தேடல் தொடங்கியதே..

Saturday 17 November 2012

கீழக்கரையில் கோழிக்கறி விலைச் சரிவால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சி !


கீழக்கரையில் 'மீன் ' பிரதான உணவாக இருந்தாலும் கூட, தற்சமயம் கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள் ரூ.150 க்கு குறைவாக நல்ல மீன்களை வாங்க முடிவதில்லை. கீழக்கரையில் தற்போது ஒரு கிலோ ஆட்டுக் கறி ரூ.400 ஆகவும், மாட்டுக் கறி விலை ரூ.180 ஆகவும் இருப்பதால் ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும், 'இறைச்சிகள் எல்லாம்' வெறுமெனே காட்சிப் பொருளாக, பார்க்க மட்டுமே முடிகிறது. இந்நிலையில் தற்போது கீழக்கரையில் கோழிக்கறி விலை  நீண்ட  நாள்களுக்குப் பிறகு மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது. உயிர்க் கோழி ரூ.63 க்கும், கறிக் கோழி ரூ.100 க்கும், சில இடங்களில் ரூ.90 க்கும் விற்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கோழிக் கறி கடைகளில் நேற்று முதலே கூட்டம் அலை மோதுகிறது. 







இது குறித்து கீழக்கரை நெய்னா முஹம்மது தண்டையல் தெருவில் வாப்பா  பிரைலர்ஸ் கோழிக்கறி கடையின் உரிமையாளர். ஜனாப். அகமது காக்கா அவர்கள் கூறும் போது  "கர்நாடகாவில் கறிக்கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கர்நாடகாவில் இருந்து செல்லும் கறிக் கோழிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக கறிக் கோழிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேவையில்லாத இந்த பறவை காய்ச்சல் பீதி காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் கறிக் கோழிகளை கேரளாவுக்குள் அனுமதிப்பதில் கடந்த வாரம் சிக்கல் நீடித்தது. இதனால், கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் ரூ.150 கோடி மதிப்பிலான கறிக்கோழிகள் பண்ணைகளில் தேக்கமடைந்தது.


சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் முட்டைகள், கறிக் கோழிகள் தேக்கம் அடைந்தன. தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் சராசரியாக 10 லட்சம் கிலோ வரை கறிக் கோழிகள் கேரளாவுக்கு செல்லும். இதனால் தமிழகமெங்கும் கோழிக்கறி விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்போது நிலைமை சீரடைந்து வருகிறது. ஆகவே இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே இந்த விலை குறைவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்று தெரிவித்தார்.

இராமநாதபுரத்திலும், கீழக்கரையிலும் கோழி வறுவல், தந்தூரி சிக்கன், சிக்கன் பக்கோடா, பொரியல் என்று அனைத்து சிக்கன் ஸ்டால்களும் குறைந்த விலையில், தங்கள் விற்பனையை முடுக்கி விட்டுள்ளது. இதனால் 'சிக்கன் பிரியர்கள்'  பெரும் சந்தோசத்தில் ஆழ்ந்துள்ளனர். 

கீழக்கரையில் இடைத்தரகர்கள் இடையூறால் 'இஸ்லாமிய திருமண சான்றிதழ்' பெறுவதில் சிரமம் !


இராமநாதபுரம் மாவட்டம் முழுமைக்கும் இஸ்லாமியர்களின் திருமணத்தை பதிவு செய்வதற்கான மாவட்ட டவுன் காஜி அலுவலகம் கீழக்கரையில் இயங்கி வருகிறது. கீழக்கரையிலிருந்தும் மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் திருமணத்தை பதிவதற்கும், மணமுறிவு சான்றிதழ்கள் பெறுவதற்கும் இங்கு தினமும் வந்து செல்கின்றனர். அதில் திருமண சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் தற்போது வெகுவாக உயர்ந்துள்ளதாகவும், இந்த அலுவலகத்தின் வாசலில் காத்திருக்கும் இடைத்தரகர்களிடம் மாட்டும் பொதுமக்களிடம் இரட்டிப்பாக பணத்தை பெற்று, திருமண சான்றிதழ் விரைந்து வாங்கித் தருவதாகவும் பொது மக்கள்  வருத்தம் தெரிவிக்கின்றனர். 


இது குறித்து சமூக ஆர்வலர் சேகு சதக் இபுறாகீம் அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் இஸ்லாமிய திருமண சான்றிதழ் வேண்டி மாவட்ட தலைமை ஹாஜி இடம் விண்ணபிக்கும் மக்களிடம் இடைத்தரகர்கள் தற்பொழுது 1000 ரூபாய்க்கு மேல் வசூல் செய்கின்றனர். கடந்த மூன்று மாதம் முன்பு வரை திருமண சான்றிதழ் பெறுவதற்கு ரூபாய் 500 ஆக தான் இருந்தது. ஆனால் தற்போது திடீரென கட்டணம் இரட்டிப்பாகி இருக்கிறது. ஆனால் சென்னை தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அலுவலகத்தில் தரும் திருமண சான்றிதழுக்கு எந்த வித கட்டணமும் இல்லை. இங்கு மட்டும் இவ்வளவு அதிகமாக செலவழிக்க வேண்டி இருக்கிறது.

இங்கு சான்றிதழ் இலவசம் என்றால் அலுவலத்தில் இலவசம் என்று தகவல் வைக்க வேண்டும், சான்றிதழுக்கு கட்டணம் என்றால், உண்மையான கட்டணம் எவ்வளவு? திருமண, மண முறிவு சான்றிதழ் போன்றவை பெறுவதற்கு என்னென்ன தகவல்களை விண்ணப்பிப்பவர் இணைக்க வேண்டும் என்பதனை அறிவிப்புப் பலகையாக வைக்க வேண்டும். மேலும் வசூலிக்கும் தொகைக்கு உரிய இரசீது கொடுக்க வேண்டும். இந்த விசயத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் பொது மக்களுக்கு சரியான தகவல்களை தந்து, அலைக்கழிப்புகளுக்கு உட்படுத்தாமல் முறைபடுத்த வேண்டும் " என்று வருத்தத்துடன் தெரிவித்தார். 


இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி ஜனாப்.சலாஹுத்தீன் ஆலிம் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக கேட்ட போது "திருமண சான்றிதழ் வழங்குவதற்காக ரூபாய்.1000 வசூலிப்பது உண்மை தான். இந்த பணிகளை செய்வதற்காக, அரசு தனியாக எந்த பொருளாதாரத்தையும் வழங்கவில்லை. பொதுமக்களிடமிருந்து பெறும்  இந்த தொகை கூட, அலுவலக செலவுகளுக்காகவும், நிர்வாக செலவுகளுக்காகவும், தபால் செலவுக்காகவும் தான் வசூலிக்கப்படுகிறது. மேலும் இது சம்பந்தமான உண்மையான தகவல்களுக்கு இடைத்தரகர்களை அணுகாமல், நேரடியாக அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெறலாம்."என்று தெரிவித்தார்.

Wednesday 14 November 2012

கீழ‌க்கரையில் 'சீதேவி' போலி ம‌ந்திர‌வாதி கைது - காவ‌ல் நிலைய‌த்தில் த‌மிழ்நாடு த‌வ்ஹீத் ஜமாத்தின‌ர் புகாரின் பேரில் நடவடிக்கை !

பொள்ளாச்சியை சேர்ந்த அப்துல் ஜப்பார் என்பவரது மகன் முகமது இப்ராகிம் (வயது 39)  இவர் பொள்ளாச்சி 'மந்திர'மூசாசீதேவி 'மந்திர'மூசா என்ற (பட்டங்களுடன்??பட்டப் பெயர்களுடன் கடந்த 20 ஆண்டுகளாக கீழக்கரையில் உலா வந்திருக்கிறார்கீழக்கரை நகரின் பெரும்பாலான பகுதிகளில்இந்த ஆசாமியை தெரியாதவர்கள் இருக்க முடியாது என்றே சொல்லலாம். 'இறை அருள் மருத்துவம்' என்ற பெயரில் பேய்,பிசாசுகளை விசேஷ பூஜைகள் செய்து விரைந்து விரட்டுவதாகவும்செய்வினை இருந்தால் அதனை எடுப்பதாகவும் கூறிஆண்கள் இல்லாத வீடுகளுக்குச் சென்று  இளம் பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளதாகவும் தெரிகிறது


மேலும் அவர்களுக்கு தொடர்ச்சியாக  பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டும் நில்லாமல்அதனை வீடியோவில் படம் பிடித்து அதனை வெளியிட்டு விடுவதாகவும்  மிரட்டி பெண்களிடம் இருந்து பெருமளவு பணம் பறித்து ஜே .. ஜே... என்று அமோகமாகஇராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளதாகவும் தெரிகிறதுமேலும் இந்த ஆசாமிகீழக்கரைஏர்வாடி போன்ற இடங்களில் வசிக்கும் குடும்ப பெண்களிடம் தான் மந்திரவாதி என்றும்நோய்களை தீர்த்து வைப்பேன் என்று பேசி  பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்


இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு நிர்வாகிகளிடம் கூறினர். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு நிர்வாகி ஹாஜா முஹைதீன்கீழக்கரை போலீசில் புகார் செய்தார்அதில் போலி மந்திரவாதி முகமது இப்ராகிம் என்பவர் பெண்களை செல்போனில் படம் எடுத்து மிரட்டி வருவதாக கூறி இருந்தார்அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன்சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லமணிகோபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து போலி 'சீதேவி' 'மந்திர'மூசாவை கைது செய்தனர்மேலும் அவர் இந்த குற்ற செயல்களுக்காக பயன்படுத்தி வந்த நான்கு சக்கர வாகனமும் பறி முதல் செய்யப்பட்டது.  

கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கணக்கில்லாத வகையில் ரையும் ஏமாற்றி ந்த‌ இவருக்கு டும் ண்டனை வழங்க‌ வேண்டும் என்றும் ஜாமீனில் வர இயலாத வழக்குகளை இந்த போலி மந்திரவாதி மீது பதிந்துசிறையில் அடைக்க வேண்டும் என்று கூறி ஏராளமான‌ பொது க்கள் காவல் நிலையத்தில் குவிந்தர்