தேடல் தொடங்கியதே..

Friday 31 May 2013

கீழக்கரை நகரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஹமீதியா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி '490 மதிப்பெண்கள்' பெற்று வெற்றி வாகை !

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், இன்று (31ம் தேதி), காலை, 9.15 மணிக்கு வெளியானது.  தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 27ம் தேதி துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 5,43,152 பேர் மாணவர்கள்; 5,25,686 பேர் மாணவியர் என, மொத்தம், 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 பேர் தேர்வு எழுதினர்.கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதி, முடிவுகளுக்காக காத்திருந்தனர். 


தற்போது கிடைத்திருக்கும் முடிவுகளின் அடிப்படையில் கீழக்கரை மேலத் தெரு, ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் பயின்ற மாணவி J.ரபீகத் சுஹைனா அவர்கள் '490 மதிப்பெண்கள்' பெற்று கீழக்கரை நகரில் முதலிடம் பெற்று இருக்கிறார். இவர் கீழக்கரை சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த ஜலால் இபுறாஹீம் அவர்களின் மகளார் என்பதும் அலி ஹுசைன் அவர்களின் மருமகளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மாணவி J.ரபீகத் சுஹைனா அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு :

தமிழ்                                 : 94
ஆங்கிலம்                         :  98
கணிதம்                            :  100
அறிவியியல்                    :  98
சமூக அறிவியியல் : 100

மொத்தம்                         :  490 / 500 (மாஷா அல்லாஹ்)



ஹ‌மீதியா மெட்ரிக் ப‌ள்ளியில் ந‌லிஃபா 478 மதிப்பெண்களும், ஆயிச‌த் ந‌பிலா 478  மதிப்பெண்களும் பெற்று ப‌ள்ளியில் இருவ‌ரும் இணைந்து இர‌ண்டாம் இட‌த்தை பெற்றுள்ளார்க‌ள். ர‌ஸ்மின் 475 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இட‌த்தை பெற்றுள்ளார்

இஸ்லாமியா மெட்ரிக் ப‌ள்ளி  மாண‌வி ஹ‌லிமா 484 மதிப்பெண்களும், அப்ரிடீன் 481 மதிப்பெண்களும், மவ்ஃபீகா 481 மதிப்பெண்களும், பாத்திமா ச‌மிஹா 479 மதிப்பெண்களும் பெற்றுள்ள‌ன‌ர்.



ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலை பள்ளி  மாணவி சுஸ்மா 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதலிடம் பெற்றுள்ளார்.

மக்தூமியா உயர் நிலைப் பள்ளி, இந்த வருடமும் பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்று இருக்கிறது. மாணவி நிலோபார் நிஷா அவர்கள் 455 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவர் சீனி சேக் முஹம்மது அவர்கள் 446 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார். மூன்றாமிடத்தை 443 மதிப்பெண்கள் பெற்று மாணவி ஜைத்தூன் அவர்கள் பெற்றுள்ளார்.



முஹைதீனியா ப‌ள்ளியில் ஜாவித் ரிபாய் ம‌ற்றும் அப்ரினா பானு ஆகியோர் தலா 446 மதிப்பெண்கள்  பெற்று ப‌ள்ளியில் இருவரும் முத‌லிட‌ம் பெற்றுள்ள‌ன‌ர்.

தீனியா ப‌ள்ளி மாண‌வி ராலியா அவர்கள் 454 பெற்றுள்ளார்.

மேலும் இஸ்லாமியா உயர் நிலைப் பள்ளியில் முதல் மதிப்பெண்ணாக 477 இருக்கிறது. இந்த பள்ளி தொடர்ந்து எட்டு வருடமாக 100% தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஹமீதியா பள்ளிகளின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 
(கடந்த 2012 ஆம் ஆண்டுடன் ஓர் ஒப்பீடு)

(தகவல் : உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்கம், மேலத் தெரு, கீழக்கரை)


கீழக்கரை நகரிலேயே சமூக அறிவியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு மாணவிகளான S.ஆயிசத் நுஹைலா அவர்களும், கீழக்கரை நகரின் முதலிடம் பெற்ற J.ரபீகத் சுஹைனா அவர்களும் ஹமீதியா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவிகள் ஆவர். 

கீழக்கரை கிழக்குத் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது அவர்களின் மகளார், மாணவி ஆயிசத் நுஹைலா அவர்கள் 472  மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளி வந்த +2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் கீழக்கரை நகரில் ஹமீதியா மெட்ரிக் பள்ளி மாணவியே முதலிடம் பிடித்தது குறித்து நாம் முன்னதாக வெளியிட்டிருந்த செய்தியை காண கீழே உள்ள லிங்கை சொடுக்கி பார்வையிடவும்.

கீழ‌க்க‌ரை நகரில் 'ஹ‌மீதியா மெட்ரிக்குலேஷன் ப‌ள்ளி' மாண‌வி + 2 தேர்வில் முத‌லிட‌ம் !

வெற்றி பெற்ற அனைவருக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு இணைய தளங்களில் முடிவுகளை காண பின் வரும் ஏதேனும் ஒரு லிங்கை சொடுக்கி காணலாம்.



www.dge3.tn.nic.in 


FACE BOOK COMMENTS :

Like ·  ·  · Share · Edit

Thursday 30 May 2013

கீழக்கரையில் 'திடீர்' மின் கட்டண உயர்வால் புழுங்கும் பொதுமக்கள் - விளக்கம் தர மறுக்கும் அலுவலர்களுக்கு பொது நல அமைப்பினர்கள் கடும் கண்டனம் !

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  மின்கட்டண உயர்வை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்து, உடனடியாக ஏப்ரல் 1ந் தேதி அமல்படுத்தப்பட்டது. அதிரடியாக 37% மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாயினர். 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மின் கட்டண உயர்வு அமல் படுத்தப்பட்டுள்ளதாகவும், புதிய மின் கட்டண உயர்வால் ரூ.7,874 கோடி வருமானம் கிடைக்கும் என்றும் தமிழக மின்சார வாரியம் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டு துள்ளாட்டம் போட்டது. இப்போது மீண்டும் மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் கட்டணத்தை, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிடும் என வெளியாகி இருக்கும் செய்தியால் பொது மக்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர் .






இந்நிலையில் கீழக்கரையில் மின் கட்டணம் செலுத்தத் சென்ற பொது மக்களுக்கு, பேரதிர்ச்சியாக ரூபாய் 2500 கட்ட வேண்டிய இடத்தில் திடீரென 6000 ஆக உயர்ந்திருந்தது. இதனால் அவ்வளவு தொகையை எடுத்து செல்லாத பொதுமக்கள், பணம் கட்டாமலேயே வீடு திரும்பினர். பலர் இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்கும் போது 'துட்டு இருந்தா கட்டு.. இல்லைனா வீட்டுக்கு நடைய கட்டு..' என்று இரக்கமில்லாமல் விரட்டியடிப்பது தினமும் நடந்து வருகிறது.

சாம்பிள் 'மின் கட்டண  கொள்ளை' இரசீது 




இது குறித்து கீழக்கரை முஸ்லீம் அறக்கட்டளை செயலாளர் ஜனாப்.இஸ்மாயில் அவர்கள் கூறும் போது "கீழக்கரையில் மின்சார கட்டண வசூல் மையம் நகரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தினமும் மின்சாரக் கட்டணம் செலுத்த வயது முதிர்ந்தவர்களும், பெண்களும் 80 ரூபாய் ஆட்டோக்கு வாடகை கொடுத்து அங்கு செல்கின்றனர். தற்போது மின்சார வாரியத்தால் திடீரென இரட்டிப்பு பணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் நொந்து போயுள்ளனர்.

எதற்காக இந்த தொகையை வசூல் செய்கிறீர்கள்..?என்று முறையாக அலுவலர்களிடம் கேட்டாலும் சரியான பதில் இல்லை.  இது போன்று எந்த முன்னறிவிப்பும் இன்றி மின்சாரக் கட்டணத்தை தாறு மாறாக உயர்த்துவது கடும் கண்டனத்திற்குரியது.  உடனடியாக இது குறித்து விளக்கம் தரப்படாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்" என்று மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.

இது குறித்து நேரடியாக பாதிக்கப்பட்ட கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையை சேர்ந்த 'வீனஸ்' FOURTH BOY நெய்னா அவர்கள் நம்மிடையே பேசும் போது "இந்த கொடுமையை எங்கு போய் சொல்ல என்று தெரியவில்லை. மின் கட்டணம் செலுத்த அட்டையில் மின் கணக்கீட்டாளர் குறித்து சென்ற தொகையை எடுத்து சென்றேன். அங்கு கட்ட வேண்டிய தொகையை பார்த்தால் CC CHARGES, ARREARS, DEPOSIT அது.. இது.. என்று ஏகத்துக்கு போட்டு தீட்டி விட்டார்கள்.

அது சம்பந்தமாக கனிவுடன் அலுவலர்களை அணுகி தகவல் பெற முயன்றும் பயனில்லை. 'பேசாமே பணத்தை கட்டீட்டு போங்க. எங்கள் கிட்டே சட்டம்லாம் பேசப்படாது.' என்று மட்டும் பதில் வருகிறது. அங்கு என்னைப் போலவே 50 க்கும் மேற்பட்டோர் மிகுந்த குழப்பத்துடன் பணம் கட்டாமலேயே திரும்பி செல்வதை பார்க்கும் போது மனசு தாங்க வில்லை. இதற்கு ஒரு முடிவு கட்ட பொது நல அமைப்பினர்கள் ஒன்றிணைந்து தீர்வு காண முயல வேண்டும்." என்று தன் வருத்தத்தை பதிவு செய்தார்.

கடந்த சில தினங்களுக்கு  முன்னர் சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது மின் கட்டண உயர்வு குறித்து பதிலளித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் "தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின்சாரக் கட்டணத்தை திருத்தி அமைத்து அமல்படுத்தச் சொன்னாலும் அதற்கான சுமையை அரசே ஏற்கும். கூடுதல் கட்டணச் சுமை நுகர்வோர்களிடம் சுமத்தப்படாது. கட்டணம் மாற்றியமைக்கப்பட்டால் எவ்வளவு என்பது குறித்து அறிந்து அதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று மக்கள் பாதிக்கப்படாத வகையில் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார்" என்று பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சார வாரிய அலுவலர்களின் 'சோம்பேறித்தனம்' குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்த செய்தியை வாசிக்க கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்.

கீழக்கரையில் மின்சார கணக்கெடுப்பு பணியாளர்களின் மெத்தனப் போக்கால் அவதியுறும் பொதுமக்கள் !
http://keelaiilayyavan.blogspot.in/2012/06/blog-post_29.html

என்னப்பா நடக்குது எங்க ஊருலே...

Sunday 26 May 2013

கீழக்கரை நகரின் அழகை அற்புதமாய் புகைப்படம் எடுத்து அசத்தும் உள்ளூர் 'இளம் கலைஞர்கள்' - போட்டோகிராபி ஸ்பெஷல் !

புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை. தொழில் நுட்பங்களை சரியாக கையாண்டால் மட்டுமே சிறந்த புகைப்படங்களை பெற முடியும். அது எல்லோருக்கும் சுலபமாக வந்துவிடாது. 20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன என்பதை நாம் மறுக்க முடியாது. உதாரணமாக, சீன வீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம். உலகெங்கும் வாழும் புகைப் படக் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக, ஒவ்வொரு ஆண்டும் உலக புகைப்பட தினமாக ஆகஸ்ட் 19ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 



தற்போது கீழக்கரை நண்பர்கள் பலர் ஒன்றிணைந்து தற்போதைய நம் கீழக்கரை நகரின் எழில் கொஞ்சும் கடற்கரையையும், அழகிய பள்ளிவாசல்களின் தோற்றங்களையும் விதவிதமாக, புதுப்புது கோணங்களில் புகைப்படம் எடுத்து தங்களின் முகப் புத்தகத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் காண்பதற்கரிய புகைப்படங்களையும் சேகரித்து நண்பர்களுடன் பகிர்ந்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள். 

அவர்களுள் HAM 7 STUDIO என்கிற பக்கத்தை தன் நண்பர்கள்  அப்துல் கரீம், லாஹீர், ரிதுவான், பாசித், அஃப்ரார், ஃபைசல், ஷகீப், அஹ்சன், அல் ஃபராஸ், ஆகில் உள்ளிட்ட நண்பர்களுடன்  இணைந்து துவங்கி இருக்கும் கீழக்கரை  நடுத் தெருவைச் சேர்ந்த சகோதரர் 'ஜலாலுதீன்' அவர்களும், A.S.TRADERS என்கிற பெயரில் முகப் புத்தகத்தில் இருக்கும் கீழக்கரை கோக்கா அஹமது தெருவைச் சேர்ந்த சகோதரர் 'கஃபார் கான்' அவர்களும் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

கீழக்கரை நகரின் குப்பைகளையும், சாக்கடைகளையும்,  முகப் புத்தகத்தில் புகைப் படங்களாக பார்த்து, பார்த்து சலித்துப் போன கண்களுக்கு, இதமூட்டும் வகையில் கீழக்கரையின் அழகியலையும், அற்புதமான பக்கங்களையும் வெளிக்கொணரும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

 A.S.TRADERS பார் கான் அவர்கள் 

A.S.TRADERS பார் கான் அவர்கள் தன் முகப் புத்தகத்தில் பகிர்ந்து இருக்கும் கீழக்கரை நகரின் அழகு மிளிரும் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு :














HAM 7 STUDIO ஜலாலுதீன் அவர்கள் தன் முகப் புத்தக பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் கீழக்கரை நகரின் பொலிவு நிறைந்த.. பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள்... சில உங்கள் பார்வைக்கு : 

HAM 7 STUDIO ஜலாலுதீன் அவர்கள்

(இவர் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் E.E.E இரண்டாமாண்டு பயிலும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.) 











HAM 7 STUDIO ஜலாலுதீன் அவர்களின் முகப் புத்தக பக்கத்தை 'LIKE' செய்து பார்வையிட கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.

கீழை மாநகரின் அழகு மிகும் அற்புதமான பல இடங்களை, கை தேர்ந்த புகைப்பட கலைஞர்களையும் விடவும், மிக நுணுக்கமாக புகைப் படம் எடுத்து, நம் கண் முன்னே கொண்டு வந்து சேர்த்து கொண்டிருக்கும் அன்பு சகோதரர் கபார் கான் அவர்களுக்கும் ஜலாலுதீன் அவர்களுக்கும் கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
  • Keelai Ilayyavan கீழக்கரை நகரின் குப்பைகளையும், சாக்கடைகளையும், முகப்புத்தகத்தில் புகைப்படங்களாக பார்த்து, பார்த்து சலித்துப் போன கண்களுக்கு, இதமூட்டும் வகையில் கீழக்கரையில் அழகியலையும், அற்புதமான பக்கங்களையும் வெளிக்கொணரும் சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.