தேடல் தொடங்கியதே..

Saturday 3 August 2013

கீழக்கரையில் அஹமது தெரு ASWAN சங்கத்தினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 13)

கீழக்கரை அஹமது தெரு ASWAN சங்கத்தினர் வருடம் தோறும் நடத்தும் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி, இன்று (03.08.2013) சனிக் கிழமை மாலை 6.30 மணியளவில், அஹமது தெரு தைக்கா அருகே சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்வில் ASWAN சங்கத்தின் தலைவர் A.சுல்த்தான் (A.S) மற்றும் 'மஸ்தான்' என்கிற அஹமது இபுறாஹீம், ASWAN சங்கத்தின் இணை செயலாளர் M.N.நெய்னா முஹம்மது சாஹிபு ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.


இந்த இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் சமூக நல அமைப்பினர்கள், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், அஹமது தெரு முக்கியஸ்தர்கள், ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக மன்சூர் ஆலீம் அவர்கள் ரமலான் நோன்பு குறித்து சொற்பொழிவு ஆற்றினார்.



நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)


கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/6.html


இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 7)

கீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி 8)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sdpi-8.html


கீழக்கரை வடக்குத் தெரு தைக்காவில் வழங்கப்படும் கமகமக்கும் நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 9)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/9.html

கீழக்கரையில் 'ஏர்செல்' நிறுவனம் மற்றும் 'SAK கம்யூனிகேஷன்' இணைந்து நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 10)  

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sak-10.html 

கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பாக, ஆண்டு தோறும் ரமலான் நோன்பு காலத்தில் செய்யப்படும் சிறப்பான சேவைகள் ! ரமலான் ஸ்பெஷல்  (பகுதி-11)
http://keelaiilayyavan.blogspot.in/2013/08/11.html

கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் நடை பெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 12)  


<<<<<  ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....

துபாயில் தமிழர்களை கவர்ந்த 'சீலா மீன் பிரியாணி' இஃப்தார் விருந்து - ரமலான் முழுவதும் நடைபெறும் 'துபாய் அல் ஸபர்' நிறுவனத்தின் விலையில்லா சேவை !

கீழக்கரை மக்களின் மனம் கவர்ந்த உணவு வகைகளில் ஒன்றாக சீலா மீன் பிரியாணி திகழ்கிறது. விழாக் காலங்களிலும் விடுமுறைக் காலங்களிலும், கீழக்கரை நண்பர்களால் ஏற்பாடு செய்யப்படும் பிக்னிக் பெரும்பாலானவற்றில், இந்த  ருசிமிகு 'சீலா மீன் பிரியாணி' கட்டாயம் இடம் பெறும். வாலிநோக்க‌ம் க‌ட‌ல்ப‌குதியில் பிடிப‌டும் இந்த மீன்களை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி, மணம் கமழும் மசாலாவுடன், நெய்யிட்டு பொறித்து, களரி சட்டியில் பிரியாணி சமைத்து பரிமாறுவார்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் கீழக்கரை மக்களுக்கு, இந்த சீலா மீன் பிரியாணி வருடம் ஒரு முறை நாடு திரும்பும் போது மட்டுமே ருசி பார்க்க முடியும். ஆனால் தற்போது துபாயில் வசிக்கும் கீழக்கரை வாசிகளுக்கு மட்டுமல்லாது, இஸ்லாமிய தமிழர்கள் அனைவருக்கும்  சாத்தியமாகி இருக்கிறது. உண்மை தான்...
 


துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல் ஸபர் கான்ட்ராக்டிங் என்கிற அரேபிய நிறுவனத்தினரால், வருடம் தோறும் ரமலான் மாதம் முழுவதும் ஏறத்தாழ 150 பேருக்கு தினமும் சீலா மீன் பிரியாணி இஃப்தார் விருந்து நடை பெற்று வருகிறது. பிரியாணியை சமைப்பதில் இருந்து கனிவுடன் பரிமாறுவது வரை முழுக்க முழுக்க தமிழர்களே பொறுப்பேற்று வேலை செய்து வருகிறார்கள். இதில் சமையல் கலைஞர் முஹம்மது தோஸ்த் அவர்களின் மேற்பார்வையில் பணியாளர்கள் ஜமால், முஹம்மது, முபீர், சிராஜ், அபூபக்கர், ஜாபர், சாபில் உள்ளிட்டோர் சிறப்பாக செயலாற்றி வருகிறார்கள்.

 
 இது குறித்து துபாயில் பணி புரியும் வங்கி அதிகாரி, கீழக்கரையை சேர்ந்த அபுதாஹிர்  அவர்கள் நம்மிடையே பேசும் போது "துபாயில் நமது கீழக்கரை மண் வாசனையுடன் சீலா மீன் பிரியாணி கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இங்கு ரமலான் மாதம் மட்டு மல்லாது, ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும், எவ்வித விலையும் பெறப்படாமல், சீலா மீன் பிரியாணி பரிமாறப்படுகிறது.

இந்த சேவையை தரும் நிறுவனத்தின் ஸ்தாபகர் அலி அப்துல்லாஹ் அல் ஸபர் அவர்களிடம் பேசினேன். இன்னும் அதிகமான இஸ்லாமிய மக்களை இப்தார் விருந்துக்கு அழைப்பு விடுக்கிறார். இங்கு 200 பேர்கள் நின்று தொழுவதற்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.



இந்த விருந்து முடிவில் மணம் கமழும் சுவையான சுலைமானி (பால் கலக்காத அரேபிய தேநீர்) பரிமாறப்படுவது இன்னும் சிறப்பாக இருக்கிறது. துபாயில் வசிக்கும் நண்பர்கள் ஒரு முறை இங்கு வந்து, இந்த சீலா மீன் பிரியாணியை சுவைத்து, இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

என்ன நண்பர்களே... இந்த ரமலானில் நாமும் ஒரு விசிட் அடிப்போமா..?

சீலா மீன் பிரியாணி இஃப்தார் விருந்து நடைபெறு இடம் : ஜுமைரா 4, FIRST GULF BANK அருகாமை, துபாய்

இது குறித்த மேலதிக விபரங்களுக்கு துபாயில் இருக்கும் நண்பர்.அபுதாஹிர் அவர்களை 050-4408834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  • Abul Hussain தம்பி இளயவரே, நீங்கள் வெளியிடும் செய்திகளில் நம் மண்ணின் மீன் வாசனை படிக்கும் போதே மணக்கிறது.,தொடரட்டும் உங்கள் பணி,...வாழ்த்துக்கள்........

துபாயில் 'ஈமான்' அமைப்பு நடத்தும் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி - அனைவரும் பங்கேற்க அழைப்பு !

துபாய் ஈமான் அமைப்பு சார்பாக நடத்தப்படும் புனித லைலத்துல் கத்ரு சிறப்பு நிகழ்ச்சி ஹிஜ்ரி 1434 ரமழான் பிறை 27 ( 04.08.2013 ) ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணிக்கு தராவீஹ் தொழுகைக்குப் பின் 'தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில்' ( குவைத் பள்ளி ) நடைபெற இருக்கிறது என பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி அவர்கள் தெரிவித்துள்ளார்.
 


இந்த நிகழ்ச்சியில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி 10.45 மணிக்கு நடைபெறும். சொற்பொழிவுக்குப் பின் வழக்கம் போல் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் இரவு 12.00 மணிக்கு நடைபெறும். இரவு 1 மணிக்குள் நிகழ்ச்சி நிறைவு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கலந்து இப்புனித இரவின் நற்பயனை அடைய அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு: அனைவருக்கும் ஸஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 050 51 96 433 / 050 475 30 52 / 050 658 9305 / 055 800 79 09 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
 
தகவல் :முதுவை ஹிதாயத் அவர்கள் 

செல்போன் கலாச்சாரமும், சீரழியும் பெண்களும் - 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' - விழிப்புணர்வு ரிப்போர்ட் ! (மறு பதிவு)

"ஆண் பிள்ளை கெட்டால், அவனுக்கு மட்டும் தான் வாழ்க்கை போச்சு. பெண் பிள்ளை  கெட்டால் வம்சமே போச்சு.." என்று நாட்டுப் புறங்களில், பேச்சுவழக்கில் சொல்லுவார்கள். அதை உண்மைபடுத்தும் விதமாக, அங்கிங்கெனாதபடி எங்கும் நிகழ்ந்து வரும் கலாச்சார சீரழிவுகளால் குடும்ப பந்தங்கள் சிதைந்து வருகிறது. அதனை களையும் நோக்கோடும், பெண் சமூகத்தை காக்கும் நோக்கோடும் தான் இந்த பதிவு...

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கீழை இளையவன் கவிதைகள் வலை தளத்தில், தற்போதைய கலாச்சார சீர்கேட்டிற்கு யார் காரணம் ? பெற்றோர்களா ? செல்போன் கலாச்சாரமா? மீடியாக்களா? விழிப்புணர்வு இன்மையா? என்று கருத்து ஓட்டெடுப்பு நடத்தினோம். அதில் 55 சதவீதம் பேர் 'செல்போன்  கலாச்சாரமே' என்றும் 18 சதவீதம் பேர் பெற்றோர்களே என்றும் வாக்களித்திருந்தார்கள். 


கீழை இளையவன் கவிதைகள் வலை தளத்தில் வெளியான விழிப்புணர்வு கவிதை - "ஓடிப் போகுமா... கலாச்சாரம் ?"

ஆகவே பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளையும் 'கேடுகளை வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பிக்கும் செல்போன்' கலாச்சாரத்திலிருந்து, பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், அனாச்சாரங்களில் இருந்து தற்காத்துக் கொள்வதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும். இல்லை எனில் உடைந்த கண்ணாடியாக வாழ்க்கை மாறக் கூடும். இறைவன் பாதுகாப்பானாக ! 

தற்சமயம் அதிக அளவில் பெண்கள் அந்நிய ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும், விபச்சாரம் போன்ற வழி கேடுகளில் வீழ்வதும் நிகழ்ந்து வருகின்றது. இதற்கான முழுப் பொறுப்பையும் பெற்றோர்களே ஏற்க வேண்டி இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணங்களையும், அதிலிருந்து நம் குடும்பத்தார்களை காப்பாற்றும் வழி வகைகளையும் பார்ப்போம்.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

01. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது.

02. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக Mobile Phone போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

03. Mobile Phoneல் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன SMS வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.

04. பெண்கள் எங்கே செல்கின்றார்கள்? எப்போது வருகின்றார்கள்?? என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

05. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை ஆபாச சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழி தவற வைப்பது.

06. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரணம் : வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாறு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)

07. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் விருப்பப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.

08. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது. அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:

01. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

02. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

03. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்த வரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (Attendance) சரியாக உள்ளதா ? என வாரம் ஒரு முறை சரிபார்க்க வேண்டும்.

04. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

05.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு Mobile Phone களை வாங்கிக் கொடுக்க வேண்டாம். Land Line டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

06. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், ஆம்னி டிரைவர், சிட்டை வட்டிக் காரன், பால்காரன், கேபிள் டீவிக்காரன், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் Phone நம்பரை கொடுக்க வேண்டாம்.

07. தெரியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ, அல்லது Message அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டித்து விடுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற Call or Message வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

08. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ, குடும்பத்தினர் பற்றியோ, குடும்ப விசயங்கள் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் 'இது உங்களுக்கு அவசியமற்றது' என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

09. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும் தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயணத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்காதீர்கள், அதுபோல் சக மாணவியரால் 'நல்லவன்' என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்து தான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட, அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் போதும், ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி DELETE செய்து விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக தெறியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல், முறையான ஆபாசம் இல்லாத லூசான, தளர்வான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு தான். அதை விடுத்து டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள் வாங்கப்பட்டு புளு பிலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.

நன்றி : முக நூல் நண்பன் (அறிவுரைகள்)

அந்நியருடன் ஓடிப்போகும் / ஓடிப்போன பெண்களின் நிலை:

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை, காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்து விட்டு பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள் அல்லது தன் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறாள்.

ஓடிப்போகும் போது இவள் தனது பெற்றோரின் ஓட்டு மொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள்.

இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம் பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி, உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.


பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரை கடந்த பின் கதறாமல், இப்போதே அணை போட திட்டமிடுவீர், உங்கள் பெண் பிள்ளைகளை முறையாக ண்காணியுங்கள்.  
கண்ணாடிகள் ஜாக்கிரதை..!  கண்ணாடிகள் ஜாக்கிரதை..!

கீழக்கரை தாசீம் பீவி கல்லூரியில் நடை பெற்ற ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 12)

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வருடம் தோறும் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இந்த ஆண்டு ரமலானில், தாசீம் பீவி கல்லூரி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நேற்று (02.08.2013) வெள்ளிக் கிழமை மாலை 6.30 மணியளவில் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீதகாதி அறக்கட்டளை இயக்குநர் ஜனாப். ஹாலிது A.K. புஹாரி, பொருளாளர் ஜனாப்.அசன் தம்பி, 

கீழக்கரை சேர்மன்  ராவியத்துல் கதரியா ரிஸ்வான், கல்லூரி முதல்வர் சுமையா தாவூது, முன்னாள் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஹசன்அலி, சீதக்காதி அறக்கட்டளை நிர்வாகி, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் M.K.E.உமர், மருத்துவர் சேகு அப்துல் காதர், முத்த வழக்குரைஞர் திரு.நாகராஜன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.



இந்த அருமையான நிகழ்வில், 'ஜகாத் (தர்மம்) வழங்குவதின் முக்கியத்துவம் 'குறித்து மௌலவி யாசீன் ஹசரத் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் உஸ்வதுன் ஹஸ்னா முஸ்லிம் சங்க நிர்வாகிகள், கல்லூரி மாணவிகள், ஆசிரிய பெருந்தகைகள், 

கீழக்கரை பகுதி பொதுநல அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர்கள் திரளாக கலந்து  கொண்டு சிறப்பித்தனர். இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சீதக்காதி டிரஸ்ட் சேக் தாவுத் அவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் சுமையா தாவூது மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் நல்ல முறையில் ஒருங்கிணைத்து இருந்தனர்.

தகவல் : ஆனா முஜீப் அவர்கள் 

நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)


கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/6.html


இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 7)

கீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி 8)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sdpi-8.html


கீழக்கரை வடக்குத் தெரு தைக்காவில் வழங்கப்படும் கமகமக்கும் நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 9)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/9.html

கீழக்கரையில் 'ஏர்செல்' நிறுவனம் மற்றும் 'SAK கம்யூனிகேஷன்' இணைந்து நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 10)  

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sak-10.html 

கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பாக, ஆண்டு தோறும் ரமலான் நோன்பு காலத்தில் செய்யப்படும் சிறப்பான சேவைகள் ! ரமலான் ஸ்பெஷல்  (பகுதி-11)

<<<<<  ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....

Friday 2 August 2013

கீழக்கரை 'இஸ்லாமி பைத்துல் மால்' ஆற்றி வரும் அளப்பரிய சேவைகள் - அறம் செய அழகிய வழி !

முஸ்லீம் சமுதாயத்தில் இன்று பரவலாகப் பேசப்படுகின்ற ஒன்றாக ‘பைத்துல் மால்' காணப்படுகின்றது. இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு நிதி நிறுவனமே ‘பைத்துல் மால்' ஆகும். ‘பைத்துல் மால்'  என்ற சொல் பிரயோகம் முதன் முதலில், முதலாம் கலீபா அபூபக்கர் (ரலி) அவர்களது காலத்திலேயே பயன்படுத்தப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது.

தற்காலத்தில் மனிதனுடைய பொருளாதாரத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. திடீரென அவனுக்கு ஏற்படும் தேவைகளை நிறைவு செய்வதற்கான பொருளாதார வசதி இல்லாத போது, அவன் வட்டிக் கடைகளை நாட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றான். எனவே அவனை வட்டி என்ற வன்கொடுமையில் இருந்து விடுவிப்பதற்கு பைத்துல் மால் போன்ற நிறுவனங்கள் அவசியம் தேவைப்படுகின்றன.

அறம் (தர்மம், ஜக்காத்) செய்வது இஸ்லாமிய கடமைகளின் ஒன்று. அதனை செம்மையாக நிறைவேற்றும் முகமாகவும், மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான நிதியுதவிகளை வழங்குதல், நோயாளிகளின் மருத்துவச் செலவுகளுக்கு உதவுதல், அநாதைக் குழந்தைகளைப் பராமரித்தல், 

திருமண வயதையும் தாண்டி திருமணம் முடிக்க வசதியற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு உதவுதல், விதவைகள், முதியவர்களுக்கான உதவிகள் போன்ற பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்கு பைத்துல்மால் போன்ற சமூக நிறுவனங்கள் கட்டாயம் அவசியமாகிறது. 

இது போன்ற நல்ல நோக்கத்திற்காக, சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளர்களால், கீழக்கரையில் கடந்த 1986 ஆம் ஆண்டு பைத்துல் மால் உருவாக்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு பைத்துல் மாலின் நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 1990 ஆம் வருடம் பண்பாளர். B.S.A.அப்துல் ரஹ்மான் அவர்களால், பிரபுக்கள் தெரு பகுதியில் திறப்பு விழா கண்டது. 


தற்போது 185 புரவலர்களுடன், 420 நிர்வாக அங்கத்தினர்களுடன் சிறப்பாக செயலாற்றி வரும் கீழக்கரை பைத்துல்மாலின்  திட்டங்களுக்கான நிதியை நேரடியாக பைத்துல் மாலுக்கு அளிக்க வேண்டி பொது நல ஆர்வலர் சகோதரர். குத்புதீன் ராஜா அவர்கள் சென்ற ஆண்டு வெளியிட்டிருந்த கோரிக்கை பின் வருமாறு :

"கீழக்கரை பைத்துல்மால் தனது செயல் திட்டங்களில் "வட்டியில்லா கடன்" திட்டத்தில் ஒவ்வொறு மாதமும் சராசரி ரூபாய் 2.60,000 வரை கடன் உதவி வழங்கி வருகிறது.  

ஆனால் கடன் கேட்டு வருபவர்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டு மென்றால் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 4,00,000 (நான்கு லட்சம்) வரை தேவைப்படுகிறது. 

போதிய நிதி இல்லாமையின் காரணத்தால் அனைவருக்கும் உதவி வழங்க முடியாத நிலையில் உள்ளது.
இந்த குறைபாட்டை நீக்க நிரந்தர பலன் அளிக்கும் நிதியமைத்தல் (ENDOWMENT) திட்டத்தை பைத்துல்மால் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் நமதூரைச் சார்ந்த பலர் தனது முன்னோர்கள் உறவினர்கள் பெயரால் ரூ 5,000 முதல், ரூ 2,00,000 வரை நிதி வழங்கியுள்ளார்கள். 

இம்மகத்தான பணிக்கு சகோதர சகோதரிகள் தங்கள் முன்னோர்கள் உறவினர்கள் பெயரால் என்டோமெண்ட் நிதி வழங்க முன் வந்தால் கடன் உதவி கேட்டு வரும் எல்லோருடைய தேவைகளையும் இன்ஷா அல்லாஹ் பூர்த்தி செய்ய இயலும்.

குறிப்பு : உயர் கல்வி கடன் மட்டும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது 

நீங்கள் கீழக்கரை பைத்துல்மாலுக்கு உங்கள் முன்னோர்கள் பெயரில் கொடுக்கும் பணம் என்டோமெண்ட் நிதியில் நிரந்தர வைப்பு நிதியாக சேர்க்கப்பட்டு, கடன் கேட்டு வருபவர்களுக்கு கொடுக்குப்படுகிறது. கடன் வாங்கியவர்கள் திருப்பி அளித்தவுடன் மீண்டும் என்டோமெண்ட் நிதியில் சேர்க்கப்பட்டு பிறகு இன்னொருவருக்கு கொடுக்கப்படுகிறது. 

இப்படி திரும்ப திரும்ப கொடுக்கப்படுவதால் கிடைக்கும் நன்மைகள், அழியாத ஸதக்கத்துன் ஜாரியாவாக நபி பெருமானின் நல்வாக்குப்படி உங்கள் உறவினர்களுக்கு இன்ஷா அல்லாஹ் வல்ல அல்லாஹ் அருளுவான்.


ஆதலால் சகோதர சகோதரிகள் கீழக்கரை பைத்துல்மாலுக்கு தங்கள் முன்னோர்கள் பெயரில் என்டோமெண்ட் நிதி வழங்கி அல்லாஹ்வின் அருட்கொடையை அடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்." இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கீழக்கரையில் தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளால் உயிர் பலி ஆபத்து - உடனடியாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை !

கீழக்கரை அஹமது தெரு தைக்கா அருகாமையில் மின் கம்பங்களில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து கீழே விழும் நிலையில் இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் குடியிருப்பவர்கள் மற்றும் பாதசாரிகள் கடும் அச்சத்துடன் உலவி வருகின்றனர். அந்த பகுதியில் செல்லும் மின்சார கம்பிகளை, கைகளை உயர்த்தி  தொடும் அளவிற்கு மிக தாழ்வாக செல்கிறது. இதனை உடனே மாற்றித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இது குறித்து அந்த பகுதியில் வசிக்கும் முஹம்மது அபூபக்கர் சித்தீக் அவர்கள் நம்மிடையே பேசும் போது "இந்த ஆபத்தான மின் கம்பிகள் குறித்து மின்சார வாரியத்தினரிடம் பல முறை புகார் அளித்தும் எவ்வித பயனுமில்லை. இதனை நாங்கள் சொந்த செலவில் தான் செய்து கொள்ள வேண்டும் என பதில் தருகின்றனர். 

மின்சார வயர்கள் தாழ்வாக செல்ல முக்கிய காரணம், இந்த பகுதியில் நாளுக்கு நாள் சாய்ந்த வண்ணம் இருக்கும் 'அபாய மின் கம்பம்' தான். இதிலிருந்து தான் மின் சப்ளை இந்த பகுதிக்கு வருகிறது. இந்த கம்பத்தை நிமிர்த்தி நிறுத்தினாலே போதும். இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்து விடும்" என்று பயம் கலந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.


இது குறித்து மின் துறை அதிகாரி கூறுகையில், "இப்பகுதியில் சாய்ந்த நிலையில் இருக்கும் மின் கம்பம், இப்பகுதி மக்கள் ஒத்துழைப்புடன் விரைவில் சரி செய்யப்படும்" என்றார்.

Thursday 1 August 2013

கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பாக, ஆண்டு தோறும் ரமலான் நோன்பு காலத்தில் செய்யப்படும் சிறப்பான சேவைகள் ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி-11)

கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் சார்பாக வருடம் தோறும் ரமலான் நோன்பு காலத்தில், கீழக்கரை பகுதி நோன்பாளிகளுக்கு தினமும் நோன்பு கஞ்சி வழங்குதல், நோன்பாளிகள் பள்ளியில் நோன்பு திறக்க இப்தார் விருந்து ஏற்பாடு செய்தல், ஏழைகளுக்கு இலவச சஹர் உணவினை வீடு தேடி சென்று கொடுத்து உதவுதல் போன்ற சிறப்பான சேவைகள் கண்ணியமான முறையில் செய்யப்பட்டு வருகிறது. 

இதற்காக தெற்குத் தெரு ஜமாஅத் பகுதியை சேர்ந்த இஸ்லாமிய சகோதர நல்லுள்ளங்களின் பொருளாதார பங்களிப்புடனும், மிகுந்த ஆதரவுடன் தெற்கு தெரு ஜமாஅத் நிர்வாகிகள் மிக சிறப்பான முறையில் சேவையாற்றி வருகின்றனர்.

      படம் : A.S டிரேடர்ஸ் கபார் கான் 

கீழக்கரையில் முதன் முதலாக, காலம் சென்ற கல்வியாளர். மர்ஹூம். ஜனாப். M.M.K.முஹம்மது இபுறாஹீம் அவர்களால் துவங்கப்பட்டு, கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக தெற்கு தெரு மஸ்ஜித் பரிபாலன கமிட்டி மூலம் ஏழைகளுக்கு இலவச சஹர்  உணவை வீடு தேடி வழங்கும் திட்டம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதில் ஒரு நாளைக்கு ஒரு உணவு வகை என்று பிரித்து வழங்கபடுகிறது. இதன் மூலம் தினமும் 160 ஏழை நோன்பாளிகள், நோன்பு காலத்தில் சஹர் உணவு பெற்று பயன் பெறுகின்றனர்.





                        படங்கள் : முஸ்லீம் பொதுநல சங்கம், தெற்குத் தெரு


இது போன்ற அளப்பரிய சேவைகளால், இறைவனின் அருளைப் பெற போட்டியிடும் தெற்குத் தெரு ஜமாத்தினர்களின் பணிகள் மென் மேலும் சிறக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக இறையோனிடம் பிரார்த்திக்கிறோம்.

நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த ' ரமலான் ஸ்பெசல்' பதிவுகளை வாசிக்க கீழ் வரும் லிங்கை சொடுக்கி பார்வையிடலாம்.

கீழக்கரையில் 'நோன்புக் கஞ்சி' வாங்கி செல்ல ஆர்வமுடன் அணி திரண்ட பொது மக்கள் - ரமலான் ஸ்பெஷல் ! (பகுதி -1)

கீழக்கரை மசூதிகள், சங்கங்களில் வழங்கப்படும் மணம் கமழும் 'நோன்புக் கஞ்சி' - ரமலான் ஸ்பெஷல் (பகுதி-2)

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் வழங்கப்படும் சுவைமிகு நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 3)


கீழக்கரையில் நோன்பு திறக்க பழங்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நோன்பாளிகள் - ரமலான் ஸ்பெசல் (பகுதி - 4)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/4.html

கீழக்கரை நகரில் திறக்கப்பட்டிருக்கும் ரமலான் மாத ஸ்பெஷல் கடைகள் - நோன்பாளிகள் மகிழ்ச்சி ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 5)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/5.html

கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் தினமும் நடைபெறும் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 6)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/6.html


இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் 'ரமலான் நோன்பு 2013' - அழகிய கண் கவர் புகைப்படங்களின் அணி வகுப்பு ! ரமலான் ஸ்பெசல் (பகுதி - 7)

கீழக்கரையில் SDPI கட்சியினர் நடத்திய ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி - பொதுமக்கள் திரளாக பங்கேற்பு ! ரமலான் ஸ்பெஷல் (பகுதி 8)

http://keelaiilayyavan.blogspot.in/2013/07/sdpi-8.html


கீழக்கரை வடக்குத் தெரு தைக்காவில் வழங்கப்படும் கமகமக்கும் நோன்புக் கஞ்சி - ரமலான் ஸ்பெஷல் (பகுதி - 9)


<<<<<  ரமலான் ஸ்பெசல் - இன்னும் வரும்....

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் 'தினமலர்' நாளிதழ் நடத்தும் திறனாய்வுப் போட்டிகள் - நூற்றுக் கணக்கான மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்பு !

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 'தினமலர்' நாளிதழ் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் இன்று (01.08.2013) காலை 10 மணி முதல் நடை பெற்று வருகிறது. 




இதில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கண்ணாடியில் வரைதல் போட்டி உள்ளிட்ட திறனாய்வு போட்டிகள் சிறப்பாக நடை பெறுகிறது. இதில் இஸ்லாமியா பள்ளியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் மிகுந்த உறசாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.








குறிப்பாக ஓவியப் போட்டியில் 513 மாணவ மாணவிகளும், ஏனைய போட்டிகளில் 200 க்கும் மேற்பட்ட மாணாக்கர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமியா பள்ளியின் தாளாளர். M.M.K.முஹைதீன் இபுறாஹீம் அவர்கள் சிறந்த முறையில் செய்திருந்தார். போட்டிகளின் முடிவுகள் எதிர் வரும் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, அன்றைய தினமே பரிசுகள் வழங்கப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரையில் 15 வது வார்டு பெண் கவுன்சிலர் (வபாத்) காலமானார் !

கீழக்கரை மேலத் தெரு புதுப் பள்ளி ஜமாத்தை சேர்ந்த, கீழக்கரை நகராட்சி 15வது வார்டு பெண் கவுன்சிலர் மஜிதா பீவி அவர்கள் நேற்று முன் தினம் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.




அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம், நேற்று (31.07.2013) காலை 10.30 மணியளவில் புதுப் பள்ளிவாசல் மைய வாடியில் நடைபெற்றது. மஜிதா பீவி அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

Wednesday 31 July 2013

கீழக்கரை பழைய குத்பா பள்ளியில், வருடம் தோறும் நடைபெறும் 'கியாமுல் லைல்' பின்னிரவுத் தொழுகை - இஸ்லாமிய பெருமக்கள் திரளாக பங்கேற்க வேண்டுகோள் !

கீழக்கரை பழைய குத்பா பள்ளிவாசலில், வருடம் தோறும் ரமளானின் கடைசி பத்து தினங்களிலும், 'கியாமுல் லைல்' என்று அழைக்கப்படும் சிறப்பு பின்னிரவுத் தொழுகை நடை பெற்று வருகிறது. இந்த 'கியாமுல் லைல்' தொழுகை, சரியாக இரவு 2.15 மணிக்கு துவங்கி, இரவு 3.15 மணிக்கு வித்ரு தொழுகையுடன் நிறைவடைகிறது.  

எல்லா நாட்களிலும், இந்த 'கியாமுல் லைல்' தொழுகையை தனித்தும் அல்லது ஜமாத்துடனும் தொழலாம். எனினும், ரமழான் மாதத்தில் இந்த தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. 'யார் ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர் நோக்கியும் தொழுகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. 



ரமளானின் இந்த கடைசி பத்து தினங்களில் வரும் ஒற்றைப் படை இரவுகளில், 'லைலத்துல் கத்ரு' எனும் மகத்துவமிக்க ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பானதாக அமைந்துள்ளது.

ஆகவே எதிர் வரும் பத்து நாள்களின் பின்னிரவுகளிலும், இந்த புண்ணியமிக்க, இரவை தேடும் நாம் 'கியாமுல் லைல்' போன்ற அழகிய வணக்க வழிபாடுகளின் மூலம் இறைவனின் அன்பையும், அருட்கொடைகளையும் அளவில்லாமல் பெற முயற்சிக்க வேண்டுமாய் கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday 30 July 2013

கீழக்கரை KECT தொலைக் காட்சியில் தினமும் ஒளிபரப்பாகும் - சமூக நல விரும்பிகள் மற்றும் பொது நல அமைப்பினர்களுடனான நேர் காணல் நிகழ்ச்சி ! (காணொளி வீடியோ காட்சிகளுடன்)

கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை நடத்தும் KECT தொலைக்காட்சியில், தினமும் மாலை 5 மணிக்கு "நாங்கள் கண்ட எதிர்ப்பலைகள்" என்கிற தலைப்பில், கீழக்கரை நகரில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயலாற்றி வரும் பொது நல அமைபினர்கள், சமூக நல விரும்பிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர்கள் பங்கேற்கும் நேர்காணல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.



இந்த அருமையான நிகழ்ச்சியின் வாயிலாக உரையாடும் சகோதரர்கள், தாங்கள் மக்கள் பணி செய்யும் போது கண்ட எதிர்ப்பலைகளையும், தங்களின் மேலான  கருத்துக்களையும், பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு இரவு 8.30 மணிக்கும், சஹர் நேரம் காலை 3.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.


கீழை இளையவன் வலை தள நிர்வாகியுடன் நேர்காணல் 




முஸ்லீம் வெல்பேர் டிரஸ்ட் நிர்வாகி கனி அவர்களுடன் நேர்காணல்  


கீழக்கரை நகர் நல இயக்கத்தினருடன் நேர்காணல் 


சமூக ஆர்வலர் KECT தொண்டியப்பா அவர்களுடன் நேர்காணல்


 கல்வியாளர். ஜபருல்லாஹ் அவர்களுடன் நேர்காணல் 


இந்த நேர்காணல் நிகழ்ச்சிகளை முஹம்மது ஆசிப் அவர்கள் தொகுத்து அளித்திருக்கிறார். ஒலி, ஒளிப் பதிவுகளை அப்பாஸ் அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்.