும் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம் - 'ரோட்டரி சங்கத்தினரின்' நல்ல முயற்சி !


இராமநாதபுரத்தில் ரோட்டரி இன்டர் நேஷனல் மாவட்ட (3212) நிர்வாகிகளின் முயற்சியில், சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையினருடன் இணைந்து  நடத்தும் குழந்தைகளுக்கான இலவச இருதய சிகிச்சை முகாம், எதிர் வரும் 28.04.2013 (ஞாயிற்றுக் கிழமை) அன்று செய்யது அம்மாள் மேல் நிலைப் பள்ளியில், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடை பெற உள்ளது.

ரோட்டரி இன்டர் நேஷனல் மாவட்டத்தின் (3212) நிர்வாகிகள்  








இதற்கான விழிப்புணர்வு கையேட்டினை, மாவட்ட கவர்னர். ரோட்டரியன் மேஜர் டோனர். H. ஷாஜஹான் அவர்கள் வெளியிட்டுள்ளார். இது குறித்து கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தலைவர். ரோட்டரியன். இஞ்சீனியர். ஆசாத் S.S.ஹமீது அவர்கள் கூறும் போது "கீழக்கரை பகுதியை சேர்ந்த, சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்கள் முகாமுக்கு அழைத்து வந்து, இலவச சிகிச்சைகளையும், ஆலோசனைகளையும் பெற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 


இந்த முகாமில்  பிறந்த குழந்தை முதல் 16 வயது பருவத்தினர் வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ECHO CARDIOGRAM என்கிற முறையில் இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பரிசோதனை செய்யப்படும் என்றும், முகாமுக்கு வருபவர்கள், தங்கள் குழந்தைகளின் அனைத்து பழைய மருத்துவ ரிப்போர்ட்டுகளையும் கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sunday 21 April 2013

கீழக்கரையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் 'டாஸ்மாக்' மது பானக்கடை - விரைவில் அகற்றப்பட பொதுமக்கள் கோரிக்கை!

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் உடனடியாக அகற்றப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டன. ஆனால் கீழக்கரையிலிருந்து,  இராமநாதபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் (மின்சார வாரியம் அருகே) உள்ள டாஸ்மாக் மதுக் கடை மட்டும், மூடப்படாமல் தொடர்ந்து வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.



இது குறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறும் போது "தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் சில கடைகளை மாற்ற இடம் கிடைக்காமலும், மாவட்ட ஆட்சியரிடம் இருந்து உத்தரவு கிடைக்காமலும் உள்ளது. ஆகவே இங்கிருந்து மதுபானக் கடையை அகற்ற மேலும் ஒரு மாத கால அவகாசம் கோரி இருக்கிறோம். விரைவில் குடிமகன்கள் அதிகம் வசிக்கும் நல்ல இடங்களில் கடை கிடைத்தவுடன் இட மாற்றம் செய்து விடுவோம். கொஞ்சம்  பொறுமையாக இருங்கள்" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

இது போலவே, இன்னும் தமிழகத்தின் பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் அகற்றப்படாமல், குடிமகன்களுக்கு 'போதையை கொண்டு சேவை புரிவது' ஒன்றே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய ஜனநாயகத்தின் 'நான்காம் தூண்களாகிய ஊடகங்கள்', வேடிக்கை பார்ப்பதும், மது பானக் கடைகளின் வியாபாரத்தை ஊக்குவிக்கும் முகமாக, டாஸ்மாக் கடைகளின் சுவற்றிலேயே, தங்கள் தினப் பத்திரிகையின் விளம்பரங்களை எழுதுவதும், ஊடகங்கள் போதையில் தள்ளாடுவதை கண் கூடாகக் காட்டுகிறது.

மேலும் இந்த டாஸ்மாக் கடையின் சுவற்றின் மீதே தங்கள் தினப் பத்திரிகையின் 'கல்வி மலர்'  விளம்பரங்களை தெளிவாக தெரியும் 'சிகப்பு மையினால்' வரைந்து, குடிமகன்கள் தூரத்தில் வரும் போதே... டாஸ்மாக் கடை வாசலில் தங்கள் வாகனங்களை நிறுத்தி சரக்கு வாங்குவதற்கு ஏதுவாக சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஆகவே ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியோடு, இன்னும் மூடப்படாமல், தொடர்ந்து கல்லாக் கட்டும் டாஸ்மாக் கடைகள் பற்றி உடனடியாக செய்திகள் வெளியிடுவதன் மூலம், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, பொதுமக்களுக்கு இடையூறாக தமிழகமெங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மது பானக் கடைகளை அகற்ற ஆவண செய்ய வேண்டும்.

இது குறித்து கீழக்கரை மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் உறுப்பினர், பவுசுல் அமீன்  அவர்கள் கூறும் போது "கீழக்கரை நகருக்குள் ஏற்கனவே, மூன்று டாஸ்மாக் கடைகள் வருமானத்தில் சக்கை போடு போடுகிறது. இதனிடையே கீழக்கரை - இராமநாதபுரம் சாலையில் (வண்ணாந்துறை) திடீரென முளைத்த திறந்த வெளி பாருடன் கூடிய டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று, கடந்த ஆண்டு அவசர கதியில் திறக்கப்பட்டது. இதனால் கீழக்கரை நகருக்குள் இயங்கும் கடைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் நெடுஞ்சாலையில் உள்ள கடையில் மதுபானம் வாங்குபவர்கள் பெரும்பாலும் வாகன ஓட்டிகளாகவும், இந்த சாலையில் பயணிக்கும் வெளியூர் வாசிகளாகவும் இருக்கின்றனர். 

இதனால் மதுபானம் அருந்தி விட்டு வாகனம் ஒட்டி செல்வதால், கீழக்கரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த ஆண்டு மட்டும் 20 க்கும் மேற்பட்ட விபத்து சம்பவங்கள், நடந்து உள்ளன. இந்த விபத்துகளில் பெரும்பாலானவை மது அருந்தி வாகனம் ஒட்டியதே என காவல் துரையின் முதல் தகவல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இப்போது நீதி மன்ற உத்தரவு பிறப்பித்த பின்னரும், மது விற்பனையை அதே இடத்தில் தொடர்வது, நீதியையும், நீதி மன்றத்தையும் அவமதிக்கும் செயலாகும். ஆகவே நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் உடனடியாக, மது பானக் கடைகளை அகற்ற வேண்டும்" என்று தெரிவித்தார். 


கடந்த, 2011ம் ஆண்டு, தேசிய அளவில் அதிக சாலை விபத்துகள், தமிழகத்தில் தான் நடந்தன. தேசிய போக்குவரத்து திட்டமிடல் மற்றும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, 2011ல், தமிழகத்தில் 65,873 விபத்துகளில், 15,422 பேர் உயிரிழந்தனர். அதே போல், 2010ம் ஆண்டு, சாலை விபத்துகளிலும் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், மார்ச் 31ம் தேதிக்குள் அவை மூடப்பட வேண்டும் என, உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது.

FACE BOOK COMMENTS:

Unlike ·  · Share

  • Keelai Ilayyavan சென்னை உயர் நீதி மன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல், இன்னும் நெடுஞ்சாலைகளில் சாராயம் விற்று காசு பார்த்துக் கொண்டிருக்கும் கேடு கேட்ட செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. டாஸ்மாக் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் குடிமகன்கள், தங்கள் வாகன டேன்குகளுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதைப் போல, தங்கள் வயிறுகளுக்குள் போதைகளையும் நிரப்பிக் கொள்கிறார்கள். 


    இதனால் அவர்களும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பத்தோடு, அப்பாவி பொது மக்களையும் பலி கொல்வது தொடர் கதையாகி வருகிறது. இதை எல்லாம் கண்டும் காணாமல், கடந்து போகும் ஊடக நண்பர்கள், கண்களில் போதை ஏற்றியது யார் ? அவர்களை மதி மயக்கச் செய்தது எது ??
  • Mohamed Yaseen Everyone should oppose this.then only your's belonging(family persons) will stay safe for further. .
    Sunday at 8:10pm via mobile · Unlike · 1
  • Fouz Ameen இவனுங்க நல்லா சம்பாதிக்கிற எடத்த விட்டு போக எப்புடி மச்சான் மனசு வரும்.. குடிமகன்களுக்கு சவுரியம் செஞ்சி கொடுக்கும் அம்மா நாமம் வாழ்க்க

கீழக்கரை வாழ் 'நிருபர்கள்' சமூகத்திற்கு 'கீழை இளையவனின் சவால் ! 
(updated 23.04.2013, 9.30 am)

கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் (மின்சார வாரியம் அருகே), பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக, உயர் நீதி மன்ற உத்தரவையும் மீறி செயல்  பட்டுக்கொண்டிருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடை குறித்து, கீழை இளையவன் வலை தளத்தில் செய்தி வெளியிட்டது 'மாபெரும் தவறு' என்றும், உயர் நீதி மன்ற உத்தரவு என்பது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாராயக் கடைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், 

கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலை என்பது 'கிழக்கு கடற்கரை சாலை' என்றும், ஆகவே கீழக்கரை வாழ் பொதுமக்களும் பெண்களும், அதிகமாக பயணிக்கும் இந்த சாலைக்கு பொருந்தாது என்றும், எனவே அதே இடத்தில் டாஸ்மாக் தொடர்வதே சிறந்தது என்றும், சில தினப் பத்திரிக்கை நிரூபர் பெருமக்கள், வீதி தோறும் கொக்கரித்து திரிவதாக அறிகிறேன். 

ஐயா நிரூபர்களே...  நீங்கள் செய்ய வேண்டிய நான்காம் தூணின் உன்னத பணிகளை, பணத்திற்காக அல்லாமல், சேவை நோக்கோடு நான் அவ்வப்போது செய்து வருவது தாங்களுக்கு எரிச்சலூட்டுகிறதா? செய்திகள் வெளியிடுவது உங்களுக்கு 'தொழில்'. எனக்கு சமூக அக்கறை தாங்கிய 'பொழுது போக்கு'. சரி... நேரடியாக சவாலுக்கு வருவோம். 

உங்களுக்கு திராணி இருந்தால், நீங்கள் நடு வீதிகளில், சம்பந்தம் இல்லாத நபர்களிடம், வீண் வாதம் புரிவதை விட்டு விட்டு, உங்கள் (மேற்கண்ட தட்டுக் கெட்ட) கருத்துகளை, நீங்கள் பணியாற்றுவதாக சொல்லிக் கொள்ளும் தினப் பத்திரிகைகளில் வெளியிடத் தயாரா ? அவ்வாறு நீங்கள் செய்தி வெளியிட்டு, நீங்கள் நெஞ்சம் நிமிர்ந்து, கீழக்கரை நகர வீதிகளில்  நடப்பீர்களாயின், நான் என் கீழை இளையவன் வலை தளத்தை மூடத் தயார்.

அதே போல், ஒரு வாதத்திற்காக, தாங்கள் கொக்கரித்து திரிவது போலவே, கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலை, சாதாரண சாலையாகவே இருப்பினும், நான் 'தனி மனிதனாக',     நம் கீழக்கரை நகர் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நீதியின் அடிப்படையில், சட்டத்தின் அடிப்படையில், நீதி மன்றத்தின் கதவுகளை தட்டி, 

கீழக்கரை - இராமநாதபுரம் நெடுஞ்சாலையில், கால நேரம் இல்லாமல், கல்லாக்  கட்டிக் கொண்டிருக்கும் டாஸ்மாக் மது பானக் கடையை, இன்றிலிருந்து 60 நாள்களுக்குள், நான்  அப்புறப்படுத்துவேன். நான் அவ்வாறு செய்வேனாயின், ஐயா நிருபர்களே.. தாங்கள் பணி புரிவதாக, இது வரை சொல்லிக் கொண்டிருக்கும், தினப் பத்திரிகைகளிலிருந்து, விலகி வேறு ஏதாவது, தெரிந்த தொழிலை திறம்பட செய்யத் தயாரா ??

தாங்களின் பதிலை நேரடியாகவோ, முகப் புத்தகத்தின் கருத்து பதிவுகள் வாயிலாகவோ அல்லது என் அலை பேசியிலோ எதிர்பார்க்கிறேன். அலை பேசி எண் : 97917 42074

அன்புடன்,
கீழை இளையவன் 

FACE BOOK COMMENTS:


  • Abu Faizel மச்சான் நல்ல ஒரு idea முகப் புத்தகத்தின் மூலம் ஒரு ஓட்டுஎடுப்பு எடுத்தால் என்ன.......... 

    1, கீழை இளையவன் வலை தளத்தில் செய்தி வெளியிட்டது சரியாய் 
    2, பத்திரிக்கை நிரூபர் பெருமக்கள், வீதி தோறும் கொக்கரித்து திரிவது சரியாய்

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' அருமையான சவால் தம்பி. நம் கீழக்கரையை பொருத்தமட்டில், ஒரு காலத்தில் நிருபர்கள் என்றால் மதிப்பும் மரியாதையும் இருந்தது. அந்த அளவுக்கு உண்மை செய்திகளை, காசு வாங்காமல், கண்ணியமாக செய்து வந்தார்கள். ஆனால் இன்றோ.. 100 ரூபாய் கொடுத்தால் வரி செய்தி. 200 கொடுத்தால் பத்தி செய்தி, 500 கொடுத்தால் பெட்டி செய்தி, 1000 கொடுத்தால் தலைப்பு செய்தி என்று காசுக்காக மட்டும் வேலை பார்க்கும், காலமாக இப்போது போய் கொண்டிருக்கிறது. 


    நிரூபர்களுக்கான எந்த தகுதியும் இல்லாமல், நானும் நிரூபர் தான் என்று ஊருக்குள், சில தினப் பத்திரிகைகளின் விளம்பர ஏஜண்டுகள் தற்போது திரிகின்றனர். தங்கள் வாகனங்களில் PRESS என்று போட்டுக் கொண்டு பந்தாவாக திரியும் இவர்களுக்கு, இளையவனின் சவாலே சவால்.
  • Segu Sathaku Ibrahim கீழக்கரை நகரில் 3 டாஸ்மார்க் கடை இருக்கிறது அதில் 1 க்கு அனுமதி இல்லை, இதை இந்த தூண்கள் கேட்க வில்லை, நகராட்ச்யில் தீர்மானம் போட்டும் இன்னும் அகற்ற படவில்லை, நகர் நிர்வாகம் அல்லது PRESS நடவடிக்கை எடுக்குமா ? இந்த சவால் சரியானது .
  • கீழக்கரை இந்தியன் தாத்தா நெத்தியடி சவால்.. வளர்க உம் சமூக பணிகள்
  • Fouz Ameen ஹலோ நிரூபர்'ஸ்... டொக் டொக் டொக்.
  • Maraika Basheer thamby keelaqi ilayavan avargalukku ungal muyarchikku nangal eppodum ungal pinnal iruppom insha allah
  • Ali Rizab Open Challenge from keelai illaiyavan.....hello dummy reporters got the Guts?

  • Alim Hussain Sabaash... 

  • Mohamed Raisudeen தேசிய நடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட சொல்லி நீதி மன்றம் உத்தரவு அதை பின்பற்றி தமிழக முதல்வ் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளவைகளும் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.

  • Keelai Ilayyavan எனதருமை முகப் புத்தக நண்பர்களுக்கு... நான் பகிர்த்து கொள்ளும், சமூக நலன் தாங்கிய பதிவுகளில், தாங்கள் கருத்துகள் பதியும் போது.... மிகுந்த நாகரீகத்துடனும், கண்ணியமான முறையிலும், யார் மனதையும் புண்படுத்தாத வகையில் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். 


    அதையும் தாண்டி, தங்கள் உண்மையான முகத்தை வெளிக் காட்டியும், முகத்திரையை வெளிக் காட்டாமலும், தவறான சொற் பிரயோகங்களால் கருத்துகள் பதிந்தால், அதற்கு நானோ, நிர்வாகக் குழு நண்பர்களோ பொறுப்பல்ல.

    மேலும் அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு நானோ, கீழை இளையவன் வலை தளமோ, எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

    அன்புடன் 
    கீழை இளையவன்
  • Najeeb Kilakarai Sabaas raja

  • கீழக்கரை ஒற்றுமை கீழக்கரை "புதிய ஒற்றுமை" என்ற பெயரில் எழுதுவது நான் அல்ல - Ahamed Kuthubudeen Raja (கீழக்கரை ஒற்றுமை)


    அஸ்ஸலாமு அலைக்கும், Ahamed Kuthubdeen Raja ஆகிய நான் கீழக்கரை ஒற்றுமை என்ற பெயரில் இந்த தளத்தில் பொதுவான செய்திகளை பதிவு/மறு பதிவு செய்கிறேன். இதன் பிரபலம் கண்டு வேறு ஒருவர் இதே பெயரில் தன் சுய பிரச்சினையை தீர்பதற்கு பதிவு செய்தார், அவரிடம் தன்மையாக எடுத்துரைத்து பின்னர் அவர் அதை நிறுத்தி விட்டார், அல்ஹம்துலில்லாஹ்!.இந்த ID நான் தான் என்பதையும் ஒளிவு மறைவு இன்றி முன்பே பகிரங்கப்படுத்தியும் விட்டேன். ஆனால் கடந்த 10 மாதகாலமாக "புதிய" என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டு "கீழக்கரை புதிய ஒற்றுமை" என்ற பெயரில் நமது சகோதரர் ஒருவர் கருத்துகளை பதிவு செய்து கொண்டு இருக்கிறார். அது அவருடைய உரிமை என்று நாகரீகம் கருதி நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ( அவர் யார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் அவரே தன்னை வெளிபடுத்த விருப்பம் இல்லை என்பதால் நான் மெளனம் காக்கிறேன்) சமீபகாலமாக என்னுடைய எழுத்து சாயலில் அவர் கமெண்ட் செய்வதால் பெரும்பாலோர் அது நீங்கள் தானா? என்று என்னிடம் நேரடியாகவும், தொலைபேசியிலும் விசாரித்தார்கள். அதனால் தான் இந்த விளக்கம் தரும் சூழ்நிலை ஏற்பட்டது. இதன் மூலம் கீழக்கரை புதிய ஒற்றுமை" என்ற பெயரில் பதிக்கும் கருத்துகளுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.. எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
    23 hours ago · Unlike · 1

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரை ஒற்றுமை' என்கிற பெயரில் முகப் புத்தகத்தில் இருக்கும் சகோதரர் குத்புதீன் ராஜா அவர்கள் செய்தது போலவே, அதே யுக்தியை கடைபிடிக்கிறேன் என்று அவர் முக புத்தகத்தில் சொல்லுவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. இருந்தாலும், அல்லாஹ்வுக்கு பயந்து ஒன்றை ஒப்புக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். நானும் ஒரு வயோதிக பருவத்தினனாக இருப்பதால், எங்கே என் முகப் புத்தகத்தில், இளம் பருவத்தினர் இணைய மாட்டார்களோ என்ற அச்சத்தில் மட்டுமே, இது வரை என்னை வெளிக் காட்டிக் கொள்ள முடியவில்லை. அல்ஹம்துலில்லாஹ் இப்போது என் முக புத்தகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் இணைந்துள்ளார்கள். 


    இறைவன் நாடினால் விரைவில் எனது முகப் புத்தகத்தில் ஒரு 3000 நண்பர்கள் இணைந்த உடன், முகப் புத்தகத்தில் சிறு அளவில் 'நான் யார் ?"' என்பதற்கு ஒரு கருத்துக் கணிப்பு நடாத்தி, எனது புகைப்படத்தை வெளியிடுவேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இது வரை யாருடைய மனதையும் புண்படுத்தும், நோக்கத்தோடு கருத்துகளை பதிந்தது கிடையாது. அவ்வாறு சில நேரங்களில் நான் பதிந்ததாக் சிலர் எண்ணினால், நான் கருத்து பதிவிட்ட வாசகங்கள் உண்மைகளை தாங்கிய வார்த்தைகளாக இருந்திருக்கும். உண்மைகள் எப்போதும் கசக்கத் தானே செய்யும்?
    14 hours ago · Unlike · 1

  • Keelai Ilayyavan அன்பு 'கீழக்கரை புதிய ஒற்றுமை' காக்கா... 


    தங்களின் கண்ணியமான பதிலுரைக்கு நன்றி. முகப் புத்தகத்தில் 3000 நண்பர்கள் இணையும் வரை காத்திருக்காமல், மிக விரைவில் தங்கள் முகத் திரையை விலக்கும் படி கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

    உண்மையான கருத்துகளை பதிவதாகஇருந்தாலும், முகத்தை மறைத்து கொண்டு சொல்வதால், அதற்கு எந்த வீரியமும் இல்லை. அதற்காகத் தான் 'கீழக்கரை ஒற்றுமை' குத்புதீன் ராஜா காக்கா, ஆரம்ப காலக் கட்டத்தில் முகத்திரை இட்டு, நல்ல பல கருத்துகளை பதித்தாலும் கூட, வெகு சீக்கிரம் வெளி உலகுக்கு தன்னை காட்டிக் கொண்டார்கள்.

    ஆகவே நீங்கள் மட்டுமல்ல... முகப் புத்தகத்தில், இன்னும் பல நல்ல கருத்துகளை பதியும் அன்பர்கள், தங்கள் புகைப் படத்தை வெளியிட்டு, 'தைரியமாக', உண்மையான வாசகங்களை, கண்ணியமான முறையில் பதிய, விரைவில் வெளி வர வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். 

    அன்புடன் 
    கீழை இளையவன்.
    12 hours ago · Like · 1
  • கீழக்கரை ஒற்றுமை சகோதரர் "புதிய ஒற்றுமை" தன்னை காட்டிக் கொள்வதும், காட்டிக் கொள்ளாததும் அவருடைய உரிமை. ..நான் இந்த IDஐ பயன்படுத்துகிறேன் என்று நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். அதில் சிறு மாற்றம் செய்து, நான் முன்பு பயன்படுத்திய படத்தையே போட்டதால் தான் ஒற்றுமையில் "புதிய" குழப்பம் ஏற்பட்டது.அவர் வேறு பெயரில் வந்திருந்தால் நான் இந்த கருத்துப் பதிவே செய்திருக்க மாட்டேன். அவர் இதேபோல் IDஐ உபயோகப்படுத்தியதன் நோக்கம் என்னவென்று அவருக்கும் அல்லாஹுவுக்குமே வெளிச்சம். பத்து மாதங்களாக நான் இதை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. என்னிடம் இந்த "புதிய ஒற்றுமை"யில் எழுதுவது நீஙகளா? என்று கேட்டதால் தான் இந்த தன்னிலை விளக்கம். என் கருத்துக்களால் "புதிய ஒற்றுமை" மனம் வருந்தி இருந்தால் அல்லாஹ் ரசூலுக்காக மனம் பொறுந்திக் கொள்ளவும். இதற்கு மேல் இந்த சர்ச்சையை நான் வளர்க்க விரும்பவில்லை, இது குறித்து இது தான் என் கடைசிப் பதிவு.. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
    11 hours ago · Unlike · 1