தேடல் தொடங்கியதே..

Saturday 24 November 2012

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியின் ஏற்பாட்டில் மாணவர்கள் 'கல்விச் சுற்றுலா' - இன்று (24.11.2012) டார்ஜிலிங், கொல்கத்தா பயணம் - பிள்ளைகளை வழியனுப்ப பள்ளியில் குவிந்த பெற்றோர்கள் !

பள்ளி மாணவர்கள் வருடம் முழுவதும், பள்ளிப் பாடங்களை ஏட்டளவில் படித்துப் படித்து களைத்துப் போன கண்களுக்கு, கல்விச் சுற்றுலா என்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. பள்ளிகளில் அழைத்து செல்லும் இது போன்ற சுற்றுலாக்களால் மாணவர்களின் மனதிற்கு நிம்மதியையும், புத்துணர்வையும் அளிப்பதோடு, அவர்களின் மன இறுக்கத்தையும் வெகுவாக குறைக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை இது போன்று கல்வி சுற்றுலா செல்லும் மாணவர்கள், இறுதியாண்டு தேர்வுகளில், அதிக மதிப்பெண்கள் பெற்று, மிக சிறப்பாக தேர்ச்சி பெறுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.



இதனை கருத்தில் கொண்டு, இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இபுராகீம் அவர்கள் இந்த சுற்றுலாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். அதற்கான சுற்றுலா பயணம், இன்று காலை 9 மணியளவில், தெற்குத் தெரு இஸ்லாமியா பள்ளிகள் வளாகத்தில் இருந்து இனிதே துவங்கியது. இதில் இப்பள்ளியின் 8 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை உள்ள 91 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியப் பெருந்தகைகள், ஆசிரியர் திரு.அருள் டேவிஸ் ராஜ் அவர்கள் தலைமையில் சென்றுள்ளனர். முன்னதாக, தெற்குத் தெரு பள்ளியின் தலைமை இமாம் அமானி ஆலீம் அவர்கள் பயணத்திற்கான துஆ வை ஓதி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். 







இது குறித்து கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர் செய்யது ரசீன் அகமது அவர்கள் கூறும் போது " நண்பர்களுடனும், ஆசிரியர்களுடனும் சேர்ந்து கல்வி சுற்றுலா செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 12 நாள்கள் நீளும் எங்கள் சுற்றுலாவில் கொல்கத்தா, டார்ஜிலிங், கேங்க்டக் (இமய மலையின் அடிவாரப் பகுதிகள் மற்றும் சிகரங்கள்) என்று புதிய, புதிய இடங்களை முதன் முறையாக சுற்றிப் பார்க்க இருக்கிறோம். இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த தாளாளர் அவர்களுக்கும், எங்களுக்கு அனுமதி அளித்து வழியனுப்பும் பெற்றோர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். 





நம் இளைய தலைமுறை மாணவர்கள், இது போன்ற கல்விச் சுற்றுலாக்கள் மூலம், பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், வித்தியாசமான் மனிதர்கள் மற்றும் அவர்கள் வாழிடங்கள், உடைகள், நடைமுறை பழக்க வழக்கங்கள், மொழிகள் என்று அறிந்து கொள்வதற்கும், ஏட்டளவில் மட்டுமில்லாமல், ஆத்மார்த்தமாய், மனதில் உள் வாங்கிக் கொள்வதற்கும், பேருதவி புரிகிறது. ஆகவே நம் கீழக்கரை நகரின் ஏனைய பள்ளிகளும், கல்லூரிகளும் ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் மாணவர்களை கல்விச் சுற்றுலாக்களுக்கு அழைத்து செல்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். 

இஸ்லாமியா பள்ளி மாணவர்களின், இந்த கல்விச் சுற்றுலா இனிதே சிறப்புற, கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனவார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 


2 comments:

  1. En arumai marumagankalukkum matrum aenaiyae maanavarkalukkum vaalththukkal, Paathugaappavarkalilellaam Allah Melaanaavan, avanae maanavachchaelvangali paththiramaaga aananthaththudan thirumba konduvaruvatharkku poathumaana van.
    ReplyDelete
  2. எந்தன் அன்பிற்கினிய இஸ்லாமிய பள்ளியின் தம்பிமார்களின் கல்விச் சுற்றுலா இனிதாய் அமைய நல் வாழ்த்துகள். அவர்கள் எந்தவிதமான பிரச்சனைக்கும் ஆட்படாமல் நலமாய் ஊர் திரும்ப வல்ல ரஹ்மானிடம் இரு கரம் ஏந்தி துவா செய்கிறோம்..

    நல்ல முயற்சி. நீண்ட பயணம். நூறுக்கு ஒன்று குறைவான நபர்கள். மலைப்பு தருகிறது. ஏக நாயன் அவனின் சகல பாதுபாப்பையும் அவர்களின் மீது நல்குவானாக. ஆமீன். ஆமீன். யாரப்பில் ஆலமீன்.

    சுட்டி காட்டுவதற்கு மிகவும் வருந்துகிறோம்..பயணம் திட்டமிட்டதில் சிறு குறை ஏற்பட்டு விட்டதாக கருதுகிறோம்.. அதுவும் நம்மை போன்று டிராபிக்கல் ஏரியாவில் வாழும் சிறுவர்களுக்கு டார்ஷிலிங், கேங்டாங்க் செல்ல ஏற்ற நேரமில்லை.. நவம்பர் ,டிசம்பர் மாதங்களில் அங்கு குளிர் மைனஸ் டிகிரியில் இருக்கும். அதுவும் இமயமலையின் அடிவாரம்.. பிரதேசம் முழு வெள்ளியை உருக்கி ஊற்றிய்து போல பனி படர்ந்திருக்கும். சிறுவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும்..அதிகாலையில் அவசரத்திற்கு நீர் கிடைக்காது. பனிக் கட்டிகள் தான் இருக்கும்.. பன் முறை அந்த பகுதியில் பயனித்தவன் என்ற முறையில் என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறோம்..

    நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்க இரு கரம் ஏந்தி படைத்து காகும் ரப்பில் ஆலமீனிடம் துவாச் செய்வோமாக. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆகமீன்..

Face Book Comments:

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' இறைவனின் துணை கொண்டு, மகிழ்வுடன் சென்று, புதுப் புது நல்ல செய்திகளை அறிந்தவர்களாக, அறிவார்ந்தவர்களாக திரும்ப வாருங்கள்...
    5 hours ago · Like · 2
  • Riffan Zyed Happy Journey with Allah's grace
  • Mohamed Rafi Ar HAPPY AND SAFE JOURNEY MY BROS..............
  • Fouz Ameen நல்லா சந்தோசமா போயிட்டு வாங்க தம்பிகளா
    4 hours ago · Like · 1
  • Abdul Rahman உலகில் எத்தனை நாடுகள் சுற்றி வந்தாலும், ஒருவரின் மனதில் என்றும் பசுமையாக பதிந்து நிலைத்து இருப்பது, பள்ளிக்கூட (நாட்களில்) நண்பர்களுடன் சென்று வரும் சுற்றுலா மட்டுமே!! 
    இவர்களின் இந்த பயணம் இனியதாகவும், பாதுகாப்பானதுமாக அமைய இறைவன் அருள் புரிவானாக!!!
    3 hours ago · Edited · Unlike · 2
  • ஹஸன் அலி Guys whatever you do "safety first"...do not get off your train anywhere alone. Before leave your camp ensure leave information. Do not wear expensive & gold old ornaments might put you in risk. keep your cell phones always charged. Gear up and enjoy guys..I really feel your happiness..........Enjoy
    2 hours ago · Unlike · 1
  • Waji Buddycool அல்லாஹ் உன் காவல்
    2 hours ago · Like · 1
  • Sahul Hameed ALLAH WILL PROTECT YOU ALL
  • Mohamed Irsath உங்கள் பயணம் நல்ல படி அமைய வாழ்த்துகள் அல்லா துணை நிப்பான் ஆமீன்

கீழக்கரை ஜின்னா தெருவில் 'புதிய 250 KV' (மின் மாற்றி) டிரான்ஸ் பார்மர் - பொதுமக்கள் மகிழ்ச்சி !

கீழக்கரையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இங்குள்ள துணை மின் நிலையம் மூலம் கூடுதல் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், நகரின் பல பகுதிகளில் அமைக்கப்படாததால், தற்போதுள்ள மின் பயன்பாட்டிற்கு ஈடு கொடுக்க முடியாமல், பல இடங்களில் உள்ள  மின்கம்பிகள் இரவு நேரங்களில் அறுந்து விழுந்து விபத்துக்களை ஏற்படுத்தி வந்தது.  இந்த பிரச்சனையை தீர்க்கக் கோரி, மின்சார வாரித்தினரிடம் பொது மக்கள், அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்களை மாற்ற வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 



இந்நிலையில் கீழக்கரை ஜின்னா தெரு பகுதியில் அமைந்துள்ள் 100 KV திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், தற்போது மாற்றப்பட்டு 250 KV மின் திறன் உள்ள டிரான்ஸ்பார்மர் மின் வாரிய ஊழியர்களால் நிறுவப்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக பெரும் அவதியடைந்து வந்த இந்த பகுதி மக்கள் நிம்மதி அடைத்துள்ளனர். 



இது குறித்து ஜின்னா தெருவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜனாப். ஜிப்ரி என்கிற ஜூஜூ.. அவர்கள் கூறும் போது "இந்தப் பகுதியில் நீண்ட காலமாக சீரான மின் அழுத்தம் கிடைக்காததால் மின் சாதன பொருட்களை பயன்படுத்த மக்கள் அச்சப்பட்டு வந்தனர். மின் விசிறிகள் குறைந்த வேகத்தில் சுழல்வதால் இரவு நேரங்களில் தூங்க முடியாத வியர்வையால் தவித்து வந்தனர். மேலும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்சாரம் தடை பட்டு வந்தது. இதற்கு இப்போது நல்ல தீர்வு கிடைத்துள்ளது." என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

Friday 23 November 2012

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்தை சேர்ந்த லெப்பை தெரு, மர்ஹூம் ஜனாப். நெய்னா முஹம்மது ஹாஜியார்,  ஜனாபா. முஹம்மது சதக்கு உம்மா ஆகியோர்களின் மகனும், ஜனாபா. ஜனுபா அவர்களின் கணவரும், கீழக்கரை 'லக்கி ஜுவல்லர்ஸ்' முஹைதீன் அடுமை அவர்களின் சகலையும்,  சென்னை லக்கி எண்டர்ப்ரைசஸ் ஆரிபீன், இப்ராஹீம் ஆகியோர்களின் சகோதரரும் சென்னை 'லக்கி ஜுவல்லர்ஸ்' (N.S.C.போஸ் ரோடு) ஸ்தாபகருமான N. நவாஸ் கான் அவர்கள் இன்று (23.11.2012) நண்பகல் சுமார் 1 மணியளவில், கீழக்கரையில் உள்ள அவர்கள் இல்லத்தில் வாபாத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).



அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் நாளை (24.11.2012) காலை, கீழக்கரை மின் ஹாஜியார் பள்ளிவாசல் மைய வாடியில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சரியான நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :

ஜனாப். முஹைதீன் அடுமை - 9942065575

கீழக்கரையில் திடீர் சாக்கடை ஆறுகளால் பொதுமக்கள் கடும் அவதி - வாறுகால்களை விரைந்து சீர் செய்ய வேண்டுகோள் !

கீழக்கரையில் ஓடும் சாக்கடை சங்கமங்களை மூன்று விதங்களாக வகைப் படுத்தலாம். (இது கீழக்கரையின் 'சாக்கடை' குறித்த பொது அறிவுக்காக, இந்த சிறப்புத் தகவல் கொடுக்கப்படுகிறது.)
  1. வற்றாத சாக்கடை ஜீவ நதிகள் - பிறப்பிடம் : வடக்குத் தெரு கொந்தக் கருணை அப்பா பகுதி (வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருப்பது)
  2. திடீர் சாக்கடை ஆறுகள் - பிறப்பிடம் : சேனானா.தெரு, O.J.M.தெரு, ஜின்னா தெரு, பெட்ரோல் நிலையம் அருகில் (மாதத்தில் ஒன்றிரண்டு முறை தெருக்களை நனைப்பது)
  3. வெள்ளிக் கிழமை சாக்கடை ஊற்றுகள் - பிறப்பிடம் : ஜும்மா பள்ளி அருகாமை, நடுத் தெரு (வாரத்தில் வெள்ளிக் கிழமை மட்டும் காட்சி தருவது)


இன்று அதிகாலையில் சேனானா தெரு (S.N தெரு), S.M.லேத் பகுதியிலிருந்து புறப்பட்ட திடீர் சாக்கடை ஆறு, புரதான மீன் மார்க்கெட் வரையில் வழிந்தோடி வாசனை பரப்பியுள்ளது. பொது மக்கள் மிக அதிகமாக புழங்கும் இந்த பகுதியில் இருந்து முஸ்லீம் பஜாருக்கு செல்பவர்களும், மீன் கடைக்கு செல்வோர்களும், வெள்ளிக் கிழமை தொழுகைக்கு செல்பவர்களும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தப் பகுதியில் தான் கீழக்கரை நகராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோர்களின் இல்லங்கள் இருப்பது குறிப்பிடத் தக்கது.

இந்த மூன்று சங்கமங்களுக்கும் முழு முதற்காரணமாக இருப்பது, பல்லாண்டு காலமாக கழிவு நீர் வாறுகால்கள் சுத்தபடுத்தப் படாமலும்,தரை மட்டத்திலிருந்து உயர்த்தி கட்டப் படாமல் இருப்பதும், வாறுகால்களுக்கு மூடிகள் போடாமல் இருப்பதும் தான் என்பது கண் கூடாக தெரிகிறது. 



இது குறித்து பவுசுல் அமீன் அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் காலம் காலமாக தீர்க்க முடியாத பிரச்சனையாக, தெருக்களில் ஓடும் சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. இதற்காக கீழக்கரை நகர் மன்றத்தால் ஒரு சில இடங்களில் மட்டும், வாறுகால்களை சுத்தப்படுத்தி, உயர்த்தி கட்டியதோடு, மூடிகளும் போடப்பட்டு உள்ளது. ஆனால் நகரின் பல முக்கிய பகுதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வாருகால்களில் இருந்து வழிந்தோடும் சாக்கடை நீரால் கடும் சுகாதரக் கேடு நிலவி வருகிறது. உடனடியாக அரசு வழங்கும் நிதிகளை வீணடிக்காமல், முதலில் சுகாதாரத்தை பேணும் வகையில் வாறுகால்களை புனரமைப்பு செய்ய வேண்டும்." என்று தெரிவித்தார்.  

Comment:

  1. நகராட்சி சார்பாக எமது பதிலுரை: சொரணை கெட்ட மக்களே. சற்றே பொருத்து கொள்ளுங்கள்.விரைவில் துரித நடவடிக்கை எடுக்கப்படும்..

    Face Book Comments:


    • Abu Faizel என்ன கொடுமை சார்
    • Noohu Rizwan kilakarai ku eappa than videwoo kaalam varum
    • Badhru Zaman chairman vandu ida pakkanum anal avanga mappiladana vandu pakkuraru adanala vidivukalam porakadu
    • Mohamed Nageem Marika இந்த மாதிரி நாரிகிடக்கும் செயல்களைப் பார்த்தால் ஒன்றுக்கும் உதவாத ஆனையர்கள் நமது நகராட்சிக்கு கிடைத்து விட்டார்களோ என்று நினைக்க தோன்றுகிறது!!!! சேர்மன் அவர்கள் ஊர்ப் பனியில் கவனம் செலுத்துவது இல்லையோ என்ற என்னமும் தோன்றுகிறது!!!!
    • Asan Hakkim Tamil nadil Entha katchi atchikku anthaalum Kilakarai Ippadithaan irukum intha kodumaikku eppothu mudiuuu kidaikkum