தேடல் தொடங்கியதே..

Friday 20 September 2013

கீழக்கரையில் த.மு.மு.கவினர் ஒட்டியுள்ள விழிப்புணர்வு சுவரொட்டிகள் - பெற்றோர்கள், தாய்மார்கள் கவனிக்க !

கீழக்கரை மற்றும் 500 பிளாட் பகுதிகளில் தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பாக விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் பெண்மணிகள், தாய்மார்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், தற்காலத்தில் கடை பிடிக்க வேண்டிய அத்தியாவசிய நடை முறைகள் குறித்து பிரசுரிக்கப்பட்டுள்ளது.


இதனை வாசித்து செல்லும் பொதுமக்கள் அனைவரும், 'காலத்திற்கு ஏற்ற தகுந்த விழிப்புணர்வு' என தங்கள் அருமையான கருத்துக்களை, உள்ளச் சாரலாய் அள்ளி தெளித்தவாறு செல்கின்றனர்.

கீழக்கரையில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை - நடுத்தெரு ஜும்மா பள்ளியில் நடை பெற்றது !

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், கீழக்கரையில் அறவே மழை பெய்யாததால் 'கடும் வறட்சியான சூழ்நிலை' நிலவுகிறது.  பெரும்பாலான வீடுகளில் உள்ள கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. குளிக்கவும், துணி துவைக்கவும் கூட தண்ணீர் இல்லாத நிலையே பல இடங்களில் உள்ளது. இன்னும் பல வீடுகளில் பல ஆயிரங்கள் செலவழித்து கிணற்றை ஆழப்படுத்தியும் நீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 



இதனால் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜமாஅத்தார்களும் ஒன்றிணைந்து, திறந்த வெளியில் 'மழை தொழுகை' நடத்த முன் வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளியில் இன்று (20.09.2013) வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின்னர், கீழக்கரையில் மழை பெய்ய வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, மழை பொழிவை எதிர் நோக்கி, இறைவனை இறைஞ்சினர்.

FACE BOOK COMMENTS :
  • Keelakarai Ali Batcha ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு வாழ்க, வளர்க, ஓங்குக


  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை' கீழக்கரையில் அனைத்து முஹல்லா மக்களும் ஒற்றுமையாக சேர்ந்து, நபியவர்கள் காட்டி தந்த வழியில் ஒரு மழை தொழுகையை ஏற்பாடு செய்வார்கள் என்று எதிர் பார்த்தால் இன்னும் நடக்கவில்லையே. யா அல்லாஹ். எங்கள் பாவங்கள் குற்றங்கள் அனைத்தையும் பிழை பொறுத்து மன்னித்து மழையை தந்தருள் நாயனே. ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்

கீழக்கரையில் 'சிறு நீரியல்' சிறப்பு மருத்துவ முகாம் - கீழக்கரை ரோட்டரி சங்கம் ஏற்பாடு !

கீழக்கரை ரோட்டரி சங்கம், முஹம்மது சதக் பாலிடெக்னிக் ரோட்ராக்ட் சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து நடத்தும் சிறு நீரியல் சிறப்பு மருத்துவ முகாம் நாளை (21.09.2013) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடை பெற உள்ளது. இந்த முகாமில் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையின் சிறு நீரியல் துறை அறுவை சிகிச்சை தலைமை நிபுணர். திரு. டாக்டர். T.R.முரளி M.S., M.ch., (Uro) மற்றும் மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்க உள்ளனர். 
 

கீழக்கரை பகுதியில் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதியுறும் பலர், ஆரம்ப சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளும் பொருட்டும், நிரந்தர நிவாரணத்தை தேடியும், மதுரைக்கோ  அல்லது சென்னைக்கோ சென்று மருத்துவம் செய்ய வேண்டிய நிலையே உள்ளது. இந்நிலையில் இந்த சிறப்பு மருத்துவ முகாம் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

இந்த முகாமில் கொள்பவர்கள் ரூ.200 செலுத்தி முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிறு நீர் மற்றும் இரத்த பரிசோதனைகள் செய்து தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட இருக்கிறது. 

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை நடுத் தெரு ஜும்மாப் பள்ளி  ஜமாத்தை சேர்ந்த நடுத்தெரு மர்ஹூம். ஜனாப்.  A.M.M முஹம்மது அப்துல் காதர் அவர்கள் மனைவியும், செய்யது சீனி பரிதா, செய்யது சாகுல் ஹமீது, தாஜுன் ரசீதா, முஹம்மது இபுறாகீம், ஆயிசத்து ஜெசீலா, நெய்னா முகம்மது ரபீக்கா, ஜாகீர் ஹுசைன் ஆகியோர்களின் தாயாரும்,

இஞ்ஜினியர் அப்துல் கபூர், டாக்டர். கியாதுதீன், ஜாபர் இபுறாகீம் (ஆனா சீனா), அஹமது அஸ்ரப், பவுசுல் அமீன் ஆகியோர்களின் மாமியுமான 'மூனிச்சிமா ராத்தா' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும்  ஜனாபா. A.M.S. சேகு உம்மா நாச்சி உம்மா அவர்கள் இன்று (20.09.2013) அதிகாலை சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்.


 (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் நடுத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நடை பெறும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்ஹூமா. சேகு உம்மா நாச்சி உம்மா அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு : ஜாகீர் ஹுசைன் -  9840689316

கீழக்கரையில் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும் பள்ளி சிறுவர்கள் - விபத்து ஏற்படும் முன் பெற்றோர்கள் கண்டிக்க வேண்டுகோள் !

கீழக்கரையில் லைசென்ஸ் இல்லாமல், பள்ளி சிறுவர்கள் பைக், ஆட்டோ, ஆம்னி உள்ளிட்ட வாகனங்களை இயக்கி வருவதால், விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. கீழக்கரை நகரில் பள்ளி மாணவர்கள் லைசன்ஸ் பெறாமல் டூவீலர்களை ஓட்டி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'ஒரே பைக்கில்  மூன்று பேர் முதல்  ஆறு வரை' செல்கின்றனர். இதனால் நடை பாதைகளில் செல்வோர், உயிர் பயத்தில் உறைந்து வருகின்றனர்.

படம் : ஆனா. மூனா. சுல்த்தான் அவர்கள்

இது போன்று விபத்து ஏற்படுத்தும் விதமாக வாகனங்களை ஓட்டும் பிள்ளைகளை  பெற்றோரும் கட்டுப்படுத்துவதில்லை. முறையாக ஓட்டுனர் பள்ளிகள் மூலம் குறிப்பிட்ட வயதை அடைந்த பின் ஓட்டி பழகினால் விபத்துகளையாவது தவிர்க்கலாம். அவ்வாறு இல்லாமல், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர்களே விலையுர்ந்த  'மார்டன் ரேஸ் பைக்குளை' வாங்கி கொடுக்கின்றனர்.



படம் : A.S.டிரேடர்ஸ் கபார் கான் அவர்கள் 

கீழக்கரை நகருக்குள் பள்ளி மாணவர்கள் பைக்குகளில் பறப்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. வண்டி உயரம் கூட இல்லாத சிறுவர்கள், எந்தப் பயமும் இல்லாமல் மின்னல் வேகத்தில் ஓட்டுவதைப் பார்க்கும் போது, ஒரு கணம் நெஞ்சம் பதை பதைக்கிறது. பிற மாநிலங்களில் இருப்பது போல் உரிய வயது மற்றும் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டி வரும் மாணவர்களைப் பிடித்தால், அவர்களின் பெற்றோருக்குத் தண்டனை அளிக்கும் சட்டத்தை இங்கும் கொண்டு வர வேண்டும்.

இது குறித்து மக்கள் நலப் பாதுகாப்புக் கழகத்தின் இணை செயலாளர் M.I.செய்யது சாகுல் ஹமீது அவர்கள் கூறும் போது "18 வயது வரை லைசென்ஸ் பெற முடியாது என்ற நிலையில், குழந்தைகளை வண்டி ஓட்ட அனுமதிப்பது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு.

இதன் மூலம், விபத்துகளுக்குப் பெற்றோரே அச்சாரம் போடுகின்றனர். மோட்டார் வாகன விதிப்படி, வாகனத்துக்கு சொந்தக் காரர் தவிர மற்றவர்கள் அதை ஓட்டிப் பிடிபட்டால், வாகனத்தின் சொந்தக்காரரைத் தண்டிக்கலாம்.

உரிய வயதும் பக்குவமும் வரும் வரை குழந்தைகளை வண்டி ஓட்டக் கண்டிப்பாகப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது." என்று மிகுந்த கண்டிப்புடன் தெரிவித்தார்.

Thursday 19 September 2013

கீழக்கரை சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கத்தில் 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்' நடத்திய இலவச மருத்துவ முகாம் !

ஏழை, எளிய மக்களுக்கு ஆரம்ப மருத்துவ உதவிகளை அளிக்கும் நோக்கத்தோடு கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட் (CWT) துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கீழக்கரையில் வாரம் தோறும் இந்த இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. ஒரு வாரம் தெற்குத் தெரு முஸ்லீம் பொது நல சங்க வளாகத்திலும், மற்றொரு வாரம் 500 பிளாட் பகுதியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் கீழக்கரை சின்னக்கடை தெரு மக்கள் ஊழியர் முஸ்லீம் சங்கத்தில் இன்று (20.09.2013) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட் (CWT) நடத்திய  இலவச மருத்துவ முகாமில் ஏராளமான முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். இலவச ஆலோசனைகளும், மாத்திரை மருந்துகளும் வழங்கப்பட்டது.

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த பதிவை காண கீழ் வரும் லிங்கை சொடுக்கவும். 

கீழக்கரையில் வாரம் தோறும் நடைபெற்று வரும் இலவச மருத்துவ முகாம் - துபாய் ETA குழுமத்தின் 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட் (CWT)' சிறப்பான சாதனை !

http://keelaiilayyavan.blogspot.in/2013/06/eta-cwt.html

FACE BOOK COMMENTS :  
  • ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார் இலவச மருத்துவ முகாம் நடத்துபவர்கள் கீழக்கரையின் சுற்றுப்புற சூழலை சரி செய்ய நினைத்தால் வாழ்நாள் முழுவதும் மருத்துவ முகாம் நடத்துவதற்கு தேவையின்றி போகுமல்லவா? இவர்கள் ஏன் அதற்கு முயற்சிக்கவில்லை. தாயகத்தில் உள்ள மருத்துவர்களின் வருமானம் பாதிக்கபடுமே என்ற நல்லெண்ணத்திலா?????
  • Keelai Ilayyavan இன்றைய காலக் கட்டத்தில், சாதாரண காய்ச்சல், தலைவலி முதல் உடலில் ஏற்படும் சின்ன சின்ன அசவுகரியங்களுக்காக மருத்துவமனை செல்லும் போது, மருத்துவர் கட்டணம், இரத்தப் பரிசோதனை, மாத்திரை மருந்துகள் என்று குறைந்தது ரூ.500 முதல் ரூ.1000 காணமல் போய் விடுகிறது.

    சு
    த்தம், சுகாதாரம் மிகச் சரியாக இருந்தாலும், பரு நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, சில உடல் உபாதைகள் வருவது இயற்கையே. அது போன்ற வேளைகளில் இது போன்று வாரம் தோறும் நடை பெற்று வரும் இலவச மருத்துவ முகாம்கள் ஏழை மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

    இந்த மாதமாவது கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சத்தை, எதிர் காலத்தை கருத்தில் கொண்டு சேமித்து விட மாட்டோமா ? என்று ஏங்கும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு, திடீரென ஏற்படும் உடல் உபாதைகளால், அந்த மாதக் கனவும் கானல் நீராகி விடுகிறது. மேலும் கீழக்கரையில் ஆரம்ப சிகிச்சை செலவுகளை கூட செய்ய முடியாமல் தவிக்கும் ஏழை மக்கள் ஏராளம் உள்ளனர்.

    இதை எல்லாம் களையும் நல்ல நோக்கோடு, 'கம்யூனிட்டி வெல்பேர் டிரஸ்ட்' கடந்த ஜனவரி 2013 முதல் துவங்கப்பட்டு, இன்றைய தேதி வரை இடை விடாது தன் பணியினை செம்மையாக செய்து வருகிறது. அதே நேரம் கீழக்கரை நகரில் சுத்தமும் சுகாதாரமும் பேண வேண்டுவது குறித்தும் எதிர் காலங்களில், இந்த அறக்கட்டளையினர் முயற்சிக்க வேண்டுகிறேன்
  • ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார் தாங்களின் பதிலும், வேண்டுகோளும் பாரட்டுக்குறியது. வாழ்த்துக்கள்.....
  • Keelakarai Ali Batcha சகோதரர் ஜமால் அஸ்ரப் அப்துல் ஜப்பார் அவர்களின் ஆதங்கத்துடன் கேட்ட கேள்விக்கு தம்பி கீனா இனா அவர்களின் பொருப்பான பதிலும் அனைவராலும் பாராட்டப் பட வேண்டிய, ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இத்தருணத்தில் மற்றொன்றையும் பொது மக்களாகிய நாம் மனதில் கொள்ள வேண்டும்.
    பொதுவாக தொண்டு நிறுவனங்கள் மக்கள் நலப் பணிகளில் ஏதாவது ஒன்றை முழுமையாக பொருப்பேற்று நல்லோர் புகழ செயல் படுவது தான் சாலச் சிறந்தது. அப்போது தான் சேவையில் தொய்வு ஏற்படாது என்பது அனுபவ உண்மை. கொண்ட நோக்கமும் பூரணமாக வெற்றி பெறும். ஊர் சுகாதாரத்தை செம்மையாக பராமரிக்கத் தானே..
    மக்கள் பிரதிநிதிகளாக நமது தெருவாசிகளையே நம்பிக்கையுடன் தேர்வு செய்து,நமது வரிப் பணத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகாலத்த்தில் இதற்கு முன் எப்போது இல்லாத அளவுக்கு எட்டரை கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஆதாரத்தையும் கொடுத்து மக்கள் நல வாழ்வுத் திட்டங்களை சீராக செம்மையாக செயல் படுத்த கொடுத்தேமே. என்னவாயிற்று? 
    அவ்ர்களின் சட்டையை பிடிக்காமல் வெள்ளையும் சள்ளையுமாக வீதியில் பவனி வர விட்டிருக்கிறேமே. இது நம்முடைய தவறா இல்லையா? இவர்களை கேள்வி கேட்க நமக்கு முழு உரிமை இருக்கிறதா இல்லையா? ஊர் கூடினால் தீர்வு நிச்சயம்.
  • Sadiq MJ @அலி பாட்சா காக்கா >>> தங்களுடைய ஆதங்கம் பொது மக்களாகிய நமக்குப் புரிகிறது. தங்களின் "நமது வரிப் பணத்திலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகாலத்த்தில் இதற்கு முன் எப்போது இல்லாத அளவுக்கு எட்டரை கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஆதாரத்தையும் கொடுத்து மக்கள் நல வாழ்வுத் திட்டங்களை சீராக செம்மையாக செயல் படுத்த கொடுத்தேமே. என்னவாயிற்று?" என்கிற கேள்விக்கு பதில் கிடைக்கவோ அல்லது,

    இப்படியான கேள்விகள் மேல்மட்டத்துக்குப் போவதால் கூட பலனில்லை என்றும் நிர்ணயிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் (மீதமுள்ள காலம் வரை) நிர்வாகத்தைக் களைபபதற்கோ மாற்றுவதற்கோ விரும்ப மாட்டார்கள் ஏன்னா எத்தனையோ காலம் காத்துக் கிடந்து கனிந்த கனி அதாவது தற்போதுள்ள ஆளும் கட்சிக்குக் கிடைத்த வாய்ப்பு, கலைக்காமல் தக்க வைத்துக்கொள்ளவே விரும்புவார்களாம். அத்தோடு,

    எல்லாத்துக்கும் (எல்லாத்துக்கும்) துணிந்து விட்டார்கள், அதாவது அமானிதம் என்றால் என்ன அதனை உண்பனுக்கும் உண்ணத் துணை போகிறவனுக்கும் கேடுதான் என்பதனை உணராத வரை நம் போன்றவர்கள் இப்படியே சொல்லி எழுதி தேற்றிக்கொள்ள வேண்டியது தான் போல....

    அட சொந்தக் கைக்காசப் போட்டு ஊருக்கு உதவியான அல்லாஹு சந்தோசப்படக்கூடிய சதக்கத்துன் ஜாரியாக்களைச் செய்து நன்மையைக் கொள்ளை அடிக்காவிட்டாலும் பொதுமக்களின் வரிப்பணத்தில் நன்மையான காரியங்களைச் செய்து மறுமை வாழ்வுக்கு நன்மை சேர்க்கும் எண்ணமில்லாதவர்கள்..... அல்லாஹ் தான் இவர்களுக்கு நேர்வழி காட்டனும்.... துஆ செய்வோம்.... தொடர் முயற்சிகளும் செய்வோம்..... அல்லாஹ் நாடுவான்....
  • Hussain Jahangeer சுத்தமும்,சுகாதாரமும் ஒவ்வொரு மனிதரிடமிருந்தும் உருவாக வேண்டியவை.குறிப்பாக தாய்மார்கள் கடைபிடிக்க வேண்டியவை தான் சுகாதாரம்,நமது ஊரில் பெரும்பாலான பெண்கள் மீனை கழுவி விட்டு அந்த புலாத்தண்ணீரை ரோட்டில் வீசி அடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பது,  
    வீட்டில் அன்றாடம் சேகரிக்கப்படும் குப்பைகளை ஒரு பையில் போட்டு அதை நன்றாக கட்டி குப்பை சேகரிக்கப்படும் தொட்டி அல்லது இடங்களில் போடாமல் பொதுப்பாதை, பள்ளிக்கூடம், மதரஸா, மருத்துவமனை,பள்ளிவாசல்கள் போன்ற மனிதர்கள் அதிகம் நடமாடும் இடங்களில் வீசிவிடுவது போன்ற செயல்களை பெண்கள் முதலில் நிறுத்தவேண்டும்.
    கறிக்கோழி,இறைச்சிக்கடை நடத்தும் வியாபாரிகள் தங்களின் கடையில் சேகரிக்கப்படும் கழிவுகளை மிகுந்த பாதுகாப்புடன் பேக்கிங் செய்து அதை உடனுக்குடன் அகற்றப்படும் குப்பைத் தொட்டிகளில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.
    குறைந்தபட்சம் இதுபோன்ற விஷயங்களை சுகாதாரக்கடமை எனக்கருதி ஒவ்வொருவரும் செயல்பட்டால் ஓரளவுக்காவது நமதூரின் சுகாதாரத்தை பாதுகாக்கலாம்.இதுவிஷயத்தில் சமூக நல ஆர்வலர்கள் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளலாம்!

ஜித்தாவில் ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு இரத்த தான முகாம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு !

தற்போது உலகம் முழுவதிலிருமிருந்து முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக மக்கா நகருக்கு வர துவங்கியிருப்பதால், அவர்களில் தேவைப்படுவோருக்கு அவசர காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக இது போன்ற இரத்த தான முகாம்கள் அவசியமாகிறது. கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KFMC) மருத்துவமனையினருடன் இணைந்து TNTJ ஜித்தா  மண்டலம், TNTJ ரியாத் மண்டலம் ஆகியோர்கள்  ஆண்டு தோறும் ஹஜ் காலங்களில் இரத்த தான் முகாம்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர். 








இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலமும், கிங் ஃபஹத் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் ஹஜ் பயணிகளுக்கான சிறப்பு இரத்ததான முகாம் எதிர் வரும் 27.09.2013 வெள்ளிக் கிழமையன்று நண்பகல் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரை, கிங் ஃபஹத் மருத்துவமனை வளாகத்தில் நடை பெற உள்ளது. இரத்த தானம் செய்ய விரும்பும்  கொடையாளிகள், தங்கள் பெயரை முன் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



இரத்த தானங்கள் செய்து உயிர்களைக் காப்பதில் தொடர்ந்து ஏழு வருடங்களாக தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல கேடயங்களையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இந்த இரத்ததான சேவையை  செய்து வருகின்றது.



இரத்தம் வழங்கும் கொடையாளிகள், முந்தைய இரவு நன்றாக குறைந்தது 5-6 மணி நேரமாவது உறங்கியிருக்க வேண்டும் என்றும், அதிகமான திரவ உணவுகளை சாப்பிட்டிருக்க வேண்டும் எனவும் கொடையாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் முஸ்லிமல்லாத தமிழ் சகோதரர்களும் கலந்து கொண்டு, இரத்த தானம் செய்துள்ளனர் என்பது மகிழ்வு தரும் கூடுதல் செய்தி. 

படங்கள் : கடந்த 2011 ஆம் ஆண்டு ஜித்தாவில் நடை பெற்ற இரத்த தான முகாமில் எடுக்கப்பட்டது 

துபாயில் நாளை ( 20.09.2013) நடை பெற இருக்கும் பெண்களுக்கான இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி !

துபாயில் பெண்களுக்காக பெண் பயிற்சியாளரால் நடத்தப்படும்  இஸ்லாமிய சிறப்பு   ஒலி ஒளி நிகழ்ச்சி நாளை (20.09.2013) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, துபாய் தேரா சலாஹுதீன் மெட்ரோ ஸ்டேஷன் அருகிலுள்ள யுனைடெட் டிரேடர்ஸ் கம்பெனி பில்டிங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியினை பொறியாளர் எம். ஷாமிலா நடத்துகிறார்.



பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆண் - பெண் புரிதல், அறிவியல், உளவியல் மற்றும் இஸ்லாமிய பார்வை, இறைவன் நம்மைப் படைத்த நோக்கத்தை உணருதல்,   ஆண்,பெண் மன, உடல் ரீதியான தன்மைகளைப் பொறுத்து அமையும் நம் கடமைகள், திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழும் வழிமுறைகள், தன்னம்பிக்கையூட்டும் தகவல்கள்  உள்ளிட்ட கருத்துக்கள் குறித்த தகவல்கள் இடம் பெறுகிறது.

முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவிற்கு :

பெண்கள் தொடர்பு கொள்ள :  055 40 63 181 /     050 16 17 525
ஆண்கள் தொடர்பு கொள்ள :  050 29 33 713 /  050 385 19 29

மின்னஞ்சல் :
asibrahim32@gmail.com

தகவல் : முதுவை ஹிதாயத் அவர்கள் 

Wednesday 18 September 2013

கீழக்கரை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க அமைச்சரை நேரில் சந்தித்து ஜவாஹிருல்லாஹ் MLA வலியுறுத்தல் !

கீழக்கரை அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க கோரி, இன்று (18.09.2013) சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் கே சி வீரமணி அவர்களை, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர். எம் எச் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:

எனது இராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட, கீழக்கரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவிக்கின்றனர். கீழக்கரை அரசு மருத்துவமனையில் 2 பெண் மருத்துவர்கள் உட்பட 6 மருத்துவர்கள் பணியில் இருந்து வந்தனர்.


தற்போது 3 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதால் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கீழக்கரை அரசு மருத்துவமனையில் கீழக்கரை, மாயாகுளம், புல்லந்தை, முள்ளுவாடி, காஞ்சிரங்குடி, பாரதிநகர், மங்களேஸ்வரி நகர், திருப்புல்லாணி உட்பட ஏராளமான கிராமங்களிலிருந்து வெளி நோயாளிகளாக 500-க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு உள் நோயாளிகளாக 40 முதல் 60 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சர்க்கரை மற்றும் இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனித்தனியே மருத்துவர்கள் பணியில் இருந்து வந்தனர். ஆனால் தற்போது குழந்தைகள் நல மருத்துவர்கள் இருவரும், பொது மருத்துவர் ஒருவர் மட்டுமே இருக்கின்றனர். மேலும் புறநோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் நோயாளிகளில் சிலர் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே இருந்தது போல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தாங்கள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி ஏற்கெனவே இருந்தது போல் கூடுதல் மருத்துவர்களை நியமித்து பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து பதிலளித்த அமைச்சர் உடனடியாக மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Monday 16 September 2013

கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு !

கீழக்கரை நடுத் தெரு ஜும்மாப் பள்ளி  ஜமாத்தை சேர்ந்த சின்னக்கடைத் தெரு மர்ஹூம் சேகு அப்துல் காதர் அவர்கள் மனைவியும், மர்ஹூம் ஹமீது கருணை, மாலிஹான் பீவி ஆகியோர்களின் தாயாரும், ஜனாப். முஹைதீன் சீனி அவர்களின் மாமியாரும், செல்ல மரிக்கா, சமீன், செய்யது ரலீன், ஹமீது மதார் ஹசீன், கோடை இடி முஹீன், ஹைருன் நிஷா, பாஹியா ஆகியோர்களின் உம்மம்மாவுமாகிய ஜனாபா.செய்யது சுல்தான் பீவி அவர்கள் இன்று (16.09.2013) மதியம் 3 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.


 (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்).

 அஹமது தெரு ASWAN சங்கத்தின் அறிவிப்பு பலகை

அன்னாரின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று (16.09.2013) இரவு இஷா தொழுகைக்கு பின்னர் 8 மணியளவில் நடுத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நடை பெற்றது. மர்ஹூமா. செய்யது சுல்தான் பீவி அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.