முஹம்மது
நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும் அதை கண்டிக்க
மறுக்கும் அமெரிக்கர்களையும், அந்த திரைப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து
வலைத்தளங்களையும், அதனை தடை செயய மறுக்கும் மத்திய அரசையும் கண்டித்து மாபெரும்
கண்டன பேரணியும், கண்டன பொதுக்கூட்டமும், இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பின்
புறம் (தாஜ் திருமண மண்டபம் அருகில்) நேற்று (25.09.2012) மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான
இஸ்லாமிய அமைப்பினர்கள் ஒரே கூட்டமைப்பின் கீழாக ஒன்றிணைந்து தங்கள்
கண்டனங்களை பதிவு செய்தனர்.



ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில்
குவிய துவங்கியதால், பார்க்கும் இடமெங்கும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது.
இதில் தமுமுக, ஐ.என்.டி.ஜே, எஸ்.டி.பி.ஐ, சுன்னத் ஜமாத்தார்கள், இஸ்லாமிய
வாலிப சங்கம், அனைத்து உலமா பெருமக்கள், அனைத்து ஊர்களின் ஜமாத்தினர்கள்,
பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள், சங்கங்கள் பெருவாரியாக பங்கேற்றனர்.
இராமநாதபுரம் நகர் கொல்லம்பட்டரை தெருவில் உள்ள இராமநாதபுரத்தின் மிக
பழமையானதும், முதல் பள்ளியுமான கொல்லம் பட்டறை பள்ளியில் இருந்து துவங்கிய
இந்த பேரணியில் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஓங்கி
ஒலித்து வந்தனர்.


இந்த பேரணியில் பங்கேற்ற பலர் கண்டன பதாகைகளை
கையில் ஏந்தி சின்க்கடை வீதி வழியாக அமெரிக்க
ஏகாதிபத்தியத்தை கண்டித்தும், அன்னல் நபியை இழிவு படுத்திய கொடியவனை கண்டித்தும்
முழக்கங்கள் எழுப்பினர். பல்வேறு அமைப்பினர்களின் முக்கிய நிர்வாகிகள்
தங்கள் கண்டனங்களை மேடையில்
பதிவு செய்து கொண்டிருக்கும் போது, திரைப்படம் தயாரித்த யூதனின் உருவ
பொம்மை எரிக்கப்பட்டது. மேலும் நேற்று அனைத்து இஸ்லாமிய வியாபார
நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இராமநாதபுரம் மாவட்டமெங்கிலும் இருந்து
இஸ்லாமிய இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்ப்பரித்து வந்தது வரலாறு காணாத
சரித்திரப் பதிவாக அமைந்தது.