தேடல் தொடங்கியதே..

Saturday 15 June 2013

கீழக்கரை 'பழைய குத்பா பள்ளிவாசல்' அருகே மீண்டும் குவியும் 'நாறும் குப்பைகள்' - நோய்கள் பரவும் முன் சுத்தப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

பழைய குத்பா பள்ளி அருகே உள்ள அஞ்சு வாசல் கிட்டங்கி செல்லும் பகுதியில் காலம் காலமாக, துர்நாற்றம் வீசும் கோழிக் கழிவுகளும், மக்காத குப்பைகளும், இந்தப்பகுதியில் வசிக்கும் மக்களால் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கோடு கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் நகராட்சி துணைத் தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் முன்னாள் வார்டு கவுன்சிலர் கிதிர் முஹம்மது ஆகியோர்களின் ஏற்பாட்டில் இந்த பகுதி இளைஞர்களை ஒன்றிணைத்து குப்பைகள் முழுவதையும் அப்புறப்படுத்தி, பொது மக்கள் அமர்வதற்கு சிமிண்டாலான இருக்கைகள் அமைக்கப்பட்டது. மேலும் அழகுச் செடி வகைகளும் நடப்பட்டு பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.  


இது குறித்து கடந்த அக்டோபர் மாதத்தில் நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி :

கீழக்கரையில் குப்பையின் கோரப் பிடியில் இருந்து புத்துயிர் பெற்ற 'அஞ்சு வாசல் கிட்டங்கி' பகுதி !

தற்போது கடந்த 2  மாத காலமாக மீண்டும் இந்த பகுதிகளில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் பறந்து கொண்டிருக்கிறது. இந்த பக்கம் கடந்து செல்பவர்கள் துர்நாற்றம் தாங்காமல் வேறு பக்கமாக சுற்றிச் செல்கின்றனர். மேலும் இதனால் நோய்கள் பரவும் அபாயமும், கடும் சுகாதாரக் கேடும் நிலவி வருகிறது. இது குறித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அகற்ற ஆவன செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இது குறித்து கீழக்கரை நகராட்சித் துணைத் தலைவர். ஜனாப்.ஹாஜா முஹைதீன் அவர்களிடம் பேசிய போது "இங்கு குப்பைகளை கொட்டுபவர்கள் வேறு எந்த மக்களும் இல்லை. இந்த பகுதியில் வசிப்பவர்கள் தான் கொட்டிச் செல்கிறார்கள். மீண்டும் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில், கண்காணிப்பு பணிக்கு ஆள்களையும் வைத்தோம். ஆனால் எவ்வித பயனுமில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் குப்பைகள் அனைத்தும் அள்ளப்பட்டு, மீண்டும் இப்பகுதியில் சுகாதாரம் செழித்திட வழி வகை செய்யப்படும்" என்று ஆழ்ந்து சிந்தித்தவாறு தெரிவித்தார்.
முக்கிய குறிப்பு :

இந்தப் பகுதி, கீழக்கரை பழைய குத்பா பள்ளிவாசல்  ஜமாத்தின் தற்போதைய தலைவரும், கீழக்கரை நகராட்சித் துணைத் தலைவருமான ஜனாப்.ஹாஜா முஹைதீன் அவர்களின் சொந்த வார்டுப் பகுதி என்பதும், இந்தப் பகுதியில் (9 வது வார்டு) இருந்து தான் நகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • கீழக்கரை 'புதிய ஒற்றுமை'உலகத்திலேயே நான்காவது பழமையான பள்ளியாக விளங்கும் பழைய குத்பா பள்ளியின் வளாக வெளியா இப்படி காட்சி அளிக்கிறது? பார்ப்பதற்கே மிகவும் வருத்தமாக இருக்கிறது. உடனடியாக இந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் குப்பைகளை கொட்டாதவாறு, இந்த தெருவின் முக்கிய பிரதானிகள் முயற்சிக்க வேண்டும். இந்த பழமையான பள்ளி வளாகத்தின் சுற்றுப் புறத்தைப் பேண முயல வேண்டும்.
    22 hours ago · Like · 2
  • Keelakarai Ali Batcha > HAMEED AZAR சகோதரரே தங்கள் கருத்தை வன்மையாக மறுக்கிறேன்.கீழக்கரை வெல்பேர் அசோஷியேஷன் சார்பாக அனு தினமும் குப்பை சேகரிக்க வீடு வீடாக இப் பகுதியில் துப்பரவு தொழிலாளர்ர்கள் வருகிறார்கள் என்பதற்கு தெரு மக்களே சாட்சி. மக்களிடம் விழிப்புணர்வு இல்லாதது தான் தலையான காரணம். இப்போது அப் பகுதியில் வாருகாலும் மராமத்து செய்யப்பட்டு சிமெண்ட மூடியும் போடப்பட்டுள்ளது. குறை இருந்தால் குறையை சொல்லிக் காட்டத் தான் வேண்டும். நிறை இருந்தால் பாராட்டியே ஆக வேண்டும்.
    19 hours ago · Like · 3
  • Ahamed Jalaludeen Avangale kottuvaangalam avangale edukka sollu vaangalaam...Namma ooru munneridum
    18 hours ago · Like · 1
  • Keelai Ilayyavan தற்போது இந்தப் பகுதியில் குவிந்திருந்த நாறும் குப்பைகள் அத்ததனையும் அள்ளப்பட்டு விட்டதாக அறிகிறேன். இதற்காக பெரும் முயற்சி எடுத்த, பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர். ஜனாப் ஹாஜா முகைதீன் காக்கா அவர்களுக்கு, நன்றி... நன்றி....
    4 hours ago · Like · 2
  • Syed Abusalique Seeni Asana வாருகள் மூடி போட பட்டது.. மிக்க நன்றி.. அனால் நேற்றும் இன்றும் தெரு முழுக்க கழிவு நீரால் நாரி பொய் கிடப்பதை பார்க்க வேண்டாமா? எங்கையோ இருந்து ரோடு வழியாக ஓடு வரும் கழிவு நீர் ஒரு பஹுதிக்கு மேல் மேடை இருப்பதால் அதற்கு மேல் போக முடியாமல் தெருவெல்லாம் சேரும் சகதியுமாய் காட்சி அழிகிறது.. இது தற்போது தற்காலிக பிரச்சனை என்றாலும் மலை காலத்தில் எதுவே பெரிய பிரச்சனையாக இந்த பகுதி மக்கள் அவதி பட நேரிடும் என்பதை உணர்ந்து முழுமையாக சரி செய்து தர வேண்டும்.
    about an hour ago · Like · 1

    • Asan Hakkim ஆஹா பார்க்கும் போதே எவ்வளவு குளுமையா இருக்கு, `இது தாண்ட கிழக்கரை` என்ற தலைப்பில் குப்பையை மையமாக வைத்து ஹாலி உட் லெவலில் ஒரு மெஹா ஹிட் படமே எடுக்கலாம் போல. வேதனை..அவமானம்...வெட்க்கம்...சீஈஈஈஈஈஈ - அன்புள்ள அசன் ஹக்கீம்%%

      • Asan Hakkim இந்த குப்பை என்ன இதுக்கு மேலையும் ஆடு, மாடு, கோழி என அணைத்து குப்பை கழிவுகளையிம் கொட்டட்டும். நான் நினைக்கிறேன் இன்னும் சில ஆண்டுகளில் நமது ஊரில் பெட்ரோல் உற்பத்தி ஆகும் என் நினைக்கிறேன்.

கீழக்கரை புதிய பேருந்து நிலைய கட்டிடத்தில், இன்று (15.06.2013) நடைபெற்ற மின் கட்டண வசூல் மைய திறப்பு விழா நிகழ்ச்சி - பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி !

கீழக்கரை நகரில் 10000 க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. பொதுமக்கள் இதற்கான மின் கட்டணத்தை, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் வரை, நகருக்குள் இயங்கி வந்த  மின் கட்டண வசூல் மையத்தில்  செலுத்தி வந்தனர். தனியாருக்கு சொந்தமான அந்த இடம் காலி செய்யப்பட தொடர்ந்து வலியுறுத்தப் பட்டதால், நகருக்குள் கட்டண வசூல் மையம் அமைக்க வேறு இடம் தேடினர். அப்போது இருந்த நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்காலும், யாரும் இடம் தர முன் வராத காரணத்தினாலும், கீழக்கரை நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில், கீழக்கரை - இராமநாதபுரம் 'டாஸ்மாக்' நெடுஞ்சாலையில் உள்ள துணை மின் நிலைய வளாகத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.


இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த மின் கட்டண வசூல் மையத்தை கீழக்கரை நகருக்குள் கொண்டு வர பல்வேறு பொது நல அமைப்பினர்களும், அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இராமநாதபுரம் சட்ட மன்ற  உறுப்பினர். பேராசிரியர். முனைவர். M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 2011 ல் பொறுப்பேற்ற புதிய நகர் மன்றம், இந்த அவசியமான கோரிக்கையை ஏற்று, புதிய பேருந்து நிலைய வளாகத்தில் மின் வசூல் மையம் அமைக்க, முதல் நகராட்சி கூட்டத்தில், முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகு, மின்சார வாரியத்தினரின் ஒத்துழைப்புடன் அதற்கான பணிகள் நிறைவடைந்து, ஆள் பற்றாக்குறையின் காரணமாக பொது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது.


இந்நிலையில், பொது மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த, மின் கட்டண வசூல் மைய திறப்பு விழா இன்று காலை 11.15 மணியளவில், கீழக்கரை புதிய பேருந்து நிலைய கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி சேர்மன் இராவியத்துல் கதரியா, நகராட்சி துணைத் தலைவர் ஹாஜா முஹைதீன், இராமநாதபுரம் மாவட்ட தலைமை மின்சார வாரிய பொறிஞர். ரா.அசோக் குமார், கீழக்கரை அ.தி.மு.க நகர் செயலாளர் இராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நகர் மன்ற உறுப்பினர்கள், பொது நல அமைப்பினர்கள், சமூக நல சங்கங்களின் நிர்வாகிகள், நகராட்சி மற்றும் மின்சார வாரிய ஊழியர்கள், பொதுமக்கள்  கடும் வெயிலையும் பொருட்படுத்தாது திரளாக கலந்து கொண்டு மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொண்டனர்.

இது குறித்து கீழக்கரை நகராட்சி சேர்மன் ஜனாபா. இராவியத்துல் கதரியா அவர்கள் கூறும் போது "இறைவன் அருளால்.. கீழக்கரை நகருக்குள், மின் கட்டண வசூல் மையம் அமையப் பெற இது வரை நகராட்சி சார்பாக மேற் கொள்ளப்பட்ட ஆக்கப்பூர்வ முயற்சிகளுக்கான பலன் தற்போது கிடைத்துள்ளது. கடந்த ஜூன் 4 ஆம் தேதி கீழை இளையவன் வலை தளத்திற்கு அளித்த பேட்டியில் 'இறைவன் நாடினால் இன்னும் 15 நாள்களில் வசூல மையம் செயல்படத் துவங்கும்' என்று தெரிவித்து இருந்தேன். அல்ஹம்துலில்லாஹ். அதற்கு முன்னதாகவே செயல்பட துவங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக எங்களோடு இணைந்து முயற்சிகள் மேற்கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும், நகர் மன்றம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் இங்கு நகராட்சிக்கு வரி செலுத்தும் வசதியும் கூடுதலாக செய்யப்பட்டு உள்ளது." என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தி :

கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையம் அமைக்க நகராட்சி சார்பாக எடுக்கப்பட்ட தொடர் முயற்சிகளுக்கு பலன் இன்னும் 15 நாள்களில் கிடைக்கும் - கீழக்கரை சேர்மன் அறிவிப்பு !

முக்கிய குறிப்பு :

கீழக்கரை நகருக்குள் மின் கட்டண வசூல் மையம் அமைய, முழு முதற் காரணம் 'நாங்கள் தான்..' என்று எந்த ஒரு தனி மனிதனோ, பொது நல அமைப்போ அல்லது அரசியல் கட்சியோ பெருமை கொண்டாட முடியாத அளவிற்கு அனைத்து சமூக நல விரும்பிகளும் ஆரம்ப காலக் கட்டத்திலிருந்தே, இதற்காக தங்களளவில் முயற்சி மேற் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இந்த நல்ல சேவைக்காக, தங்கள் காலம் நேரம் பாராது, பெரும் முயற்சி எடுத்த கீழக்கரை நகர் மன்ற அங்கத்தினர்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர் அவர்களுக்கும், அனைத்து பொது நல அமைப்பினர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும், தங்களை வெளிக் காட்டிக் கொள்ளாது பாடுபட்ட அனைத்து சமூக சிந்தனைவாதிகளுக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி....                    நன்றி.....                     நன்றி......

Friday 14 June 2013

தமிழகத்தில் 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு அறிவிப்பு !

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்தர், தட்டச்சர் உள்ளிட்ட மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று (13.06.203) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குரூப்-4 தேர்வு மூலமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி இடங்கள் நிரப்பப்படன. 


இந்த நிலையில், மேற்கூறப்பட்ட பதவிகளில் சுமார் 5,500 காலி இடங்கள் குரூப்-4 தேர்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்டு மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. தேர்வு பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன. குரூப்-4 தேர்வு பணிகளுக்கு எழுத்துத்தேர்வு மட்டுமே உண்டு. நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலே வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. 



இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிகளுக்கு தொடக்க நிலையில் ஏறத்தாழ ரூ.14 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். இப்பணிகளுக்கு தேர்வுசெய்யப்படுவோர் பட்டதாரியாக இருந்தால் இரண்டு இன்கிரிமென்ட் அதாவது கூடுதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பணியில் இருந்துகொண்டே துறைத்தேர்வுகள் எழுதி படிப்படியாக பதவி உயர்வும் பெறலாம். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியுள்ளவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்விற்கான விண்ணப்பங்களை இன்று (14.06.2013) முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: ஜூலை 15.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 25.

மேலும் விண்ணப்பக்கட்டணம், வயதுவரம்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்களை அறிய கீழ் காணும் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தை சொடுக்கி பார்வையிட்டு விண்ணப்பிக்கலாம். 

டி.என்.பி.எஸ்.சி இணையதள முகவரி 

கீழக்கரை பகுதியில் அரசு வேலைகளுக்காக முயற்சிக்கும் ஆர்வமுடையவர்கள், இந்த தேர்வுக்கு விரைந்து விண்ணப்பிக்குமாறு கீழை இளையவன் வலை தளம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்

கீழக்கரையில் அனைத்து ஜூம்மா பள்ளிகளிலும், காலம் சென்ற 'செ.மு. ஹமீது' அவர்களுக்காக நடைபெற்ற 'காயிப் ஜனாஸா தொழுகை' - ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு !

கீழக்கரை மேலத் தெரு புதுப் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த, 'சேனா மூனா ஹமீது காக்கா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'கீழக்கரையின் கல்வித் தந்தை' 'எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்'அவர்கள் 06.06.2013 மாலை 6.48  மணியளவில் புது டெல்லியில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.  


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 08.06.20013 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில், சென்னை இராயப்பேட்டை மையவாடியில் நடை பெற்றது. இவர்கள் கீழக்கரை அனைத்து ஜமாத்துகளின் கூட்டமைப்பான 'கீழக்கரை குத்பா கமிட்டி' யின் தலைவராகவும் அங்கம் வகித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

'செ.மு.ஹமீது காக்கா' அவர்கள் இல்லம், மேலத்தெரு, கீழக்கரை 


இந்நிலையில் கீழக்கரையில் இன்று (14.06.2013) வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகைக்குப் பின்னர், கீழக்கரையில் அனைத்து ஜமாத்து பள்ளிவாசலிலும், 'காயிப் ஜனாஸா தொழுகை' நடை பெற்றது. கீழக்கரை நடுத் தெரு குத்பா பள்ளியில் பைத்துல் மால் துணை செயலாளர் முஹைதீன் தம்பி அவர்களின் சிறு உரைக்குப் பின்னர், கீழக்கரை டவுன் காஜி.A.M.M.காதர் பக்ஸ் ஹுசைன் அவர்கள் இமாமாக இருந்து தொழுகை நடத்தினார். அனைத்து பள்ளிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, அன்னாரின் மஹ்பிரத்திற்காக துஆ செய்தனர்.

கீழக்கரையில் மினி வேன்களில் பூச்செடிகள், பழக்கன்றுகள் விற்பனை - ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள் !

கீழக்கரை நகருக்குள் மினி வேன்கள் மூலம் அலங்கார பூச்செடிகள், பழக்கன்றுகள், நிழல் தரும் மரக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அடுக்கு மல்லி, கொத்து மல்லி, சிகப்பு ரோஜா, முல்லை, இட்லிபூ, நந்தியா வட்டை, பொன்அரளி, குரோட்டன்ஸ் உள்ளிட்ட மலர் செடிகளும், ஒட்டு மாம்பழம், சீனி கொய்யா, கமலா ஆரஞ்சு, சாத்துக்கொடி, நாரத்தை, எலுமிச்சை, சீத்தாப்பழம், நெல்லி ரகங்கள் ஆகிய பழக்கன்றுகளும், 

மரச்செடிகளான தேக்கு, மலைவேம்பு, கொன்றை, பூவரசு, இலுப்பை போன்றவைகளும் நடவு செய்வதற்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றை பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.





இது குறித்து தென்காசிப் பகுதியில் இருந்து கீழக்கரைக்கு செடிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் ஸ்ரீ பார்வதி நர்சரி கார்டன் உரிமையாளர். திரு. மாடசாமி அவர்கள் கூறும் போது "வருடத்தில் இருமுறை கீழக்கரை பகுதிக்கு மரக் கன்றுகளையும் பூச்செடிகளையும் விற்பனைக்கு கொண்டு வருகிறோம். மலர் செடிகள் மற்றும் அலங்கார செடி வகைகள் ஒவ்வொன்றும் ரூ.20 க்கும், ஒட்டு ரக வீரிய பழக்கன்றுகள் ஒவ்வொன்றும் ரூ.40 க்கும் விற்பனை செய்து வருகிறோம். தற்போது விற்பனை அமோகமாக இருக்கிறது." என்று தெரிவித்தார்.


இவற்றை வாங்கி நடவு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மேலதிக விவரங்களுக்கு 96599 65756 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday 13 June 2013

கீழக்கரையில் வரலாறு காணாத வகையில் கோழிக் கறி விலை ரூ.200 ஆக உயர்வு - விற்பனை இன்றி வெறிச்சோடி கிடக்கும் பிராய்லர் கடைகள் !

கீழக்கரையில் கடந்த வாரம் வரை ரூ.160க்கு விற்பனையான கோழிக்கறி தற்போது ரூ.200 க்கும், சில கடைகளில் ரூ.210 க்கும் விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் பெரும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். நமது கீழக்கரை நகரில் கோழிக்கறி பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். இது தவிர ஏராளமான  சிக்கன் ஸ்டால்களும் உள்ளன. இந்த கடும் விலை உயர்வால் இந்த தொழில் சார்ந்த அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர். இந்த திடீர் கடும் விலை உயர்வால், கீழக்கரை நகரில் உள்ள அனைத்து பிராய்லர் கடைகளும் விற்பனை இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


நாமக்கல் மண்டலத்தில், கடந்த மார்ச் மாதம் முதல் தீவனங்களின் விலை அதிகரித்துள்ளதால், நாடு தழுவிய அளவில், பிராய்லர் கோழி விலை, 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தவிர, முட்டை விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கோழி தீவனம் தயாரிக்க பயன்படும் சோயா உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்கள், கடந்த ஆறு மாதங்களாக அதிக விலையேற்றம் அடைந்துள்ளதும் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. 





இது குறித்து கீழக்கரை 'மாஸ்டர் பிராய்லர்ஸ்' கோழிக் கடை உரிமையாளர், சகோதரர் அய்யூப் அவர்கள் கூறும் போது "நான் இந்த பிராய்லர் தொழிலை துவங்கி 15 வருட காலத்தில், கிலோ ரூ.200க்கு விற்பனையாவது இதுவே முதல் முறை. கோழிக்கறியை விரும்பி சாப்பிடும் வாடிக்கையாளர்கள் பலர் விலையை கேட்டவுடன், வாங்காமல் வேகமாக நடையை கட்டுகின்றனர். கடந்த வாரத்தில் நடந்த விற்பனையை காட்டிலும், தற்போது வெகுவாக குறைந்துள்ளது. தற்போது நிலவும் இந்த திடீர் விலையேற்றம் இன்னும் ஒரு சில வாரங்கள் நீடிக்கும் என தெரிகிறது" என்று வருத்தம் தோய்ந்த முகத்துடன் தெரிவித்தார்.

கோழி மேல் கோபம் வேண்டாமே..?
அதே வேளையில், கீழக்கரையில் கடந்த நவம்பர் 2012 ல் கறிக் கோழி ரூ.100 க்கும், சில இடங்களில் ரூ.90 க்கும் விற்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வாங்கி சென்றனர். ஆனால் இப்போது அதை காட்டிலும் இரு மடங்காக விற்கப்படுகிறது. இது குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கி பார்வையிடவும்.

கீழக்கரையில் கோழிக்கறி விலைச் சரிவால் நடுத்தர, ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சி !

உங்கள் பொது அறிவுக்கு :

உலகளவில், கோழி உற்பத்தியில் வளர்ந்து வரும் முன்னணி நாடுகளுள் ஒன்றாக, இந்தியா விளங்குகிறது. குறிப்பாக, சர்வதேச அளவில், நம் நாடு, பிராய்லர் உற்பத்தியில், ஐந்தாவது இடத்திலும், முட்டை உற்பத்தியில், நான்காவது இடத்திலும் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, இந்திய கோழிப் பண்ணை துறை, ஆண்டுக்கு, 8 முதல் 10 சதவீதம் வரை வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் பெரிய அளவிலான ஒருங்கிணைக்கப்பட்ட வர்த்தக வாய்ப்புகள் கொண்ட துறையாக, இந்திய கோழிப் பண்ணை துறை உருவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tuesday 11 June 2013

கீழக்கரையில் விதி முறைகளை மீறி பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் - ஆபத்துகள் ஏற்படும் முன் தடுக்கப்படுமா?

கீழக்கரையில் தற்போது கோடை விடுமுறைக்குப் பின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவர்களை அதிகளவில் ஏற்றி,  மின்னல்   வேகத்தில் சாலைகளை கடந்து செல்லும் ஆட்டோக்கள், ஆம்னி வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கீழக்கரை, குறுகிய சாலை வசதி உள்ள ஊராக திகழ்வதால் பள்ளி, கல்லூரிகளில் உள்ள பெரிய வாகனங்கள் குறிப்பிட்ட சாலைகளில் மட்டுமே சென்று வர இயலும்.  எனவே தான் இது போன்ற தனியார் வாகனங்களை நாடுகின்றனர்.


பட விளக்கம் : அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவரை கண்டிக்கும் தமுமுக நகர் தலைவர் முகம்மது சிராஜீதீன் 

இது குறித்து கீழக்கரை தமுமுக நகர் தலைவர் முகம்மது சிராஜீதீன் அவர்கள் கூறும் போது "இந்த விசயத்தில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். விபத்துகள் ஏற்பட்ட பிறகு வருத்துவதில் பயனில்லை. தினமும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செல்லும் வாகனத்தில் பாதுகாப்பாக அமர்ந்து செல்கிறார்களா..? என்பதை கவனிக்க வேண்டும். ஆபத்து வருமுன் காப்பது நம் கடமை." என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

இது குறித்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் பசீர் அஹமது அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் 500க்கும் மேற்பட்ட வாடகை ஆட்டோக்களும் 300க்கும் மேற்பட்ட ஆம்னி வேன்களும் இயக்கப்பட்டு வருகிறது. இவைகளில் பெரும்பாலானவை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ ,மாணவிகளை மாத வாடகை அடிப்படையில் ஏற்றி செல்கின்றனர்.

இவர்கள் அளவுக்கு அதிகமாக கூடுதல் மாணவர்களை ஏற்றிச் செல்வதால் பள்ளிக் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறும் அபாயமும் உள்ளது. சில ஆட்டோக்களில் முன் இருக்கையிலும் 2 பள்ளி குழந்தைகளை அமர்த்தி செல்கிறார்கள். இதனால் பேராபத்துகள் நிகழும் என்பதை உணர வேண்டும்" என்று தெரிவித்தார். 

அதிகமான குழந்தைகளுடன் பறக்கும் ஆட்டோ 



கீழக்கரையில் ப‌ல‌ ஆண்டு காலமாக இந்த‌ குற்ற‌ச்சாட்டு இருந்து வ‌ருகிற‌து. ஆனால் இதற்கு பதில் தரும் சில வாகன ஓட்டுனர்கள் "பெட்ரோல் விலை கூடி விட்டது. டீசல் விலை  ஏறி விட்டது. அதனால் தான் இது போன்று பள்ளி மாணவர்களை ஏற்ற வேண்டிய சூழல்" இருப்பதாக தெரிவித்தாலும் மாணவ செல்வங்களை, இப்படி நசுக்கி, மூச்சு திணறடித்து கல்விக் கூடங்களுக்கு அழைத்து செல்வதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் பள்ளி விடும் நேரங்களில், சிறிய சந்துகளிள் ஜெட் வேகத்தில் பறக்கும் இது போன்ற வாகனங்களால் உயிரிழப்புகளும் ஏற்படக் கூடிய அபாயம்  உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதில் அச்சப்படும் விஷயம் என்னவென்றால்.. இந்த வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் பலருக்கு முறையான ஓட்டுநர் உரிமம் இல்லை. சிறுவர்களும் வாகனங்களை ஓட்டுகிறார்கள். சிலர் குடிபோதையில் ஓட்டுகிறார்கள் என்று நீண்ட காலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வருகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் : நண்பன். இர்பான் 

Monday 10 June 2013

கீழக்கரையில் கோடை விடுமுறை முடிந்து இன்று (10.06.2013) பள்ளிகள் திறந்தன - மகிழ்ச்சியுடன் பள்ளி செல்லும் மாணவ செல்வங்கள் !

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின், இன்று (10.06.2013) திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், பொதுத்தேர்வுகள் முடிந்த பின், ஏப்ரல், மே மாதங்களில், கோடை விடுமுறை விடப்பட்டது. 2013 -14ம் கல்வி ஆண்டை, கடந்த 03.06.2013 தேதி முதல் துவக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டு இருந்தது. 

இடம் : ஹமீதியா மேனிலைப் பள்ளி, கீழக்கரை 


ஆனால், கடும் வெயில் காரணமாக, பள்ளி திறப்பதை, 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து, தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும், இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் என, அனைத்து வகை பள்ளிகளும், இன்று திறக்கப்பட்டுள்ளன. 

கீழக்கரை நகரில் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளது. காலை முதலே மாணவ, மாணவியர் அனைவரும், தங்கள் பள்ளிகளுக்கு மிகுந்த உற்சாகத்துடன் செல்லத் துவங்கினர். தற்போது அனைத்து பள்ளிகளிலும் PRE KG, LKG, UKG போன்ற வகுப்புகளுக்கு, அனல் பறக்கும் அட்மிஷன் நடை பெற்று வருகிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு வருகின்றனர். 

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு,இன்று காலை பள்ளி திறந்ததும், இலவச பாடப் புத்தகங்கள் வழங்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கல்வி எனும் அழியா திரவியம் தேடி தங்கள் சிறகினை விரித்து.. பள்ளிகள் நோக்கி பறக்கத் துவங்கி இருக்கும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday 9 June 2013

கீழக்கரை நகராட்சியில், குப்பை வண்டிகளுக்கு டிரைவர்கள் பணியமர்த்தப் படாததால், மீண்டும் நகருக்குள் தேங்கும் குப்பைகள் - பொதுமக்கள் அதிருப்தி !

கீழக்கரையில் ப‌ல‌ ஆண்டுக‌ளாக‌, நகருக்குள் அள்ளும் குப்பைகளை கொட்டி அழிப்பதற்கும், உரமாக மாற்றுவதற்கும்  நிலையான இடம் இல்லாமல் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி சுகாதார கேடு நிலவி வந்தது.  இதற்காக கீழக்கரை அருகே, நகராட்சிக்கு சொந்தமாக, தோணிப் பாலம் அருகில் சுமார் 12 ஏக்கர் நிலம் ஒன்றினை தனியார் ஒருவர் வாங்கி கொடுத்ததன் மூலம், நீண்ட‌ கால குப்பை பிர‌ச்ச‌னை தீர்க்கப்பட்டது. அரசு நிதியிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து சுற்று சுவர் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டது. தற்போது குப்பைகள் முழுதும் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 8 மாத‌ காலமாக குப்பைகள் பிரச்சனைகள் வெகுவாக குறைந்திருந்தது. 



இந்நிலையில் தற்போது நகருக்குள் தேங்கும் குப்பைகளை முறையாக அள்ளப்படாததால், மீண்டும் தெருவெங்கும் குப்பைகள் நிறைந்து காட்சியளிக்கிறது. இதனால் கீழக்கரையில் மீண்டும் அழையா விருந்தாளியாக மலேரியா, சிக்குன்குன்யா, டெங்கு  போன்ற நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. கீழக்கரையின் முக்கிய பகுதிகளான முஸ்லீம் பஜார் (லெப்பை மாமா டீ கடை அருகில்), வள்ளல் சீதக்காதி சாலை, சேரான் தெரு பகுதி, தட்டான் தோப்பு பகுதி, புதிய பேருந்து நிலையம் பகுதி போன்ற இடங்களில் துர் நாற்றம் வீசும் குப்பைகள்  அகற்றப்படாமல் ஆங்காங்கே குவியலாக மாறி பெரும் சுகாதாரக் கேட்டினை உருவாக்கி வருகிறது. 


மேலும் கீழக்கரை லெப்பை தெரு, ஸ்டார் மெடிக்கல் அருகே அனு தினமும் வழிந்தோடும் சாக்கடையால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். சாக்கடை கழிவுகளை சாலைகளில் அள்ளி வைக்கும் துப்புரவுப் பணியாளர்கள் அதை அப்புறப் படுத்துவதில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்ட போது குப்பைகளை அள்ளும் டிரக் வண்டிகளுக்கு டிரைவர்கள் இன்னும் பணி அமர்த்தப்படாததால் தான் வேலைகளில் சுணக்கம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். தகவல் அறியும் உரிமைகள் சட்டத்தின் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டதில், கீழக்கரை நகராட்சியில் 5 வாகனங்கள் இருப்பதாக தகவல் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் புதிதாக வாங்கப்பட்ட கழிவு நீர் உறிஞ்சும் மெகா சக்கர் வாகனம் உட்பட 7 வாகனங்களுக்கு, தர்மராஜ், ஐயப்பன் என்கிற 2 டிரைவர்கள் மட்டுமே இருக்கின்றனர். 


தற்போது தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 5 டிரைவர்களை பணியமர்த்த ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இன்னும் என்ன காரணத்திற்காகவோ, நகராட்சி நிர்வாகத்தினர் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகவே பொது மக்கள் நலன் கருதியும்,அவசர அவசியத்தின் அடிப்படையிலும்,உடனடியாக குப்பை வாகனங்களுக்கு டிரைவர்களை பணியமர்த்த வேண்டும் என்று பல்வேறு சமூக நல அமைப்பினர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

FACE BOOK COMMENTS :

  • Syed Hassanali · Friends with Barakath Ali and 67 others
    வெள்ளையும் சொள்ளையுமாக வீதியில் உலாவரும் கவுன்சிலர்களே முதலில் ஊரை சுத்தமாக வைத்துவிட்டு நீங்கள் வெள்ளையும் சொள்ளையுமாக வெளியில் வாருங்கள் ஊரே நாரி கிடக்குதே உங்களுக்கு வெட்கமாக இல்லை வெளி ஊரிலிருந்து ஒரு விருந்தாளியக்கூட நம்ம ஊருக்கு கூப்பிட முடியவில்லை நம்ம ஊரு நாத்தம் அவர்களுக்கும் தெரிந்துவிடுமோ என்கிற பயத்தினால் ,ராமநாதபுரத்தில் தியேட்டரில் கூட கூட்டம் கிடையாதாம் ஆனால் கீழக்கரை மக்களை நம்பி இருக்கிற ஆஸ்பத்திரிகளில் கூட்டம் வழிந்தோடுகிரதாம் இதற்க்கெல்லாம் என்ன காரணம் நமதூரில் சுத்தம் சுகாதாரம் கிடையாது ஒரு ஏழை குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் அந்த குடும்பத்தின் நிலைமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள் பணத்துக்கு என்ன செய்வார்கள் உங்களால் ஊரை சுத்தமாக ஆக்க முடியாவிட்டால் தயவு செய்து பதவியை ராஜினாமா செய்து விட்டு போங்கள் மக்களின் உயிரில் விளையாடாதிர்கள்
    32 minutes ago · Like · 1
  • Syed Hassanali · Friends with Barakath Ali and 67 others
    இந்த குப்பையின் பக்கத்தில் மூன்று டீக்கடை ஒரு ஜூஸ் கடை டீக்கடையில் இஞ்சி டீ கேட்டால் கிடைப்பதோ கொசு டீ தான்(விட்டமின் c )